
அதிலும் கூகுளில் செயல்பாடு பிரம்மிக்க வைக்கிறது. கூகுள் தேடியந்திரம் அடிக்கடி ஏதாவது ஒரு புதிய வசதிகளை வாசகர்களுக்கு கொடுத்து கொண்டே இருப்பார்கள்.
தற்போதும் ஒரு புதிய வசதியை நமக்கு கொடுத்துள்ளனர். இனி கூகுள் தேடியந்திரத்தில் முடிவுகளில் ஒரு பட்டன் வரும். கூகுளில் நமக்கு கிடைக்கும் முடிவு பயனுள்ளதாக இருந்தால் அதற்கு நேரே உள்ள இந்த பட்டனை க்ளிக் செய்து ஓட்டு போட்டு விட்டால் அடுத்தவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
கூகுள் இனி ஓட்டுக்களை வைத்தே பதிவுகளை முன்னிலை படுத்தும். ஆகவே மற்ற தேவையில்லாத தளங்கள் கூகுளில் வருவது முற்றிலும் தடுக்கப்படும். எப்பொழுதுமே கூகுளில் ஏதாவது ஒரு புதிய வசதியை பொது சேவைக்கு வெளியிடுவதற்கு முன் அந்த வசதியை சோதனை(Experimental) ஓட்டமாக தான் வெளியிடுவார்கள்.
அதே போல் தான் இந்த +1 வசதியையும் நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இந்த வசதியை உங்கள் கணணியிலும் கொண்டு வர முதலில் உங்கள் கூகுள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
பிளாக்கர், யூடுப், ஜிமெயில் இப்படி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. அடுத்து இந்த லிங்கில் க்ளிக் செய்து கூகுள் தளத்திற்கு செல்லுங்கள். அங்கு ஒரு விண்டோ தோன்றும்.
அதில் உள்ள Join this experimental என்ற ஒரு பட்டன் இருக்கும் அதில் க்ளிக் செய்யுங்கள். அந்த பட்டனை அழுத்தியவுடன் அந்த +1 பட்டன் உங்கள் கூகுள் கணக்கில் சேர்ந்து விடும்.
well done BOY.
ReplyDelete--movithan--HNDE
remove the word verification and add the followers list.
if you have free times,come to my Blog.
www.mugamoody.blogspot.com.