Search This Blog

Tuesday, October 25

விக்கிபீடியாவை கைத்தொலைபேசியில் பயன்படுத்துவதற்கு


பலரும் தங்கள் வைத்திருக்கும் கைபேசியை
 அதிகமாக அரட்டை அடிப்பதிலும், 
குறுஞ்செய்தி அனுப்புவதிலும், கேம்ஸ் விளையாடுவதிலுமே பயன்படுத்துகின்றனர்.
கைபேசியில் இணைய இணைப்பை 

பயன்படுத்தினாலும் அதிலும் பேஸ்புக், 
ட்விட்டர் போன்ற சமூகதளத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். அறிவுக்களஞ்சியமான விக்கிபீடியாவை உங்கள் கைபேசியில் 
எளிதாக பயன்படுத்தலாம்.
விக்கிப்பீடியா(Wikipedia) என்பது தளையற்ற உள்ளடக்கங்களைக் கொண்ட ஒரு இலவச வலைத்தளம் மற்றும் கூட்டு 

முயற்சியால் பல மொழிகளில் கட்டமைக்கப்படும் கலைக்களஞ்சியமாகும்.
இது இலாபத்தை எதிர்நோக்காத விக்கிபீடியா அறக்கட்டளையின் திட்ட ஆதரவுடன் 

உருவானது. விக்கி+பீடியா என்ற இதன் பெயர் இரு சொற்களின் பொருள் இணைக்கும் 
ஒரு கூட்டுச்சொல் ஆகும்.
ஆங்கிலத்தில் பயன்படுத்த http://en.mobile.wikipedia.org/.
தமிழில் பயன்படுத்த http://ta.mobile.wikipedia.org/.


கணனியினை சுத்தம் செய்ய



கணினியின் நீண்டகால பாவனைக்கு அதன் 
பராமரிப்பு மிகவும் அவசியமாகும்.
அந்த வகையில் எமது கணினியை நாமே பராமரித்துக்கொள்ள வேண்டும். கணினியின் 

தற்காலிக கோப்புக்களை அகற்றி, Registry ஐ 
சுத்தமாக்கி வைத்திருக்க வேண்டும்.
அத்துடன் அடிக்கடி கோப்புக்களை வன் 

தட்டில் ஒழுங்குபடுத்தி வைத்திருக்கவேண்டும். இதையெல்லாம் செய்வதற்கு 
பலமென்பொருட்கள் தேவை. அத்துடன் அதிக 
நேரமும் செலவாகும்.
இதுபோன்ற எல்லா வசதிகளையும் உள்ளடக்கியதாக PC Boost என்னும் ஒரு 

மென்பொருள் வந்துள்ளது. இப்போது இதன் புதிய பதிப்பான PC Boost 4.9 
வெளியிடப்பட்டுள்ளது.
இதில் மேலதிக வசதிகளாக கணினியின் வேகத்தை பரிசீலிக்கும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த மென்பொருளை தரவிறக்க PC Boost 4.9

Friday, May 20

கணணியை பேக்கப் செய்ய, மீட்க அவசியமான மென்பொருள்




கணணியைப் பயன்படுத்துபவர்கள் பாதுகாப்பாக வைத்திருப்பதில் தான் சிரமப்பட வேண்டியிருக்கிறது. திடீரென்று வைரஸ் தாக்குதலின் காரணமாக கணணியில் உள்ள கோப்புகளை இழக்க வேண்டியிருக்கும்.

கணணி கிராஷ் ஆகி பூட்டிங் ஆக மறுக்கும். மறுபடியும் விண்டோஸ் நிறுவ வேண்டியிருக்கும். சில கணணிகளில் வன்தட்டுக்கள் செயல் இழந்து மொத்தமாக எல்லா கோப்புகளையும் தொலைக்க வேண்டி வரும்.

20 சதவீதம் பேர் தான் பேக்கப் என்ற வேலையைச் செய்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. Easeus நிறுவனத்தின் இலவச மென்பொருளான Todo Backup இந்த பேக்கப் செய்யும் வேலையை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் செய்து கொடுக்கிறது.

கணணியின் அத்தனை கோப்புகளையும் இல்லை முக்கியமான எந்த வகை கோப்புகளாக இருந்தாலும் ஒரு கிளிக்கில் பேக்கப் செய்து தருகிறது. கோப்புகள் தொலைந்து போனாலோ அல்லது அதன் முந்தைய வடிவம்(Previous versions) வேண்டுமானாலும் மீட்டுத்தருகிறது.

இது கணணி வைத்திருப்பவர்கள் அவசியம் பயன்படுத்த வேண்டிய மென்பொருளாகும்.

1. கணணியை முழுவதுமாக பேக்கப் எடுக்க உதவுகிறது. இதில் இயங்குதளம், நிறுவப்பட்ட பயன்பாடுகள் போன்றவையும் அடங்கும். இதனால் கணணி கிராஷ் ஆகி செயல்பட மறுத்தால் பேக்கப் செய்யப்பட்ட வன்தட்டின் மூலம் மொத்தத்தையும் மீட்க முடியும்.

2. குறிப்பிட்ட கோப்புகள் மற்றும் கோப்பறைகளை பேக்கப் எடுக்கும் வசதி இருக்கிறது.

3. Incremental Backup: இதன் சிறப்பம்சம் என்னவென்றால் முழுதாக பேக்கப் செய்யும் போது ஒவ்வொரு முறையும் தனித்தனியாக சேமிக்காமல் கடைசியாக செய்யப்பட்ட பேக்கப்பில் இல்லாமல் புதியதாக வந்திருக்கிற கோப்புகளை அதனுடனே சேர்த்து வைத்து விடுகிறது.

4. இதிலிருந்து சீடி, டிவிடி, பென்டிரைவ் போன்ற கருவிகளில் எளிதாக பேக்கப் இமேஜ் கோப்புகளை கடவுச்சொல் கொடுத்து சேமிக்க முடியும்.

5. Backup Schedule: இதில் பேக்கப் எப்போது தானாக நடைபெற வேண்டும் என அமைத்துக் கொள்ள முடியும். மேலும் பேக்கப் கோப்புகள் வேண்டாம் என்றால் அழித்து விட முடியும்.

6. பேக்கப் செய்யப்பட்ட இமேஜ் கோப்பை எளிதாக விண்டோஸ் எக்ஸ்புளோரரில்(Mount Image) பார்த்து தேவையானதை மட்டும் மீட்டுக் கொள்ள முடியும்.

7. தற்போதைய வன்தட்டில் அனைத்தையும் நகலெடுத்து(Disk clone) மற்றொன்றுக்கு மாற்றிக் கொள்ள முடியும்.

தரவிறக்க சுட்டி

அழகான வாழ்த்து அட்டைகளை தயாரிப்பதற்கு




E-mailஅச்சிடுகPDF
வாழ்த்து அட்டைகள் தயாரிக்க பல மென்பொருள்கள் இருக்கின்றன. SmartsysSoft GreetingCard Designer என்ற மென்பொருளானது நாம் விரும்பும் வசதிகள் அனைத்தையும் கொண்டதாக உள்ளது. 

ஏனெனில் இந்த மென்பொருளில் பல வடிவங்களில் வாழ்த்து அட்டைகளை தயாரித்து உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ அனுப்பிக் கொள்ளலாம்.

இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் அல்ல. இந்த மென்பொருளை நாம் பயன்படுத்த வேண்டும் என்றால் 39 .95 டொலருக்கு பெற்று தான் பயன்படுத்தலாம். 

ஆனால் இலவசமாக தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் SmartsysSoft GreetingCard Designerசெய்யவும். 

இந்த மென்பொருளை தரவிறக்கிய பின்பு extract செய்தால் அந்த கோப்பறையினுள் இதற்குரிய serial key இருக்கும். 

பின் அந்த மென்பொருளை நிறுவிய பின் ஓபன் செய்தால் தோன்றும் விண்டோவில் வலது பக்க மேல் மூலையில் registration என்று இருக்கும். 

அதை கிளிக் செய்து அந்த serial key கொடுத்து இந்த மென்பொருளை activate செய்து கொள்ளலாம்.

Thursday, May 12

ஓன்லைனில் கோப்புகளை சேமிக்க




E-mailஅச்சிடுகPDF
உங்களது கோப்புக்களை இணையதளங்களில் பாதுகாப்பாக சேமித்து வைக்க முடியும். இதன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம். 

இந்த தளத்தில் உங்களின் கோப்புக்களை ஓன்லைன் மூலம் இலவசமாக சேமித்து வைக்கலாம். இந்த தளத்தில் சென்று உங்களை பதிவு செய்து கொண்டு சேமித்து வைக்கலாம். 

இங்கு 5GB அளவுடைய கோப்புக்களை இலவசமாக சேமிக்கலாம். அதற்கு மேற்பட்டதாயின் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த இணைய சேமிப்பு தளமானது IPHONE, ANDROID தொலைபேசிகளில் மென்பொருளாக தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.

இணையதள முகவரி 

உங்களின் MP3 வடிவிலான பாடல்களை சேமித்து பின்னர் அந்த தளத்திலே கேட்டு ரசிப்பதற்கு WWW.MOUGG.COM உதவுகிறது. இந்த தளத்தில் பாடல்களை சேமித்து பின்னர் அந்த தளத்திலே கேட்க முடியும். 

இங்கு இலவசமாக 1GB அளவுடைய பாடல்களை சேமிக்க முடியும். மேலதிகமாக சேமித்து வைக்க கட்டணம் செலுத்த வேண்டும். 

இந்த தளத்துக்கு சென்று உங்களை பதிவு செய்து கொண்டால் இங்குள்ள UPLOAD என்பதை கிளிக் செய்து பாடல்களை சேமிக்க முடியும். 

இந்த தளமும் APPLE, ANDROID அப்பிளிகேசன் மூலம் தொலைபேசிகளில் மென்பொருளாக தரவிறக்கம் செய்து பாடல்களை பதிவு செய்து கேட்க முடியும்.

இணையதள முகவரி

USB Driveல் உள்ள கோப்புகளை யாருக்கும் தெரியாமல் திருடுவதற்கு




E-mailஅச்சிடுகPDF
உங்கள் நண்பர்களின் USB Drive இல் உள்ள கோப்புகளையோ அல்லது உங்களுக்கு தெரியாதவர்களின் USB Drive இலுள்ள கோப்புகளையோ அவர்கள் அறியாமலே திருடுவதற்கு Hidden File Copire என்ற மென்பொருள் உதவுகிறது. 

அவர்கள் உங்கள் கணணியில் தங்கள் USB Driveஐ பயன்படுத்தும் போது அவர்களது USB Driveஇல் உள்ள கோப்புகள் அனைத்தும் அவர்களுக்கு தெரியாமலே உங்களது கணணியில் கொப்பி செய்யப்பட்டு விடும்.

ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவுமே இருக்காது. இந்த மென்பொருள் மூலம் கொப்பி செய்யப்படும் கோப்புகள் C:WINDOWSsysbackup என்ற இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். 

தரவிறக்க சுட்டி

தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் பொழுது கணணியை அணைய விடாமல் பாதுகாக்கும் டூல்




விண்டோஸ் பவர் ஓப்ஸன்கள் மூலம் கணணியை Sleepஇற்கு செல்லவிடாமல் Stand Byயிலேயே வைத்திருப்பதற்கு அதிக வசதிகள் இல்லை. 

அத்துடன் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கணணியை அணையவிடாமல் வைத்திருக்க வேண்டுமெனில் ஒவ்வொரு முறையும் பவர் ஓப்ஸனை மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். 

இதற்காகவே Coffee என்ற டூல் பயன்படுகிறது. இந்த போர்டபிள் டூலை ரன் செய்து தேவையான KB அளவையும் தேர்வு செய்துவிட்டால் குறிப்பிட்ட தரவிறக்கம் முடியும் வரை கணணி அணையாமல் வேலை செய்தபடி இருக்கும். 

தரவிறக்க சுட்டி