Search This Blog

Friday, March 18


உங்கள் கணனி அடிக்கடி உறைந்து போகிறதா?

கணனியில் ஏதோ வேலையாக இருக்கிaர்கள். திடீரென்று கணனி தன் கட்டுப்பாட்டை இழந்து இயக்கமேதுமற்று உறைந்து (freeze) விடுகிறது. அல்லது நீலத் திரையில் வெள்ளை நிறத்தில் ஏதோ பிழை செய்திகளைக் காண்பிக்கிறது. இந்த இரு வகையான சிக்கலும் எல்லாக் கணனிப் பயனர்களும் வழமையாக எதிர்கொள்பவைதான்.

இந்த இரு சந்தர்ப்பங்களும் தவிர்க்க முடியாதவைதான் எனினும் சில விடயங்களைக் கவனத்திற் கொண்டால் ஓரளவுக்கு இவற்றைத் தவிர்க்கலாம்.

கணனி உறைந்துவிட்டது என்பதை விண்டோஸ் இயங்கு தளம் பலவாறு திரையில் காண்பிக்கும். இவற்றுள் ஒரு எப்லிகேசன் நம் விருப்பப்படி செயற்படாமல் போவது ஒரு பொதுவான அறிகுறியாகும். எப்லிகேசன் விண்டோக்கள் மினிமைஸ் செய்தது போல் டாஸ்க் பாரில் ஒட்டிக்கொண்டிருக்கும் மறுபடி முன்னர் இருந்த நிலைக்கு விண்டோவைக் கொண்டுவர முடியாமலிருக்கும். மவுஸ் பொயிண்டர் நகராமல் ஒரே இடத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதும் கணனி உறைந்து விட்டது என்பதை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய அறிகுறி.

சில வேளைகளில் This Program Performed an illegal operation and will be shut down அல்லது இந்த எப்லிகேசன் செயற்பட மறுக்கிறது. (Not Responding) போன்ற பிழைச் செய்திகளை விண்டோஸ் காண்பிக்கும். ஒரு எப்லிகேசன் செயற்பட மறுப்பதை விண்டோஸ் இவ்வாறு பல வழிகளில் காண்பிக்கும். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் அனேகமாக அந்த எப்லிகேசனை நிறுத்தி விடுமாறு அல்லது கணனி தானாக அந்த எப்லிகேசனை மறுபடி ஆரம்பிக்கும் வண்ணம் கேன்சல் செய்து விடுமாறு விண்டோஸ் பரிந்துரைக்கும்.

நீலத் திரை மரணம் (blue Screen of death) என்பது ஒரு வெளிப்படையான அறிகுறி நீல நிறப் பின்னணியில் வெள்ளை நிறத்தில் சில பிழைச் செய்திகளைக் காண்பிக்கும் இந்த நிலையை Crash க்ரேஷ் எனப்படுகிறது.

குறைபாடுகளுள்ள அல்லது ஒன்றோடொன்று ஒத்திசையாத வன்பொருள் சாதனங்கள், இயங்கு தளம், எப்லிகேசன் மென்பொருள் மற்றும் ட்ரைவர் மென்பொருள் போன்றவற்றில் ஏற்படும் வழுக்கள், மற்றும் கணனி நினைவகத்தில் ஏற்றப்படும் அதிக சுமை என்பன கணனி க்ரேஷ் ஆவதற்கும் ப்ரீஸ் ஆவதற்கும் முக்கிய காரணங்களாகும்.

இவற்றுள் நினைவகத்தில், அதிக சுமை ஏற்றுவது பொதுவான ஒரு காரணியாகும். கணனி செயற்பட, போதுமான அளவு நினைவகம் அவசியம். இதனை RAM ரேம் அல்லது Random Access Memory எனப்படும். கணனி ஒரு நேரத்தில் கையாளக் கூடிய அளவை விட மேலதிகமாக சுமை ஏற்றும்போது கணனி தற்காப்பு நடவடிக்கையாக க்ரேஷ் ஆகிவிடுகிறது. 

ஒன்றுக்கு மேற்பட்ட எப்லிகேசன்களை ஒரே நேரத்தில் இயக்க முற்படுவதே இவ்வாறு கணனி உறைந்து விடுவதற்கான பொதுவான காரணமாகும். அதனால் நீங்கள் பயன்படுத்தாத எப்லிகேசனை நிறுத்தி விடுவது கணனியின் நினைவகச் சுமையைக் குறைத்துவிடும்.

சில எப்லிகேசன்களுக்கிடையிலான முரண்பாடுகளும் (Conflicts) கணனி க்ரேஷ் ஆவதற்குரிய மற்றுமொரு காரணமாகும். ஏனைய எப்லிகேசன்களுடன் முரண்படும் மென்பொருள்களில் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களும் அடங்கும்.


கணனி எதிர்பாராத விதமாக க்ரேஷ் ஆகும்போது கணனியில் இயக்கமே நின்றுவிடும். கணனியைப் பழுது பார்க்கு முன்னர் கணனி க்ரேஷ் ஆவதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துக் கொள்வது நன்மை பயக்கும். அதன் முதல் படியாக கணனியை ரீபூட் (reboot) செய்ய வேண் டும். கணனி முறையாக ரீபூட் ஆகுமானால் ரெஜிஸ்ட்ரியில் (Registry) ஏதோ சிக்கலிருப்பது உறுதியாகிறது.

உடனடியாக ரீபூட் ஆக வில்லையானால் கணனியை சேப் மொடில் (Safe Mode) ரீபூட் செய்து ஒரு ரெஜிஸ்ட் க்லீனர் கொண்டு ரெஜிஸ்ட் ரியைப் பழுது நீக்கிக் கொள்ள வேண்டும்.

விண்டோஸ் ஆரம்பிக்கு முன்னர் கீபோர்டில் எப். 8 விசையை அழுத்துவதன் மூலம் கணனியை எவ்வாறு ஆரம்பிக்க வேண்டும் என்ற மேனுவை வரவழைத்து சேப் மோடில் நுழையலாம்.

விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியிலிருக்கும் ஒவ்வொரு பைலும் கணனியிலுள்ள ஒவ்வொரு எப்லிகேசனுக்குமுரிய கட்டளைகளைக் கொண்டுள்ளன. அடுத்து என்ன செய்ய வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை ரெஜிஸ்ட்ரி பைல்களே கொண்டிருக்கும்.

இந்த ரெஜிஸ்ட்ரி பைல்கள் பழுதடையும் போது அல்லது இடம் மாறி விடும் போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற விவரம் தெரியாமல் கணனி தடுமாறுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் கணனி தன் கட்டுப்பாட்டை இழந்து இறுதியில் க்ரேஷ் ஆகிவிடுகிறது.

சில மென்பொருள்களைப் புதிதாக நிறுவும் போது கூட கணனி க்ரேஷ் ஆகலாம். அப்போது அந்த மென்பொருளை அகற்றி விடுவதே சிறந்த வழி.

இவ்வாறான சகந்தர்ப்பங்களில் முறையாக செயற்பட மறுக்கும் ஒரு எப்லிகேசளை டாஸ்க் மேனேஜரை (Task Manager) வரவழைப்பதன் மூலம் நிறுத்தி விடலாம். டாஸ்க் மேனேஜரை வரவழைக்க Ctrl+ Alt+ Delete விசைகளை ஒரே நேரத்தில் அழுத்த வேண்டும். செயற்பட மறுக்கும் எப்லிகேசன் பெயரை டாஸ்க் மேனேஜர் விண்டோவில் காண்பிக்கும். அதிலிருந்து உரிய எப்லிகேசனை தெரிவு செய்து End Task பட்டனில் க்ளிக் செய்வதன் மூலம் நிறுத்தி விடலாம்.

டாஸ்க் மெனேஜர் மூலமாகவும் உரிய எப்லிகேசனை நிறுத்த முடியாது போனால் டாஸ்க் மேனேஜர் திறந்திருக்கும் நிலையில் மறுபடியும் Ctrl + Alt+ Delete விசைகளை அழுத்துங்கள். கணனி ரீபூட் ஆக ஆரம்பிக்கும்.

ரீபூட் ஆக வில்லையெனின் கணனியில் உள்ள Reset பட்டனை அழுத்தி விடுங்கள். அப்படியும் ஒரு பட்டன் இல்லையென்றால் கவலை வேண்டாம். கணனியிலுளள பவர் பட்டனை ஐந்து வினாடிகள தொடர்ச்சியாக அழுத்திக் கொண்டே இருங்கள் கணனி முழுமையாக சட்டவுள் ஆகிவிடும்.

கணனி க்ரேஷ் ஆவதும் ப்ரீஷ் ஆவதும் தவிர்க்க முடியாததது. அதனால் கணனியில் முக்கியமான பைல்களை நகலெடுத்துப் பாதுகாக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்க மறந்து விடாதீர்க்கள்.

பைட்ஸ் என்றால் என்ன?

கொம்ப்யூட்டர் ஸ்டோரேஜ் சாதனங்களின் கொள்ளளவு மற்றும் டேட்டாக்களின் அளவினை பைட்களில் கூறுகிறோம். அடிப்படையில்

8 பிட் ஒரு பைட். இதுவே அடுத் தடுத்து உயரும்போது கிலோ கணக்கில் கூறப்படுகிறது. கிலோ என்பது இங்கு 1000 அல்ல; 1024. ஏனெனில், டிஜிட்டல் உலகில் base 2 system என்பது கையாளப்படுகிறது.

எனவே, ஒரு கிலோ பைட் என்பது 2 ^ 3 என்பதாகும். 2 ^ 2 என்பது 4; 2 ^ 3 என்பது 8.
இப்படியே போனால் 2^10 E என்பது 1024 ஆகும்.

எனவே ஒரு கிலோ பைட் (Kilobyte) என்பது 1024 பைட்ஸ்;
ஒரு மெகா பைட் (Megabyte) என்பது 1024 கிலோ பைட்ஸ்.
ஒரு கிகா பைட்(Gigabyte) என்பது 1024 மெகா பைட்ஸ்.
ஒரு டெரா பைட் (Terabyte) என்பது 1024 கிகா பைட்ஸ்.
ஒரு பெடா பைட் (Petabyte) என்பது 1024 டெரா பைட்ஸ்.
ஒரு எக்ஸா பைட் (Exabyte) என்பது 1,024 பெடா பைட்ஸ்.

கணணித் திரையின் இடத்தை அதிகரிக்கும் Cube Desktop

Cube Desktop ஆனது ஒன்றுக்கு மேற்பட்ட virtual desktop க்களை முப்பரிமான (3D) முறையில் உருவாக்கக் கூடிய ஒரு மென்பொருளாகும். இதன் முலம் நமது கணணியில் ஆறு desktop க்களை உருவாக்கிக் கொள்ள முடியும் இதன் மூலம் கணணித் திரையில் பணிபுரியும் அளவைக் கூட்டிக் கொள்ள முடியும்.

இம் மென்பொருளை Install பண்ணியதும் ( கீழே உள்ள படத்தில் காட்டியவாறு ) Task bar இல் 1 2 3 4 5 6 என இலக்கமிடப்பட்டிடுக்கும். அந்த இலக்கத்தில் click செய்து குறிப்பிட்ட desktop க்கு செல்ல முடியும். இந்த மென்பொருளில் ஒவ்வொரு Desktop க்கும் விரும்பிய Wallpaper, Icon களைத் தனித்தனியாகப் போட்டு வைத்துக் கொள்ளலாம் என்பது இதன் சிறப்பாகும்.



விரும்பிய desktop இல் விரும்பிய Icon களைப் போட்டுக் கொள்வதற்கு படத்தில் காட்டியவாறு Task bar இல் வலப்புறத்தில் வரும் இம் மென்பொருளின் Icon இல் right click செய்து Utilities க்கு சென்று Manage Icons என்பதை click செய்வதன் மூலம் விரும்பிய desktop இல் விரும்பிய icon ஐப் போட்டுக் கொள்ளலாம்.

மற்றும் 3D Cube, Windows Exposer, 3D Desktop Explorer, 3D Desktop Flip, 3D Desktop Carousel, 3D Desktop Roll என்பதில் விரும்பியதை செய்வதன் மூலம் அசத்தலான 3D effects ஐ மாற்றிக் கொள்ள முடியும்.

மேகக் கணினியம்

மேகக் கணினியம் இன்னும் அதிகம் புழக்கத்துக்கு வராத ஒரு கம்ப்பியுட்டர் கலைச்சொல், CLOUD COMPUTING என்றால் பலருக்கு புரியும். தற்போது hot topic ஆக இருக்கும் கூகுள் chrome OS இன் அடிப்படை தொழில்னுட்பமே மேக கணினியம் தான். இணையத்தையும் இணையம் சார்ந்த செயலிகளையும் கொண்டு செயல்படும் தொழில்னுட்பம் என ஜல்லியடிக்காமல் சொல்வதென்றால் 50 ரூபாய்க்கு சிம் கார்டு வாங்கி 5 ரூபாய்க்கு பேசும் தொழில்னுட்பம். அதாவது கணினிக்கோ மென்பொருளுக்கோ ஆகும் செலவுகளை குறைத்து மென்பொருள் பாவணைக்கான செலவுகளை மட்டுமே ஏற்படுத்தும் தொழில்னுட்பம்.

SaaS என்று சுருக்கமாக அழைக்கப்படும் Software As A Service என்ற மென்பொருள் சேவையே இதன் ரிஷி மூலம் இதை முதலில் தொடங்கியது salesforce.com எனப்படும் நிறுவனம் 1999 ல் தொடங்கிய இந்த நிறுவனம் இப்போது பில்லியன் டாலர்களில் கொழிக்கின்றது. SaaS தான் இப்போதைக்கும் இன்னும் சில ஆண்டுகளுக்கும் ஜெயிக்கிற குதிரை, கூகுளில் SaaS companies என்று தட்டி பார்த்தால் தெரியும். இந்த SaaS ஐ கொண்டே மேக கணினியம் உருவாகிக் கொண்டு வருகின்றது. விண்டோஸ் போன்ற ஆபரேடிங் சிஸ்டம் உள்ள கணினிகளில் ஒரு சாஃப்ட்வேரை இன்ஸ்டால் பண்ண என்ன செய்ய வேண்டும்? முதலில் அந்த குறித்த சாஃப்ட்வேருக்கான ஹார்ட்வேர் தேவைகளை பூர்த்தி செய்ய்ய வேண்டும், பின் சாஃப்ட்வேரை விலை கொடுத்து வாங்க வேண்டும் license ஆக்டிவேட் பண்ண வேண்டும் வாங்கியது pirate copy யாக இருக்குமோ என கவலை பட வேண்டும் இதெல்லாம் சரியாக செய்த பின் அது 6 மாதமோ 1 வருடமோ கழித்து காலாவதியகும் பின்...திரும்ப விண்டோசிலிருந்து வாசிக்கவும்...CLOUD COMPUTING ல் இந்த பிரச்சினை இல்லவே இல்லை.

ஏற்கனவே சொன்னது போல் cloud computing என்பது இணையத்தையே ஆதாரமாக கொண்டு செயல்படுவது, ஒரு பெரிய servar ல் உங்களுக்கு தேவையான மென்பொருட்கள் எல்லாம் வசதியாக இன்ஸ்டால் செய்து வைக்கப்பட்டிருக்கும் உங்களிடம் இருக்க வேண்டியது நல்ல வேகமான முடிந்தால் அதிவேகமான ஒரு internet connection மட்டுமே. தேவையான நேரத்தில் மென்பொருளை பாவித்து கொள்ளலாம் உங்கள் பாவனைக்கான பணத்தை மட்டும் அந்த SaaS provider இடம் செலுத்தினால் போதுமானது. இப்படி தேவையான அல்லது தேவையற்ற எல்லாவிதமான மென்பொருட்களும் செயலி(application) களும் மேகங்கள் போன்ற web server களில் கிடைப்பதனால் தான் இந்த cloud computing. நமக்கு தெரியாமலே இந்த cloud computing ஐ அனுபவித்து கொண்டு இருக்கின்றோம் உதாரணமாக E-Mail service providers, g-mail ஐ எடுத்துக் கொண்டால் நாம் அனுப்பும், பெறும் E-Mail கள் எல்லாம் கூகுல் server இலேயே சேமிக்கப்படுகிறது இணையத்தில் இணைந்த கணத்தில் இருந்து அந்த Data களை பாவிப்பவராகிறோம். சொல்லப்போனால் இந்த வலைபதிவது கூட CLOUD COMPUTING இன் ஒரு அம்சம்தான். இந்த CLOUD COMPUTING இனால் அதிகம் லாபமடைய போவது தனி நபர்களை காட்டிலும் கம்பனிகளே காரணம் இந்த தொழில்னுட்பம் ஹார்ட்வேர் செலவுகளை பெருமளவில் குறைத்து விடும் ஒரு மானிட்டரும் குறித்த OS ஐ இயங்க செய்ய தேவையான processor + hard disk போதுமானது மற்ற எல்லாவற்றையும் SssS service provider பார்த்துக்கொள்வார். SaaS சேவைகளை consumption அடிப்படையிலேயோ subscription அடிப்படையிலேயோ பெற்றுக்கொள்ளலாம். இதன் security மற்றும் privacy தொடர்பான கேள்விகளுக்கு authentication என்ற முறையே பதிலாக உல்லது அதாவது username, password முறை. குறித்த SaaS நிறுவன சேவையில் உங்களின் Data மற்றும் Privacy க்கு பாதிப்பு ஏற்படுமாயின் அந்த நிறுவன சேவைகளை துண்டிக்கவும் அது தொடர்பான financial losses களை நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளவும் முடியும்.

CLOUD COMPUTING ஹார்ட்வேர் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் அதன் security,privacy தொடர்பான விளக்கங்கள் தெளிவானவையாக இல்லை. A, B என்ற இருவர் ஒரு SaaS நிறுவன சேவைகளை பெறும் போது இருவரும் ஒரே மாதிரியாகதான் தங்களது data வை store பண்ணவோ திரும்ப பெற்றுக்கொள்ளவோ போகிறார்கள், இதில் Authentication முறை மட்டும் போதுமானதாக இருக்கபோவதில்லை என்றாலும் இணையத்துக்காகவே கணினியை பயன் படுத்துவோருக்கு இந்த தொழில்னுட்பம் வரப்பிரசாதமாக அமையலாம். என்னிடம் ஒரு பழைய PIV 3.0 கணினி ஒன்று இருக்கின்றது 3 applications க்கு மேல் ஒரேதாக இயங்க செய்தால் need for speed ல் கார் ஓட்டுவது போலவே இருக்கும் அவ்வளவு சத்தம் போடும் Processor. சாதாரணமாக கணினியில் சாஃப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்ய செய்ய அதன் வேகம் குறைந்து கொண்டே செல்லும் இந்த டெக்னாலஜி கணினிகளில் அந்த பிரச்சினை இருக்காது என்றே சொல்லப்படுகிறது வாங்கிய நாள் எப்படி வேலை செய்ததோ அப்படியே தொடர்ந்து வேலை செய்யும் என்கிறார்கள். எனக்கு எனது கணினியில் கார் சத்தம் வராது என்றால் ஓகே..

கணினியை ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) செய்ய...

பொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது "Saving your settings" , "Windows is Shutting down" போன்ற செய்திகள் வரும்.சில நிமிடங்களுக்கு பின்னர் தான் கணினி அணைக்கப்படும். 

இதெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்யும் கண்கவர் வித்தைகள் தான் . கணினியை அணைக்க சில வினாடியே போதுமானது . இந்த கண்கவர் வித்தைகளை பார்க்க விரும்பாதவர்கள் கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தி ஒரு சில வினாடியில் கணினியை அணைக்கலாம் . எந்த சேதமும் ஏற்படாது.

உங்கள் கணினியின் Task Manager ரை திறந்து கொள்ளுங்கள். ( Ctrl + Alt + Delete விசைகளை சேர்த்து அழுத்தினால் Task Manager திரைக்கு வரும் )

இந்த Task Manager ல் உள்ள மெனுவில் Shut Down ல் உள்ள Turn Off என்பதை Ctrl கீயை அழுத்திக்கொண்டே கிளிக் செய்யுங்கள் .

வினாடியில் கணினி அணைந்து விடும்.

ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?

உங்கள் கணினியை வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது கணினியில் உள்ள கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பார்கள்.

ஆனால் இப்போது மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் கொண்டு (Recovery Software ) அழித்த கோப்புகளை திருடி அடுத்தவரின் அந்தரங்கத்தை மேய்வதில் நிறைய பேருக்கு விருப்பம். அதனால் கோப்புகளை அழிக்கும் போது அல்லது ஹார்ட் டிஸ்கை Format செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த இரண்டு மென்பொருள்கள் உதவும். இந்த மென்பொருள்களை கொண்டு அழிக்கும் போது மறுபடியும் கோப்புகள் கிடைக்காதவாறு துடைத்து விடும்.
1.Eraser

கணினி மேலாண்மை (Computer Management) என்பது என்ன?

Computer Management என்பது 'Services, Applications, Disk tools மற்றும் User and Group Administration' ஆகியவற்றை ஒரே குடையின் கொண்டுள்ள கருவியாகும்.

மை கம்ப்யூட்டரில் வலது கிளிக் செய்து இதில் 'Manage' கிளிக் செய்தால் 'Computer Management' என்ற விண்டோ திறக்கும். இந்த விண்டோவில் இடதுபுறமுள்ள pane ல் 'system Tools, Storage மற்றும் Services and Applications' ஆகிய பகுதிகள் இருக்கும். ஒவ்வொன்றிலும் கிளிக் செய்திட வலதுபுறமுள்ள pane ல் அதன் விபரங்கள் பட்டியலிடப்படும். இதில் ஒவ்வொன்றிலும் என்ன வசதிகள் தரப்பட்டிருக்கின்றன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.



System Tools இந்த பகுதியில் கணினியின் கண்காணிப்பு, பயனாளர்கள் மற்றும் பயனாளர் குழுக்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் சம்பந்தப்பட்ட அனைத்து கருவிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் Shared Folders ஐ கிளிக் செய்தால் 'Shares, Sessions மற்றும் open files' ஆகிய மூன்றும் பட்டியலில் வரும். 'Shares' ஐ தேர்வு செய்தால் Network Shared Folders மற்றும் Windows Administrator ஆல் ரிமோட் அக்ஸஸ் இற்காக உருவாக்கப்பட்ட Shared Folders ஐ பார்க்கலாம். இதில் ஏதாவது குறிப்பிட்ட Folder இன் பகிர்வை நீக்க அந்த ஃபோல்டரில் வலது கிளிக் செய்து Sharing and Security யில் Share this Folder என்பதை uncheck செய்து விடுங்கள்.

Sessions என்பது தற்பொழுது உங்கள் கணினிக்கு தொடர்பிலிருக்கும் பயனாளர்கள் பற்றிய தகவல்கள், பயனாளர்களின் வகை, கணினியின் பெயர், திறந்துள்ள கோப்புகளின் எண்ணிக்கை, தொடர்பு கொண்ட நேரம் ஆகியவற்றை காண்பிக்கும். ஒருவேளை நீங்கள் எதிர்பாராத ஒரு பயனாளர் தொடர்பிலிருந்தால், அவர் இப்பொழுது உங்கள் கணினியில் எந்த ஃபோலடரிலிருந்து எந்த கோப்பை உபயோகித்துக் கொண்டிருக்கிறார் என்பதை 'Open Files' ஐ கிளிக் செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். ஒரு அட்மினிஸ்டிரேட்டராக நீங்கள் அதை முடக்கவும் செய்யலாம்.

Local Users and Groups 

உங்கள் கணினியில் உள்ள பயனாளர்கள் பற்றிய விவரங்களை அளிக்கும். புதிய பயனாளர் கணக்கு உருவாக்குவது, கணக்கை முடக்குவது, நீக்குவது, கடவுசொல்லை உருவாக்குவது, மாற்றுவது மற்றும் குறிப்பிட்ட பயனாளர் மறுமுறை லாகின் ஆகும்பொழுது கட்டாயமாக கடவுசொல்லை மாற்றும்படி கட்டளை கொடுப்பது என பல உபயோகமான கருவிகள் இருப்பதால் இது ஒன்றுக்க்கு மேற்பட்ட பயனர்களை கொண்ட கணினிக்கு மிகவும் உபயோகமானதாகும்.

Storage 

இந்த பகுதியில் Disk Defragmenter மற்றும் Disk Management ஆகிய முக்கியமான கருவிகளும் Removable Storage கருவியும் உள்ளன.

இதில் Disk Defragmentation என்பது அனைவரும் அறிந்திருக்க வாய்ப்புகள் இருப்பதால் அதை இந்த பதிவில் தவிர்த்துவிடலாம்.

Disk Management ல் Partitions உருவாக்குவது மற்றும் Format மிகவும் எளிதாக செய்யலாம். இது நமது ஹார்ட் டிஸ்கில் உள்ள அனைத்து partitions மற்றும் சிடி/டிவிடி போன்ற அனைத்து வால்யூம்களையும் காண்பிக்கும். இந்த கருவியின் மூலம் Dos Command அல்லது Stratup Disk எதுவும் இல்லாமல் partition களை உருவாக்க முடியும். ட்ரைவ்களுக்கு தேவையான ட்ரைவ் லெட்டர்களையும் கொடுக்க முடியும்.



புதிய partition ஐ உருவாக்க, Unpartition Space ல் வலது கிளிக் செய்து New Partition ஐ கிளிக் செய்து, உங்களுக்கு தேவையான partition வகையை தேர்வு செய்து (Primary, Extended or Logical) அடுத்து வரும் திரையில் partition size, Volume Label மற்றும் partition வகை (FAT32/NTFS). Format வகையையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

எச்சரிக்கை 
இந்த கருவியை உப்யோகிக்கும் பொழுது மிகவும் கவனமாகவும், வல்லுனர்களின் ஆலோசனையின்படியும் உபயோகிக்கவும்.
Services and Applications:-

இந்த கருவியை உபயோகித்து ஒரு குறிப்பிட்ட Service ஐ Start, Restart, Stop மற்றும் Pause செய்யலாம்.

ரீசைக்கிள்பின் (Recycle Bin) அளவை அதிகப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

விண்டோஸ் சிஸ்டத்துடன் வரும் ரீசைக்கிள் பின் செய்த அளவி லேயே கிடைக்கிறது. சிஸ்டத்தில் அது ஹார்ட் டிஸ்க் அளவில் ஏறத்தாழ 10 சதவீத மாக உள்ளது. இந்த இடம் அதற்கென்று ஒதுக்கப்படுகிறது. நீங்கள் விரும்பினால் இதனை குறைக்கலாம். அல்லது அதிகப் படுத்தலாம். ஆனால், சற்று கூடுதலாக இருப்பது நல்லது தான். ஏனெனில் நம்மை அறியாமலேயே பெரிய பைல் ஒன்றை அழித்துவிட்டால் ரீசைக்கிள் பின்னில் அதிக இடம் இருந்தால் தானே அது அங்கு சென்று அமரும். பின்னால் நாம் மீண்டும் எடுத்து பயன்படுத்த உதவும். 

இதனை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். ரீசைக்கிள் பின் ஐகானில் முத லில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் ப்ராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். 

திரையின் நடுவில் உள்ள ஸ்லைடர் பாரினை அட்ஜஸ்ட் செய்தால் ரீசைக்கிள் பின்னின் அளவு உயரும் அல்லது குறை யும். இதனை முடிவு செய்த பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் நீங்கள் அமைத்த படி அளவில் ரீசைக்கிள் பின் அமையும். 

இந்த புதிய அளவு மீண்டும் கொம்ப் யூட்டரை பூட் செய்திடும் போது மட்டுமே அமலுக்கு வரும்.

OEM லோகோவை மாற்றுவது எப்படி?

விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்தில் சிஸ்டம் ப்ரொப்படீஸ் டயலொக் பொக்ஸை (கண்ட்ரோல் பேணிலில் சிஸ்டம் ஐக்கனைத் திறக்கவும்) நீங்கள் அறிந்திருக்கலாம்.

இந்த டயலொக் பொக்ஸில் ஜெனரல் டேபின் கீ¡ நீங்கள் நிறுவியுள்ள விண்டொஸின் பதிப்பு, பதிவு விவரம், ப்ரொஸெஸர் வகை மற்றும் அதன் வேகம், நினைவகத்தின் கொள்ளளவு போன்ற பல தகவல்களைக் காட்டும்.

அத்தோடு கணினியத்தை தயாரித்த நிறுவனத்தின் பெயர், அதன் மாதிரி இலக்கம் என்பவற்றுடன் ஒரு சிறிய படமும் இருக்கும். (லோகோ) அத்துடன் அதன் கீழ் காணப்படும் Support Information எனும் பட்டனைக் க்ளிக் செய்ய வரும் டயலொக் பொக்ஸில் கணினியைத் தயாரித்த நிறுவனத்தைத் தொடர்பு கொள்வதற்கான விவரங்களும் இருக்கும். இந்த விவரங்களை அனைத்தையும் OEM தகவல்கள் எனப்படும். இது ஒரு விளம்பரமாகவே சிஸ்டம் ப்ரொப்படீஸ் டயலொக் பொக்ஸில் இணைக்கப்படுகிறது.

Original Equipments Manufacture என்பதன் சுருக்கமே OEM எனப்படுகிறது. அதாவது ஒரு பொருளை உற்பத்தி செய்யும் (வன்பொருள்/ மென்பொருள்) ஒரு நிறுவனம் அப்பொருளை நேரடியாக வாடிக்கையாளரிடம் கொண்டு செல்லாமல் வேறொரு நிறுவனத்திடம்அந்தப் பொறுப்பை ஒப்படைத்து விடும். இரண்டாவது நிறுவனம் அப்பொருளை மேலும் மேம்படுத்தி பொதி செய்து தனது பெயரில் வாடிக்கையாளர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும். இங்கு நேர்மாறாக OEM என்பது இரண்டாவது நிறுவனத்தையே குறித்து நிற்கிறது.

இந்த OEM தகவல்கள் அனைத்தும் .ini பைலாக கணினியில் சேமிக்கப்படுகின்றன. இதனை நோட்பேட் போன்ற டெக்ஸ்ட் எடிட்டர் கொண்டு மாற்றியமைக்கலாம்.

இந்த பைலானது [General], [Support Information] எனும் இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். [General] பகுதி Manufacturer=,model= போன்ற விவரங்களைக் கொண்டிருக்கும்.

இரண்டாம் பகுதி, [Support Information] என்பதாகும். இதனையும் விரும்பனால் மாற்றிக் கொள்ளலாம். இப்பகுதியின் தகவல்கள் Support Information எனும் பட்டனைக் க்ளிக் செய்யும் போது தோன்றும். இங்கு அளிக்கப்படும் தகவல்களை [Support Information] எனும் தலைப்பின் கீழ்

Line1= 
Line2=
Line3= எனும் ஒழுங்கில் டைப் செய்ய வேண்டும்...

பிறகு அதனை oeminfo எனும் பெயரில் .ini எனும் பைல் வடிவில் சேமித்து விண்டோஸ் போல்டரில் உள்ள சிஸ்டம் 32 (விண்டோஸ் எம். இ. எக்ஸ்பி) எனும் சப் போல்டருக்குள் சேமிக்க வேண்டும். விண்டோஸ் 98, மற்றும் 2000 பதிப்பாயின் “சிஸ்டம்” எனும் போல்டருக்குள் சேமிக்க வேண்டும்.

இந்த தகவல்களுடன் உங்கள் நிறுவன இலட்சினையையும் தோன்றச் செய்யவேண்டுமாயின் ஏதேனுமொரு போட்டோ எடிட்டிங் மென்பொருள் கொண்டு (எம். எஸ். பெயிண்டிலும் கூட இதனை உருவாக்கலாம்) நீங்கள் போட விரும்பும் படத்தின் அளவு 120*120 பிக்ஸலில் இருக்கத்தக்கதாக உருவாக்கி அதனை oemlogo எனும் பெயரில் .bmp (bitmap) போமட்டில் சேமித்து பிறகு அதனை பிரதி செய்து மேற்சொன்ன அதே சிஸ்டம் 32 போல்டருக்குள் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். இப்போது சிஸ்டம் ப்ரொப்படீஸ் டயலொக் பொக்ஸில் நீங்கள் வழங்கிய தகவல்களையும் லோகோவையும் காணலாம். சிஸ்டம் ப்ரொப்படீஸ் டயலொக் பொக்ஸை கீ போர்ட்டில் வீன் கீயுடன் Break கீகை அழுத்தியும் பெறலாம்.

மேற்சொன்ன வழி முறை விண்டோஸ் எக்ஸ்பீ மற்றும் அதற்கு முன்னர் வெளிவந்த பதிப்புகளுக்கே பொருந்தும்.

தொலைவிலிருந்து கணினியை சீர் செய்திட Remote Assistance

விண்டோஸ் இயங்கு தளத்தின் எக்ஸ்பீ மற்றும் விஸ்டா பதிப்புகளில் கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்துள்ள வேறொரு கணினியை அணுகும் வசதியை தரும் Remote Assistance மென்பொருளும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் கணினியில் ஏதும் சிக்கல் ஏற்படும் போது நீங்கள் அறிந்த ஒரு கணினி வல்லுனரின் உதவியை அவரிடம் நேரில் செல்லாமலேயே பெற்று சிக்கலைத் தீர்த்துக் கொள்ளலாம்.

அதாவது தமிழ்நாட்டில் அல்லது கேரளாவில் வசிக்கும் நீங்கள் வெளிநாடொன்றில் இருக்கும் ஒரு நண்பரை அழைத்து அவர் அங்கிருந்தே உங்கள் கணினியில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்த்து வைக்கும் வசதியை Remote Assistance தருகிறது.

இந்த வசதியைப் பெற உங்கள் கணினியிலும் இணைய விரும்பும் கணினியிலும் இணைய இணைப்புடன் விண்டோஸ் எக்ஸ்பியும் (விஸ்டாவிலும் மேம்படுத்தப்பட்ட ரீமோட் எஸிஸ்டன்ஸ் வசதி கிடைக்கிறது) நிறுவியிருத்தல் வேண்டும். அத்துடன் விண்டோஸ் லைவ் மெஸ்ஸெஞ்சரில் இணைவதற்கான ஒரு மின்னஞ்சல் முகவரியும் அவசியம்.

நீங்கள் நண்பரை அழைத்ததும் உங்கள் அழைப்பை ஏற்றுக் கொண்டு கணினியுடன் இணைப்பை ஏற்படுத்தியதும் உங்கள் கணினியின் டெஸ்க் டொப் திரையை அவரது கணினியில் காண முடியும். 

அவருக்கு உங்கள் கணினியை முழுமையாகக் கட்டுப்படுத்த அனுமதி வழங்கப்படின் அவரது கீபோர்டையும் மவுஸையும் உபயோகித்து உங்கள் கணினியை முழுமையாக அவரது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியும். அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளலாம்.

முதலில் ஸ்டாட் மெனுவில் Help and Support தெரிவு செய்யுங்கள். உதவி வேண்டுபவர் மட்டுமே இதனை தெரிவு செய்ய வேண்டும். அப்போது Help and Support விண்டோ தோன்றும் அங்கு Ask For Assistance மெனுவின் கீழ் உள்ள Invite a Friend to Connect to your computer with Remote Assistance என்பதை தெரிவு செய்யுங்கள் அடுத்து தோன்று விண்டோவில் Invite someone tohelp you எனும் லிங்கில் க்ளிக் செய்யுங்கள்.

அடுத்து தோன்றும் விண்டோவில் விண்டோஸ் மெஸ்ஸெஞ்சர் காட்டும் பட்டியலிலிருந்து உதவியை பெற விரும்பும் நண்பரின் பெயரைத் தெரிவு செய்து அதன் கீழுள்ள Invite this person லிங்கில் க்ளிக் செய்தல் வேண்டும். 

அப்போது உங்கள் நண்பர் உங்கள் கணினியின் டெஸ்க்டொப்பைப் பார்வையிட அனுமதிக்கும். நண்பர் உங்கள் கணினியை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர Take control பட்டனில் க்ளிக் செய்ய வேண்டும். பிறகு நீங்கள் ஓகே க்ளிக் செய்து அவரை உள்ளே வர அனுமதிக்க வேண்டும்.


போல்டர்களை பகிர்வது எப்படி?

ஒரு கணினி வலையமைப்பில் பைல்களைப் பரிமாறிக் கொள்ள (Share) இலகுவான வழி முறையை விண்டோஸ் இயங்கு தளம் தருகிறது. போல்டர் மற்றும் ட்ரைவ்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் கணினிக்குக் கணினி பைல்களை இலகுவாகப் பரிமாறிக் கொள்ளலாம்.

பைல் பகிர்தலில் விண்டோஸில் Simple File Sharing மற்றும் Advanced File Sharing என இரு வகைகள் உள்ளன. மூலம் பைல் பகிர்வை மேற்கொள்ளும் போது பாதுகாப்பு நடைமுறைகள் கவனத்திற் கொள்ளப் படுவதில்லை. வலையமைப்பில் இணைந்துள்ள எவரும் அந்த பைல்களை அணுகும் வாய்ப்பை Simple File Sharing அனுமதிக்கிறது. 

Simple File Sharing மூலம் போல்டர் மற்றும் ட்ரைவ்களைப் பகிர்ந்து கொள்ள உரிய போல்டர் அல்லது ட்ரைவ் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Sharing and security தெரிவு செய்ய வேண்டும். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் Sharing டேபின் கீழ் Network Sharing and security பகுதியில் Share this folder on the network என்பதைத் தெரிவு செய்து ஓகே சொல்ல வேண்டும். 

இவ்வாறு பகிரப்படும் போல்டரை வலையமைப்பில் உள்ள அனைத்து கணிகளாலும் My Network Places விண்டோவைத் திறந்து அல்லது ரன் பொக்ஸில் // (கம்பியூட்டர் பெயர்) என டைப் செய்து வேறொரு கணினியிலிருந்து அந்த போல்டரை அணுக முடியும்.

அடுத்து Advanced File Sharing ஐ அணுகுவதற்கு முதலில் மேற்சொன்ன Simple File Sharing என்பதை முடக்க வேண்டும். அதற்கு மை கம்பியூட்டர் விண்டோவைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு tools மெனுவில் Folder Options தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் View டேபின் கீழ் Use Simple File Sharing என்பதைத் தெரிவு நிலை யிலிருந்து நீக்கி விட்டு ஓகே சொல்லுங்கள்.

அடுத்து ஏற்கனவே சொன்னது போன்று தேவையான போல்டரின் மீது அல்லது ட்ரைவின் மீது ரைட் க்ளிக் செய்து Sharing and security தெரிவு செய்யுங்கள். இப்போது முன்னரை விட வித்தியாசமான ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றக் காணலாம். அங்கு பகிர வேண்டிய போல்டரை தெரிவு செய்து விட்டு security டேப் மற்றும் Permissions பட்டனில் க்ளிக் செய்து வலையமைப்பில் உள்ள எந்தக் கணினிகளால் பைல்களை அணுகலாம், மாற்றம் செய்யலாம் என்பன போன்ற பைல்களுக்கான பாதுகாப்பை வழங்கலாம்.

ரீ ஸ்டார்ட் டைம்ஸ்

கம்ப்யூட்டரை எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை ஷட் டவுண்
செய்து பின் ரீ ஸ்டார்ட் செய்திட வேண்டும்?

கட்டாயம் நாம் கம்ப்யூட்டரை நிறுத்தி சும்மா
வைத்திருக்க வேண்டுமா? கம்ப்யூட்டர்கள் கட்டாயம் ரெஸ்ட்
எடுக்க வேண்டுமா? இப்படி ஒரு கட்டாயம் எந்த
கம்ப்யூட்டருக்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
குறைந்த பட்ச இயக்க நிலை அல்லது அதிக பட்ச இயக்க நிலை என்று
எதுவும் இல்லை. ஆனால் சில வேளைகளில் கம்ப்யூட்டரின்
ஆப்பரேட்டிங் சிஸ்டமே கம்ப்யூட்டரை இப்போது ரீ ஸ்டார்ட்
செய்திடுக, என்று நமக்கு செய்தி கொடுக்கும். இந்த செய்தி
பெரும்பாலும் ஏதேனும் ஒரு சாப்ட்வேர் தொகுப்பை இன்ஸ்டால்
செய்தவுடன், அதன் செயல்பாடுகளை இயக்க கம்ப்யூட்டரை ரீ
ஸ்டார்ட் செய்ய வேண்டிய சூழ்நிலையில், இந்த செய்தி
காட்டப்படும். இருந்தாலும் பின் ஒரு நேரத்தில் ஸ்டார்ட்
செய்திட வேண்டும் என்றாலும் செய்திடலாம் என்று சலுகையும்
தரப் படும். அந்த சலுகையையும் மேற்கொள்ளலாம்.


கம்ப்யூட்டரில் பிரச்னைகள் ஏற்படுகையில் நாம் கட்டாயமாக
ரீஸ்டார்ட் செய்தே ஆக வேண்டும். ஏனென்றால் பிரச்னையின் சூழ்நிலை காரணமாக கம்ப்யூட்டரின் செயல்திறன்
முடங்கிப்போயிருக்கும். இங்கு ரீ ஸ்டார்ட் செய்வதால் எந்த
பிரச்னையினால் கம்ப்யூட்டர் முடங்கிப் போய் விட்டது என்று
அறிய வாய்ப்பு கிடைக்கும். பிரச்னைகள் இருந்தால் தானாக
சரியாகும் வாய்ப்பும் உண்டு.

உங்கள் விண்டோவை சரி செய்யலாம்

நீங்கள் அடிக்கடி பைல்களை ஒரு போல்டரிலிருந்து அடுத்த
போல்டருக்கு மாற்றுபவரா? நிச்சயம் நாம் அனைவருமே அதனை
செய்வோம். அல்லது ஒரு புரோ கிராமிலிருந்து இன்னொரு
புரோகிராமிற்கு பைலை மாற்றுவோம். இது போல மாற்றுகையில்
அடுத்தடுத்து போல்டர்களைத் திறந்து ஆல்ட் + டேப் உபயோகித்து
போல்டருக்கு போல்டர் தாவி பைல்களைக் காப்பி செய்திடுவோம்.
இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. உங்கள் விண்டோவினை
அதற்கேற்ற வகையில் முதலில் சரி செய்து நிறுத்த வேண்டும்.
எந்த விண்டோக்களில் நீங்கள் செயலாற்ற வேண்டுமோ அவை தவிர
மற்றவற்றை மினிமைஸ் செய்திடவும். டூல் பாரில் உள்ள காலி
இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் 
“Tile Windows Vertically” AÀ»x “Tile Windows
Vertically”
 
அவ்வளவுதான்.

இனி நீங்கள் செயலாற்ற தேர்ந்தெடுத்த விண்டோக்கள் இரண்டும் அருகருகே ஓடு அடுக்கிய மாதிரி நிற்கும். அல்லது படுக்கை வசத்தில்
இருக்கும். இரண்டில் உள்ள பைல்களை அப்படியே இழுத்து
விடுவதன் மூலம் எளிதாக மாற்றிக் கொள்ளலாம். அல்லது காப்பி
செய்து பேஸ்ட் செய்து கொள்ளலாம்.

உங்களை நீங்களே அறிந்து கொள்ள..

நீ ங்கள் பயன்படுத் தும் கம்ப்யூட்டர் உங்களுடையதுதான். கஷ்டப்பட்டு காசு சேர்த்து அல்லது பாதி கடன் வாங்கி உங்கள் மகன் /மகள் படிக்கவும் நீங்கள் அலுவலக வேலைகளை மேற்கொள்ளவும் வாங்கியது உண்மைதான். அந்த கம்ப்யூட்டரில் என்ன என்ன உள்ளது?

ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன? எந்த அல்லது எத்தனாவது சர்வீஸ் பேக் பதியப்பட்டுள்ளது? கம்ப்யூட்டர் உரிமையாளர் என யாருடைய பெயர் உள்ளது? சிஸ்டம் மாடல் பெயர் என்ன? மொத்த மெமரி எவ்வளவு? அதில் பிசிகல் மெமரி எவ்வளவு? விர்ச்சுவல் மெமரி எவ்வளவு/ என்றெல்லாம் தெரிந்து கொள்ள ஆவல் இல்லையா? இதை எல்லாம் எங்கு போய்த் தெரிந்து கொள்வது என்று ஆதங்கப்படுகிறீர்களா? ஒரே முயற்சியில் தெரிந்து கொள்ளலாம். இதற்கு ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்து ரன் விண்டோவில் சி.எம்.டி. (CMD)என டைப் செய்திடவும். உடனே டாஸ் விண்டோவிற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கே டிரைவின் பெயருக்குப் பின்னால் கர்சர் உங்கள் கட்டளைக்காகக் காத்திருக்கும்.

அங்கே Systeminfo என்று டைப் செய்து என்டர் தட்டவும். சிறிது நேரம் உங்கள் கம்ப்யூட்டர் பற்றிய தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு ஒவ்வொன்றாக வரிசையாகக் காட்டப்படும்.

மைக்ரோசாப்ட் தரும் சில்வர் லைட்

நீங்கள் இணையத்தில் அடிக்கடி பிரவுஸ் செய்து தகவல்களை டவுண்லோட் செய்திடும் பழக்கம் உள்ளவராக இருந்தால் அடோப் பிளாஷ், மேக்ரமீடியா பிளாஷ், அடோப் ஷாக்வேவ் மற்றும் மைக்ரோசாப்ட் சில்வர் லைட் குறித்த தகவல்களை அல்லது குறிப்புகளைத் தெரிந்திருப்பீர்கள். நீங்கள் சற்று திடுக்கிடுவது தெரிகிறது. முதலில் சொல்லப்பட்டிருப்பவை குறித்து படித்திருக்கிறோம்; அதென்ன சில்வர் லைட் என்று வியக்கிறீர்களா!


ஆம், இது அடிக்கடி கேள்விப்படாததுதான்; ஆனால் எளிதாகக் கிடைக்கக் கூடியதும் கூட. முதலில் இது என்ன சில்வர் லைட் என்று பார்ப்போம். அடிப்படையில் உங்களிடம் சில்வர் லைட் தொகுப்பு கம்ப்யூட்டரில் இல்லை என்றால் அதனை டவுண்லோட் செய்து பதித்திட வேண்டியதிருக்கும். பதியும் போது உங்கள் ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை அது எடுத்துக் கொள்ளும் தான். ஆனால் அதனால் பயன்களும் உண்டு. அடோப் பிளாஷ் மற்றும் ஷாக்வேவ் தொகுப்புகளுக்கு இணையான மைக்ரோசாப்ட் தொகுப்பாகும். 


முதலில் http://www. microsoft.com/silverlight என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திற்குச் செல்லுங்கள். தளத்தில் Install என்பதில் கிளிக் செய்திடுங்கள். அது தானாகப் பதிந்து முடித்தவுடன் கம்ப்யூட்டரை மீண்டும் ஸ்டார்ட் செய்திட வேண்டியதிருக்கும். மைக்ரோசாப்ட் சில வேளைகளில் இந்த தொகுப்பில் மட்டுமே இயங்கக் கூடிய சில பைல்களைத் தரும். அப்போது இந்த தொகுப்பின் பயன் கிடைக்கும். இல்லை என்றாலும் அடோபின் தொகுப்பிற்குப் பதிலாக இதனை இயக்கி பார்க்கலாம்.

சி.பி.யு., எந்த அளவிற்கு வேலை செய்கிறது?

சி.பி.யூ. என அழைக்கப்படும் கம்ப்யூட்டரின் மூளையான மையச் செயலகத்தின் வேலைப்பாட்டினை நாம் மிக எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். முதலில் வேலைப் பாடு என்பது என்ன? நாம் அதனை எந்த அளவிற்கு வேலை வாங்குகிறோம் என்பது தான். எடுத்துக்காட்டாக ஒன்றுக்கு மேற்பட்ட பல புரோகிராம்களை நாம் திறந்திருந்து பணியாற்றிக் கொண்டிருந்தால் சிபியூவினை அதிக வேலை வாங்குகிறோம் என்றாகிறது. அப்படியானால் ஒரு புரோகிராமையும் திறக்கவில்லை என்றால் சிபியூ வேலைத் திறனை நாம் பயன்படுத்தவில்லை என்று ஆகாது. ஆண்டி வைரஸ், பயர்வால் மற்றும் வேர்ட் பிராசசர்களுக்கான சில ஸ்பெஷல் டிரைவர்கள் என பின்னணியில் ஓடிக் கொண்டிருக்கும் புரோகிராம்கள் சிபியூவின் திறனைப் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கும். 




சரி, இதனை எப்படி அறிவது? 


இதற்கு நீங்கள் கம்ப்யூட்டரில் உள்ள Task Manager ஐத் திறக்க வேண்டும். இதற்கு நீங்கள் மேற்கொள்ள வேண்டிய எளிய வழி Ctrl + Alt + Del என்ற மூன்று பட்டன்களையும் ஒரு சேர அழுத்த வேண்டியதுதான். அழுத்தியவுடன் பாப் அப் பாக்ஸ் ஒன்று மேல் எழுந்து வரும். இதில் இகக் க்ண்ச்ஞ்ஞு என்று உள்ள இடத்தில் சிபியூ பயன்பாடு எத்தனை சதவிகிதம் உள்ளது என்று தெரியும். தொடர்ந்து இது மாறிக் கொண்டே இருக்கும். இதிலுள்ள மற்ற டேபுகளையும் அழுத்தி அவை என்ன காட்டுகின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

F4 கீயின் செயல்பாடு

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் F4 கீ நமக்குப் பல வகைகளில் பயன்படுகிறது. முதலாவதாக நாம் மூட விரும்பும் அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றை எளிதாக மூடிட இதனைப் பயன்படுத்தலாம். 
நீங்கள் மூட விரும்பும் அப்ளிகேஷன் புரோகிராமினை முதலில் செலக்ட் செய்து உறுதிப்படுத்திக் கொள்ளவும். அந்த புரோகிராம் மினிமைஸ் செய்யப்பட்டிருந்தால் அதனை மீண்டும் உயிர்ப்பித்து செலக்ட் செய்திடலாம். அல்லது டாஸ்க் பாரில் உள்ள அதன் கட்டத்தை செலக்ட் செய்திடலாம். அதன்பின் Alt+F4 என்ற வகையில் கீகளை அழுத்தினால் அந்த புரோகிராம் மட்டும் மூடப்படும். 




இரண்டாவதாக நீங்கள் ஒரே ஒரு அப்ளிகேஷன் புரோகிராமை இயக்கிப் பல டாகுமெண்ட்டுகளைத் திறந்து வைத்து இயங்குவதாக வைத்துக் கொள்வோம். எடுத்துக் காட்டாக வேர்ட் தொகுப்பினைத் திறந்து அதில் பல டாகுமெண்ட் பைல்களைத் திறந்திருக்கிறீர்கள். அப்போது Ctrl+F4 அழுத்தினால் திறந்திருக்கும் விண்டோ மட்டும் மூடப்படும். புரோகிராம் முழுவதும் மூடப்பட மாட்டாது. F4 கீயினை விண்டோஸ் சிஸ்டத்தை மூடிடவும் பயன்படுத்தலாம். நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த அனைத்து புரோகிராம்களையும் முதலில் மூடிவிடுங்கள். இதனை உறுதிப்படுத்திக் கொண்டு பின் Alt + F4 அழுத்தினால் விண்டோஸ் இயக்கம் ஷட் டவுண் செய்யப் படும்.

கம்ப்யூட்டருக்குள் இருப்பதெல்லாம் சரியா இருக்கா?

கம்ப்யூட்டரில் பல வகையான ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளன. ஹார்ட் டிஸ்க் மட்டும் நாம் அறிவோம். மதர் போர்டு என ஒன்று இருப்பதைப் பொதுவாகத் தெரிந்து கொண்டிருப்போம். இதனுடன் பல துணை சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கீ போர்டு, மவுஸ் போன்றவை பொதுவாக உள்ளவை. இவை எல்லாம் சரியாக உள்ளனவா? அல்லது பிரச்னையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றனவா ? திடீரென நம் காலை வாரிவிடுமா? என்பதை எப்படி அறிந்து கொள்வது? அல்லது அவை இயங்க வேண்டிய வேகத்தில் அதற்கான தன்மையுடன் இயங்குகின்றனவா? என்று எப்படித் தெரிந்து கொள்வது? இதற்கு இணையம் ஒரு புரோகிராமினைத் தருகிறது. 


PC Wizard என்ற இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து இயக்கினால் இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும். இதனை http://www.cpuid.com/pcwizard.php என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். உங்களுடைய கம்ப்யூட்டரின் பாகங்கள் மற்றும் அவற்றின் செயல் திறனை சிறிது ஆழமாகத் தெரிந்துகொள்ள இந்த புரோகிராம் பயன்படுகிறது. அவற்றின் செயல் திறன் பொதுவான இவற்றின் செயல் திறனுடன் ஒப்பிடுகையில் சரியாக உள்ளதா? என்பதனையும் அறியலாம். இதனை இன்ஸ்டால் செய்து இயக்கியவுடன் இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரை முழுமையாக ஸ்கேன் செய்திடும். பின் ஒவ்வொரு சாதனமும் எந்நிலையில் இயங்குகின்றன என்று தொழில் நுட்ப ரீதியில் தகவல் தரப்படும். எந்த சாதனங்கள் சரியில்லை என்று கண்டறிந்து இவற்றை எல்லாம் மாற்றிவிடுங்கள் என்று அட்வைஸ் தரும். அப்படியா சேதி! என்று இவற்றை எல்லாம் பார்த்த பிறகு அங்குள்ள Benchmarks என்ற பட்டனை அழுத்தவும். இது கீழாக இடது புறம் கொடுக்கப்பட்டுள்ளது. இது சாதனங்களுக்கான செயல்திறன் சோதனையை மேற்கொண்டு அதன் பொதுவான தன்மையுடன் ஒப்பிட்டு காட்டும். இவை மட்டுமல்லாது உங்கள் கம்ப்யூட்டர் குறித்த இன்னும் பல தகவல்களையும் சோதனைகளையும் மேற்கொள்ளலாம். பிசி விஸார்ட் புரோகிராமினை இயக்கிப் பார்த்து ரசித்துப் பாருங்கள்.

ஐகான்களை இஷ்டப்படி அமைத்திட....

விண்டோஸ் எக்ஸ்பி இயக்கத்தில் நம் கம்ப்யூட்டர் ஐகான்களை நம் இஷ்டப்பட்ட இடைவெளியில் அமைக்கலாம். ஐகானின் சைஸைக் கூட மாற்றலாம்; என்ன அப்படியா! என்கிறீர்களா!! அது எப்படி என்று பார்ப்போம்.


டெஸ்க்டாப்பில் எங்காவது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties பிரிவைத் தேர்ந்தெடுத்து என்டர் தட்டவும். கிடைக்கும் விண்டோவில் உள்ள Appearance டேபில் கிளிக் செய்திடவும். அங்குள்ள Advance பட்டனில் அதன்பின் கிளிக்கிடவும். அங்கு Item என்ற பிரிவில் உங்கள் ஐகானை எப்படி எல்லாம் வளைக்கலாம் என்று காணலாம். எடுத்துக்காட்டாக நெட்டு வரிசையிலும் படுக்கை வரிசையிலுமாக ஐகான்கள் அமைக்கப்படும் இடைவெளியை மாற்றலாம். அனைத்தையும் முடித்துவிட்டு ஓகே கிளிக் செய்து வெளியேறினால் நீங்கள் செட் செய்தபடி ஐகான்கள் அமைந்திருக்கும்.

உங்கள் மேக் கம்ப்யூட்டரை வேகப்படுத்துங்கள்

புதிய மேக் கம்ப்யூட்டர் ஒன்று வாங்கியிருக்கிறீர்களா! அழகுதான். அதில் செயல்படுவது ஒரு தனி அனுபவம்தான். ஆனால் வாங்கி இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டால் அதன் வேகம் குறைந்து இருக்கும். 
ஆம், நிச்சயம் குறைந்திருக்கும். வாங்கும்போது இருந்ததைக் காட்டிலும் இயங்கும் வேகம் சற்று குறைவுதான். ஒரு சிலர் மேக் கம்ப்யூட்டரின் இயக்கத்தினைப் பழையதாக்கும் புரோகிராம் ஒன்று இரண்டு ஆண்டுகளில் இயக்கப்பட்டு வேகத்தைத் தடுக்கும் என்றும் சொல்கின்றனர்.




இன்னும் சிலர் தகவல்கள் அடங்கிய பைல்கள் தொடர்ந்து சிஸ்டத்தில் அடுக்கப்படுவதால் அதன் சுமை இயக்க வேகத்தைக் கட்டுப்படுத்தலாம் என்று கூறுகின்றனர். இப்படி பல யூகங்களும் சில வேளைகளில் சரியான காரணங்களும் சொல்லப்பட்டாலும் ஒரு நல்ல முடிவொன்று நமக்குக் கிடைத்துள்ளது. உங்கள் மேக் சிஸ்டத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து அதனை அது வந்த முதல் நாள் எப்படி செயல்பட்டதோ அதே போன்று அமைத்துவிடலாம் என்பதே. இந்த ஊட்டச் சத்து டானிக் எப்படி வழங்கி சிஸ்டத்தை அமைப்பது என்று பார்ப்போம்.

1. முதலில் சிஸ்டத்தில் உள்ள பைல்கள் அனைத்தையும் பாதுகாப்பான ஒரு இடத்திற்கு அல்லது மீடியத்திற்குக் கொண்டு செல்லுங்கள். இதற்கு சூப்பர் டூப்பர் போன்ற புரோகிராமினைப் பயன்படுத்தலாம்; அல்லது ஆப்பிள் வழங்கும் பேக் அப் புரோகிராமினை இயக்கலாம். ஆப்பிள் புரோகிராம் பயன்படுத்தி பைல்கள் அனைத்தையும் நகர்த்தி, பின் மீண்டும் மேக் சிஸ்டத்தை அமைத்து அதன்பின் அனைத்து பைல்களையும் மீண்டும் கம்ப்யூட்டருக்குக் கொண்டுவரும் வேலையை மேற்கொள்வதாக இருந்தால் உங்களுக்கு ஒரு எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிரைவ் வேண்டும். 


2. அடுத்து உங்கள் அப்ளிகேஷன்ஸ் போல்டரைத் திறந்து (Macintosh HD\Applications) அதில் உள்ள அப்ளிகேஷன்ஸ் புரோகிராம்களை இழுத்து வந்து விடுங்கள். பல மாதங்களாக நீங்கள் பயன்படுத்தாத புரோகிராம்களை ஒதுக்கி விடுங்கள். பயன்படுத்தவில்லை என்றால் தேவை இல்லை என்றுதானே பொருள். அப்படியே வேண்டும் என்றால் பின் நாளில் டவுண்லோட் செய்திடலாம். 



3. அடுத்து முக்கிய டாகுமெண்ட்களை காப்பி செய்வது. இதற்கு Macintosh HD\Users\your account name\Documents என்ற போல்டரைத் திறந்து கொள்ளுங்கள். டாகுமென்ட்ஸ் எப்போதும் தேவை என்பதால் எதனையும் விட்டுவிட வேண்டாம். ஆப்பிள் மெயில் நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் உங்களுடைய இமெயில் போல்டர்களை (Macintosh HD\Users\your account name\Library\Mail) என்ற போல்டருக்குக் கொண்டு செல்லுங்கள்.


4. மீடியா சேவ் செய்திடுக: மீடியா பைல்களை காப்பி செய்வது மூன்று நிலைகளில் மேற்கொள்ள வேண்டும். 
நீங்கள் டிகூதணஞுண் மூலம் தான் உங்கள் பாடல் பைல்களைக் கேட்கிறீர்கள் என்றால் உங்களுடைய முழு ஐட்யூன்ஸ் போல்டரை (Macintosh HD\Users your account name\Music\iTunes) என்ற போல்டருக்குக் கொண்டு செல்லவும். இதே போல iPhoto library போல்டரை Macintosh HD\Users\your account name\Pictures\iPhoto Library என்ற போல்டருக்குக் கொண்டு செல்லவும். பொதுவாக மீடியா பைல்கள் பெரிய அளவில் இருக்கும் என்பதால் இதனை மாற்றுவதற்கு அதிக நேரம் எடுக்கலாம்; பொறு மை சற்று தேவை. 


5. செட்டிங்ஸ் மற்றும் புக்மார்க்: மேக் பயன்படுத்திய நாள்முதல் நீங்கள் ஏற்படுத்திய செட்டிங்ஸ் மற்றும் புக் மார்க்குகளை சேவ் செய்திட மறக்கக் கூடாது. இதற்கு உங்கள் செட்டிங்ஸ் அனைத்தையும் சிங்க் செய்வதுதான் சிறந்த வழி. இதற்கு Mac Sync தேர்ந்தெடுக்க வேண்டும். மேக் சிங்க் தேர்ந்தெடுக்க System Preferences செல்லவும். பின் Mac என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் டூல்பாரில் Syn மீது கிளிக் செய்திடவும். அதன்பின் எவற்றை சிங்க் செய்திட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து சிங்க் செய்யுங்கள். பிரவுசர் புக்மார்க்குகளை எப்படி சேவ் செய்வது என்று பார்ப்போம். சபாரி பயன்படுத்துவோர் File மீது கிளிக் செய்து Export Bookmarks என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் பைல்களை எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்கில் சேவ் செய்திடவும். உங்களிடம் மேக் அக்கவுண்ட் இருந்தால் Preferences | Bookmarks சென்று Synchronize my bookmarks using.Mac என்பதில் செக் மார்க் அடையாளம் ஏற்படுத்தவும். பயர்பாக்ஸ் பயன்படுத்தினால் Bookmarks என்பதில் கிளிக் செய்திடவும். புக்மார்க்ஸ் விண்டோ திறந்தவுடன் File என்பதில் கிளிக் செய்து பின் Export திறந்து உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் பதிய கட்டளை கொடுக்கவும். இதே போல ஆப்பரா பயன்படுத்துபவர்கள் File | Import and Export | Export Opera Bookmarks என்று தரவும். 


6. ஸ்கிரீன் ஷாட்ஸ் : சில விஷயங்களை மேக் கம்ப்யூட்டரிலிருந்து எடுத்து ஹார்ட் டிஸ்க்கிற்குக் கொண்டு செல்ல முடியாது. எடுத்துக் காட்டாக மேக் திரை எப்படி காணப்படுகிறது. அழகாக ரசனையுடன் அமைத்திருப்பீர்கள். உங்களுடைய பைல்களை ஒரு குறிப்பிட்ட நீங்கள் விரும்பும் வகையில் அமைத்திருப்பீர்கள். இவை எல்லாம் கம்ப்யூட்டர் இயங்க முக்கியம் இல்லை என்றாலும் இவற்றை ஏன் நாம் இழக்க வேண்டும். பின் தீர்வு தான் என்ன? இவற்றை ஸ்கிரீன் ஷாட்களாக எடுத்து அந்த பைல்களை சேவ் செய்திடுங்கள். இதற்கு ShiftCommand3 என்ற வகையில் கட்டளை கொடுத்தால் ஸ்கிரின் ஷாட் கிடைக்கும்.



ShiftCommand 4 கொடுத்தால் எவை மட்டும் வேண்டுமோ அவை மட்டும் காப்பி ஆகும். உங்கள் எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்கில் அனைத்தும் திணித்தாயிற்றா? இப்போது மேக் சிஸ்டம் பைல்களை ரீ இன்ஸ்டால் செய்திடும் வேளை வந்துவிட்டது. இது 30 நிமிடத்திலிருந்து 90 நிமிடம் வரை கூட நேரம் எடுக்கும். அது உங்கள் கம்ப்யூட்டர் பிராசசரின் வேகத் தைப் பொறுத்தது. இன்ஸ்டலேஷன் டிவிடியைப் போட்டுவிட்டு அது சொல்லும் வழிகளைப் பின்பற்றி வந்தால் போதும். ரீ இன்ஸ்டால் பணி மேற்கொள்ளப்படும். 


அடுத்து பைல்க ளை மீண்டும் எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து கம்ப்யூட்டருக்கு மாற்ற வேண்டும். இதில் இரண்டு பணிகளைத் தனியே மேற்கொள்ள வேண் டும். சபாரி பிரவுசரின் புக்மார்க்குகளை மாற்ற சபாரியில் File திறந்து Import Bookmarks என்பதில் கிளிக் செய்திடவும். எங்கு இவை இருக்க வேண்டும் என்பதனையும் நீங்கள் சுட்டிக் காட்ட வேண்டும். பயர்பாக்ஸில் Bookmarks | Organize Bookmarks என்று சென்று File | Import என கட்டளை கொடுக்கவும். இமெயில் செட்டிங்ஸ் அமைக்க ஆப்பிள் மெயில் திறந்து பின் File என்பதில் கிளிக் செய்திடவும். 


பின்னர் mport Mailboxes என்று கட்டளை கொடுக்கவும். “Mail for Mac OS X” லிருந்து டேட்டாவினை இறக்கிட மெயில் போல்டரைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் மெயில்கள் அனைத்தும் “Imported.” என்னும் புதிய போல்டரில் காப்பி ஆகும். இதிலிருந்து அந்த அந்த மெயில் பாக்ஸ்களுக்கு மெயில்களை இழுத்து கொண்டு சென்று காப்பி செய்துவிடலாம். இவ்வளவும் செய்திட சற்று நேரம் பிடிக்கும் என்பது உண்மையே. மதியம் சாப்பாட்டிற்குப் பின் ஓய்வெடுக்கையில் இந்த செயலை மேற்கொள்ளுங்கள். வேலை முடிந்த பின்னர் மேக் கம்ப்யூட்டர் இயக்கத்தைப் பாருங்கள். புதிய வேகத்தில் இயங்கத் தொடங்கும்.

ஹெல்ப் பக்கத்தின் எழுத்து அளவை மாற்றிட

எக்ஸ்பி சிஸ்டத்தில் அடிக்கடி நாம் தொடர்பு கொள்ளும் பிரிவு அதன் ஹெல்ப் பைல்கள்தான். ஆனால் இவை அளவில் சிறியதாக நம் கண்களைச் சோதிப்பதாக உள்ளது. சில வேளைகளில் இவற்றைப் படித்தறிய முடியாமல் போதுமடா சாமி ! என்று விட்டுவிடும் அளவிற்கு சிறியதாக இருக்கின்றன. இந்த அளவை மாற்றிட முடியுமா? என்று பல வாசகர்கள் கேட்டுள்ளனர். இவர்களுக்கான பதில் எழுத்தின் அளவை மாற்ற முடியும் என்பதுதான். ஆனால் அளவை மாற்றிட சிறிது சுற்றி வளைத்து சில வேலைகளை மேற்கொள்ள வேண்டும். 


ஹெல்ப் பைல்கள் அனைத்தும் எச்.டி.எம்.எல். அடிப்படையில் உருவானவை. அவை கேஸ்கேடிங் ஸ்டைல் ஷீட் (Cascading Style Sheets) என்பதன் மூலம் வடிவமைக்கப்பட்டவை. எனவே முதலில் நீங்கள் இணைய தளப் பக்கங்களை பார்க்கும் வகையை மாற்ற வேண்டும். முதலில் கண்ட்ரோல் பேனல் சென்று அதில் இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் (Internet Options) என்பதைத் தேர்வு செய்திட வேண்டும். பின் அதில் உள்ள ஜெனரல் டேபில் கிடைக்கும் அக்செஸிபிலிட்டி (Accessibility) என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். அதில் Ignore font sizes specified on Web pages என்ற பாக்ஸில் டிக் மார்க் ஏற்படுத்துங்கள். பின் ஓகே கொடுத்து வெளியேறுங்கள். இந்த மாற்றத்தினால் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தொகுப்பு அனைத்து இணைய தளப் பக்கங்களையும் நாம் View | Text Size பிரிவில் கொடுக்கும் அளவிலேயே காட்டுமாறு கட்டாயப்படுத்தப்படும். இது உங்களுக்குப் பிடிக்க வில்லை என்றால் மீண்டும் மேலே தரப்பட்டுள்ள பிரிவுகளுக்குச் சென்று இறுதியாக டிக் மார்க் கொடுத்த இடத்தில் அதனை நீக்கி ஓகே கொடுக்கவும்

No comments:

Post a Comment