Search This Blog

Saturday, April 30


ஓடியோ கோப்புகளை பிரித்து பின் ஒன்றிணைக்க


E-mailஅச்சிடுகPDF
பெரும்பாலானோர்கள் ஒரு பாடலை விரும்பி கேட்போம். ஆனால் பாடல் முழுவதையும் கேட்க மாட்டோம். ஒரு குறிப்பிட்ட ஒருசில வரிகளை மட்டுமே ரசித்து கேட்போம். அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியாக பிரித்தெடுத்து கேட்போம். 

கைத்தொலைபேசியில் ரிங்டோன் அமைக்க வேண்டுமெனில் அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியாக பிரித்தெடுத்து அமைத்துக் கொள்வோம். இவ்வாறு ஒரு பாடலில் இருந்து குறிப்பிட்ட பகுதியை மட்டும் பிரித்தெடுக்க வேண்டுமெனில், நாம் ஒரு ஓடியோ கட்டரின் உதவியை நாட வேண்டும். 

அந்த வகையில் உள்ள மென்பொருள் தான் Weeny Free Audio Cutter. இந்த மென்பொருள் மூலமாக எளிமையான முறையில் ஓடியோவினை பிரித்துக் கொள்ள முடியும். மேலும் இந்த மென்பொருளின் உதவியுடன் ஓடியோ கோப்புகளை பிரித்த பின் ஒன்றிணைக்கவும் முடியும். 

இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் கணணியை ஒருமுறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் Cut Audio, Merge Audio என்ற தேர்வினை உங்கள் விருப்பபடி தெரிவு செய்து கொள்ளவும்.

பின் ஓடியோ கோப்பை உள்ளிட்டு வேண்டியபடி உருவாக்கி கொள்ள முடியும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். எந்த அளவுடைய ஓடியோ கோப்புகளையும் ஆதரிக்கும் தன்மை இந்த மென்பொருளுக்கு உண்டு. 

தரவிறக்க சுட்டி

No comments:

Post a Comment