விண்டோஸ் 7ல் தொடக்க பட்டனை மறைக்க

இந்த விண்டோஸ் ஏழு ஓபரேட்டிங் சிஸ்ட்டத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த ஓபரேட்டிங் சிஸ்ட்டத்தை சார்ந்து தினமும் பல்வேறு மென்பொருள்கள் வெளியாகிறன. அவற்றில் ஒன்று தான் Taskbar Hider.
இந்த மென்பொருளின் உதவியுடன் விண்டோஸ் ஏழு ஓபரேட்டிங் சிஸ்ட்டத்தின் டாஸ்க்பார் மற்றும் தொடக்க பொத்தானை மறைக்கலாம். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் அளவில் சிறிய மென்பொருள் ஆகும்.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கொள்ளவும். சுருக்கு கோப்பறையாக(Zip) உள்ள கோப்பை விரித்து கொள்ளவும்.
பின் அந்த கோப்பின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Run as administrator என்பதை தேர்வு செய்யவும். தேர்வு செய்தவுடன் தோன்றும் விண்டோவில் உங்கள் விருப்பபடி டாஸ்க்பார் மற்றும் ஸ்டார்ட் பட்டனை மறைத்துக் கொள்ள முடியும்.
தரவிறக்க சுட்டி
No comments:
Post a Comment