Search This Blog

Tuesday, March 22


ஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.


ஒன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. 

கணினி பயன்படுத்தும் அனைவரும் விரும்பும் பொதுவான ஒன்று நாம் கணினியில் தட்டச்சு செய்யும் வேகம் அதிகரிக்க வேண்டும் என்பது தான். 

டைப்ரைட்டிங் வகுப்புக்கு கூட செல்ல நேரம் இருக்காது இந்தநிலையில் நாம் ஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவத்தான் இந்தத்தளம் உள்ளது. 

இணையதள முகவரி : http://www.keybr.com

இந்தத் தளத்திற்கு சென்றவுடன் முகப்பிலேயே டைப்ரைட்டிங் கீபோர்டு தெரியும். இதில் நாம் தட்டச்சு செய்யும் வேகத்தை மட்டும் கொடுத்து விட்டு Type செய்ய தொடங்கலாம். ஒவ்வொரு எழுத்தாக மேலே கொடுக்க நாம் தட்டச்சு செய்ய வேண்டியது தான்.



தினமும் சராசரியாக 1 மணி நேரம் செலவு செய்தால் 40 நாட்களுக்குள் நாம் கணினியில் தட்டச்சு செய்வதில் வல்லவர்கள் ஆகலாம். முதலில் வேகம் குறைவாக தட்டச்சு செய்ய ஆரம்பித்து அதன் பின் நாட்கள் செல்ல செல்ல நாம் தட்டச்சு செய்யும் வேகத்தை கூட்டலாம். 

தட்டச்சு பழக விரும்பும் அனைவருக்கும் இந்தச் செய்தி பயனுள்ளதாக இருக்கும்

No comments:

Post a Comment