Search This Blog

Monday, March 21


மால்வேர் புரோக்கிராம்கள் : அன்றிலிருந்து இன்று வரை

அண்மையில் அருமையான ஓர் இணைய தளம் ஒன்றைப் பார்த்தேன். நம் கம்ப்யூட்டரையும் நம்மையும் பயமுறுத்தும் பாதுகாப்பு குறித்து நம்மை அப்டேட் செய்திடும் வகையில் அந்த தளம் செயல்படுவதனைக் கண்டு கொண்டேன்.

InternationalMalwareThreatCenter என அழைக்கப்படுகிறது. இது இணையச் செயல்பாட்டினை மானிட்டர் செய்திடும் ஒரு தளமாக இயங்குகிறது. இதில் கம்ப்யூட்டரை அவ்வப்போது அச்சுறுத்தும் மால்வேர் புரோகிராம்களைப் பற்றி விலாவாரியாகக் கூறுகிறது.

ஒவ்வொரு மோசமான மால்வேர் புரோகிராமும் எப்போது வந்தது; எந்த அளவில் மோசமானது; அதனை எதிர்க்கும் பணியினை யார் யார் மேற்கொண்டுள்ளார்கள்; அதனைத் தவிர்க்க என்ன செய்திடலாம் என்பது போன்ற தகவல்களை சரியான புள்ளி விபரங்களுடன் தருகிறது. எனவே ஏதேனும் ஒரு மால்வேர் குறித்து நீங்கள் சந்தேகப்பட்டு அது குறித்த தகவல்கள் வேண்டும் என்றால் உடனே இந்த தளத்தினை அணுகலாம். அந்த மால்வேர் புரோகிராமின் பெயரைக் குறிப்பிட்டு அது எங்கிருந்து வருகிறது என்ற தெளிவான தகவலைத் தருகிறது.

அத்துடன் குறிப்பிட்ட மால்வேர் புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டருக்குள் நெருங்கவிடாமல் இருக்க அது வரும் ஐ.பி. முகவரியினைத் தந்து அந்த முகவரியிலிருந்து எது வந்தாலும் அனுமதிக்காமல் செட் செய்திடும்படி கூறுகிறது. பிஷ்ஷிங் மற்றும் வேறு வகைகளில் உங்கள் கம்ப்யூட்டருக்குள் வரும் புரோகிராம்களை அனுப்புவோரின் பொதுவா ன டொமைன் பெயரையும் குறிப்பிடுகிறது.

இப்போது உலா வந்து கொண்டிருக்கும் மால்வேர் புரோகிராம்களைக் குறிப்பிட்டி இவற்றிற்கு எதிரான ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர்களை யார் தயாரித்து வழங்குகிறார்கள் என்ற தகவலும் இங்கு கிடைக்கிறது. இதனை அறிந்து கொண்டு அத்தகைய தளங்களுக்குச் செல்லாமல் இருக்கலாம் இல்லையா!

எனவே தங்கள் கம்ப்யூட்டர் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த தளம் அரிய தகவல்களைத் தரும் தளமாக உள்ளது.தடுக்கிறோமோ இல்லையோ கெடுதல் விளைவிப்பவர்கள் குறித்து அறிந்து கொள்வது நல்லதுதானே.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

ஏப்ரல் முதலாம் திகதி கணினிகளை தாக்கவுள்ள அதி அபாயகரமான வைரஸ்

எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி அபாயகரமான வைரஸ் ஒன்றின் தாக்கத்தால் உலகெங்குமுள்ள மில்லியன் கணக்கான பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக கணினி வைரஸ் நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
""மேற்படி வைரஸானது தற்போதே உங்கள் வீட்டுக் கணினிகளில் மறைந்திருந்து உரிய தாக்குதலுக்கான தருணத்திற்காக காத்திருக்கலாம்'' என "எப் செக்யூர்' நிறுவனத்தின் கணினி வைரஸ் நிபுணரான மைக்கோஹைப் போனென் தெரிவித்தார்.

"டவுனாடப்' அல்லது "கிடோ' என்றழைக்கப்படும் இந்த வைரஸானது இணையத்தளம் மூலமாக கணினியின் ஞாபகப்பகுதியில் பரவும் அபாயமிக்கதாகும்.

கடந்த மாதம் இந்த வைரஸால் 9 மில்லியனுக்கும் அதிகமான கணினி கள் பாதிக்கப்பட்டுள்ளன.

"வின்டோஸ் புழு' என்ற இந்த வைரஸானது ஒருவரது கணினிக்குள் ஒரு தடவை ஊடுருவினால், அது கோப்புகளை ஸ்தாபித்து அக் கணினியிலுள்ள தகவல்களை பதிவிறக்கம் செய்ய ஆரம்பிக்கும்.

அத்துடன் இந்த வைரஸ் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளும் வகையில் கணினியிலுள்ள வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் மற்றும் ஏனைய கோப்புகள் உட்பட அனைத்தையுமே தாக்கி அழிக்க ஆரம்பிக்கும் வல்லமை கொண்டது.

இதனால், கணினியின் செயற்பாடுகள் மெல்ல மெல்ல ஸ்தம்பிதமடையும்.

இந்த கணினி வைரஸ் எங்கிருந்து உருவாக்கப்பட்டது என்பதை அறிய முடியாதபடி அதுபல போலி முகவரிகளை தினசரி உருவாக்கி வருவது நிலைமையை மென்மேலும் சிக்கலாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வைரஸானது கணினிகளிலுள்ள தனிப்பட்ட விபரங்கள் மற்றும் வங்கி விபரங்கள் உள்ளடங்கலாக தகவல்களை களவாடிச் செல்ல கூடியது.

இந்த கணினி வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபட "வின்டோஸ்' பாவனையாளர்கள் "மைக்ரோசொப்ட்' நிறுவனத்தின் இணையத்தளத்திலிருந்து விசேட இலவச 'Patch' மென்பொருளை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Portable Autorun Virus Remover v2.3 build 0618

viru
Autorun Virus Removerprovides protection against any malicious programs trying to attack via USB drive. When a USB device is inserted into your computer, Autorun Virus Remover will automatically scan it, block and delete autorun virus, trojans, and malicious code. Also, it can detect and remove USB virus such as autorun.inf virus in your computer.
Autorun Virus Remover can also remove the autorun virus due to which you can't open your hard disk and USB drive (Pen drive, Memory card) by double clicking. Autorun Virus Remover USB antivirus software to permanently protect offline computer against any USB virus without the need for signature updates. This light and easy to use solution is compatible with all software and doesn't slow down your computer at all.
http://rapidshare.com/files/173509409/X-230618AVR.rar
http://www.megaupload.com/?d=FJ32W7PX

கணினியிலுள்ள தகவல்களை அழிக்கும் வைரஸ்கள்

1. வைரஸ் (Virus) வைரஸ்கள் பல வகைகளாக உபயோகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் இதன் பொதுவான குணமானது ஒரு கணினியில் உள்ள EXE எனப்படும் விரிவு கொண்ட புரோகிராம்களுடன் தானாகவே சென்று ஒட்டிக் கொள்ளும் திறன் கொண்டது. இது போன்று சேர்ந்து கொண்ட வைரஸ் புரோகிராமானது அந்த EXE விரிவு கொண்ட புரோகிராமை உபயோகப்படுத்தும் போது நாம் எதிர்பாரா வகையில் அந்த புரோகிராமை இயக்க முடியாத வகையில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். சில வைரஸ்கள் நமது புரோகிராம்களில் உள்ள சில கரக்டர்களை வேறு சில கரக்டர்களாக மாற்றியோ அல்லது நமது புரோகிராம் வ?களை காணாமல் செய்தோ பாதிப்புகளை ஏற்படுத்தும். இதுவரை பல்லாயிரக்கணக்கான வைரஸ்கள் உலகில் உபயோகத்தில் இருந்து வந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த I Love You எனப்படும் வைரஸ் கணினியில் ஏற்படுத்திய பாதிப்பை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது.

2. டிராஜன் ஹோர்ஸ் (Trojan Horse) இது ஒரு புது வகையான வைரஸ் ஆக கருதப்பட்டாலும் இதன் பாதிப்புகள் நாம் எதிர்பாராத வகையில் இருக்கும். ஏனென்றால் இந்த வகை வைரசானது ஒரு கணினி புரோகிராமுடன் தானாகவே சென்று ஒட்டிக் கொண்டாலும் பல நேரங்களில் எதிர்பார்க் காத சில வேலைகளைச் செய்யும்படி அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு யூசர் தனது புரோகிராமை எடுத்து அதில் சிலமாற்றங்களைச் செய்ய முற்படும்போது அந்தப் புரோகிராமை அழித்து விடும் தன்மை கொண்டது தான் இந்த டிராஜன் ஹோர்ஸ் ஆகும். இது போன்று புரோகிராம்களை அழித்து விடுவதால் யூசர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போகும் நிலை உருவாகிறது.

3. வோம் (Worm) இந்த வகை வைரஸ் ஆனது சற்று வேடிக்கையானதும் கூட. ஏனென்றால் ஒரு புரோகிராமை நாம் கொப்பி செய்யும்போது அதே போன்று அதே பெயரில் மற்றொரு புரோகிராம் ஒன்றும் உருவாகும். இந்த இரண்டு புரோகிராம்களின் அளவும் ஒரே அளவாகவே காட்டும். ஆகையால் நாம் ஏதாவது ஒன்றை அழிக்க நினைத்து புரோகிராமை அழித்து விடுவோம். அதன் பிறகு நம்மிடம் இருக்கும் அந்த மற்றொரு புரோ கிராமை எடுத்து அதில் உள்ள தகவல்களை பார்த்தோமேயானால் ஒன்றுமே இருக்காது. ஒரு புரோகிராம் வரி கூட இல்லாமல் முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக ஓர் அலுவலகத்தில் கணினியைஉபயோகிக்கும் ஒருவர் ஒவ்வொரு முறையும் தனது கணினியில் இருந்து Server கணினிக்கு தகவல்களை அனுப்பும் போதும் இது போன்ற வைரஸ்கள் உள்ளதா என்று சோதனையிட வேண்டும்.

அது போன்று சோதனையிடும் போது இது போன்ற அபாயகரமான வைரஸ் புரோகிராம்களை அழித்து விட்டு பிறகு தான் அவற்றைக் கணினியில் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தானாக வரும் வைரஸை எப்படி தடுப்பது

நம்மிடையே ஒரு பழமொழி உண்டு. வேலியில் ஓடும் ஓணானை
எடுத்து காதிலே விட்டுக் கொண்டு பின் குத்துதே குடையுதே
என்றால் என்ன அர்த்தம்? என்று பலரால் சொல்லப்படும்.
பாட்டு, படம் ஏன் முக்கிய பைல் உள்ளது என்று அதனை
மாற்ற வேண்டி ஏதாவது ஒரு சிடியை அதன் டிரைவில் போட்டு
விடுவோம்.

பொதுவாக ஒரு சிடியை டிரைவில் போட்டவுடன் அது தானாக இயங்கி
பைல்களின் போல்டர்களைக் காட்டி திறக்கவா எனக் கேட்கும்.
பாடல்களுக்கான பைல்கள் இருந்தால் அதனை இயக்கும். அல்லது
அதிலேயே உடன் இயக்கும் வகையில் Auto
Play / Auto Run
 
என்ற வசதி தரப்பட்டிருந்தால்
இயங்க தொடங்கும். இந்த வசதி எதனையும் உடனே இன்ஸ்டால்
செய்திடத் தொடங்கும். இங்குதான் வினையே உள்ளது. இவ்வாறு
நல்ல பைல்களின் இயக்கம் தொடங்குகையில் உடனே வைரஸ் உள்ள
சிறிய பைல்களும் கம்ப்யூட்டருக்கு மாறி அதன் நாச வேலையைத்
தொடங்கிவிடும். ஏன், கம்ப்யூட்டரில் உள்ள ஆண்டி வைரஸ்
புரோகிராமினை இயக்கி சிடியில் வைரஸ் உள்ளதா என்று சோதனை
செய்திருக்கலாமே என்று எண்ணுகிறீர்களா. இங்கு தான் நம்மை
செயல்படவிடாமல் Auto Playவைரஸை அனுப்புவது தெரியாமல், அதற்கு வழி அமைத்துக்
கொடுக்கிறது. இதற்கு என்ன செய்திடலாம்? செயல்பாட்டினை
நிறுத்திவிட வேண்டியதுதான். எப்படி? நிறுத்த முடியுமா?
என்று தானே கேட்கிறீர்கள். கீழ்க்கண்டவாறு செட் செய்திடவும்.
விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் மை கம்ப்யூட்டர் ஐகானைக்
கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் உங்கள் சிடி
டிரைவிற்கான ஐகானில் ரைட் கிளிக் செய்திடுங்கள். அதில்
புராபர்ட்டீஸ் என்பதைத் தேர்ந்தெடுங்கள். இதில்
Auto Play 
என்ற டேபினைத்
தேர்ந்தெடுங்கள். இங்கே நீங்கள் பயன்படுத்தக் கூடிய பல்வேறு
மீடியாக்களுக்கான செட்டிங்ஸ் அமைக்கலாம். இதில் இயக்கத்தை
நிறுத்திவிட்டால் நீங்கள் பயன்படுத்தும் மீடியா தானாக
இயங்காது. ஆனால் இது 100 சதவிகிதம் பாதுகாப்பானதா? என்று
கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். ஏனென்றால் வைரஸ்
அனுப்பும் ஹேக்கர்கள் இதனையும் மாற்றிவிடும் அல்லது
ஏமாற்றிவிடும் வல்லமை படைத்தவர்களாக இருக்கின்றனர். மேலும்
ஆட்டோ பிளே இயக்க முடியாமல் செய்திருந்தாலும், பொதுவாக
அந்த டிரைவில் டபுள் கிளிக் செய்தால் ஆட்டோ ரன் பைலில்
இயக்குவதற்கான கட்டளை இருந்தால் அது தானாக இயக்கப்படும்.
எனவே எந்த சிடி அல்லது பிளாஷ் டிரைவ் போட்டாலும் அதனை உடனே
இயக்காமல் வைரஸ் செக் செய்த பின்னரே இயக்க வேண்டும்.

வைரஸ் புரோகிராம்கள் எப்படி இயங்குகின்றன?

பெர்சனல் கம்ப்யூட்டர்கள் வைத்திருப்போர் ஆண்டி வைரஸ் புரோகிராம்களைத் தங்கள் கம்ப்யூட்டர்களில் இன்ஸ்டால் செய்திருக்கிறர்களோ இல்லையோ அவற்றைப் பற்றி நிச்சயம் கேட்டிருப்பார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் வைரஸ்கள் பெருகுவதும் அதிகரித்து உள்ளது; அவற்றிற்கு எதிரான நடவடிக்கைகளும் கூடுதலாகி உள்ளன.


இந்த போராட்டத்தில் வைரஸ் எதிர்ப்பு தொகுப்புகளை விற்பனை செய்திடும் நிறுவனங்களும் தாங்கள் எப்படி மற்றவர்களைக் காட்டிலும் சிறந்த தொகுப்பினை அளிக்கிறோம் என்பது குறித்து தொடர்ந்து விளம்பரங்களை அளித்து வருகின்றன. இந்த பல முனைப் போராட்டம் கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் இருக்கும் வரை நடந்து கொண்டு தான் இருக்கும் . இந்த கட்டுரையில் ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் எந்த வழி வகைகளில் வைரஸ்களைக் கண்டறிந்து அழிக்கின்றன; கம்ப்யூட்டரைப் பாதுகாக்கின்றன என்று காணலாம்.


அடிப்படைச் செயல்பாட்டின் முதல் கட்டமாக ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் உங்கள் டவுண்லோடிங் புரோகிராம்களையும் இமெயில்களையும் ஸ்கேன் செய்த பின்னரே கம்ப்யூட்டரில் ஏற்றுக் கொள்கின்றன. இவ்வாறு ஸ்கேன் செய்திடுகையில் அவை என்ன எதிர்பார்க்கின்றன? ஸ்கேன் என்பது இங்கு எதனைக் குறிக்கிறது? இந்த புரோகிராம்கள் மேற்கொள்ளும் ஸ்கேன் செயல்பாட்டினை இரண்டு வகைகளாகக் குறிப்பிடுகின்றனர். அவை – “Specific” மற்றும் “Generic” . ஒவ்வொரு ஆய்வும் குறிப்பிட்ட வகை வைரஸ் குறியீடுகளை எதிர்பார்த்து மேற்கொள்ளும் ஸ்கேன் செயல்பாடுகளாகும்.


ஆண்டி வைரஸ் புரோகிராமில் முதல் பாதுகாப்பு வளையத்தில் வைரஸ் குறித்த விளக்க குறியீடுகள், சிக்னேச்சர் என்று சொல்லப்படும் குறியீடுகள் மற்றும் அப்டேட்டட் பைல் தரும் தகவல்கள் ஆகியவை இடம் பெறுகின்றன. இவற்றில் எதிர்பார்க்கப்படும் வைரஸ் புரோகிராமில் இருக்கக் கூடிய குறியீடுகள் இருப்பதனால் அவற்றுடன் டவுண்லோட் ஆகும் புரோகிராம் அல்லது இமெயில் மெசேஜ்களில் இந்த குறியீடுகள் இருக்கும் பட்சத்தில் அவை ஒதுக்கப்படுகின்றன. இதனைத்தான் “Specific” ஸ்கேனிங் எனக் குறிப்பிடுகிறோம்.


ஒத்த குறியீடுகள் உள்ள வைரஸ் புரோகிராம்களை உணர்ந்து அறியும்போது அந்த கட்டமைப்பு அப்படியே ஆண்டி வைரஸ் புரோகிராமில் பதியப்பட்டு அடுத்த ஸ்கேனிங் போது பயன்படுத்த வைக்கப்படுகிறது. இதனை ஒத்து வரும் பிற புரோகிராம்கள் கண்டறியப்பட இவை பெரிதும் உதவுகின்றன. வைரஸ் எப்படி அமைக்கப்படலாம் என்று குறியீடு எழுதுவதனையே வைரஸ் விளக்கக் குறியீடுகள் எனக் குறிப்பிடுகிறோம். இவை ஏற்கனவே அறியப்பட்ட வைரஸ் புரோகிராம்களின் குறியீடுகளுக்குத்தான் பயன்படுத்த முடியும். புதிய குறியீடுகளின் அடிப்படையில் எழுதப்படும் புதிய வைரஸ் புரோகிராம்களை எப்படி கண்டறிவது? புதிய வைரஸ்கள் புற்றீசல் போல் பெருகுகின்றன.

இவற்றை என்று அடையாளம் கண்டறிந்து ஒத்த குறியீடுகளை எழுதி அழிப்பது?


இங்கு தான் “Generic” ஸ்கேனிங் உதவுகிறது. இந்த வகை ஸ்கேனிங் முறையில் ஒத்துப் போகக் கூடிய குறியீடுகளை மட்டும் தேடாமல் சந்தேகப்படும் குறியீடுகளும் தேடப்படுகின்றன. ஆய்வு செய்யப்பட்ட குறியீடுகளைக் கொண்டு ஆண்டி வைரஸ் புரோகிராம் அதன் கட்டமைப்பு குறித்து ஒரு முடிவுக்கு வருகிறது. இந்த வகைக் கட்டமைப்பு வைரஸாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு அடுத்த நிலை ஆய்வுக்கு அனுப்புகிறது. இது முற்றிலும் சரியானது என்று சொல்ல முடியாது.

எடுத்துக் காட்டாக ஏதேனும் ஒரு புதிய சாப்ட்வேர் புரோகிராமினை நாம் இன்ஸ்டால் செய்திட முயன்றால் அது புதிய வகையாக இருப்பதால் அந்த புரோகிராமில் உள்ள பைல் வைரஸாக இருக்கலாம் என்று ஆண்டி வைரஸ் புரோகிராம் எச்சரிக்கை செய்தி தரலாம். ஏன், பைலையே அழிக்க முயற்சிக்கலாம். இதற்காகத்தான் புதிய புரோகிராம்களை நிறுவுகையில் ஆண்டி வைரஸ் புரோகிராம் இயக்கத்தினை முடக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சந்தேகப்படும் படி அமைப்பு கொண்ட புரோகிராம் பைல்கள் ஆண்டி வைரஸ் புரோகிராமினால் ஒதுக்கப்பட்டு அடுத்த நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று குறிப்பிட்டோம் அல்லவா. இந்த நிலையில் இன்னொரு வகை சோதனை நடத்தப்படும். சந்தேகப்படும் புரோகிராமினை கம்ப்யூட்டருக்குள் ளேயே தனியே மற்றவற்றிற்குப் பாதிப்பு இல்லாத வகையில் ஆண்டி வைரஸ் புரோகிராம் இயக்கிப் பார்க்கும். சந்தேகப்பட்ட குறியீட்டு வரிகள் எவ்வாறு இயங்குகின்றன: அவற்றின் நோக்கம் என்ன என்று கண்காணித்து, பின் அந்த இயக்கத்தை நிறுத்தி, அதனை அனுமதிக்கலாமா அல்லது தடுக்கலாமா என்று முடிவு செய்து செயல்படும்.


மேலே குறிப்பிட்ட வகைகளில் மட்டுமின்றி நவீன தொழில் நுட்பம் தரும் வேறு சில வகைகளையும் இந்த ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் பயன்படுத்துகின்றன. நாளுக்கு நாள் புதிய வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் உருவாக்கப்படுகின்றன. இருந்தாலும் வைரஸ்கள் வருவதும் நிற்கவில்லை. இந்த போராட்டம் தொடர்வதால் தான் ஒவ்வொரு பெர்சனல் கம்ப்யூட்டரும் அவசியம் ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராமினை அமைத்து அவ்வப்போது அப்டேட் செய்து இயக்குவது பாதுகாப்பானது என்று அறிவுறுத்தப்படுகிறது.

வைரஸ் புரோகிராம்கள் சரியாகச் செயல்படுகின்றனவா?

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் உள்ள பொதுவான ஒரு பயம் வைரஸ் தான். பல்வேறு வழிகளில், வகை வகையான அழிக்கும் சக்திகளுடன் வரும் வைரஸ்கள் நம் செயல்பாட்டை முடக்கி வைப்பதுடன் நம்மைச் சார்ந்தவர்களின் கம்ப்யூட்டர்களையும் நாசம் செய்திடும் வகையில் பரவுகிறது. கம்ப்யூட்டர்களின் உள்ளே இருக்கும் புரோகிராம் களையும் கெடுக்கிறது.



இத்தகைய வைரஸ்களிடமிருந்து நம் கம்ப்யூட்டர்களைக் காத்திடவும் நமக்கு நிம்மதியான ஒரு வேலைப் பாதுகாப்பினைத் தரவும் அமைந்தவை தான் ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் என அழைக்கப்படும் வைரஸ்களுக்கு எதிரான புரோகிராம்கள்.



பெரும்பான்மையான கம்ப்யூட்டர்கள் இன்று இவை இல்லாமல் இயங்குவதில்லை. அப்படி அமைக்கப்பட்டு இயக்கப்பட்டாலும் குறிப்பிட்ட சில வைரஸ்களை சில ஆண்டி வைரஸ் புரோகிராம்களால் ஒன்றும் செய்திட இயலவில்லை. வைரஸ் புரோகிராம்களின் கட்டமைப்பு அவ்வாறு அமைக்கப்படுகிறது. இருப்பினும் வாடிக்கை யாளர்கள் தரும் அனுபவக் கருத்துக்களின் அடிப்படையில் அந்த ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் மேம்படுத் தப்பட்டு அதுவரை கண்டுபிடித்து அழிக்க முடியாத வைரஸ்களும் அழிக்கப்படுகின்றன.



ஒரு முறை நண்பர் ஒருவர் மிக நல்ல ஆண்டி வைரஸ் புரோகிராமினை வைத்து கம்ப்யூட்டரை இயக்குவதாகக் கூறிவிட்டு அந்நிலையிலும் எஸ்.வி.சி. ஹோஸ்ட் என்னும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைலைக் குறி வைத்துக் கெடுக்கும் வைரஸ் ஒன்று வந்திறங்கி பைல்களையும் போல்டர்களையும் எக்ஸிகூட்டபிள் பைலாக மாற்றிவிடுவதாக எழுதி இருந்தார். இதற்கு இன்னொரு நண்பர் பதில் கூறுகையில் அவர் பயன்படுத்தும் ஆண்டி வைரஸ் புரோகிராமிற்கு அந்த வைரஸ் அகப்படாது என்று கூறிவிட்டு பதிலாக இன்னொரு இலவச ஆண்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்துமாறு கூறினார். அது போலவே பயன்படுத்த வைரஸ் மறைந்தது. வைரஸை நீக்கிவிடுகிறோம்.



நிம்மதியாக மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கி செயல்படுத்தத் தொடங்கி விடுகிறோம். வைரஸை நீக்கும் பணி முடிந்தவுடன் அனைத்துமே முடிந்துவிடுகிறதா? முழுவதுமாகக் கம்ப்யூட்டரிலிருந்து வைரஸ் நீக்கப்பட்டுவிட்டதா? அறியாமல் வேறு டாகுமெண்ட் பைல்களை அழித்தவுடன் அது எங்காவது இருக்காதா என்று தேடி அழித்த பைல்களை மீண்டும் கொண்டு வரும் ரெகவரி புரோகிராம்கள் மூலம் பெற முயற்சிக்கிறோம் அல்லவா? அப்படியானால் இங்கு அழிக்கப்பட்ட வைரஸ் புரோகிராமும் கம்ப்யூட்டரில் தானே எங்காவது இருக்கும். இப்படி என்றாவது சிந்தித்திருக்கிறீர்களா? சிந்தனையே பகீர் என வயிற்றைக் கலக்குகிறது. எங்காவது ஒளிந்து இருந்து மீண்டும் வைரஸ் வந்துவிட்டால் என்ன செய்வது? இதனை எப்படி அறிவது? என்ற கேள்விகள் எழுகின்றன.



வைரஸாகச் செயல்பட்ட இ.எக்ஸ்.இ. பைல்கள் நீக்கப்பட்டாலும் அவற்றால் கம்ப்யூட்டரில் உள்ள வேறு பைல்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் அப்படியே இருக்கத்தான் செய்கின்றன. முதலாவதாக ரெஜிஸ்ட்ரி என்னும் கம்ப்யூட்டர் இயக்கத்தின் முதுகெலும்பான பைலில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. பைல்கள் இயங்குவதற்கான தொடக்க நிலைகளில் வைரஸ் ஏற்படுத்திய மாற்றங்கள் அழியாமல் அப்படியே இருக்கின்றன. கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட டி.எல்.எல். மற்றும் ஐ.என்.ஐ. பைல்கள் (dll’s/inf) அப்படியே தங்கிவிடுகின்றன. இவை சும்மா இருப்பதில்லை; அவ்வப்போது இந்த பைல் இங்கு இல்லை; இதன் இயக்கத்தில் பிரச்னை உள்ளது என்று ஏதாவது தேவயற்ற பிழைச் செய்திகளைத் தந்து எரிச்சல் படுத்திக் கொண்டே இருக்கின்றன. இந்த வகையில் தற்போது இயங்கும் ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் முழுமையாகச் செயல்படுவதில்லை என்பது உண்மையே. இதற்கு நாம் தொடக்கத்திலிருந்தே சில செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அவற்றைக் காணலாம்.


1. வைரஸ் கம்ப்யூட்டரில் உள்ளது என்று தெரிந்தவுடன் முதலில் நெட்வொர்க்கிலிருந்து கம்ப்யூட்டரை கழட்டிவிடுங்கள். அலுவலகத்தில் உள்ள நெட்வொர்க் மட்டுமின்றி இன்டர்நெட்டிலிருந்தும் எடுத்துவிடுங்கள். இங்கு கழட்டி விடுங்கள் என்று சொல்வது நிஜமாகவே அதன் கேபிள்களை எடுத்துவிடுவதுதான். எனவே இன்டர்நெட் இணைப்பை டிஸ்கனெக்ட் செய்தால் மட்டும் போதாது. கேபிள்களையும் எடுத்துவிடுங்கள். யு.எஸ்.பி. டிரைவ், வெளியே இருந்து இணைத்து செயல்படும் ஹார்ட் டிஸ்க்குகள், சிடி ட்ரைவில் உள்ள சிடி என அனைத்தையும் நீக்குங்கள். ஏனென்றால் இவை வழியாக உங்கள் கம்ப்யூட்டரில் புகுந்த வைரஸ் மற்ற கம்ப்யூட்டர்களுக்குச் செல்லும்.


2. இப்போது கம்ப்யூட்டரில் உள்ள ஆண்டி வைரஸ் புரோகிராமை இயக்கி கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடுங்கள். சி டிரைவ் மட்டுமல்ல; அனைத்து டிரைவ்களையும் நிதானமாக ஸ்கேன் செய்திடுங்கள். இதற்கு உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் தொடர்ந்து இன்டர்நெட் வழியாக அப்டேட் ஆகி இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவ்வாறு செய்த பிற கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இங்கே பயன்படுத்த வேண்டும். இது சரியாக வரவில்லை என்றால் வேறு வழியின்றி இன்டர்நெட் இணைப்பை ஏற்படுத்தி அப்டேட் செய்து பின் இணைப்பை நீக்குங்கள்.


3. இனி ஸ்கேன் செய்கையில் ஆண்டி வைரஸ் புரோகிராம் வைரஸ்களைக் கண்டுபிடித்து கிளீன் செய்திடவா? அழிக்கவா? குவாரண்டைன் என்னும் இடத்தில் வைக்கவா? என்று கேட்கும். இதில் மூன்றாவதுதான் நல்லது. ஏனென்றால் பைல் அழிக்கப்பட்டாலும் வைரஸ் பல இடங்களில் பதுங்கி இருக்கும்.வேறு ஏதாவது செயல்பாட்டின் போது மீண்டும் இயங்கத் தொடங்கலாம். எனவே குவாரண்டைன் எனப் போட்டுவிட்டால் அது எந்நிலையிலும் இயங்காது. இதற்காக ஆண்டி வைரஸ் புரோகிராம் செட்டிங்க் செய்திடுகையில் “Always quarantine the file” என்னும்படி செட் செய்திடலாம். இதனால் குறிப்பிட்ட வைரஸ் பைலின் பெயர், அது எந்த பைலில் மாற்றங்களை மேற்கொள்கிறது என்று எளிதாகப் பார்க்கலாம்.


4. சில வேளைகளில் உங்களுடைய ஆண்டி வைரஸ் புரோகிராம் குறிப்பிட்ட வைரஸ் அல்லது வைரஸ் பாதித்த பைலை அணுக முடியவில்லை (“Access is denied”) என்று செய்தி தரலாம். அப்படியானால் அதனால் இயங்கமுடியவில்லை என்றே பொருள். உடனடியாக ஸ்கேன் செய்வதனை நிறுத்தி “boot time scan” என்ற ஸ்கேனிங் தொடங்குங்கள். இது கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்து விண்டோஸ் இயங்குமுன் இயங்கத் தொடங்கிவிடும். இதனால் வைரஸ்கள் உட்பட எந்த புரோகிராமும் இயங்காது. அதே நேரத்தில் ஆண்டி வைரஸ்புரோகிராம் தன் பணியைச் செவ்வனே செய்திடும் வாய்ப்பு கிடைக்கிறது. வைரஸ்கள் அழிக்கப்பட்ட பின் System Restore பகுதியில் அமர்ந்து கொள்ளும். பல ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் தானாக அந்த பகுதியில் சென்று வைரஸ் இருக்கிறதா என்று தேடாது. நாமாகத்தான் அதனை சிஸ்டம் ரெஸ்டோர் பகுதியிலும் தேடும்படி செய்திட வேண்டும். எனவே “boot time scan” இயக்கம் இந்த பிரச்னையைத் தீர்த்து அனைத்து பகுதிகளிலும் தேடும்.


5. ஸ்கேனிங் முடிந்துவிட்டால் உங்கள் கம்ப்யூட்டர் வைரஸ் எதுவும் இல்லாத நிலையை அடைந்துவிட்டது என்று பொருள். இனி குவாரண்டைன் பகுதிக்குச் சென்று எந்த மாதிரி வைரஸ் இருந்தது; அது எந்த பகுதிகளில் சேதம் விளைவித்தது என்று அறியலாம். தவறிப் போய் கூட எந்த பைலையாவது “Restore” அல்லது கட் / காப்பி / பேஸ்ட் செய்திவிடாதீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் உங்கள் டேட்டா பைல்கள் மற்றும் புரோகிராம்கள் வைரஸால் பாதிக்கப்படாமல் இருக்கும். பொதுவாக இப்போது வரும் வைரஸ்கள் அழிக்கும் பணியில் இயங்காமல் உங்களிடம் உள்ள உங்கள் பெர்சனல் தகவல்கள், கிரெடிட் கார் ட் எண், பாஸ்வேர்ட் போன்றவற்றைப் பெறும் வகையிலேயே அமைக்கப்படுகின்றன.


6. வைரஸ்களை நீக்கியபின் என்ன செய்ய வேண்டும்? இனிமேல் தான் வைரஸ் ஏற்படுத்திய மாற்றங்களைக் கண்டு சரி செய்திடும் பணியினை மேற்கொள்ள வேண்டும். இப்போது வைரஸ் இல்லை என்பதால் துணிச்சலுடன் இந்த செயலில் இறங்கலாம். குவாரண்டைன் சென்று வைரஸின் பெயர் அல்லது பாதித்த பைல் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளுங்கள். இந்த பெயர் அல்லது அதன் அழிவு வேலை குறித்த குறிப்புகள் தாங்கி வரும் டெக்ஸ்ட்டை அப்படியே காப்பி செய்து கூகுள் அல்லது நீங்கள் பயன்படுத்தும் ஆண்டி வைரஸ் புரோகிராம் தந்த நிறுவனத்தின் இணைய தளத்தில் தேடும் பகுதியில் சென்று பேஸ்ட் செய்து தேடவும். இதற்கான குறிப்புகள் விலாவாரியாகத் தரப்பட்டிருக்கும். கூகுள் வழி சென்றால் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவம் மற்றும் செம்மைப் படுத்தும் வழிகள் தரப்பட்டிருக்கும்.


7.பெரும்பாலும் ரெஜிஸ்ட்ரியில் வைரஸ் ஏற்படுத்திய வரிகளை நீக்க வேண்டியதிருக்கும். இதனை உங்களால் மேற்கொள்ள இயலாது என்று தோன்றினால் பல தளங்களில் இலவசமாக ரெஜிஸ்ட்ரி கிளீனிங் புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றை இறக்கிப் பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட பைல்களை மட்டும் மீண்டும் ஸ்கேன் செய்திடலாம். பல ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் குறிப்பிட்ட சில வகை வைரஸ்களை கண்டுகொள்ளாது.



எனவே இந்நிலையில் இன்னொரு ஆண்டி வைரஸ் புரோகிராமினை இயக்குவது நல்லது. அல்லது இணையத்திலிருந்து இறக்காமல் பைல்களை ஸ்கேன் செய்து தரும் ஆன் லைன் பைல் ஸ்கேனர்களைப் பயன்படுத்தலாம். இவ்வகையில் பல இருந்தாலும் காஸ்பர் ஸ்கை ஆன்லைன் ஸ்கேனர் சிறப்பாக இயங்குகிறது. இதனை www.kaspersky.com/scanforvirus என்ற தளத்தில் பெறலாம். இறுதியாக உங்களால் நேரமின்மையோலா உங்கள் திறமை மீது நம்பிக்கை இல்லை என்றாலோ உடனே ஒரு டெக்னீஷியனை அழைத்து வைரஸ் நீக்கி பின் மற்ற பின் இயக்க வேலைகளையும் மேற்கொள்ளச் செய்யவும்.

வைரஸ் வேகம் குறைகிறது

வைரஸ், ஸ்பைவேர் மற்றும் மால்வேர் குறித்த அண்மைக் காலத்திய செய்தி ஒன்று வைரஸ்கள் பாதிப்பு வேகம் தற்போது குறைந்து வருவதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மால்வேர் எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தைத் தாண்டும் என்று தெரிகிறது. தொடர்ந்து உயர்ந்து வந்தாலும் இது நல்ல செய்திதான் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஏன்? என்னதான் இந்த வகை புரோகிராம்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் கம்ப்யூட்டர்களை பாதிப்பதில் வெற்றி அடையும் புரோகிராம்களின் எண்ணிக் கை குறைந்து வருகிறது. தொடர் ந்து புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் இந்த மால்வேர் புரோகிராம்களால் கம்ப்யூட்டர்களை அவ்வளவு எளிதாக அடைய முடிவதில்லை. இதனால் இந்த வகை கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை எழுதுபவர்கள் வேக வேகமாக அதிக எண்ணிக்கையில் மாற்றி மாற்றி எழுதத் துடிக்கின்றனர். இந்த வேகத்தில் எண்ணிக்கை தான் கூடுகிறதே ஒழிய அவற்றால் ஒன்றும் செய்திட முடியவில்லை.


முன்பெல்லாம் 40 புரோகிராம்களில் ஒன்று தன் கெடுதல் வேலையைச் செய்திட முடிந்தது. தற்போது ஆயிரத்தில் ஒன்றுதான் வெற்றி அடைய முடிகிறது. எனவே உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு இருந்தாலும் தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டே இருங்கள். அப்போதுதான் புதிய புரோகிராம்களால் கெடுதல் வந்து சேராமல் இருக்கும்.

No comments:

Post a Comment