Search This Blog

Friday, March 18


Google & Rapidshare

Let me tell u few of the tips & tricks(actually secrets) which nobody share with others from which u can view all the stuff which is there in rapidshare, reduces the downloading time, removing the downloading limit and enjoying all the benefits of the premium account members for free.

Now lets start to screw Rapidshare:

(1) How To Find Things Uploaded On Rapid Share Using Google
copy the following code and paste it on ur internet browser's address bar
"http://www.google.com/search?q=+.rar+OR+.zip+OR+.pdf+OR+.exe+site:rapidshare.de&hl=en&lr=&as_qdr=all&start=30&sa=N"

This will give u 121,000 files which r there in rapidshare ie: All the stuff which is uploaded including the softwares, zipped files, documents and of course hot hot movies.
* Remove the ""(quotes from the code before pasting it in the address bar)

---------------------------------------------------------------------------------
(2) Now if u want specifically movies then copy the following code and paste it on ur internet browser's address bar

"http://www.google.com/search?q=+.wmv+OR+.avi+OR+.3gp+OR+.mpeg+OR+.rm+site:rapidshare.de&hl=en&lr=&as_qdr=all&start=10&sa=N "

This will give u 55300 files which r there in rapidshare ie: All the movies avi movies, mpeg movies, realplayer movies, mms cl*ips etc.


---------------------------------------------------------------------------------
(3) How To Decrease Time Limit of 45 Seconds
after u r told to wait for 45 seconds for download
link to appear for the file u hvae requested.
delete the whole link from your browser and replace it with this:

java script:c(countdown = 0);

And Hit enter **Many times
Everytime you hit enter it will deduct the waiting time.-

கூகிள் தேடுதலில் மேலும் இரண்டு புதிய வசதிகள்

சர்ச் இஞ்சின் என்னும் தேடுதல் சாதனத்தை வடிவமைத்து அதன் பயன்பாட்டை பல பரிமாணங்களில் தந்து புகழ் பெற்றிருக்கும் கூகுள் நிறுவனம் அண்மையில் தேடுதல் வகையில் இன்னும் இரண்டு வசதிகளை இணைத்துள்ளது. 
முதலாவதாக தேடும் பொருளை உணர்ந்து அது சார்ந்த தளங்களை சேர்த்துத் தருதல். இதனால், தேடுதல் முடிவுகள் இன்னும் நெருக்கமாக, நாம் எண்ணித் தேடும் பொருளைக் கொண்டுள்ள தளங்களை கொண்டிருக்கும். இதனை ஆங்கிலத்தில் Semantic web என கூகுள் குறிப்பிட்டுள்ளது. 

இந்த புதிய தொழில் நுட்பம் நம் தேடுதல் கேள்வியுடன் இணைந்த பொருள் கொண்ட தளங்களையும் தருகிறது. உதாரணமாக, Principles of physics என்ற தேடுதலுக்கான சொற்களைத் தந்தால் இந்த சர்ச் இஞ்சின் angular momentum, special relativity, big bang மற்றும் Quantum mechanics போன்றவை இதனுடன் சேர்ந்த கோட்பாடுகள் என்பதனை உணர்ந்து அவை குறித்த தளங்களையும் தருகிறது. 

கூகுள் சர்ச் இஞ்சின் மற்றும் நிறுவன சர்ச் இஞ்சின்களைக் காட்டிலும் மிக வேகமாக தகவல்களை தேடித்தருவதில் பெயர் பெற்றது. 

ஆனால், இது போன்ற கேள்விகள் சார்ந்த கோட்பாடுகள் உள்ளவற்றையும் தேடுதலுக்கு உட்படுத்தினால் நேரம் சற்று அதிகம் பிடிக்கும் என்பதால் அதற்கான தொழில்நுட்பத்தினை இன் னும் நுட்பமாக வடிவமைக்கும் முயற்சி யில் கூகுள் வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர். 

ஒருவர் "Bill Clinton'' என்று கொடுத்தால் உடனே அப்பெயர் சார்ந்த தளங்களை எளிதாக சர்ச் இஞ்சின் தந்துவிடும். ஆனால், என் கண் அறுவை சிகிச்சைக்கு பின் என்ன மருந்து சாப்பிட வேண்டும்? என்ற கேள்வியை கேட்டால் அதனை புரிந்து கொண்டு செயல்படும் வகையில் சர்ச் இஞ்சின் நுண்ணிய தொழில்நுட்பத்தையும் பின் அதன் அடிப்படையில் வேகமாக தேடும் திறனையும் கொண்டிருக்க வேண்டும். அத்தகைய முயற்சியில் முதல் வெற்றி பெற்று இன்னும் அதனைச் சீராக்கும் முயற்சியில் கூகுள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 

இரண்டவதாக வந்துள்ள ஒரு வசதி தேடுதல் விளக்கத்தினைச் சற்று அதிகமாகத் தருவது. 

இப்போது முடிவுகள் தெரிவிக்கப்படுகையில் முதலில் ஒவ்வொரு முடிவும் நீல நிறத்தில் சற்று அழுத்தமான எழுத்துக்களில் தளம் தரப்பட்டு பின் அது குறித்த விளக்கம் தரும் டெக்ஸ்ட் இணைக்கப்படுகிறது. இந்த டெக்ஸ் இணைப்பை ''snippet'' எனக் கூறுகிறோம். இதன் மூலம் அந்த தளம் கூறும் செய்தி என்ன என்று தெரிந்து கொள்கிறோம். இனி தேடுதல் கேள்விகளில் மூன்று சொற்களுக்கு மேல் இருந்தால் இந்த விளக்க டெக்ஸ்ட்டிலும் அதிக வரிகள் இருக்கும். தேடுதல் கேள்விகளின் பொருளை உணர்ந்து தளங்களை கூடுதல் விளக்கங்களுடன் தேடித் தருவதில் இன்னும் ஒரு சிக்கலும் உள்ளது. 

ஒருபுறம் சர்ச் இஞ்சின் பயன்படுத்தும் வாடிக் கையாளர்களுக்கு தேவையான தளங்களை மட் டுமே தருவது என்ற நோக்கம் இருந்தாலும் தளங் களின் கொப்பிரைட் உரிமையை மீறாமலும் முடிவு கள் வழங்கப்பட வேண்டும். 

இவ்வகையில் கூகுள் மிகக் கவனமாக தன் தொழில்நுட்பம் அமைய வேண்டும் என முயற்சி களை எடுப்பதாக அந்நிறுவனத்தின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த வகை தேடுதல் உலகின் 37 மொழிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

கூகுள் தேடுதல் சில வழிகள்

இன்டர்நெட் தேடுதல் பிரிவில் இன்று ஒப்பாரும் மிக்காரும் இன்றி இயங்கும் இஞ்சின் கூகுள் சாப்ட்வேர் ஆகும். இந்த தேடுதலிலும் விரைவாக நாம் விரும்பும் தேடுதலை மட்டும் மேற்கொள்ளும் சாதனமாக கூகுளை மாற்றிக் கொள்ளலாம். அதற்கான சில நடைமுறை வழிகளைப் பார்க்கலாம். 1. மிகச் சரியாக நாம் விரும்பும் சொற்கள் உள்ள இடங்களை மட்டும் கண்டறிய அந்த சொற்களை டபுள் கொட்டேஷன் (“ ”) குறிகளுக்குள் கொடுக்க வேண்டும். எடுத்துக் காட்டாக Women who love football என்று கொடுத்தால் 3 கோடியே 46 லட்சம் இடங்களில் உள்ளதாகக் காட்டுகிறது. இதே சொற்களை கொட்டேஷன் குறிப்புகளுக்குள் கொடுத்தால் “Women who love football” என்று கொடுத்தால் 45,500 இடங்களில் உள்ளதாக முடிவு தெரிவிக்கிறது. இரட்டை மேற்குறிகள் கொடுப்பதன் மூலம் தேவையற்ற முடிவுகளை நாம் நீக்குகிறோம். 

2.“இப்படி ஏதாவது இருந்தால் கொடு”: என்று சில வேளைகளில் தேட வேண்டியதிருக்கும். நாம் என்ன தேடப் போகிறோம் என்பது நமக்கு முழுமையாகத் தெரியாத போது இந்த தேடல் வழி நமக்குத் தேவையாகிறது. இதற்கு ஆஸ்டெரிஸ்க் (*) என்ற நட்சத்திரக் குறியைப் பயன்படுத்தலாம். இது ஒரு காலி இடத்தையும் அதில் எந்த சொல் இருந்தாலும் பரவாயில்லை என்ற பொருளையும் தருகிறது. எடுத்துக் காட்டாக ஒரு ஆற்றின் பெயர் தெரியவில்லை. ஆனால் அதன்மேல் கட்டப் பட்ட பாலம் குறித்து ஒரு கவிதை உள்ளது நினைவில் உள்ளது. எனவே அந்த கவிதையைத் தேடுகையில் வேறு ஆறுகளின் பெயர்கள் வந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்துடன் “the bridge on the river*” என்று தரலாம். நிச்சயமாய் உங்கள் நினைவிற்கு உடனே வர மறுக்கும் அந்த பெயர் பட்டியலில் கிடைக்கும். 

3. குறிப்பிட்ட வெப் சைட் டில் மட்டும் தேட: ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சொல் உங்களைக் கவர்ந்திருக்கும். அது புதுவித சொல்லாய் இருக்கலாம். ஆனால் இணையப் பக்கத்தில் அது எங்கு இருக்கிறது என்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் அந்த வெப் சைட்டில் தான் உள்ளது என்று நினைவில் இருக்கலாம். எனவே அந்த வெப் சைட்டில் மட்டும் தேடும்படி கட்டளை கொடுக்கலாம். எடுத்துக் காட்டாக சிம்பனி என்ற சொல் நோக்கியாவிற் கென யுனிவர்சல் என்னும் நிறுவனத்தின் வெப்சைட்டில் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். இதனை “symphony” site: www.univercell.in என்று கொடுத்துத் தேடக் கட்டளை கொடுத்தால் அந்த தளத்தில் மட்டும் தேடி அந்த சொல் எங்கிருக்கிறது என்று காட்டும். இதே போல ஒரு குறிப்பிட்ட தளம் இல்லாமல் மற்றவற்றில் மட்டும் தேடவும் இந்த கட்டளையைச் சற்று மாற்றிக் கொடுக்கலாம். எடுத்துக் காட்டாக நீங்கள் யாஹூ மெசஞ்சர் தொகுப்பை யாஹூ இணையதளம் இல்லாத வேறு தளங்களில் கண்டு டவுண்லோட் செய்திட முடிவெடுக்கிறீர்கள். 


அப்போது “Yahoo messenger” site: yahoo.com என்று கட்டளை கொடுக்கலாம். இதில் தரப்பட்டுள்ள மைனஸ் (–) அடையாளம் கூகுள் தேடல் சாதனத்தை சொல்லுக்கான முடிவுகளை குறிப்பிட்ட தளத்திலிருந்து மட்டும் தராதே; மற்ற தளங்களில் இருந்து தா என்று கூறுகிறது. இதே போல வெப்சைட்களில் குறிப்பிட்ட வகை தளங்களில் இருந்து மட்டும் தேடு என்றும் வரையறை செய்திடலாம். எடுத்துக் காட்டாக essay on American history,” என்பதனைத் தேடி அறிய விரும்புகிறீர்கள். இதனை கல்வி சார்ந்த (.edu) தளங்களில் மட்டும் தேடி அறிய என்ற வகையான தளங்களில் மட்டும் தேட விரும்பினால் “Essay on American history” site:.edu எனக் கட்டளை கொடுக்கலாம். 


4. ஒரு பொருள் தரும் சொற்களைத் தேட: ஒரு சொல் மட்டுமின்றி அந்த சொல்லின் பொருள் தரும் பிற சொற்கள் உள்ள தளங்களையும் தேடி அறிய விரும்பினால் அதற்கான கட்டளைச் சொல்லும் உள்ளது. டில்டே (“~”) என ஒரு குறியீடு உள்ளது. 
எழுத்துக்களுக்கு மேல் உள்ள எண்கள் கீகளுக்கு முன்னால், எண் 1க்கு முன்னால், இந்த கீ இருக்கும். இன்னும் சொல்லப்போனால் இது உள்ள கீதான் கீ போர்டில் முதல் கீயாகும். ஷிப்ட் அழுத்தி இந்த கீயை அழுத்தினால் டில்டே குறியீடு கிடைக்கும். இதனை எந்த சொல்லுக்கான அதே பொருள் தரும் சொற்களைத் தேடுகிறோமோ அந்த சொல்லுக்கு முன் தர வேண்டும். இந்த சொல்லுக்கும் குறியீட்டிற்கும் இடையே இடைவெளி இருக்கக் கூடாது. எடுத்துக் காட்டாக cover என்ற சொல்லை (“~cover”) எனக் கொடுத்தால் அந்த சொல் தரும் பலவகை பொருள் உள்ள மற்ற சொற்கள் உள்ள தளங்களும் பட்டியலிடப்படும். 


5. கூகுள் தேடல் தளக் கட்டத்தில் ஒரு சொல்லுக்கான பொருள் அறியவும் கட்டளை அமைக்கலாம். எடுத்துக் காட்டாக modem என்ற சொல்லுக்கான பொருள் அறிய விரும்பினால் “define:modem” எனத் தர வேண்டும். இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. “what is” என்ற சொற்களை பொருள் தேடும் சொல் முன்னால் சேர்த்துத் தரலாம். ஆனால் பொருள் தருவது மட்டுமின்றி கூகுள் அச்சொல் இடம் பெறும் மற்ற தளங்களின் பட்டியலையும் தரும்.

No comments:

Post a Comment