கூகிள் க்ரோம்(CHROME)
கடந்த மாதம் கூகுள் தனது OS வெளியீட்டை அறிவித்தாலும் அறிவித்தது ஐ.டி உலகம் ஆடித்தான் போய் இருக்கின்றது, அதிலும் மைக்ரொசாஃப்ட் கொஞ்சம் அதிகமாகவே ஆட்டம் கண்டுள்ளது, பிங் யாஹுவுடனான புதிய கூட்டணி சந்தை நிலவரத்தில் மைக்ரொசாஃப்டுக்கு ஆறுதல் அளித்தாலும் தனது ஆபரேடிங் சிஸ்டம் தாணாதிக்க நிலையை தக்கவைத்து கொள்வதில் மைக்ரொசாஃப்ட் தலையை பிய்த்துக் கொள்கிறது என்பதே இந்த கூட்டணிகளின் காரணம்.
ஏற்கனவே தனது விஸ்டா ஆபரேடிங் சிஸ்டத்தின் தொடர்ச்சியான சறுக்கல்களினால் நொந்து போயிருந்த மைக்ரொசாஃப்ட் தனது வெளிவர இருக்கும் புதிய ஆபரேடிங் சிஸ்டமான WINDOWS 7 பெரிதும் நம்பியிருக்கின்றது. வரும் அக்டோபரில் வெளிவர இருக்கும் இந்த ஆபரேட்டிங் சிஸ்டம் 2009 டிசம்பருக்குள் 170 மில்லியன் பயனீட்டார்களை சென்றடையும் என கருத்து கணிப்புக்கள் சொன்னாலும் கூகிளின் புதிய ஆபரேடிங் சிஸ்டத்துக்கன அறிவிப்பு இந்த 170 மில்லியனில் கொஞ்சம் அல்ல நிறையவே மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை என்றாலும் தனது புதிய OS 2010 இன் பிற்ப்பகுதியிலேயே வெளிவரும் என்று கூகிள் அறிவித்து இருப்பது மைக்ரொசாஃப்டுக்கு ஒரு தற்காலிக ஆறுதலை தரலாம் கவனிக்கவும் தற்காலிக ஆறுதலே. காரணம் மைக்ரொசாஃப்ட் தனது முந்தைய பதிப்பான விஸ்டாவின் குறைகளை நிவர்த்திக்கும் முகமாக முக்கியமாக user friendliness ஐ அதிகரிக்கும் விதமாகவே WINDOWS 7 தயார் செய்து வரும் நிலையில் கூகிள் 16 அடி பாய்ந்து வருங்காலத்தில் கணனி உலகத்தையே ஆளக்கூடிய ஒரு தொழில்னுட்பமாக கருதக்கூடிய CLOUD COMPUTING(சில security issues இருந்தாலும்) எனப்படும் தொழில்னுட்ப்பத்தை கையாண்டு தனது ஆபரேடிங் சிஸ்டத்தை தயாரித்து வருகிறது.
கூகிள் க்ரோம்(CHROME) ஆபரேடிங் சிஸ்டமானது க்ரோம் வெப் ப்ரௌசரின் மெருகூட்டப்பட்ட பதிப்பு என்றே கூகிளினால் அறிவிக்கப்பட்டுள்ளது அதாது டெஸ்க்டாப்பும் இணையமும் ஒன்றினைந்த ஒரு பதிப்பாக இதை கூறலாம். உங்களில் பலர் கூகிள் டெஸ்க்டாப் எனும் ஒரு மென்பொருளை பயன்படுத்தியிருப்பீர்கள் கிட்டதட்ட அது போன்றான அமைப்பே கூகிளின் புதிய OS ம். முழுக்க முழுக்க இணையத்தையே அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.முதலில் netbooks எனப்படும் இணைய பயன்பாட்டிற்க்கான மடிக்கணனிகளிலேயே இது அறிமுகம் செய்யப்படும் எனவும் கூகிள் அறிவித்துள்ளது.
கூகிள் பயன்படுத்தும் cloud computing technology யின் அனுகூலமான அம்சம் என்னவென்றால் இங்கே software requirments என்று எதுவும் கிடையாது ஒரு வேகமான இணைய தொடர்பு இருந்தால் போதும் உங்களுக்கு தேவையான எல்லா utility softwares உம் இணையத்தில் கிடைக்கும் word டில் போன்று டைப் பண்ண வேண்டுமா ஒரு குறித்த இணையத்தளம் உங்களுக்கு அந்த சேவையை தரும், games ஆ? இன்னொரு தளம், பாட்டு கேட்க வேண்டுமா அதற்கு வேறொரு தளம், சும்மா இல்லை எல்லாம் காசுக்குத்தான் இதனால் என்ன லாபம் என்றால் உங்களுக்கு சிறிய வேலைக்கு மட்டுமே தேவைப்படும் ஒரு மென்பொருளை நிரந்தரமாக பெரிய விலை கொடுத்து வாங்க தேவை இல்லை pirate software பிரச்சினை இல்லை தேவையான நேரத்தில் பாவித்து விட்டு அதற்கான பணத்தை இணையத்தில் செலுத்தினால் போதும், குறித்த மென்பொருளை கணனியில் நிறுவும் கஷ்டங்கள் இல்லை உதாரணமாக games க்கான VGA card போன்ற தொல்லைகள் இல்லை.
இதனால் வன்பொருளுக்கான பண விரயம் இல்லை all you need is a fast reliable internet connection. ஆனாலும் இந்த cloud computing technology யில் சில பல security, privacy தொல்லைகள் இருக்கும் போலதான் இருக்கின்றது(data மற்றும் softawres ஒரு server போன்ற அமைப்பில் இருப்பதால்) எது எப்படியோ windows இனிமேல் சிறு பிள்ளைகள் விளையாடுவதற்கும் அலுவலகங்களில் லெட்டர் அடிக்கவும் மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு technology யாக கூட மாறாலாம்..

கூகுளின் குரோம் பிரவுசர் யுத்தத்தில் புதிய வீரன்
யாரும் எதிர்பாராத வகையில், எந்தவித முன்னறிவிப்புமின்றி
குரோம் என்ற பெயரில் தன்னுடைய சொந்த பிரவுசரை வெளியிட்டு
இதிலும் புதுமையையும் முதல் இடத்தையும் தட்டிச் சென்றுள்ளது
கூகுள் நிறுவனம். முதலிடம் பிடிப்பது மற்றும் நல்ல பெயர்
வாங்குவது என்ற இரு இலக்குகளை அடைய தொடர்ந்து பிரவுசர்
மார்க்கட்டில் சண்டை நடந்து வருகிறது.
இந்த யுத்தத்தில் புதியதாகச் சேர்ந்திருப்பது கூகுள் நிறுவனத்தின் குரோம்
பிரவுசராகும். அடடே! கூகுளுமா!! என்று அனைவரையும் குரோம்
பிரவுசர் வியக்கச் செய்தாலும் அதன் செயல்திறன் அனைவருக்கும்
சவால் விடும் வகையில் இருப்பது ஒரு சிறப்பாகும்.

அவ்வப்போது ஒரு சில வதந்திகள் இது குறித்து வெளிவந்தாலும்
யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாத வகையில் குரோம்
பிரவுசருக்கான பணிகளை மேற்கொண்டிருந்தது கூகுள். ஆனால்
யாரும் எதிர்பார்க்காத ஒரு நாளில்,செப்டம்பர் 2, இதனை
வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன்
பின்னணியில் பயர்பாக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய இரு
மேல்நிலை பொறியாளர்கள் உள்ளனர் என்பது இப்போது தெரிய
வந்துள்ளது.
தற்போது விண்டோஸ் விஸ்டா மற்றும் எக்ஸ்பி
இயக்கத் தொகுப்புகளுக்கான பிரவுசர் மட்டுமே தரப்பட்டுள்ளது.
மேக் மற்றும் லினக்ஸ் பயன்படுத்துபவர்கள் சிறிது காலம்
காத்திருக்க வேண்டும். பயர்பாக்ஸ் போல குரோம் ஒரு ஓப்பன்
சோர்ஸ் பிரவுசர். இதன் கட்டமைப்பை யார் வேண்டுமானாலும் பெற்று அதற்கேற்ற ஆட் – ஆன் என்னும் கூடுதல் வசதிகளைத்
தரக்கூடிய புரோகிராம்களை எழுதி தரலாம்.

1. கிராஷ் ஆகாத பிரவுசர்: இதன் இயக்கம் மல்ட்டி
பிராசசர் கட்டமைப்பில் இயங்குகிறது. இதனால் ஒரு மோசமான
வெப்சைட்டை நீங்கள் பார்ப்பதனால் அது மட்டுமே முடக்கப்படும்.
பிரவுசர் இயக்கம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். ஒவ்வொரு
டேபும் விண்டோவும் அதனதன் சூழ்நிலையில் தனித்து இயங்கும்
வகையில் இந்த பிரவுசர் அமைக்கப் பட்டுள்ளது. எனவே மோசமான
வெப்சைட்டைப் பார்ப்பதனால் பிரவுசர் இயக்கம் முடங்காது.
2. அதிக வேகம்: மல்ட்டி பிராசசர் இயக்கம் இருப்பதால்
நிதானமாக எக்கச் சக்க படங்களுடன் இறங்கும் ஒரு வெப்சைட்
அடுத்த தளம் இறங்குவதனை நிறுத்தாது. ஒரு தளம் இறங்குகையில்
அதே தளத்தில் ஒரு விளம்பரம் மிக மெதுவாக இறங்குவதாக
வைத்துக் கொள்வோம். குரோம் பிரவுசர் அந்த மெதுவாக இறங்கும்
விளம்பரத்தைத் தள்ளிவைத்து தளத்தின் தகவல்களை மிக வேகமாக
இறக்கித் தருகிறது. அதுமட்டுமல்ல, எக்ஸ்புளோரரும்
பயர்பாக்ஸும் பயந்து நடுங்கும் வகையில் இதன் வேகம்
இருக்கிறது. அனுபவித்துப் பார்த்தால் தான் வேகம் புரியும்.
3. இருப்பதே தெரியாது: இந்த பிரவுசர் இயங்கும்போது
அது பிரவுசராகவே தெரியாது. மானிட்டரின் திரையின்
பெரும்பகுதி நாம் பார்க்கும் இணைய தளத்திற்கெனவே
ஒதுக்கப்படுகிறது. பட்டன்கள், லோகோக்கள் என எதுவும்
இருக்காது. ஒரு சிறிய பட்டனில் பைல், பிரிண்ட், சேவ் போன்ற
மெனுக்கள் சுருக்கி வைக்கப் பட்டுள்ளன. மெனுவைக் கிளிக்
செய்து திறக்க விருப்பமில்லையா! மவுஸில் ரைட் கிளிக்
செய்தால் போதும்; மெனு கிடைக்கிறது.
4. எளிமையான தேடல்: குரோம் பிரவுசரின் மிகச்
சிறப்பான அம்சமாக அதன் ஆம்னிபாக்ஸைக்
(Omni box) கூறலாம். பிரவுசரின் மேலாக இந்த பார் அமைக்கப் பட்டு பல
செயல் பாடுகளுக்கு இடமாக இயங்குகிறது. இதில் நீங்கள் ஒரு
யு.ஆர்.எல். டைப் செய்திடலாம். அல்லது ஏதேனும் ஒரு சொல்
கொடுத்து சர்ச் இஞ்சினாக மாற்றலாம்.
வழக்கம் போல சர்ச்பாக்ஸில் கேள்வி அமைக்க கண்ட்ரோல் + கே கொடுத்தால் குரோம்
பிரவுசர் நீங்கள் எதையோ தேட விரும்புகிறீர்கள் என்று
கணித்து உடனே ஒரு கேள்விக் குறியை ஆம்னிபாக்ஸில் அமைக்கிறது.
இது கூடத் தேவையில்லை. இணைய முகவரி பார்மட்டில் இல்லாத எதனை
அமைத்தாலும் உடனே அது தேடலுக்குத்தான் என்று பிரவுசர்
எடுத்துக் கொண்டு செயல்படுத்துகிறது. உங்கள் நோக்கத்தை
உணர்ந்து கொண்டு பிரவுசர் சரியான இடத்திற்கு உங்களை
அழைத்துச் செல்கிறது. நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்
என்பதை இந்த ஆம்னிபாக்ஸ் சரியாகக் கணித்துச் செயல்படுகிறது.
இதுவரை பிரவுசர்களில் இந்த பாக்ஸ்களில் ஆட்டோ கம்ப்ளீஷன்
என்னும் வசதி மட்டுமே தரப்பட்டு வந்தது. ஏற்கனவே டைப்
செய்த வெப்சைட் முகவரிகளை மெமரியில் வைத்து அவற்றை
முழுமையாகத் தருவதே இந்த வசதியின் நோக்கம். ஆனால் குரோம்
பிரவுசரில் மட்டுமே இந்த கூடுதல் வசதி தரப் படுகிறது.
அத்துடன் ஒரு வெப்சைட்டுக்குப் போனபின் அதில் சர்ச் பாக்ஸ்
இருந்தால் அதனை உணர்ந்து கொண்டு தன் சர்ச் பாக்ஸிலேயே தேடலை
மேற்கொண்டு தருகிறது.
5. டேப்களில் கூடுதல் கண்ட்ரோல்: டேப்களின் வழியே
பிரவுசிங் பயர்பாக்ஸில் தொடங்கி தற்போது இன்டர்நெட்
எக்ஸ்புளோரரிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால்
குரோம் பிரவுசரில் இந்த டேப்டு பிரவுசிங் முற்றிலும் புதிய
கோணத்தில் பயன்படுத்தப்படுகிறது. டேப் ஒன்றை இழுத்து வந்து
வேறொரு டேப்பிற்கான தளத்தில் போட்டு இரண்டையும் இணைக்கலாம்.
அத்துடன் எந்த வகையில் டேப்களைத் திறக்க என்பதனையும் செட்
செய்திடலாம். நீங்கள் விரும்பும் தளங்களின் டேப்களோடு
திறக்கலாம். அல்லது வழக்கமான டேப்களின் அமைப்பில் திறக்கலாம்.
இந்த வசதி குரோம் பிரவுசரிலேயே அமைக்கப் பட்டுள்ளது.
மற்ற பிரவுசரில் இது தனியாக ஆட் ஆன் புரோகிராமாக, தர்ட்
பார்ட்டி புரோகிராமாகத் தான் கிடைக்கிறது.
மேலும் டேப்கள் திரையின் மேற்புறத்தில் அழகாக அமைக்கப படுகிறது. இத்துடன்
மற்ற பிரவுசர்களில் இல்லாத டாஸ்க் மேனேஜர் இதில்
தரப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த டேப்பில் உள்ள புரோகிராம்
அதிக மெமரியை எடுத்துக் கொள்கிறது என்று பார்த்து அதனை
வெறுமனே வைத்திருந்தால் நாம் மூடிவிடலாம். இதன் மூலம் மெமரி
நமக்குக் கூடுதலாகக் கிடைத்து பிரவுசர் வேகம் அதிகரிக்கும்.
மேலும் டாஸ்க் மேனேஜர் மூலம் திறக்க மறுக்கும் இணைய தள
டேப்பினை மட்டும் மூடலாம். பிரவுசரையே மூட வேண்டிய கட்டாயம்
இருக்காது.
6. ஹோம் பேஜ்: குரோம் பிரவுசர் தனக்கென ஒரு ஹோம்
பேஜோடு திறந்து கொள்கிறது. அதனைப் பயன்படுத்துகையில் இந்த
புரோகிராம் நாம் செல்லும் வெப்சைட்டுகளை நினைவில் வைத்துக்
கொள்கிறது. இதில் முதல் ஒன்பது வெப்சைட்கள் ஸ்நாப் ஷாட்
போல மூன்றுக்கு மூன்று என்ற வகையில் காட்சி அளிக்கின்றன.
இவற்றுடன் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சர்ச்
இஞ்சின்களும் புக் மார்க்குகளும் காட்டப்படுகின்றன. ஆனால்
இந்த ஹோம் பேஜ் தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது
கட்டாயம் இல்லை. நீங்கள் விரும்பும் எதனை வேண்டுமானாலும்
வைத்துக் கொள்ளலாம்.

7. தனிநபர் தகவல்: அண்மையில் வெளியான இன்டர்நெட்
எக்ஸ்புளோரர் பதிப்பு 8 தொகுப்பில் உள்ளது போல குரோம்
பிரவுசரும் தனி நபர்கள் தங்கள் தகவல்கள் மற்றவருக்குத்
தெரியக் கூடாது எனில் தனியான பிரவுசிங்கில் ஈடுபடலாம். இதனை
குரோம் Incognito என அழைக்கிறது. இதற்கென தனியே ஒரு
விண்டோ திறக்கப்பட்டு அதில் நீங்கள் என்ன தகவல் தேடினாலும்,
எந்த தகவல் தந்தாலும் கம்ப்யூட்டரிலோ அல்லது பிரவுசர்
புரோகிராமிலோ பதியப்படாது. இதனால் ஒரே நேரத்தில் பொதுவான
விண்டோ ஒன்றும் தனி நபரின் தனிப்பட்ட விண்டோ ஒன்றையும்
திறந்து பிரவுசிங் செய்திடலாம்.
8. பிக் அப் வசதி: குரோம் பிரவுசரைத் திறந்தவுடன்
நீங்கள் எந்த தளத்தில் விட்டீர்களோ அங்கு தொடங்க உங்களுக்கு
ஆப்ஷன் தரப்படுகிறது. அது மட்டுமல்ல கடைசியாக இதனைப்
பயன்படுத்திய போது எந்த எந்த தளங்கள் திறந்திருந்தனவோ அவை
அனைத்தும் காட்டப்படுகின்றன.

9. ஷார்ட் கட் வசதி:நீங்கள் பிரவுசரைத் திறந்தவுடன்
எந்த தளத்திற்குப் போக விரும்புகிறீர் களோ அதற்கான ஷார்ட்
கட்டினை அமைத்துவிட்டால் போதும். அதில் கிளிக் செய்தால்
குரோம் திறக்கப்பட்டு நேராக அந்த தளத்திலேயே இறங்குவீர்கள்.
குரோம் பிரவுசரை டவுண்லோட் செய்வது மிக எளிது. விரைவும்
கூட. நீங்கள்பயர்பாக்ஸ் பயன்படுத்துபவராக இருந்தால் அதன்
புக் மார்க்குகள், பேவரைட் தளங்கள் தாமாக இதில் ஒட்டிக்
கொள்வதைப் பார்க்கலாம். விரைவில் மேக் மற்றும் லினக்ஸ்
பதிப்புகள் வர இருக்கின்றன. குரோம் தற்போது 122 நாடுகளில்
43 மொழிகளில் படிப்படியாக வர இருக்கிறது. முதல் முதலாக
கூகுள் இதனைச் சோதனைப் பதிப்பாகத்தான் வெளியிட்டுள்ளது.
எனவே முழுமையான பத்திரமான பிரவுசர் என்று
உறுதிப்படுத்தப்படும் வரை கவனமாகத்தான் பயன்படுத்த வேண்டும்.

இதுவரை குரோம் தொகுப்பிற்கு எந்த ஆட்–ஆன் புரோகிராம்
தொகுப்பும் இல்லை. இனி மேல் தான் எழுதப்பட வேண்டும்.
நிச்சயம் அதிக அளவில் விரைவில் இவை கிடைக்கும் வாய்ப்புகள்
இருக்கின்றன. பயர்பாக்ஸின் ஒரு சிறப்பான அம்சம் அது தரும்
சிங்கரனை சேஷன் வசதியாகும். இதன் மூலம் உங்கள் ஹோம்
பிரவுசர், லேப்டாப் பிரவுசர் மற்றும் நீங்கள் தொடர்ந்து
பயன்படுத்தும் பிரவுசர் ஆகியவற்றை ஒருங்கிணைத்து அவை
அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் இயக்கலாம்.
இதற்கு பழகியவர்கள் வேறு மாதிரியாக பிரவுசரைப் பயன்படுத்த
இயலாது. குரோம் பிரவுசரில் இந்த வசதி இதுவரை தரப்படவில்லை.
குரோம் பிரவுசர் பயன்படுத்தும் கட்டமைப்பு வெப்கிட் என்பதன்
அடிப்படையில் அமைந்ததாகும். இது ஒரு ஓப்பன் சோர்ஸ் சிஸ்டம்.
ஆப்பிள் நிறுவனத்தின் பிரவுசரான சபாரியில் இதுதான்
இயங்குகிறது. எனவே குரோம் பிரவுசர் மூலம் கிடைக்கும் ஒரு
பக்கத்தினையும் பயர்பாக்ஸ் அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரர்
மூலம் கிடைக்கும் ஒரு பக்கத்தினையும் ஒப்பிட்டுப்
பார்த்தால் டெக்ஸ்ட் மற்றும் அவற்றின் பார்மட்டிங் வகைகளில்
வித்தியாசம் தெரியும். இவை எல்லாம் தொடக்கத்தில் எந்த
பிரவுசருக்கும் இருக்கத்தான் செய்யும். சர்ச் இஞ்சினில்
தனியொரு சாம் ராஜ்ஜியத்தை அமைத்து இன்றும் பவனி வரும்
கூகுள் நிறுவனம் நிச்சயம் பிரவுசர் மார்க்கட்டிலும்
சிறப்பாகச் செய்திடும் என எதிர்பார்க்கலாம். இதுவரை கூகுள்
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான தன் போரில் ஓப்பன் சோர்ஸ்
நிறுவனமான மொஸில்லா பவுண்டேஷன் வழங்கும் பயர் பாக்ஸ்
பிரவுசருக்கு ஆதரவு தெரிவித்து வந்தது. கூகுள்
விளம்பரத்திற்கென பயர்பாக்ஸ் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு
இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு அடுத்த இடத்தைப் பிடித்துக்
கொண்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் 2011 வரை இருக்கும்.
கூகுள் புதிய கண்டுபிடிப்புகளுடனும் நவீன வசதிகளுடனும்
இன்றைய இணைய தளத்தேடலையும் இணைய உலாவையும் மிகச் சிறப்பாக ஆக்கும் முயற்சியே குரோம் என்னும் இந்த பிரவுசர் என்று
கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பு பிரிவு துணைத் தலைவர்
சுந்தர் பிச்சை கூறி உள்ளார். ஆனால் மைக்ரோசாப்ட் குரோம்
பிரவுசர் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. பிரவுசர்கள்
தளம் விசாலமானது, விரிவானது. யார்வேண்டுமானாலும் இதில்
இறங்கலாம். ஆனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8
மக்களின் எதிர் பார்ப்புகளை அதிகம் நிறைவேற்றுவதால் மக்கள்
தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தையே நாடுவார்கள் என்று
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்
பிரிவின் பொது மேலாளர் அறிவித்துள்ளார். அனைத்து
பிரவுசர்களுமே நன்றாகத்தான் உள்ளன. ஒன்றுக்கொன்று ஒரு
வகையில் சிறப்பு பெறுகின்றன. பயர்பாக்ஸும் இன்டர்நெட்
எக்ஸ்புளோரரும் டொயோட்டோ கார் என்றால் குரோம் பிரவுசர்
பறக்கும் சிறிய அழகான ஸ்போர்ட்ஸ் கார். அதில் ஏறிப்
பறந்துதான் பாருங்களேன்.

குரோம் கூடுதல் தகவல்கள்
குரோம் – கூடுதல் தகவல்கள்
1. குரோம் தொகுப்பிற்கு இன்னும் கூடுதல் வசதிகளைத் தரும்
ஆட்– ஆன் தொகுப்புகள் இல்லை. நீங்கள் பயர்பாக்ஸ் தொகுப்பினை
விரும்பிப் பயன்படுத்துபவராக இருந்தால் இதன் மதிப்பு
புரிந்திருக்கும். பயர்பாக்ஸ் தொகுப்பைப் பொறுத்தவரை பல
நூற்றுக் கணக்கில் கூடுதல் வசதிகள் தரும் ஆட் – ஆன்
தொகுப்புகளைப் பயன்படுத்தலாம்.

2. குரோம் தொகுப்பை எந்த கம்ப்யூட்டரிலும் இணைவமைதியுடன்
செயல்படும்படி சிங்க்ரனைஸ் செய்ய முடியாது. பயர்பாக்ஸ்
தொகுப்பை சிங்க்ரனைஸ் செய்து அதன் அடிப் படையில் எந்த கம்ப்
யூட்டரிலும் எளிதாகப் பயன்படுத்த முடியும். இந்த வசதி
இன்னும் குரோம் தொகுப்பில் இல்லை.
3. குரோம் இன்னும் முழுமையான பிரவுசராக வடிவமைப்பினைப்
பெறவில்லை. எனவே பயர்பாக்ஸ் அல்லது இன்டர்நெட்
எக்ஸ்புளோரரில் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் இதில்
தற்போதைக்குக் கிடைக்காது. டெக்ஸ்ட் பார்மட்டிங் மற்றும்
பிற சார்ந்த விஷயங்களில் இந்த வேறுபாட்டினைக் காணலாம்.

4. உங்களைப் பற்றிய தகவல்களை கூகுள் மற்ற நிறுவனங்களுடன்
பகிர்ந்து கொள்ளலாம். கூகுள் இணையத்தில் ஒரு பெரிய விளம்பர
நிறுவனமாக உருவெடுத் துள்ளது. எனவே உங்களைப் பற்றிய
தகவல்கள் விளம்பரங்களைத் தரும் நிறுவனங்களுக்குச் செல்லலாம்.
அதனால் உங்களுக்கு விளம்பரங்கள் வந்து குவியலாம். நீங்கள்
கூகுள் தளத்தில் தேடல் செயல்பாடுகளை மேற்கொள்கையில் இந்த
விளம்பரங்கள் உங்களை மொய்த்துக் கொண்டு தொல்லை தரலாம்.

5. பல வாசகர்கள் குரோம் தொகுப்பில் நாம் பிரவுஸ் செய்திடும்
முகவரிகள் அடங்கிய ட்ராப் டவுண் பார் இல்லாதது ஒரு பெரிய
குறை என்று எழுதியுள்ளனர். ஆம், இது நூற்றுக்கு நூறு
உண்மையே. அதற்குப் பதிலாகத்தான் ஆம்னிபாக்ஸ் வசதியினைத்
தருகிறது. ஆனால் இது போன்ற ட்ராப் டவுண் மெனு வழி பழகிய
நமக்கு இது குறைதான்.

6. கூகுள் நாம் பிரவுஸ் செய்திடும் தளங்கள் குறித்த
ஹிஸ்டரியினை எடுத்துவிடுகிறது. சில வேளைகளில் நாம் ஹிஸ்டரி
மூலம் ஏற்கனவே சென்ற தளங்களுக்குச் செல்ல விரும்புவோம்.
அந்த வசதியினை குரோம் கொண்டிருக்கவில்லை. அதற்குப் பதிலாக
நாள் தோறும் செல்லும் தளங்களின் பட்டியலைத் தயார் செய்து
வழங்குகிறது. இதெல்லாம் நாம் எதிர்பார்த்து இல்லாத
சமாச்சாரங்கள் தான். முழுமையான தொகுப்பு வெளியாகும்போது இவை
தரப்படலாம். இருப்பினும் குரோம் தரும் வேகம் மற்றவற்றில்
இல்லை என்பதால் இதனையும் தற்போதைக்கு பயன்படுத்திப்
பார்க்கலாம்.

கூகுள் குரோம் - Google Chrome
அசத்தலான ப்ரெளசர்!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கூகுள் குரோம் ப்ரெளசர், விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று ரிலீஸானது. மற்ற ப்ரெளசர்களில் இல்லாத பல சிறப்பு அம்சங்கள் இதில் இருப்பதால், விரைவில் குரோம், ப்ரெளசர் உலகில் புரட்சி படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ப்ரெளசர் குரோம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், பயர்பாக்ஸ் ஆகியவற்றுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், பயர்பாக்ஸ், ஆப்பிள் சஃபாரி, ஓபேரா ஆகிய ப்ரெளசர்களில் இல்லாத பல அருமையான அம்சங்கள் குரோமில் உள்ளன.
1. இணையதளங்களுக்கான 'டாஸ்க் மேனேஜர்':
கூகுள் குரோமுக்குள் போன பின்னர், 'Shift+esc' கீயை அழுத்தினால், 'டாஸ்க் மேனேஜர்' திறக்கும். அதில், குரோம் ப்ரெளசரில் திறந்திருக்கும் அனைத்து இணையதளங்களின் பட்டியலும் காணப்படும்.
இதன் மூலம் பல்வேறு வகையான இணையதளங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் 'மெமரி'யின் அளவை நாம் அறிந்திட முடியும். ஏதாவது ஒரு இணையதள பக்கத்தில் சிக்கல் ஏற்பட்டால், டாஸ்க் மேனேஜரிலிருந்தபடியே அதை மூடவும் வசதி உண்டு.
2. விஷூவல் ப்ரெளசர் ஹிஸ்டரி (Visual Browser History):
'Ctrl+H' கீயை அழுத்தி 'ப்ரெளசர் ஹிஸ்டரி'யை திறந்து அதில் தேவைப்படும் பக்கங்களைத் தேடலாம்.
பொருத்தமான பக்கங்களைத் தேடுவதோடு, சம்பந்தப்பட்ட இணைய தள பக்கங்களின் 'தம்ப்நெய்ல்'களையும் இந்த ஆப்ஷன் நமக்குக் காட்டும்.
3. சூப்பர் க்ளீன் கன்டெக்ஸ்சுவல் மெனு (Super Clean Contextual Menu):
ஏதாவது ஒரு இணையதளத்தின் 'ஹைப்பர்லிங்கில்' ரைட் கிளிக் செய்தால், ஐந்து 'ஆப்ஷன்கள்' மட்டுமே அதில் இருக்கும். 'இமேஜ்' மீது 'ரைட் கிளிக்' செய்தால், நான்கு ஆப்ஷன்கள் இருக்கும். இது பயர்பாக்ஸில் குழப்பமானதாக இருக்கும்.
4. அட்ரஸ் பாரிலிருந்து 'சைட்' தேடலாம்:
இது பிரில்லியன்ட் ஆன ஆப்ஷன். இணையதளத்தை தேடக் கூடிய வசதியுடன் கூடிய இணையதளத்திற்குப் போகும்போது - குரோம் அதை தானாகவே உணர்ந்து கொண்டு, அந்த தளத்தை 'அட்ரஸ் பாரில்' பதிவு செய்து விடும். அடுத்த முறை அந்த சைட்டுக்குப் போக விரும்பினால் 'அட்ரஸ் பாருக்குப்' போனால் போதும்.
5. பயன்படுத்தப்பட்ட 'மெமரி'யை அறிய..
இந்த ஆப்ஷன் மூலம் ப்ரெளசர்களில் பயன்படுத்தப்பட்ட மெமரியை அறிந்து கொள்ளலாம்.
குரோம் ப்ரெளசருக்குள் போய், ஒரு புதிய 'டேப்' (Tab) பை திறந்து, அதில் about:memory என்று டைப் செய்யவும். அப்போது ப்ரெளசருக்கு மேல், உங்களது கம்ப்யூட்டரில் எந்தெந்த ப்ரெளசர் பயன்பாட்டில் உள்ளது என்பது தெரிய வரும். அதில் எவ்வளவு மெமரி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலும் கூடவே இருக்கும்.
6. தவறாக மூடிய 'வெப்சைட் டேப்'களை திறக்க..
பயர்பாக்ஸ்-3 ப்ரெளசரில் "Undo Closed Tab" ஆப்ஷன் உள்ளது. அதேபோல ஓபேராவில், Ctrl+Z கீயை அழுத்தினால் மூடிய டேப்களை திறக்கலாம்.
குரோமில், Ctrl+T கீயை அழுத்த வேண்டும். அப்போது, Recently closed tabs என்ற ஆப்ஷன் வரும். அதில் போய் எந்த டேப் தவறுதலாக மூடப்பட்டதாக நினைக்கிறீர்களோ அதை திறக்கலாம்.
7. Start Menu / Quick Launch பாரிலிருந்து 'சைட்' திறக்கலாம்:
இணையதளங்களுக்கான 'டெஸ்க்டாப் ஷார்ட் கட்'கள் அனைத்து ப்ரெளசர்களிலும் உள்ளன. இது கூகுள் குரோமில் எளிமையாக உள்ளது.
ஏதாவது ஒரு தளத்தை திறந்து, அதில் 'பைல்' மெனுவிலிருந்து "Create application shortcut" என்ற ஆப்ஷனை தேர்வு செய்யலாம். அந்த தளத்தின் ஷார்ட் கட் டெஸ்க் டாப்பில் உட்கார்ந்து கொள்ளும்.
இப்படி பல வசதிகள் குரோமில் கொட்டிக் கிடக்கின்றன. குரோம் நிகழ்த்தப் போகும் புரட்சி, ப்ரெளசர் உலகில் நிச்சயம் பெரிதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Google Chrome (BETA) for Windows

Google Chrome is a browser that combines a minimal design with sophisticated technology to make the web faster, safer, and easier.
Download Google Chromhttp://www.google.com/chrome/
No comments:
Post a Comment