Search This Blog

Tuesday, March 15


வந்துவிட்டது அதிவேக ஓபரா பிரவுசர்


பிரவுசர் போட்டியில் பல்வேறு புதிய வசதிகளுடன் எப்போதும் ஓபரா அறிமுகமாகும். எனினும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பொக்ஸ், குரோம் பிரவுசர்களுக்குக் கிடைக்கும் விளம்பரம் மற்றும் பரபரப்பு இதற்குக் கிடைப்பதில்லை. ஆனால், இன்று பிரவுசர்களில் அதிக வசதிகளை ஓபரா தான் முதலில் வடிவமைத்தது என்பது அதன் சிறப்பு. டேப் பயன்பாடு, பக்கங்களுக்கான தம்ப்நெயில் உருவாக்கம், இணையப் பக் கங்களில் ஹெச்.டி.எம்.எல்.5 தொழில் நுட் பம் போன்ற புதிய வரை முறைகள் ஆகியவற்றை ஓபராதான் முதலில் கொண்டு வந்தது. இதேபோல், இப்போது வெளி யிடப்பட்டுள்ள பிரவுசரிலும் பல புதிய வச திகளைக் கொண்டுள்ளது.
ஓபரா தனக்கெனப் பல வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
தொடர்ந்து இவர்கள் ஓபராவினையே பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் வெளியாகியுள்ள ஓபரா 10 நிச்சயம் இதன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிப்பதாகவே இருக் கும்.
இதன் சிறப்பை இங்கு பட்டியலிடலாம்.
முதலில் இதன் வேகத்தைக் கூற வேண் டும்.

இது செயற்படும் தன்மை, முதன் முதலில் கூகுள் குரோம் பிரவுசரை இயக்கிய போது ஏற்பட்ட உணர்வைத் தருகிறது. மிக வேகமாக இது இயங்குகிறது. இதற்கு முன்னால் வந்த 9.6 பதிப்பைக் காட்டிலும் 40 சத வீதம் அதிகம் எனக் கணக் கிடப்பட்டுள்ளது.

மற்றப்படி இன்றைக்கு வருகின்ற பிரவுசர்களில் இருக்கும் புதிய வசதிகள் பல இதிலும் உள்ளன. பொப் அப் பிளாக்கர், ப்ளக் இன் வசதிகள், ஆர்.எஸ்.எஸ்.ரீடர், பிஷ்ஷிங் தடுக்கும் வசதி எனப் பல வசதிகள் இதில் கிடைக்கின்றன. மற்ற சில பிரவுசர்களில் இல்லாத இமெயில் கிளையண்ட் புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதில், பி.ஒ.பி.3 மற்றும் ஐ-மேம் மெயில் வசதி உள்ளது. இதனால், நீங்கள் உங்கள் பி.ஒ.பி.,3 மெயில்களை இந்த பிரவுசர் முலமாகவே கொம்ப்யூட்டருக்கு இறக் கிக்கொள்ளலாம். அனைத்து வசதிகளையும் பயன்படுத்த எளிதான யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது இதன் இன்னொரு சிறப்பு. இதன் டேப்களை அமைக்கும் வசதி சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு டேப்பின் மேலாக அதன் தளக்காட்சியினை ஒரு தம்ப் நெயில் படமாக அமைத்துக்கொள்ளலாம்.
இது ஒரு புதிய உத்தியாகும். மேலும், இவை அமைந்துள்ள டேப் பாரின் வலது இடதாக இழுத்து அமைத்துக்கொள்ளலாம்.
இப்போது கிடைக்கும் மிக அகல மானிட்டர் வைத்தி ருப்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும். அடுத்த சிறப்பு, இதன் ஸ்பீட் டயல் வசதி யாகும். நீங்கள் அடிக்கடி திறந்து பார்க்க விரும்பும் டேப்பிற்கான தளத்தினை அடுத் துப் பார்க்கும் 4 முதல் 24 தளங்களின் மேலாக, ஒரு தம்ப்நெயில் படமாக வைத்துக் கொள்ளலாம். எப்போதெல்லாம் அத்தளத்தைப் பார்க்க விரும்புகிறீர்களோ, அதனை கிளிக் செய்து தளத்திற்கு செல்லலாம்.

இந்த வசதி டிபால்ட் டாகக் கிடைக்கிறது. இதன் மற்றொரு குறிப்பிடத் தக்க வசதி, இதிலுள்ள இன்லைன் ஸ்பெல் செக்கர் வசதி. இது பிளாக்குளை அமைப்பவர்களுக்கு உதவி யாக இருக்கும். இதில், புதுமையாக ஓபரா டர்போ என்ற பேஜ் கம்ப்ரஸன் தொழில் நுட் பம் பயன்படுத்தப்படுகிறது.
இதன்முலம் டயல் அப் வகை இன்டர்நெட் இணைப்பில் கூட, வேகமாக பிரவுசிங் செய்திட முடியும். இணைய இணைப்பின் வேகம் குறையும் போது, இந்த தொழில்நுட்பம் அதனைக் கண்டறிந்து, இணையதளங்களை ஓபராவின் சர்வர்களில் கம்ப்ரஸ் செய்து பின் தருகிறது.

இதனால், டேட்டா குறைவாக இறக்கம் செய்யப்பட்டாலும், பின்னணியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பக்கங்கள் கிடைக்கும். இவை தவிர, இணையப் பக்கங் களை வடிவமைப்பவர்களுக்குத் தொழில் ரீதியான ஆலோசனைகளையும், ஓபரா தந்துள்ளது.

ஆனால், ஒரே ஒரு முக்கியமான வசதி இல்லை என்பதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். இப்போதைய பிரவுசர்கள் தரும் பிரைவேட் பிரவுசிங் வசதி இதில் இல்லை. இந்த வசதி இருந்தால் நாம் பிரவுசிங் செய்த தளங்கள் குறித்த குறிப்புகள் பிரவு சரில் தங்காது. பிரவுசரை மூடியவுடன் நீக் கப்படும். இந்த வசதியை ஓபரா பிரவுசர் தர வில்லை. எனவே இந்த வசதி கட்டாயம் வேண்டும் என்பவர்கள் இதன் பக்கம் போக வேண்டாம்.

உங்களுக்கு ஓபரா பிரவுசர் தேவையெ னில், கீழ்காணும் முகவரிக்கு சென்று டவுண் லோட் செய்துகொள்ளலாம்.
அனைத்து வகையான ஓப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கான பைல் இங்கு இலவசமாக கிடைக்கும். 

தமிழ் மொழியில் ஓப்ரா பிறவுஸர் தொகுப்பு

கூகுளின் குரோம் பிரவுசர் சந்தையில் வெளியான பின், பிரவுசர் சந்தையில் பலமான சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. அதன் எதிரொலி தான் அண்மையில் வெளியான ஓப்பரா பிரவுசர் பதிப்பு 9.6. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்கு பதிலாக முதன் முதலாக பலர் நாடிய தொகுப்பு ஓப்பரா பிரவுசராகும். இன்டர்நெட் பிரவுஸ் செய்வதற்கு ஓப்பரா பிரவுசரை பயன் படுத்தும் அனைவரும் அதுதான் மிகச்சிறந்த பிரவுசர் என அதற்கான பல அம்சங்களை எடுத்துச் சொல்வது வழக்கம். 
இருந்தபோதும், குரோம் வெளியான போது ஏற்பட்ட சலசலப்பு ஒருபோதும் ஓப்பராவிற்கு ஏற்பட்டதில்லை. தொடர்ந்து மறைவிலேயே பேசப்படாமல் இருந்த ஓப்பராவிற்கு புதிய பரிமாணங்கள் தரப் பட்டுள்ளன. இத்தொகுப்பின் டெஸ்க்டாப் பதிப்பு 9.6 தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தற்போது கிடைக்கின்றன. 
இதன் மொபைல் பிரவுசர் பதிப்பான ஓப்பரா மினியை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் மூன்றாவது இடத்தை இந்தியா பெற்றுள்ளதால் ஓப்பரா பிரவுசர் தயாரிப் பவர்கள், இந்திய மொழிகளில் ஆர்வம் கொண்டு அவற்றை வடிவமைத்துள்ளனர். 
தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் கிடைக்கும் வசதியுடன், இதனை கொம்ப் யூட்டர் மற்றும் மொபைல் போன்களில் உள்ள இமெயில் கிளையண்ட் புரோகிராம் களுடன் இணைந்தும் பயன்படுத்தலாம். 
டெஸ்க்டாப் கொம்ப்யூட்டர்களுக்கான பதிப்பினை http://www.opera.com என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்தும், மொபைல் போனுக்கான பதிப்பினை www.operamini.com/pc/generic/genericadvanced midp2/ என்ற தளத்திலிருந்தும் இலவசமாக இறக்கம் செய்து பயன்படுத்தலாம். 
ஓப்பராவின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
* ஆப்பரா லிங்க் பயன்படுத்தி பல்வேறு கொம்ப்யூட்டர்களிடையே புக்மார்க்குகளை சிங்க்ரைனைஸ் செய்திடலாம். 
* இணையத் திருடர்களிடமிருந்து உங்கள் பெர்சனல் தகவல்களை காப்பாற்றும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 
* படங்களை தேவைப்பட்டால் மட்டுமே கொடுப்பதன் மூலம் பேண்ட்வித் திறனை காப்பாற்றுகிறது. 
* இதன் டவுண்லோட் மேனேஜர் டவுண்லோட் செய்யப்படுகையில் இடைவெளி ஏற்பட்டால் விட்ட இடத்திலிருந்து தொடர்கிறது. 
* ஓப்பரா 9.6 குறைந்த மெமரி உள்ள பழைய கொம்ப்யூட்டர்களில் சிறப்பாக இயங்குகிறது. 
* முழுத் திரையையும் பயன்படுத்தி இணையதளங்களை காட்டும் திறனும் இதற்கு உள்ளது. 
* ஓப்பரா முழுமையான ஓப்பன் சோர்ஸ் புரோகிராமாக இருக்காது. 
ஏனெனில், அனைத்து பிரவுசர்களுமே ஒரே மாதி?யாக இருந்துவிட்டால் பின் போட்டியும், அதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் அனுபவ?ம் கிடைக்காமல் போய்விடும். 
போட்டி இருந்தால் தான் ஒன்று மற்றவற்றை காட்டிலும் நல்லது என்று தெரிய வரும். 
* ஓப்பரா பிரவுசர் ஐபோனில் கிடைக்காது. ஓப்பரா பல காலமாக தந்து வந்த அம்சங்களையே காட்டி பயர்பாக்ஸ் அல்லது குரோம் ஆகியவை மீடியாக்கள் மூலமாக சலசலப்பை ஏற்படுத்திய போது ஓப்பரா என்றும் அமைதியாகவே இருந்தது. 
ஆனால், வாடிக்கையாளர்களிடையே செய்தி பரவியதால் குரோம் வெளியானபோது, ஓப்பராவை டவுண்லோட் செய்தவர்கள் எண்ணிக்கை 20% உயர்ந்தது. ஒவ்வொரு போட்டி பிரவுசரும் வெளியாகும் போது இது நடப்பது வாடிக்கையாகிவிட்டது. 
* ஒவ்வொரு முறை போட்டி பிரவுசர் வருகையிலும், அதனை ஒரு பயமுறுத்தலாகத்தான் ஆப்பரா எடுத்துக்கொள்கிறது.
ஆனால், பிரவுசர் வருகையில் ஆப்பராவின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்கிறது. ஏனெனில், புதிய பிரவுசர்களின் செயல்பாட்டை பற்றி குறிப்பிடுகையில் மீடியாக்களும், மக்களும் ஆப்பராவை பற்றி அதிகம் பேசுகின்றனர். 
*பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை, ஆப்பராவினை 2.5 கோடியிலிருந்து 3 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். மொபைல் போனுக்கான பிரவுசரை பொறுத்தவரை ஓப்பரா மினி மற்றும் ஓப்பரா மொபைல் முன்னணியில் உள்ளது. 
* ஓப்பரா மினி மற்றும் ஓப்பரா மொபைல் பிரவுசர்கள் மிகக்குறைந்த அளவிலான பேண்ட் வித் கொண்டு இயங்கும் மொபைல் போன்களில் கூட நல்ல பிரவுசிங் அனுபவத்தை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்கை பயர் போன்ற பிரவுசர்கள் அதிக அளவிலான பேண்ட் வித் மற்றும் அதிகளவில் டேட்டா வினை கையாளும் திட்டங்களை கொண்டுள்ளவர்களுக்கு உதவிடும் வகையில் உள்ளது. ஓப்பரா பிரவுசர்களுக்கு குறைந்த பேண்ட் வித் உள்ளபோது சிறப்பாக செயல்படும். அதிக பேண்ட்வித் கிடைக்கும்போது இன்னும் திறனுடன் செயல்படுகிறது. 
* இதுவரை இல்லாத வகையில் மக்கள் அதிகமான நேரத்தை ஆன்லைனில் செலவிடுகிறார்கள். டெலிவிஷனில் செலவிடும் நேரத்தை காட்டிலும் இன்டர்நெட் பயன்படுத்துதல் கூடுதல் என்று சொன்னால் அது மிகையாகாது. இதனால், பிரவுசரின் பயன்பாட்டில் பல புதிய பரிமாணங்கள் உருவாகி வருகின்றன.
இதனால், ஓப்பரேட்டிங் சிஸ்டத்தின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது. 
அதாவது, ஓப்பரேட்டிங் சிஸ்டங்களில் புதிய வழிகளோ, வகைகளோ ஏற்படுவது இல்லை. 
http://www.opera.com 
http://www.operamini.com

ஆப்பராவில் ஸ்பெல் செக்கர்

கேள்வி: நான் ஆப்பரா பிரவுசர் பயன்படுத்துகிறேன். என்னுடைய கம்ப்யூட்டரில் இதில் ஸ்பெல் செக்கர் இல்லை. இதனை மறுபடியும் பதிய வேண்டுமா? அல்லது வேறு வழிகள் உள்ளனவா? விளக்கவும்.

பதில்: உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் ஆப்பரா பயன்படுத்தவில்லை. உங்களுக்காக ஆப்பரா பிரவுசரை இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பார்த்தேன். 


பல இணையதளங்கள் மற்றும் மெயிலிங் லிஸ்ட்களில் இது குறித்த தகவல்களைத் தேடிப் பார்க்கையில் ஆப்பரா தொகுப்பில் ஸ்பெல்லிங் செக் செய்திடும் வசதி இல்லை. 




எனவே தனியாக ஒன்றைத்தான் இதற்கென நீங்கள் டவுண்லோட் செய்திட வேண்டும். அப்படிப் பார்க்கையில் GNU Aspell என்ற டிக்ஷனரி புரோகிராம் ஆப்பராவிடம் இணைந்து செயலாற்றுவது தெரிந்தது. இது இலவசமாகக் கிடைக்கிறது. இதனையும் இதனுடன் சார்ந்த டிக்ஷனரிகளையும் நீங்கள் இன்ஸ்டால் செய்திடுங்கள். அப்போதுதான் முழுமையாக இது ஸ்பெல் செக் செய்திடும். 

இதனைப் பெற நீங்கள் http://aspell.net/win32 என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்ல வேண்டும். என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்திடவும். அதன்பின் டிக்ஷனரி என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்து அதனையும் இன்ஸ்டால் செய்திடவும். எல்லாம் முடிந்த பின்னர் கம்ப்யூட்டரை ரீ பூட் செய்ய வேண்டும். பின் ஆப்பரா, டிக்ஷனரி இருப்பதை உணர்ந்து, நீங்கள் Check Spelling ஆப்ஷன் கொடுக்கையில் தானாக ஸ்பெல்லிங் செக் செய்து காட்டும்.

No comments:

Post a Comment