இல்லாத மெசேஜை அனுப்புதா அவுட்லுக் எக்ஸ்பிரஸ்?
கோயம்புத்தூர் அருகே துடியலூரிலிருந்து வாசகர் சரவணன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். தன்னுடைய அவுட்லுக் எக்ஸ்பிரஸ் தொகுப்பில் அவுட்பாக்ஸ் போல்டர் காலியாக இருப்பதை உறுதி செய்த பின்னரும் ஏதோ மெசேஜ் இருப்பதாகவும் அதனை அனுப்பவா என்று கேள்வி கிடைப்பதாகவும் எழுதி இருந்தார். இதற்கான விளக்கத்தினை, அவர் வார்த்தைகளில் கூறுவதாக இருந்தால், தந்தி போல் பாவித்து அனுப்புங்கள் என்றும் கேட்டிருந்தார். விளக்கம் சற்று பெரிதாக இருக்கும் என்பதால் தனிக் கட்டுரையாகவே தருகிறேன். முதலில் உங்கள் அவுட்பாக்ஸ் போல்டரைச் சோதனை செய்திடுங்கள்.
அதனைத் திறந்து பின்னர் View மெனுவினைத் தேர்ந்தெடுத்து பின் அதில் Current View என்ற பிரிவிற்குச் செல்லவும். அங்கு சென்றவுடன் Show All Messages என்ற பிரிவு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். இதன் மூலம் உங்கள் அவுட்பாக்ஸ் போல்டரில் உள்ள அனைத்து மெசேஜ்களும் நீங்கள் பார்ப்பதற்கு வழி கிடைப்பதனை உறுதி செய்கிறீர்கள். அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது அவுட்பாக்ஸ் போல்டரின் உள்ளாக சோதனை செய்வதுதான். இதற்கு File, Folder, Compact என வரிசையாகச் சென்று பார்க்கவும். இதில் ஒன்றும் தெரியவில்லை என்றால் உங்கள் அவுட்பாக்ஸ் போல்டரில் பிரச்னை ஒன்றுமில்லை என்பது உறுதியாகிறது.
இதைப் பற்றி நீங்கள் கவலைப்பட ஏதுமில்லை. ஆனால் இதில் ஏதேனும் பிழைச் செய்தி கிடைத்தால் உங்கள் அவுட்பாக்ஸ், அதாவது Outbox.dbx என்ற பைல், கெட்டுப் போயுள்ளது என்று தெரிகிறது. இதற்கு ஒரு சில காரணங்கள் உள்ளன. முதலாவது உங்களுடைய ஆண்டி வைரஸ் புரோகிராம். இது உங்களுடைய இமெயில் கிளையண்ட் புரோகிராம் அனுப்பும் இமெயில் செய்திகளை எல்லாம் ஸ்கேன் செய்திடும். உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாக்க நீங்கள் அனுப்பும் இமெயில் செய்திகளை ஸ்கேன் செய்வது தேவையில்லை.
உங்களிடம் சரியான ஆண்டி வைரஸ் புரோகிராம் இருந்தால் கம்ப்யூட்டரிலிருந்து வெளியே செல்லும் இமெயில் செய்திகளில் வைரஸ் இருக்க வாய்ப்பில்லை. எனவே ஆன்டி வைரஸ் புரோகிராமினைத் திறந்து அதில் கிடைக்கும் மெனு மூலம் அவுட்கோயிங் இமெயில் கடிதங்களை ஸ்கேன் செய்திட வேண்டாம் என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் அவுட்பாக்ஸ் டேமேஜ் ஆகி இருந்தால், Outbox.dbx என்ற பைலில் கரப்ஷன் ஏற்பட்டிருந்தால், அதனை ரிப்பேர் செய்திடலாம். என்ன பார்க்கிறீர்கள்! ஆம் ரிப்பேர் செய்யலாம். இதற்கு உங்கள் இமெயில்களை ஸ்டோர் செய்து வைத்திடும் போல்டர் கம்ப்யூட்டரில் எந்த டிரைவில் எங்கு இருக்கிறது என்று உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இது உங்களுக்கு தெரியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். Tools, Options சென்று என்ற Maintenance டேபில் கிளிக் செய்திடவும். இங்கு கீழாக Store Folder என்ற பட்டன் இருக்கும். அதில் கிளிக் செய்திடவும். உடனே ஒரு பாப் அப் விண்டோ கிடைக்கும்.
அந்த விண்டோவில் உங்கள் இமெயில் செய்திகள் எங்கு ஸ்டோர் செய்து வைக்கப்பட்டுள்ளன என்றுகாட்டப்படும். அது இருக்கும் டிரைவ் எழுத்து காட்டப்படும். இதனைக் குறித்து வைத்துக் கொள்வதும் நல்லது. அல்லது நீங்கள் விரும்பும் டிரைவிற்கு இதனை மாற்றிக் கொள்ளலாம். இனி ஸ்டோர் போல்டர் எங்கிருக்கிறது என்று தெரிந்து கொண்டீர்கள்; அல்லது உங்களுக்குச் சரியான இடத்தில் அதனை அமைத்துக் கொண்டீர்கள். இனி அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸை மூடவும். ஸ்டோர் போல்டரைத் திறக்கவும். அங்கு Outbox.dbx என்ற பைல் இருப்பதனைக் கண்டறியவும். இதனை டெலீட் செய்திடுங்கள். இனி மீண்டும் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் புரோகிராமைத் திறந்திடுங்கள். இப்போது புதியதாக ஒரு அவுட் பாக்ஸ் திறக்கப்பட்டிருக்கும். எனவே இனி வழக்கம் போல உங்கள் கடிதங்களை இதில் சேமித்து வைக்கலாம். இமெயில் மெசேஜ் அனுப்பவா என்று கேள்வி கிடைப்பதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. ஏதேனும் ஒரு மெயில் செய்தி அனுப்பப்படாமல் இருக்கலாம். அப்படி எதுவும் இருக்கிறதா என்றும் பார்த்துக் கொள்ளவும். அப்படி எதுவும் இல்லை என்றால் மேலே சொன்ன குறிப்புகளைப் பின்பற்றவும்

No comments:
Post a Comment