Search This Blog

Tuesday, March 15


ஆட்டோ கம்ப்ளீட் !

இன்டர்நெட் இணைப்பிற்கான பிரவுசரைத் திறந்து இயக்கி அதில் உள்ள முகவரி ஸ்லாட்டில் முகவரியை டைப் செய்திடுகையில் பிரவுசர் தானாகவே அதனை உணர்ந்து முகவரியை முழுதாகக் காட்டும். நாம் அமைக்கப் போகும் முகவரி அதுவாக இருந்தால் சரி. புதிய முகவரியாக இருந்தால் இச்செயல் நமக்கு எரிச்சலைக் கொடுக்கும். இதனைத் தடுத்து நிறுத்த முடியாதா? 

பதில் இதோ.

நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பதிப்பு 5 அல்லது அதற்கும் பிற்பட்டதனைப் பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால் Internet Options செல்லவும். பின் Content என்ற பிரிவில் சென்று இணிணtஞுணt டேபைக் கிளிக் செய்திடவும். அதில் “AutoComplete” என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது உங்களுக்கு ஒரு control panel கிடைக்கும். இங்கு AutoComplete வசதியை இயக்கவும் தடுக்கவும் உங்களுக்கு விருப்ப வசதி தரப்படும். 

இன்டர்நெட் முகவரி மட்டுமின்றி பார்ம்ஸ் மற்றும் பாஸ்வேர்டுகளுக்கும் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். இதில் “Web addresses” என்ற பிரிவிற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். 

நெட்ஸ்கேப் பிரவுசர் பயன்படுத்துபவர்கள் Edit, Preferences, Navigator என்ற பிரிவுகளுக்கு வரிசையாகச் சென்று அதில் “Smart Browsing” என்ற பிரிவைக் கிளிக் செய்திடவும். இதில் “Location Bar Autocomplete” என்ற பிரிவிற்கு எதிரே உள்ள கட்டத்தில் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள் Tools/Options சென்று “Privacy” பட்டனைக் கிளிக் செய்திடவும். பின் “Saved Information” என்பதின் கீழ் “Save information I enter in web page forms and the Search bar” என உள்ள பகுதியில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். அடுத்து “History” என்ற பகுதியில் செட்டிங் என்ற பகுதியில் “History” என்பதன் முன் “0” என மாற்றிவிடவும்.

"ஹிட்' என்றால் என்ன?

இன்டர்நெட் குறித்து பேசுகையில் பலர் இந்த தளத்தின் ஹிட் எண்ணிக்கை என்ன? என்று கேட்கின்றனர். அல்லது சில தளங்களின் முகப்புப் பக்கத்தில் இத்தனை பேராக நீங்கள் இதனைப் பார்க்கிறீர்கள் என்று கணக்குக் காட்டப்படும். பலர் இதுதான் அந்த தளம் பெற்ற ஹிட்களின் எண்ணிக்கை என எண்ணுகின்றனர். இந்த ஹிட்” என்பது என்ன? அது எதனைக் குறிக்கிறது>? அதனை எப்படிக் கணக்கிடுகிறார்கள்? என்று பார்ப்போம். 

சரியாகச் சொல்வதென்றால் இந்த சொல் குறித்து பலரும் தவறாகவே கருத்து கொண்டுள்ளனர் என்று கூறலாம். பலரும் ஹிட் என்றால் ஓர் இணைய தளத்தை எத்தனை பேர் பார்த்தார்கள் என்று குறிப்பிடுவதாக எண்ணிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு முறை ஒருவர் ஓர் இணைய தளத்திற்குச் சென்று பார்த்தால் அதன் ஹிட்களின் எண்ணிக்கை யில் ஒன்று கூடும் என எண்ணுகிறார்கள். இது உண்மை அல்ல. சரியான கணிப்பும் அல்ல. “ஹிட்” என்பது ஒரு வெப் சர்வருக்கு அளிக்கப்படும் வேண்டுகோள் ஆகும். எடுத்துக் காட்டாக நீங்கள் தன்னுடைய இணைய முகப்புத் தளத்தில் ஆறு படங்களை உடையதாக ஓர் இணைய தளம் இருப்பதாகக் கொள்வோம். இந்த தளத்தைப் பெற உங்களுடைய பிரவுசர் இந்த ஆறு படங்களுக்கு ஒரு வேண்டுகோளை அனுப்பும். அத்துடன் அத்தளத்தின் எச்.டி.எம்.எல் க்காகவும் ஒரு வேண்டுகோளை அனுப்பும். எனவே இந்த வேண்டு கோள்கள் எல்லாம் சேர்ந்தால் மொத்தம் ஏழு “ஹிட்” கள் இந்த தளத்திற்கு அனுப்பப் படுகின்றன. 

நீங்கள் கூகுள் தேடுதளத்தில் (அல்லது நீங்கள் விரும்பும் எந்த தேடு தளத்திலும்) உங்கள் தேடுதலை அனுப்பி அதற்கான முடிவுகள் உங்களுக்குத் தெரிவிக்கப் பட்டால் அவை ஒவ்வொன்றும் ஒரு ஹிட்” ஆகக் கருதப்படும். எனவே உங்கள் தேடுதல் சார்ந்து 423 தளங்களின் முகவரிகள் பட்டியலிடப்பட்டால் உங்களுக்கு 423 ஹிட்கள் திரும்ப வந்துள்ளன என்று பொருள். இதுதான் “ஹிட்” என்பதின் உண்மையான பொருள்.

கிரிக்கெட் பற்றிய தகவல்கள் அறிய உதவும் இணையதளம்

உலகில் எந்த மூலையில் கிரிக்கெட் போட்டி நடந்தாலும் உடனே அதனைப் பார்க்கும் அனைவரும் ஏதாவது ஒரு உலக சாதனை அங்கு நடைபெறாதா என ஏங்கு கின்றனர்.

ஏனெனில், அது நடந்தபோது தாங்கள் அதனைப் பார்த்துக்கொண்டிருந்தோம் என்பது முதல் திருப்தி.
அடுத்ததாக, அவரவருக்குப் பிரியமான கிரிக்கெட் வீரர் என்ன சாதனை புரியப்போகிறார் என்ற எதிர் பார்ப்பு.

அதுமட்டுமின்றி, கிரிக்கெட் என்றாலே மிகச் சாதாரணமான கேள்விகள் முதல் மிகவும் குழப்பமான நிலை குறித்த கேள்விகள் வரை எழுவது இயல்பும் எதிர் பார்ப்புமாகும். இந்த எதிர்பார்ப்பினை நிறைவு செய்துகொள்ள, ஒருவர் இதற்கு முன் ஏற்படுத்திய சாதனைகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் அல்லவா? அது மட்டுமின்றி, இன்று கிரிக்கெட் குறித்து அனைவரும் ஏதாவது தெரிந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லாத் தரப்பினரிடமும் இருக்கிறது.

விளையாட்டு தொடர்பான அலுவலர் பணிகளுக்குப் போட்டியிடுபவர்கள் இது , குறித்து நிச்சயம் அறிந்திருக்க வேண்டுமே. அந்த வகையில் கிரிக்கெ விளையாட்டினைப் பொறுத்த வரை நமக்கு உதவிடும் தளம் ஒன்றுhttp://howstat.com.au/cricket/home.asp என்ற முகவரியில் உள்ளது.
இதன் முகப்புப் பக்கத்தில், இன்றைக்கு உலக அளவில் நடக்கும் போட்டி குறித்த தகவல்கள், எதிர்பார்க்கும் சாதனைகள் ஆகியன குறித்த விபரங்கள் தரப்படுகின்றன. அத்துடன் இந்தத் தளம் ஒரு கிரிக்கெட் தகவல் களஞ்சியமாக உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் எந்த வகையில் தகவல் கேட்டாலும் அதற்கான அனைத்துத் தகவல்களும் இங்கே உள்ளன.

ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களின் விவர பட்டியலும் விரிவாக கிடைக்கிறது. நாடுகள் வாரியாக, அந்த அந்த நகரங்களில் உள்ள விளையாட்டு மைதானங்கள் வாரியாக, அனைத்து பிரிவு விளை யாட்டு வீரர்களின், பெட்டிங், போலிங் பிரி வுகளில் தனித்தனியாக, அவர்களின் விளையாட்டு வரலாறு, தலைமைப் பதவி ஏற்று விளையாடிவர்கள், விலக்கப்பட்ட வர்கள், 20/20 போட்டி, விக்கட் காப்பாளர்கள், உலகக்கோப்பைப் போட்டி என அனைத்து வகைக ளிலும் பிரித்து, பின் அவற்றிலும் தகவல்கள் வகைப்படுத்தப்பட்டு ள்ளன.

இந்த இணைய தளத்தில் மட்டும் தேடிப்பார்க்க ஸேர்ச் பொக்ஸ் தரப்பட்டுள்ளது. இந்தத் தளத்தின் சிறப்பு என்னவென்றால், அவ்வப்போது இது அப்டேட் செய்யப் படுவதுதான். மேலும் பலர் கிரிக்கெட் குறித்து எழுதிய திறனாய்வுக் கட்டுரைகளும் இதில் உள்ளன. நீங்களும் எழுதி அனுப்பினால் தரமிருந்தால் இந்த தளத் தில் பிரசுரிப்பார்கள். இந் தத் தளத்தினை தென் அவுஸ்திரேலியா வில் சில கிரிக்கெட் பிரியர்கள் நண்பர் குழுவாக 1990ஆம் ஆண்டில் தொடங்கியது. தங்களுக்குள் சில தகவல்கள் குறித்த பிரச்சினை ஏற்பட்ட போது, இதுபோன்ற தளம் இருந்தால் நல்லது என்று எண்ணி தொடங்கியுள்ளனர். கிரிக்கெட் குறித்த தகவல்களை அறிய வேண்டும் எனில் உடனே இந்த தளத்திற்கு செல்லலாம்.

மால்வேர் புரோக்கிராம்கள் : அன்றிலிருந்து இன்று வரை

அண்மையில் அருமையான ஓர் இணைய தளம் ஒன்றைப் பார்த்தேன். நம் கம்ப்யூட்டரையும் நம்மையும் பயமுறுத்தும் பாதுகாப்பு குறித்து நம்மை அப்டேட் செய்திடும் வகையில் அந்த தளம் செயல்படுவதனைக் கண்டு கொண்டேன்.

InternationalMalwareThreatCenter என அழைக்கப்படுகிறது. இது இணையச் செயல்பாட்டினை மானிட்டர் செய்திடும் ஒரு தளமாக இயங்குகிறது. இதில் கம்ப்யூட்டரை அவ்வப்போது அச்சுறுத்தும் மால்வேர் புரோகிராம்களைப் பற்றி விலாவாரியாகக் கூறுகிறது.

ஒவ்வொரு மோசமான மால்வேர் புரோகிராமும் எப்போது வந்தது; எந்த அளவில் மோசமானது; அதனை எதிர்க்கும் பணியினை யார் யார் மேற்கொண்டுள்ளார்கள்; அதனைத் தவிர்க்க என்ன செய்திடலாம் என்பது போன்ற தகவல்களை சரியான புள்ளி விபரங்களுடன் தருகிறது. எனவே ஏதேனும் ஒரு மால்வேர் குறித்து நீங்கள் சந்தேகப்பட்டு அது குறித்த தகவல்கள் வேண்டும் என்றால் உடனே இந்த தளத்தினை அணுகலாம். அந்த மால்வேர் புரோகிராமின் பெயரைக் குறிப்பிட்டு அது எங்கிருந்து வருகிறது என்ற தெளிவான தகவலைத் தருகிறது.

அத்துடன் குறிப்பிட்ட மால்வேர் புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டருக்குள் நெருங்கவிடாமல் இருக்க அது வரும் ஐ.பி. முகவரியினைத் தந்து அந்த முகவரியிலிருந்து எது வந்தாலும் அனுமதிக்காமல் செட் செய்திடும்படி கூறுகிறது. பிஷ்ஷிங் மற்றும் வேறு வகைகளில் உங்கள் கம்ப்யூட்டருக்குள் வரும் புரோகிராம்களை அனுப்புவோரின் பொதுவா ன டொமைன் பெயரையும் குறிப்பிடுகிறது.

இப்போது உலா வந்து கொண்டிருக்கும் மால்வேர் புரோகிராம்களைக் குறிப்பிட்டி இவற்றிற்கு எதிரான ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர்களை யார் தயாரித்து வழங்குகிறார்கள் என்ற தகவலும் இங்கு கிடைக்கிறது. இதனை அறிந்து கொண்டு அத்தகைய தளங்களுக்குச் செல்லாமல் இருக்கலாம் இல்லையா!

எனவே தங்கள் கம்ப்யூட்டர் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த தளம் அரிய தகவல்களைத் தரும் தளமாக உள்ளது.தடுக்கிறோமோ இல்லையோ கெடுதல் விளைவிப்பவர்கள் குறித்து அறிந்து கொள்வது நல்லதுதானே.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும் 

Web 3.0 டெக்னாலஜி

Web 3.0 டெக்னாலஜியாம் விரைவில் இணைய உலகை ஆளப்போகிறதாம். இதற்கு முன்னாடி அதாவது தற்போது Web 2.0 அதற்கு முன்னாடி Web 1.0 எனும் தொழில்நுட்பங்கள் இருக்கின்றனவாம், இருந்ததாம். இப்படி அள்ளி விட்டுக்கொண்டு Web 3.0 எனும் புதிய தொழில்நுட்பத்தை பற்றி கொள்கை ரீதியாக(theoritically) பேசிக்கொண்டிருக்கின்றது ஒரு கூட்டம். உண்மையில் Web 1.0, Web 2.0 என்ற தொழில்நுட்பங்கள் இருக்கின்றனவா என பார்த்தால் இவையெல்லாம் வியாபார உத்திகள் போன்றே தோன்றுகிறது. காரணம் தற்போது இணையம் பாவித்து கொண்டு இருப்பதாக சொல்லப்படும் Web 2.0 தொழில்நுட்பம் தனது தனித்துவமான இயல்புகளாலேயே அதாவது முக்கியமாக comments, feedback என்ற இரு இயல்புகளாலேயே அடையாளம் காணப்பட்டது. Web 2.0 கண்டுபிடிக்கபட்டதும் அதற்கு முன்னால் இருந்த தொழில்நுட்பம் அதாவது இணையத்தில் publishing only என்ற தொழில்நுட்பம் Web 1.0 என சொல்லப்பட்டது. எல்லாம் இணையத்தில் கொட்டிக்கிடக்கும் அல்லது கொட்டுவதற்கு தயாரக இருக்கும் பணத்துக்காகவே இந்த புதிய புதிய தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்புகள். ஒரு புதிய தொழில்நுட்பம் என்றவுடன் கையில் பெட்டியை வைத்துக்கொண்டு பலபேர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்காகவே இந்த Web 3.0.

இணையமானது இதுவரை இரு தொழில்நுட்பங்களை கண்டுள்ளது. நான் முன்பு சொன்னது போல் Web 1.0, Web 2.0 என்பன தான் அவை. இதில் Web 1.0 என்ன செய்ததென்றால் இணையத்தில் பதிக்க மட்டுமே வழி செய்தது அதாவது இணையத்தில் நீங்கள் தேடும் தகவல்கள் விதவிதமான தளங்களில் கொட்டிக்கிடக்கும் நீங்கள் அவற்றை தேடி படித்தீர்கள். அவை சரியா, தவறா என சொல்லக்கூட உங்களுக்கு வழி இருக்கவில்லை. அடுத்து வந்த Web 2.0 தொழில்நுட்பம் இந்த குறையை தீர்த்தது இப்போது நீங்கள் ஒரு தகவலை பார்த்தால் அதைப்பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றையும் சொல்கிறீர்கள். முன்பு இருந்த Web 1.0 ல் குறிப்பிட்ட காரை வாங்க வேண்டுமென்றால் அது தொடர்பான தளங்களை தேடி தேடி அந்த கார் உங்களது தேவையை தீர்க்குமா என்று தெரியாமலேயே வாங்க வேண்டியிருக்கும், ஆனால் Web 2.0 ல் உடனே facebook, Twitter போன்ற சமூக வலைதளங்களுக்கோ அல்லது வலைப்பூக்களுக்கோ செல்கிறீர்கள் அங்கே நீங்கள் இப்படி ஒரு காரை வாங்க விரும்புவதாக சொல்கிறீர்கள் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு தேவையான அந்த காரைப் பற்றிய சகல விடயங்களையும் டீடெய்லாக சொல்வார்கள். எப்படியான இடத்தில் எவ்வளவு பெற்றோல் குடிக்கும் என்பது வரையிலான தகவல்களை தெரிந்து கொண்டு நீங்கள் காரை வாங்கலாம். Web 2.0 வின் மிக மிக லேட்டஸ்ட்டான வடிவமே இந்த Facebook போன்ற சமூகவலைத்தளங்களும் tweetter ம். இந்த வடிவங்கள் நம்மை முழுதாக வந்தடையாத. அலுத்துவிடாத நிலையிலேயே அடுத்த இணைய தொழில்நுட்பத்தை பற்றிய பேச்சு அடிபடுகின்றது.

Web 3.0 ல் முக்கியமான இயல்பாக சொல்லப்படுவது அதன் intelligent ஆன தேடும் முறை தான். இந்த தொழில்நுட்பத்தில் அமைந்த இணையமானது உங்களது தனிப்பட்ட உதவியாளர் போன்று உங்களின் விருப்பு வெறுப்பு அறிந்து செயல்படும். Web 1.0 ல் இணையம் ஒரு நூலகம் மாதிரி உங்களுக்கு தேவையான தகவலை நீங்களே தேடி எடுத்து கொள்ள வேண்டும். Web 2.0 ல் இணையம் உங்களது நண்பர் கூட்டம் போன்றது உங்களுக்கு தேவையான தகவலை உங்களுக்கு தேவையான வடிவத்தில் நண்பர்கள் தேடி தருவார்கள். Web 3.0 ல் இணையமே உங்களுக்கு தேவையான தகவலை தேடி எடுத்து தரும். Web 3.0 கால இணையம் SEMANTIC WEB என சொல்லப்படுகிறது. இது முழுக்க முழுக்க metadata எனப்படும் தகவல்களின் தகவல்களால் ஆனது. உதாரணமாக ஒரு கைக்குட்டையை பார்க்கிறீர்கள் அது நீங்கள் உங்கள் காதலிக்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை போன்ற ஒன்று அதை பார்த்ததும் உங்களுக்கு உங்களின் காதலியின் ஞாபகம் வரலாம் உடனே நேற்று காதலிக்கு தெரியாமல் கடலை போட்ட காதலியின் நண்பியின் ஞாபகமும் வரலாம் நீங்களும் அந்த கைக்குட்டையை படமெடுத்து facebook ல் போட்டு உங்கள் காதலியின் பெயரை tag ம் பண்ணுகிறீர்கள். அதே போல்தான் இணையமும், இப்போ உங்கள் காதலி உங்களை அல்லது உங்கள் Facebook profile ஐ இணையத்தில் தேடினால் உங்கள் facebook profilம் அந்த கைக்குட்டை படமும் காதலியின் நண்பியின் facebook profile ம் முடிவாக வரலாம். உங்களுக்கு பிடித்த, தேவையான தகவல்களை மட்டுமே தந்து நேரத்தை மீதப்படுத்துவதே Web 3.0 இன் முக்கியமான நோக்கம். உங்களது தொடர்ச்சியான இணைய தேடல்களின் மூலம் இணையம் உங்களை பற்றி அறிந்துக் கொள்ளும். RSS எனப்படும் இணைய செயலி மூலமாக இப்போது உங்களுக்கு பிடித்த தளங்களில் இருந்து புதிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகிறது இதே RSS, Web 3.0 ல் உங்களுக்கு பிடித்த தளத்தில் உங்களுக்கு பிடித்த தேவையான தகவலை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கும். உங்களது தொடர்ச்சியான இணைய தேடல் இதை சாத்தியமாக்கும்.

ஒருவரின் Search history ஐ கொண்டு அவரை பற்றியே தெரிந்து கொள்ளும் இந்த தொழில்நுட்பம் பாவனைக்கு வந்தால் எதிர்காலத்தில் திருமண பொருத்தங்கள், வேலைக்கு ஆள் தேடுதல் என்பன இணையத்திலேயே முடிந்துவிடும் அதே நேரம் நீங்கள் ஷகிலாவை பற்றி தேடியிருந்தால் அதுவும் உங்களை பற்றிய தகவலாக, நீங்கள் ஷகிலா ரசிகர் என்று தேடலில் தெரிவிக்கப்படும். முழுக்க முழுக்க Web 1.0 போன்று தகவல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் இந்த தொழில்நுட்பத்தை பற்றிய பேச்சுகள் ஆரம்பித்திருக்கும் நிலையில் இப்போதே Web 4.0 க்கான குறிசொல்லல்கள் தொடங்கிவிட்டன. அதாவது Web 1.0 தகவல்களுக்கு முக்கியத்துவம் வழங்கியனிலையில் Web 2.0 ஆனது தகவல்களை சிறப்பாக பெற்றுக்கொள்ளும் web applications களுக்கு வழிசமைத்தது தற்போது Web 3.0 ஆனது தகவல்களை சிறப்பன வடிவத்தில் சேமிக்கவும் பெற்றுக்கொள்ளவும் உதவும் என சொல்லப்படும் நிலையில் Web 4.0 ஆனது தற்போது இருக்கும் Facebook, Tweetter தளங்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை தரும் என சொல்லப்படுகிறது. ஆனால் இப்பொது கொள்கை அளவிலேயே இருக்கும் இத்தொழில்நுட்பம் வருவதற்கு கொஞ்ச காலம் ஆகும் போலத்தான் தெரிகிறது.

பாப் அப் ( Pop-Up )விளம்பரங்களைத் தடுப்பது எப்படி ?
ஆர்வத்துடனும் தேடும் நோக்கத்துடனும் நாம் இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் நமக்கு எரிச்சல் ஊட்டும் வகையில் விளம்பரங்கள் திடீர் திடீரென தலை தூக்கி அது வேண்டுமா? இது வேண்டுமா? எனக் கேட்டு நம் ஆப்ஷனையும் கேட்டு தொல்லை கொடுக்கும். ஆரம்பத்தில் இவை வரத் தொடங்கிய போது தகவல்களுடன் நாம் இவற்றையும் ரசித்தோம். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இந்த விளம்பரங்கள் அதிக எண்ணிக்கையில் வருகையில் இணைய தொடர்பை மூடிவிடும் உச்ச நிலை வரை சென்று வந்தோம்.

இதற்காகவே பல பிரவுசர்களில் இந்த பாப் அப் விளம்பரங்களைத் தடுக்கும் டூல்கள் தரப்பட்டுள்ளன. இன்றைய நிலையில் இவற்றைத் தடுக்கும் வகையில் நமக்கு என்ன என்ன வசதிகள் உள்ளன என்று காணலாம்.

1. விண்டோஸ் + சர்வீஸ் பேக் 2+ இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 

இந்த மூன்றின் இணைப்பில் விளம்பரங்களைத் தடுக்க வசதி தரப்பட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிலேயே தடை செய்திடும் டூல் தரப்பட்டுள்ளது. இதனை எளிதாக செட் செய்திடலாம். Tools மெனு சென்று மீது popup blocker கிளிக் செய்து பாப் அப் பிளாக்கர் எப்படி செயல்பட வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். சில தளங்கள் தரும் விளம்பரங்கள் மற்றும் பிற தகவல்களை நாம் விரும்பலாம். அதற்கேற்ற வகையில் popup blocker கிளிக் செய்து கிடைக்கும் டயலாக் பாக்ஸில் நம் விருப்பம் போல எந்த தளங்களுக்கான தடைகளை நீக்கலாம் என்பதனையும் செட் செய்திடலாம். இது சர்வீஸ் பேக் 2 நீங்கள் உங்கள் சிஸ்டத்தில் டவுண்லோட் செய்து இயக்கி இருந்தால் மட்டுமே கிடைக்கும். இந்த சர்வீஸ் பேக் தரும் அருமையான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வசதி இதுவாகும்.

2. வேறு பிரவுசர்கள் 

இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் சர்வீஸ் பேக் 2 மூலமாக மைக்ரோசாப்ட் நிறுவனம் பாப் அப் பிளாக்கர் டூலினைத் தருவதற்கு முன்பே பல பிரவுசர்களில் பாப் அப் பிளாக்கர்கள் தரப்பட்டன. எனவே அந்த பிரவுசர்களையும் நீங்கள் பயன்படுத்தலாம். இந்த வகையில் அதிகம் புகழப் பெற்ற மொஸில்லாவின் பயர்பாக்ஸ் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பயர்பாக்ஸ் வெளிவந்த போது இதன் பல புதிய வசதிகளுக்காக பலரின் பாராட்டைப் பெற்றது. பாப் அப் பிளாக்கர், டேப் பிரவுசிங் ஆகியவை மிக அதிகமாகப் பேசப்பட்டன. அவற்றின் செயல்பாடும் நிறைவைத் தருகின்றன. 2002 ஆம் ஆண்டு வெளியான கிரேஸி பிரவுசர் (Crazy Browser) தொகுப்பும் திறமையாகச் செயல்படும் பாப் அப் பிளாக்கரைக் கொண்டுள்ளது. இதிலும் இந்த டூல் மிகத் திறமையாகச் செயல்படுகிறது.

3. பிரவுசர் டூல்பார் 

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்புடன் இணைந்து செயல்படும் வகையில் பல டூல் பார்களைத் தருவது இன்றைய இணைய தளங்களின் ஒரு செயலாக உள்ளது. அந்த வகையில் பல தளங்களில் பாப் அப் பிளாக்கர்கள் கிடைக்கின்றன. கூகுள், எம்.எஸ்.என். மற்றும் யாஹூ இவற்றில் குறிப்பிடத்தக்கன. இவற்றை எளிதாக இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் இணைத்துவிடலாம்.

இவற்றை இணைக்கையில் இந்த தளங்கள் லைசன்ஸ் ஒப்பந்தம் என்று சொல்லி நீளமான ஒரு டாகுமெண்ட் ஒன்றைத் தருவார்கள். அதனைச் சிரமப்பட்டுத்தான் படிக்க வேண்டும். படித்த பின் கண் டாக்டரிடம் நிச்சயம் செல்ல வேண்டும். அவ்வளவு சிறிய அளவிலான எழுத்துக்களில் இவை இருக்கும்.இவை விளம்பரங்களைத் தடுப்பதில் சிறப்பாகச் செயல்பட்டாலும் இன்னொரு சின்ன பிரச்சினை உள்ளது. இந்த டூல்பார்கள் உங்களின் இணையத் தேடல் குறித்த தகவல்களைச் சேர்த்துக் கொண்டே இருக்கும். மேலும் உங்கள் பெர்சனல் தகவல்களையும் எடுத்து தனக்குப் பயன்பட வைத்துக் கொள்ளும். இந்த விபரங்கள் தான் அந்த லைசன்ஸ் ஒப்பந்தத்தில் இருக்கும். பரவாயில்லை என்றால் இந்த டூல்களை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.

4. பாப் அப் பிளாக்கர் சாப்ட்வேர் 

பல சாப்ட்வேர் நிறுவனங்கள் கூடுதல் வசதிகள் பலவற்றுடன் பாப் அப் பிளாக்கர் சாப்ட்வேர் புரோகிராம்களைத் தயாரித்து இணையம் வழியே விற்பனை செய்கின்றன. குறிப்பிட்ட காலத்திற்கு, ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள், இவற்றை இலவசமாகப் பயன்படுத்தும் உரிமையும் வழங்கப்படும். எனவே இவற்றைக் கட்டணம் செலுத்தி வாங்காவிட்டாலும் இலவச காலத்தில் பயன்படுத்தி இவற்றின் தன்மையைப் பார்க்கலாம்.

5. இணைய சேவை நிறுவனம் தரும் வசதிகள் 

இன்டர்நெட் சர்வீஸ் வழங்கும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவும் கூடுதல் கட்டணம் பெற்றும் இத்தகைய பாப் அப் பிளாக்கர் புரோகிராம்களைத் தருகின்றன. இவற்றையும் பயன்படுத்தலாம். இவ்வாறு தடைகளை ஏற்படுத்திய பின்னர் குறிப்பிட்ட தளங்களைப் பார்க்கையில் அவை தரும் பாப் அப் விண்டோவினை அப்போது மட்டும் பார்க்க வேண்டும் என விரும்பினால் அதற்கும் பிரவுசர்களில் வசதி தரப்படுகிறது. சில பிரவுசர்கள் இந்த தளம் ஒரு பாப் அப் விண்டோவினைத் தருகிறது. அதனை அனுமதிக்கவா? என்று கேள்வி எழுப்பும். பார்க்க விரும்பினால் அப்போதைக்கு மட்டும் அனுமதிக்கலாம்.


Change the text in Internet Explorers title bar to anything

Change the text in Internet Explorers title bar to anything you want

In regedit navigate to this key:

HKEY_CURRENT_USERSoftwareMicrosoftInternet ExplorerMain

change the value of the string "Window Title" to whatever you want on the title bar of Internet Explorer - to have no title except the title of the web pages you are browsing do not enter anything for a value.


http VS https
The main difference between http:// and https:// is, It's all about keeping you secure

HTTP stands for HyperText Transport Protocol, which is just a fancy way of saying it's a protocol (a language, in a manner of speaking) for information to be passed back and forth between web servers and clients.

The important thing is the letter S which makes the difference between HTTP and HTTPS.

The S (big surprise) stands for "Secure".
If you visit a website or webpage, and look at the address in the web browser, it will likely begin with the following: http://.

This means that the website is talking to your browser using the regular 'unsecure' language.

In other words, it is possible for someone to "eavesdrop" on your computer's conversation with the website.

If you fill out a form on the website, someone might see the information you send to that site.

This is why you never ever ever enter your credit card number in an http website!

But if the web address begins with https://, that basically means your computer is talking to the website in a secure code that no one can eavesdrop on.

You understand why this is so important, right?

If a website ever asks you to enter your credit card information, you should automatically look to see if the web address begins with https://.

If it doesn't, there's no way you're going to enter sensitive information like a credit card number!


இணையத்தில் உள்ள எழுத்துக்கள் எந்த மொழியைச் சார்ந்தது என்று கண்டறிய

எழுத்தை வைத்து அது என்ன மொழி என்பதனை கண்டறிய பினவரும் இணைய தளங்களை நாடவும்.

1. கூகுளின் மொழி கண்டறியும் பக்கம் :http://www.google.com/uds/samples/language/detect.html மொழி கண்டறிய வேண்டிய வார்த்தைகளை தேடல் கட்டத்தில் பேஸ்ட் செய்து Detect Language என்பதனை கிளிக் செய்தால் அது எந்த மொழி என்பதனை கண்டறிந்து உங்களுக்கு தெரியப்ப்டுத்தும். அதிகமான வார்த்தைகளை பேஸ்ட் செய்யும் போது முடிவு துல்லியமாக கிடைக்கும்.

2. What Language is this? : http://www.whatlanguageisthis.com/ இந்த இணையதளமும் மேலே சொன்ன வேலையை செய்யும்


Portable TheWorld Browser 2.4.0.4


TheWorld Browser provides a fast, safe, and easy way to browse the Web. It will revolutionize your internet experience with many useful features that other browsers don't provide. Give it a try, we guarantee our browser is 100% malware free. 

TheWorld Browser is a tiny, fast, yet free, secure and powerful web browser. It features a tabbed interface with multi-threaded frame browser.

TheWorld Browser uses the Microsoft Internet Explorer engine. We currently support Windows 98/me/2000/xp/Vista.

Download:
http://uploading.com/files/FFBDE7OS/PortTW2404.rar.html


Portable Internet Privacy Eraser 1.5


Internet Privacy Eraser allows you to erase all traces of your Internet and computer activities, including browser cache, cookies, visited websites, typed URLs, recent documents, index.dat files and more. It supports dozens of 3rd party applications, such as playlist of Realplayer, recent files of Microsoft Office, search history of Google Toolbar etc. You can set up it to delete files completely to protect them from being recovered by others.

Key Features:

*

Remove the tracks of your activities completely

1.Windows Item
Erase Windows recent documents history
Erase Start Menu -- Run/Find history
Erase the files in Window recycle bin
Erase Windows temporary files directory
Erase clipboard
Erase memory dumps
Erase chkdsk file fragments
Erase Windows log files
Erase menu order cache
Erase open/save dialog history
Erase tray notifications cache
Erase user assist history
Erase MediaPlayer/Real Player history
Erase Paint history
Erase Microsoft Office
Erase Instant Messengers, Support MSN Messenger, Yahoo! Messenger, ICQ, AOL Instant Messenger, Skype

2.Browser Items (Internet Explorer/Netscape/Firefox/Opera)
Erase cache files (Temporary Internet Files)
Erase Internet cookies
Erase visited URL history
Erase recently typed URLs
Erase IE index.dat files
Erase last download location
Erase AutoComplete history
Erase preferences.

3.Plugin support
With the support for plug-ins, Internet Privacy Eraser can easily erase the tracks of the popular applications. Removing these stored activities will further help protect your privacy. We currently offer more than 100 plug-ins which supports the most popular programs such as ACDSee, Acrobat, KaZaA Media Desktop, Morpheus, Winzip, WinRAR, PowerDVD, and much more.

4.Custom Items
Custom Items allow you to add, and edit the Custom Item, with which you can erase file(s), folder or registry entry(s) that you want to erase.

*

Smart Cookie Saver
Cookies Manager enables you to decide which cookies to keep and which to erase. This is useful as some of these files keep information that helps you browse more easily sites that you often use and trust.
*

Schedule Mode
You can start a clean on windows startup/shutdown, or browser's shutdown, and even a specified interval based on your choose.
*

Secure Delete
Internet Privacy Eraser can completely overwrite files with random characters up to 10 times. So they cannot be easily recovered.
*

Boss key
Immediately hide all web browser windows with the press of a Key when someone you don't want to see your files walks in.
*

Speed up your computer
By cleaning your temp files, cached files, free up your hard drive space, Internet Privacy Eraser can speed up your surfing experience and computer speed.


Download


ஆச்சர்யம் ஆனால் உண்மை

இந்த வெப்சைட் அதிசயமாக வடிவமைக்கப்பட்டுள்ளது 
இந்த லிங்க்கில் இருக்கும் Airbus A380 யை முன்னும் பின்னும் இடது, மேல், கீழ் 
என்று திருப்பி திருப்பி பார்க்கலாம். நிச்சயம் ஒரு முறை சென்று பாருங்கள்.
 



வலை விரிக்கும் "வலை'


"ஆர்குட்' என்றால் என்னவென்று உங்க ளுக்குத் தெரியுமா? தெரியாமல் இருந்திருந் தால், நீங்கள் இளைஞராக இருக்க முடியாது; அல்லது உங்களுக்கு இணையத்தைப் பற்றி "ஒன்றும்' தெரியாது. ஆனால் வருங்காலத் தில் இதைப் பற்றித் தெரியாது என்றெல்லாம் யாரும் சொல்ல முடியாது. தெரியாமல் போனால் உங்கள் குழந்தைகள் சமூக அக்க றையற்றவர்களாகவும் குற்றவாளிகளாவும் மன நோயாளிகளாகவும் மாறுவதற்கு வாய்ப் பிருக்கிறது 
இந்தியாவில் இணையத்தில் உலவும் அனைவருக்கும் தனிமையைப் போக்கும் துணைவனாக இருப்பது ஆர்குட்தான். இது சமூக வலைத்தளம் என்ற பெயரில் வைக்கப் பட்டிருக்கும் பொறி; இளைஞர்களையும் குழந்தைகளையும் பிடிப்பதற்காக விரிக்கப் பட்டிருக்கும் வலை 
யாகூ, கூகிள் போன்ற வலை தளங்கள் "குரூப்' என்ற வசதியை உருவாக்கி ஒரே தொழில் செய்வோர், ஒரே படிப்பை படிப் போர் ஆகியவை ஒருங்கிணைக்க உதவியது 
இந்தியாவைப் பொருத்தவரை, "ரோஸ் மேல் நிலைப்பள்ளி -1999 பேட்ச்' என்பது போல 10 ஆண்டுகளுக்கு முன்பே "யாகூ குரூப்'பில் மாணவர்கள் தங்களைப் பதிவு செய்து கொண்டிருந்தார்கள் 
உலகமெங்கும் இருக்கும் மக்கள் நட்பு றவை ஏற்படுத்திக் கொள்வதற்காகத் தொடங் கப்பட்டவைதான் சமூக வலை தளங்கள் 
மைஸ்பேஸ், ஃபேஸ்புக் ஆகிய வலை தளங் கள் முன்னணியில் உள்ள சமூக வலை தளங் கள். இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் ஆர்குட் வலை தளத்துக்கு மவுசு அதிகம் 
இதில் இணைத்துக் கொள்வதற்குக் கட்ட ணம் ஏதும் இல்லை. சில வலைத் தளங்கள் குறைந்தபட்ச வயதை நிர்ணயம் செய்திருக் கின்றன. ஆனால் அதையெல் லாம் யாரும் கண்டுகொள்வ தில்லை 
தெருவில் நீங்கள் சென்று கொண்டிருக் கும்போது, தெரியாத நபர் யாராவது உங் களை நிறுத்தி, உங்களைப் பற்றிய விவரங்க ளைக் கேட்டால், உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றைச் சொல்லி, உங்களது புகைப்படத்தையும் தருவீர்களா? மாட்டீர்கள் 
ஆனால், சமூக வலை தளங்களில் டைரி யைப் புத்தகமாக அச்சிட்டு வெளியிடுவது போல உலகத்தில் யார் வேண்டுமானாலும் பார்க்கும்படியாக தங்களது ஜாதகத்தையே பதிவு செய்து கொள்கிறார்கள். விவரங்களை மறைப்பதற்கு வசதி இருந்தாலும், அவை முழுமையாகப் பலனளிப்பதில்லை. என்ன செய்கிறோம் என்று உணராமலேயே இளை ஞர்களும் குழந்தைகளும் தங்களது முழு விவ ரத்தையும் இந்த வலை தளங்களில் உலவிக் கொண்டுதான் இருக்கிறார்கள் 
ஒத்த கருத்துடையவர்களை இணைக்கும் பாலமாகவும், விமர்சனங்களைப் பகிர்ந்து கொள்ளும் கூடமாகவும், வர்த்தகர்கள் தங்க ளது பொருள்களை விற்கும் சந்தையாகவும் இந்த சமூக வலை தளங்கள் பயன்படுகின்றன. அவற்றின் நோக்கமும் அதுதான் 
ஆனால், இவற்றைப் பயன்படுத்துவோரில் பலர் குற்றங்களைச் செய்வதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள் 
போதை மருந்து விற்பனை, தீவிரவாதம், விப சாரம், சமூகத்துக்குப் பொருந்தாத உறவுகள் என எல்லாமே இதில் பிரபலம் 
இளம் பெண்கள், இளைஞர்கள், 10 முதல் 18 வயதுக்குள்பட்ட மாணவர்கள் ஆகியோர் தான் இந்த வலை தளங்களை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இவர்களது முக்கிய வேலை, எதிர் பாலினத்தைச் சேர்ந்த நட்பைத் தேடுவது 
எங்கோ இருக்கும் இருவர் வலை தளம் மூலமாகவே சந்திக்கின்றனர்; தங்களது கருத் தையும் இன்ன பிறவற்றையும் பகிர்ந்து கொள் கின்றனர். சிக்கல் இங்குதான் தொடங்குகி றது. வலை தளங்களில் உலவுவோர் அனைவ ருமே நல்லவர்கள் அல்ல என்பதால் தூய நட்பை மட்டுமே தேடிய பலர் இறுதியில் நிம் மதியைத் தொலைக்கின்றனர் 
பணிபுரியும் இடங்களிலும் ஆர்குட் போன்ற வலை தளங்களால் பிரச்னைதான் 
அலுவலகக் கணினியில் இதுமாதிரியான வலை தளங்களில் உலவியதால் பலர் வேலை யிழந்திருக்கிறார்கள். பணியாளர்கள் பார்க்க முடியாதபடி இதுபோன்ற வலை தளங்களை பல நிறுவனங்கள் தடை செய்திருந்தாலும், கில்லாடிகள் பலர் தங்களது அறிவைக் கொண்டு அந்தத் தடைகளை உடைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர் 
சமூக வலை தளங்களால் குழந்தைகள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவதாக பிரிட்டனில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள் ளது. இந்தத் தளங்களிடமிருந்து குழந்தைக ளைப் பாதுகாப்பதற்காக அங்கு பிரத்யேக ஆலோசனைக் கூட்டங்கள்கூட நடத்தப் பட்டு வருகின்றன 
இணையமே நமக்கு வேண்டாம் என ஒதுங் கியும் இருந்துவிட முடியாது. இன்றைய உல கப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு இணையம்தான். ஒரு நாட்டில் ஓரிரு நாள் கள் இணையம் துண்டிக்கப்பட்டால்கூட பல ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்படும். தனி மனித வேலைவாய்ப்புக்கும் இணைய அறிவு இப்போது அவசியமாகியிருக்கிறது 
செய்ய வேண்டியது இதுதான். எனது குழந்தை கணினியில் படுசுட்டி என்று மற்ற வர்களிடம் தம்பட்டம் அடித்துக் கொள்வது டன் இருந்துவிடாமல், இணையத்தில் குழந் தைகள் எந்த மாதிரியான தகவல்களைப் பார்க்கிறார்கள்? சமூக வலை தளங்களில் பதிவு செய்திருக்கிறார்களா? அப்படிப் பதிவு செய்திருந்தால் என்னென்ன தகவல்களை யெல்லாம் தந்திருக்கிறார்கள்? எந்த மாதிரி யான விஷயங்களுக்கு சமூக வலை தளங்க ளைப் பயன்படுத்துகிறார்கள்? என்பதை யெல்லாம் கண்காணிக்க வேண்டியது பெற் றோரின் கடமை. தவறினால், வீடு தேடி கேடு வரும், அழைப்பில்லாமல். 
தினமணி


வெப்பேஜ் சேவ் செய்வது எப்படி?

பல நேரங்களில் இன்டர்நெட்டில் பிரவுசிங் செய்கையில் சில
பக்க வடிவமைப்புகள் நம்மை அப்படியே அந்த பக்கத்தினை சேவ்
செய்திடும்படி தூண்டும். தகவலைத் தேடும் நாம் பொதுவாக
தகவல்களை அப்படியே ஹைலைட் செய்து பின் வேர்ட் அல்லது
ஏதேனும் வேர்ட் பிராசசரில் ஒட்டி சேவ் செய்திடுவோம். ஆனால்
பலமுறை வெப் பேஜ் அப்படியே வேண்டும் என எண்ணினாலும்
மீண்டும் அவை அப்படியே கிடைக்குமா? 


தேவைப்படும்போது சேவ் செய்த பக்கத்தினைப் பார்க்க இன்டர்நெட் இணைப்பு தேவைப்படுமா என்ற சந்தேகம் எல்லாம் வரும். இதற்கான தீர்வினைப் பார்ப்போமா?

முதலில் இன்டர்நெட் இணைப்பு பெற்று நீங்கள் விரும்பும்
அந்த வெப் பக்கத்தைத் திறக்கவும். அதன்பின்
File 
மெனு செல்லவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் இன்றைய தொகுப்பு 7ல்
இவை முன்பு போல தெரியாது. View மெனு சென்று அதில்
கிடைக்கும் டூல்ஸ்பாரில், Menu பார் என்பதனை டிக் அடித்து
தேர்ந்தெடுத்தால் மெனு பார் கிடைக்கும். இது தொடர்ந்து
நீங்கள் திறக்கும்போதெல்லாம் கிடைக்கும். அப்போதைக்கு
மட்டும் வேண்டும் என்றால் Alt கீயை அழுத்தினால் போதும்.


இனி நம் விஷயத்திற்கு வருவோம். File மெனு கிடைத்தவுடன் அதில் Save as
தேர்ந்தெடுக்கவும். அதன்பின் எந்த போல்டரில் சேவ் செய்ய விரும்புகிறீர்களோ அந்த போல்டரைத் தேர்ந்தெடுத்து சேவ் பட்டனைத் தட்டினால் வெப் பேஜ் சேவ் ஆகும். வழக்கமாக இது HTMLபார்மட்டில் தான் சேவ் ஆகும். இந்த பார்மட்டில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வெப் பேஜின் அனைத்து கிராபிக்ஸ்களும் சேர்ந்து ஒரு போல்டரில் காப்பி
ஆகும்.


இன்னொரு பார்மட்டிலும் வெப் பக்கத்தை சேவ் செய்திடலாம்.
அப்படியே அதனை ஒரு ஆர்க்கிவ் ஆக சேவ் செய்டு வைக்கலாம்.
இதனை *mht என்று சொல்வார்கள். Multipurpose Internet Mail Extension HTMLஎன்பது இதன் பொருள். இது ஒரு ஸிப் பைலாக சேவ் செய்யப்படும்.
இது வெப் பேஜின் அனைத்து கிராபிக்ஸ்களையும் ஒரு பக்கத்தில்
சேவ் செய்கிறது. நீங்கள் HTML குறியீட்டினைப் பயன்படுத்த
விரும்பவில்லை என்றால் இந்த பார்மட் மிகவும் நல்லது.
ஏனென்றால் வெப் பேஜ் சார்ந்த அனைத்தும் ஒரு பைலில் காப்பி
ஆகிவிடும்.

*.htm, *.html பார்மட்டில் இணைய பக்கத்தின்
எச்.டி.எம்.எல். பகுதி மட்டும் சேவ் ஆகும். இதன் மூலம்
கிராபிக்ஸ் எதுவுமின்றி ஒரு வெப் பக்கத்தினை சேவ்
செய்திடலாம். அடுத்த முறை கிராபிக்ஸ் இல்லாமல் சேவ் செய்த
வெப் பேஜைத் திறக்கையில் கொஞ்சம் படிக்க சிரமமாகத் தெரியும்.
ஏனென்றால் கிராபிக்ஸ் தான் ஒரு வெப் பேஜை கட்டுக் கோப்பாக
வைக்கின்றன.
வெப் பேஜ் ஒன்றை ஒரு டெக்ஸ்ட் பைலாகவும் சேவ் செய்திடலாம்.
இதற்கான வசதி *.txt என்பதைத் தேர்ந்தெடுத்தால் கிடைக்கும்.
இணையப் பக்கத்தில் உள்ள டெக்ஸ்ட் மட்டும் சேவ் செய்யப் பட
வேண்டும், படங்கள் வேண்டாம் என எண்ணுகிறவர்கள் இந்த
வசதியைத் தேர்ந்தெடுக்கலாம். இவ்வாறு சேவ் செய்த பைலை எந்த
நேரத்திலும் அந்த போல்டரைத் திறந்து பார்க்கலாம்.

பிராட் பேண்ட் ஸ்பீட் டெஸ்ட்
டயல் அப் வழி இன்டர்நெட் இணைப்பு சிறிது சிறிதாக
மறைந்து வருகிறது. பிராட்பேண்ட் இணைப்பு உலக அளவில்
இந்தியாவில் குறைவு என்றாலும் அதுவும் வேகமாக வளர்ந்து
வருகிறது. பிராட் பேண்ட் இணைப்பிற்கு மாறிய பலர் நம்
இன்டர்நெட் நிறுவனங்கள் தரும் இணைப்பின் வேகம் சரியானது
தானா என்று சந்தேகப்படத் தொடங்கிவிட்டனர். 


ஏனென்றால் ஜவுளிக்கடை தள்ளுபடியில்
upto 50%, conditions apply, still stocks last 
என்றெல்லாம் போடுவது போல இன்டர்நெட் இணைப்பு
வேகத்தினை அனைத்து நிறுவனங்களும் 
upto 2mbps
 
என்றுதான்
விளம்பரப்படுத்துகின்றன. அதன்பின் டவுண் லோடிங் ஸ்பீட்
அதிகம், அப்லோடிங் ஸ்பீட் சற்று கம்மி என்று இன்டர்நெட்
நிறுவன டெக்னீஷியன்கள் கூறுகிறார்கள். சில நிறுவனங்களோ
இந்த இரண்டும் சேர்த்துத்தான் 2mbps எனக் கூறுகின்றனர்.
எது எப்படியோ! நாம் வாங்கிய பிராட் பேண்ட் இன்டர்நெட்
இணைப்பின் வேகம் எவ்வளவு என்று பார்த்துத் தெரிந்து
கொள்வதுதான் சிறந்தது. அதற்கான வழிகளைப் பார்ப்போம்.


வேகத்தைக் கண்டறிய பல வழிகளில் செயல்படலாம். நம்
கம்ப்யூட்டர் சிஸ்டத்திலேயே இதற்கான வழிகள் உள்ளன. ஏதேனும்
ஒரு பைலை டவுண்லோட் செய்திடுகையில் பைல் அளவு என்ன, எவ்வளவு
வேகத்தில் தகவல்கள் இறங்குகின்றன; இன்னும் எவ்வளவு
நேரத்தில் டவுண்லோட் ஆகும் என்றெல்லாம் தகவல்கள்
கிடைக்கின்றன. ஆனால் இது துல்லியமானதுதானா என்று
உறுதியிட்டுச் சொல்ல முடியாது. சில இன்டர்நெட் நிறுவனங்கள்
வேகத்தை அளப்பதற்கு என்று ஒரு சில புரோகிராம்களை இன்ஸ்டால்
செய்துவிட்டு பார்த்துக் கொள்ளுங்கள் என்று காட்டுகிறார்கள்.
இது கூட முதல் ஆறு மாதத்திற்கு மட்டுமே. எனவே நாம் நம்
இணைப்பின் வேகத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்றால்
இன்டர்நெட்டில் தான் அதற்கான புரோகிராம்களைத் தேட
வேண்டியுள்ளது. இதற்கான பல தளங்கள் உள்ளன. இவை ஸ்பீட்
டெஸ்ட் செய்து வேகத்தை உறுதியாக இவ்வளவுதான் என்று
காட்டுகின்றன. இந்த தளங்களில் இயங்கும் வேக மானிகளில்
சிலவற்றைப் பார்த்து பயன்படுத்தி பின்னால் எது உங்களுக்குச்
சரியாக இருக்கும் என்று பார்த்து பயன்படுத்தலாம்.


இந்த ஸ்பீட் டெஸ்ட் தரும் தளங்களைக் காண கூகுள் அல்லது வேறு
சர்ச் இஞ்சின்களில் தேடலாம். பல தளங்கள் காட்டப்படும்.
இவற்றில் ஒன்றைக் கிளிக் செய்தால் நம் இணைய இணைப்பின் வேகம்
காட்டப்படும். சில தளங்கள் நல்ல ஸ்பீடா மோட்டார் போல
வேகத்தைக் காட்டுகின்றன. ஏதேனும் ஒரு ஸ்பீட் இஞ்சின் மூலம்
வேகத்தைப் பார்த்துக் குறித்துக் கொண்டு பின் வேறு ஒரு
இஞ்சின் வேறு ஒரு நேரம் பார்த்து மறுபடியும் ஸ்பீட் டெஸ்ட்
மேற்கொள்ளலாம். ஏனென்றால் சில இன்டர்நெட் டிராபிக்
நெருக்கடியான நிலையில் நிச்சயம் ஸ்பீட் குறைவாகத்தான்
இருக்கும். மேலும் இவை வேறுபட்டு இருக்கும். ஒரே
தளத்திலிருந்து ஒரே பைலை டவுண்லோட் செய்து ஒப்பிட்டுப்
பார்த்தால் தான் தெரியவரும்.


இவ்வளவிற்குப் பின்னும் நமக்கு ஒரு கேள்வி மனதில்
உதிக்கலாம். ஏன் ஸ்பீடைச் சோதிக்க வேண்டும்? என்பதே அது.
முதலாவதாக நம் கம்ப்யூட்டர் இன்டர்நெட் ஸ்பீட் எப்போது
அதிக வேகமாக இயங்குகிறது என்று பார்க்கலாம். இந்த
நேரங்களைக் குறித்து வைத்துக் கொண்டு அந்த நேரங்களில்
பெரிய பைல்களை டவுண்லோட் செய்து கொள்ளலாம். அல்லது இறங்கும்
நேரத்தில் கூடுதலான சில வேலைகளைக் கம்ப்யூட்டரில்
மேற்கொள்ளலாம். இன்னொன்றையும் மனதில் கொள்ள வேண்டும். ஒரு
சில வேளைகளில் நமக்குக் கிடைக்கும் ஸ்பீட் டெஸ்ட்
முடிவுகளைக் காட்டிலும் அதிக வேகத்தில் கூட நம் இன்டர்நெட்
ஸ்பீட் இருக்கலாம்.

வெப்மைண்ட்
நாம் பயன்படுத்தும் பிரவுசர்கள் இன்டர்நெட்டில் நாம் பார்க்கும் வெப்சைட்களின் முகவரிகளைப் பட்டியல் இட்டு பிரவுசிங் ஹிஸ்டரி என்ற பெயரில் போட்டு வைக்கிறது. இதனால் நாம் அந்த பட்டியலுக்குச் சென்று குறிப்பிட்ட வெப்சைட் வேண்டும் என்றால் அதில் கிளிக் செய்து பெறமுடிகிறது.


ஆனால் ஒரே தளத்தின் பல பிரிவுகளில் செல்கையில் இணைய
தள முகவரியில் ஓரிரு மாற்றங்கள் மட்டுமே ஏற்படுத்தப்படுவதால் எந்த முகவரியில் எதைப் பார்த்தோம் என்ற சிறிய குழப்பம் ஏற்படுகிறது. இதனால் நாம் தேவையற்ற வகையில் அனைத்தையும் திறந்து பார்த்து மூட
வேண்டியுள்ளது. இதற்குப் பதிலாக நாம் பார்த்த ஒவ்வொரு இணைய தளமும் சிறிய படங்களாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதைத்தான் வெப் மைண்ட் என்னும் ஆட் ஆன் புரோகிராம் செய்கிறது. ஒவ்வொரு தளத்தையும் ஸ்நாப் ஷாட் எனப்படும் வகையில் சிறிய படங்களாகப் பதிந்து வைக்கிறது.

இதன் மூலம் பிரவுசிங் ஹிஸ்டரியைப் பார்க்கையில் நாம்
பார்த்த தளத்தின் சிறிய படத்தினைக் காண முடிகிறது.
ஹிஸ்டரி மட்டுமின்றி, இந்த ஆட் ஆன் புரோகிராம், கூகுள்
தேடுதல் இஞ்சின் மூலம் தேடுகையில் அது வெப்மைண்ட்
மற்றும் del.icio.us பிரிவையும் இணைத்துத் தேடி
முடிவுகளைத் தருகிறது. இது பயர்பாக்ஸ் பிரவுசருக்கான
ஆட் ஆன் புரோகிராம் என்பதனை நினைவில் கொள்ளவும்.

இதனை
http://www.download.com/WebMynd/300011745_410877605.html 
என்ற முகவரியிலிருந்து பெறலாம்.


ஒரு இணையத்தளத்தைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள

ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தைப் பற்றியும், அந்தத்தளத்தின் உரிமையாளர் யார், எங்கே, எது என்பது போன்ற வினாக்களுக்கு விடைகளைக் கொடுக்கக்கூடிய இணையத்தளங்கள் இவை.

இங்கே நீங்கள் விரும்பிய வெப் சைட்களில் முகவரியை உள்ளிட்டால் உடனே அவைபற்றிய விரிவான விபரங்கள் கிடைக்கின்றன.

இந்தச் சேவைகளை வழங்கும் தளங்களின் முகவரி கீழே.










இந்த எழுத்து எங்கு இருக்கும்?

எப்போதாவது நமக்கு கிடைக்கும் ஒரு சில படங்களில் காணப்படும் எழுத்து வகைகள் நம்மை ரசிக்க வைக்கும் அளவில் காட்சி தரும். இந்த பாண்ட் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுவோம். ஆனால் அந்த பாண்ட் பெயர் என்னவென்று தெரியாமல் எப்படி தேடுவது? இதற்கு வழி காட்டுகிறது ஓர் இணைய தளம். அதன் முகவரி: http://www. myfonts.com/WhatTheFont/ 
இந்த தளம் எப்படி செயல்படுகிறது? வெகு எளிது. 


முதலில் எந்த டெக்ஸ்ட்டில் உள்ள எழுத்து அல்லது படத்தில் இணைந்த எழுத்து குறித்து சந்தேகம் உள்ளதோ அதன் ஸ்கேன் செய்யப்பட்ட படத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஸ்கேன் செய்திடாமல் பட பைலாக இருந்தால் இன்னும் வசதி. இந்த தளத்தைத் திறந்து உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஸ்கேன் செய்யப்பட்ட பைல் அல்லது இமேஜ் பைலை அப்லோட் செய்திடுங்கள். அதற்கு இந்த தளத்திலேயே வசதி உள்ளது. உடன் இந்த தளம் அந்த எழுத்து என்ன என்று கண்டுபிடித்துச் சொல்லும்.
இமேஜைக் கொண்டு ஒவ்வொரு எழுத்தாக அது சரிதானா என்று உங்களிடம் கேட்கும். நீங்கள் சரியென்று தோன்றினால் உடனே அந்த எழுத்து பைல் உங்களுக்குக் கிடைக்கும். இந்த தளத்தினால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் அதனை What The Font Forum என்ற அமைப் பிற்கு அனுப்பலாம். இதன் உறுப்பினர்கள் எவரேனும் எழுத்து என்ன வகை என்று கண்டறிந்து சொல்வார்கள். எழுத்துக்கள் குறித்து தீவிரமாக செயல்படுபவர்களுக்கு இந்த தளம் ஒரு உதவிடும் தளமாகும்.


பிரபலமான வெப்சைட்டா? உறுதி செய்து கொள்க

இன்டர்நெட் வெப் சைட்களிலிருந்து புரோகிராம்களை டவுண்லோட் செய்து பயன்படுத்த முனையும் போது கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலான வைரஸ் மற்றும் பிஷ்ஷிங் புரோகிராம்கள் இந்த முறையில் தான் இறங்குகின்றன. பின் நம் கம்ப்யூட்டரை முடக்குகின்றன



பெர்சனல் தகவல்களைத் திருடி அனுப்புகின்றன. எனவே வெப்சைட்டிலிருந்து புரோகிராம்களை டவுண்லோட் செய்திடும் முன் அந்த வெப்சைட் அதிகார பூர்வமானதா என்று ஒரு முறைக்கு இரு முறை கவனிக்கவும். வைரஸ் பரப்பும் நோக்கமுடையவர்கள் பெரும்பாலும் பிரபலமான நிறுவனங்களின் பெயர்களில் மாற்றம் தெரியாத வகையில் ஒரிரு எழுத்துக்களில் மாற்றம் செய்து அல்லது அப்படியே பெயர் அமைத்து வெப்சைட்டுகளை உருவாக்கி இவற்றைப் பரப்புகின்றனர். எடுத்துக் காட்டாக குயிக் டைம் என்ற மீடியா பிளேயர் தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் பெயரில் ஒரு வெப்சைட் திறக்கப்பட்டுள்ளது.


நாம் நம் கம்ப்யூட்டரில் குயிக் டைம் பிளேயரை வைத்திருந்தால் அது அறிந்து கொண்டு இந்த சாப்ட்வேருக்கு அப்டேட் பைல் உள்ளது; இந்த லிங்க்கில் கிளிக் செய்திடவும் என்று மெசேஜ் அனுப்புகிறது. நாம் கிளிக் செய்தால் சிறிது நேரத்தில் வைரஸ் புரோகிராமினை நம் கம்ப்யூட்டரில் பதித்துவிட்டு அப்டேட் புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டரில் பதிக்க இயலவில்லை என்ற செய்தியைத் தந்துவிட்டு மறைந்துவிடுகிறது. அடுத்த முறை கம்ப்யூட்டர் இயக்கும்போது வைரஸ் உடனடியாகச் செயல்பட்டு அனைத்து நாச வேலைகளையும் மேற்கொள்கிறது. இதே போல மைக்ரோசாப்ட், விண் ஆம்ப் போன்ற தளங்களின் பெயர்களிலும் போலி வெப்சைட்டுகள் உருவாக்கப் பட்டு வைரஸ்கள் பரப்பப் படுகின்றன. எனவே இது போன்ற தளங்களில் இருந்து புரோகிராம்களை டவுண்லோட் செய்திடும் முன் அந்த தளங்களின் ஹோம் பேஜ் சென்று அவை உண்மையிலேயே அந்த நிறுவனத் தளங்கள் தானா என்று உறுதி செய்து கொண்டு பின் டவுன்லோட் செய்திட வேண்டும். அடுத்ததாக டவுண்லோட் செய்திடத் தொடங்கும் முன் நமக்கு அந்த புரோகிராமினை இயக்கவா அல்லது சேவ் செய்திடவா என்று ஆப்ஷன் கேட்கப்படும். அப்போது ஒரு தனி போல்டரில் இதனை சேவ் செய்திடவும். சேவ் செய்தபின் கம்ப்யூட்டரில் உள்ள ஆண்டி வைரஸ் புரோகிராம் மூலம் சோதனை செய்த பின்பே இன்ஸ்டால் செய்திடவும்

No comments:

Post a Comment