Search This Blog

Sunday, March 20


யு டியூப்பில் இருந்து டவுன்லோட் செய்ய விரும்பினால்

பின் வரும் தளங்களுக்கு சென்று நீங்க விரும்புகிற வீடியோக்களை டவுன்லோட் பண்ணிக்கோங்க.

http://linksforshare.blogspot.com/2008/02/download-videos-from-youtube.html

http://www.keepvid.com

இந்திய யு-ட்யூப் செயல்பாடு எப்படி இருக்கும்?

இந்த தளத்தில் உள்ள குளோபல் லிங்க்கைக் கிளிக் செய்தால் உலக அளவிலான தளம் கிடைக்கும். குழந்தைகள் இந்த தளத்தினைப் பார்ப்பதைப் பெற்றோர்கள் கட்டுப்படுத்த என்ன வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன?

இணையத்தில் வீடியோக்களின் தாயகமாக இயங்கும் யு–ட்யூப் இந்தியாவிற்கென தனி தளத்தை அமைத்துள்ளது. இது இந்தியர்களுக்கான தளம் ஆகும் அதே நேரத்தில் உலக அளவில் இயங்கும் தளத்தின் பல தகவல்களும் வீடியோக்களும் இதில் உள்ளன.

இது குறித்து யு–ட்யூப் இந்திய பிரிவின் பன்னாட்டு நிர்வாகி சகினா அர்சிவாலா அளித்த பேட்டி:

பன்னாட்டளவிலான யு–ட்யூப் தளத்திற்கும் இந்தியாவிற்கென அமைக்கப்படும் தளத்திற்கும் என்ன வேறுபாடு?
YouTube.com மற்றும் YouTube.co.in ஆகிய இரண்டும் ஒரே மாதிரியான தளத்தைக் காட்டினாலும் வீடியோ காட்சிகள் சில மாறி உள்ளன. இந்தியா சார்ந்த தகவல்கள் மற்றும் வீடியோக்களுக்கு இந்திய தளத்தில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. எங்களுடன் இணைந்தும் கூட்டாளிகளாகவும் இந்திய வீடியோ காட்சிகளைத் தருபவர்களுக்கென தனி பகுதி மற்றும் இந்தியா சார்ந்த காட்சிகளைத் தரும் வீடியோ விளம்பரங்கள் என தனிப்பகுதிகள் உள்ளன. அதிகம் பிரபலமான மற்றும் அதிகம் பார்க்கப்பட்ட (‘Most viewed’ and ‘Most popular’) என்ற இரண்டு பகுதிகளில் இந்தியாவில் ரசிக்கப்பட்ட காட்சிகளே இடம் பெறும். இந்த தளத்தில் உள்ள குளோபல் லிங்க்கைக் கிளிக் செய்தால் உலக அளவிலான தளம் கிடைக்கும்.

குழந்தைகள் இந்த தளத்தினைப் பார்ப்பதைப் பெற்றோர்கள் கட்டுப்படுத்த என்ன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன?

யு–ட்யூப் தொடங்கிய நாளிலிருந்தே பாலியியல் சார்ந்த காட்சிகளை ஒதுக்கியே வைத்துள்ளது. யு–ட்யூப் தளத்தில் ஒவ்வொரு நிமிடமும் 10 மணி நேரம் ஓடக்கூடிய அளவிற்கு வீடியோ காட்சிகள் பதியப்படுகின்றன. பாலியியல் வீடியோ எதாவது பதியப்பட்டு அது குறிப்பிடப்படுகையில் உடனே அதனை நீக்கிவிடுகிறோம்.


சேனல் பிரிவுகள் அப்டேட் செய்யப்படும் கால இடைவெளி என்ன?
ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு கால இடைவெளியில் அப் டேட் செய்யப்பட வேண்டும் என முடிவு செய்து வைத்திருக்கிறோம். அதற்கேற்ற வகையில் அப்டேட் செய்கிறோம்.


வீடியோ கமெண்ட் இணைக்கப்படுகிறதா?

நிச்சயமாய். நீங்கள் யு–ட்யூப் காட்சிகளைப் பார்க்கையில் உங்கள் வெப் கேமராவினை ஆன் செய்து எந்த காட்சி குறித்தும் உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். அது பதிவு செய்யப் பட்டு பிறர் பார்க்க அமைக்கப் படும்.


வீடியோ அப்லோட் செய்திட கால வரையறை உள்ளதா? எடுத்துக் காட்டாக தளத்தில் அதிக பட்சம் 10 நிமிடங்கள் மட்டுமே தரப்படுகிறது. அதே வரையறை இந்திய பிரிவிற்கும் தரப்பட்டுள்ளதா?
ஆம். 10 நிமிடம் ஓடக்கூடிய வீடியோக்களை மட்டுமே அப்லோட் செய்திட முடியும்.


10 நிமிடத்திற்கு மேல் வீடியோவினை அப்லோட் செய்திட வேண்டுமென்றால் அதற்கு கட்டணம் உள்ளதா?

இல்லவே இல்லை. பத்து நிமிட அளவுகோல் எதற்கு என்றால் வழக்கமாக இந்த தளத்தைப் பார்க்கும் வாசகர்கள் முழு நேரப் படத்தை அல்லது மற்றவர்களின் வீடியோக்களை தளத்தில் பதிக்கக் கூடாது என்பதுதான்.

யார் ஒருவர் எங்களுடன் பார்ட்னராகச் சேர்கிறார்களோ, அவரின் வீடியோ அவரால் தயாரிக்கப்பட்டது என நாங்கள் நம்பும் பட்சத்தில் கூடுதல் நேரம் ஓடக்கூடிய வீடியோ காட்சிகளை பதிய அனுமதிப்போம். எங்களுடன் பார்ட்னர் என்பது வர்த்தக ரீதியான பார்டன்ர்ஷிப் இல்லை. எடுத்துக் காட்டாக இண்டியன் இண்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி – ஐ.ஐ.டி. தன் பொறியியல் பாட சம்பந்தமான வீடியோ வகுப்பறைக் காட்சிகளை அனைவரும் பார்க்க எங்கள் தளத்தைப் பயன்படுத்துகிறது. உலகத் தரம் வாய்ந்த பொறியியல் பாட தகவல்கள் உலகெங்கும் உள்ளவர்களால் பார்க்க படிக்கப்பட வேண்டும் என இந்திய மத்திய அரசு எடுத்த நடவடிக்கை இது.

எழுத்துக் காப்புரிமை பெற்ற காட்சிகளை எப்படி கையாளப் போகிறீர்கள்?

காப்புரிமை பெற்ற காட்சிகளை நாங்கள் மிக மிக மதிக்கிறோம். பதியப்பட்டுள்ள காட்சிகள் தன்னுடையது என யாராவது ஒருவர் சரியான ஆதாரங்களுடன் தரும் பட்சத்தில் உடனே நடவடிக்கை எடுக்கிறோம்.


எதற்காக YouTube.in என்ற சுருக்கமான பெயர் இருக்கையில் YouTube.co.in என்ற நீளமான தளப்பெயரைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

சொல்லப்போனால் இந்த இரண்டையுமே தளத்தைப் பெற பயன்படுத்தலாம். மொத்த இந்திய தளமும் YouTube.in என்ற பெயரில் தான் இயங்குகிறது. சீரான கொள்கை முடிவுகளின்படி தளத்திற்குப் பெயர் வாங்கப்பட்டது.

இந்திய மாநில மொழிகளில் யு–ட்யூப் இந்திய தளத்தை அமைக்க கூகுள் நிறுவனத்திற்கு எண்ணம் உள்ளதா? இதனால் ஆங்கிலம் தெரியாதவர்களும் வீடியோ காட்சிகளைத் தேடிப்பெறும் வாய்ப்புகள் உருவாகுமே?

நிச்சயமாக. இந்த தளம் முழுக்க முழுக்க வீடியோ காட்சிகளுக்கு மட்டுமே. இதில் லோக்கல் வீடியோ காட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. இப்போது கூட இந்தி, குஜராத்தி மற்றும் தெலுங்கில் தேடுதல் சொற்களை அமைத்து வீடியோ காட்சிகளைத் தேடலாம். பெரும்பாலான வீடியோக்கள் லோக்கல் மொழியிலானவையாகத்தான் உள்ளன.


யு–ட்யூப் இந்தியாவின் சர்வர்கள் இந்திய விதிகளுக்குட்பட்டு இயங்குகின்றனவா?
நாங்கள் எங்கு சென்றாலும் அந்த இடத்தின் அரசு விதிமுறை களுக்குட்பட்டே இயங்குகிறோம். இதற்காகவே மும்பை மற்றும் கொல்கத்தா காவல்துறையுடன் கலந்தாய்வு செய்து விதிகளைப் பின்பற்றுகிறோம்.


வீடியோ காட்சிகளை எடுக்கும் இன்னும் பல நிறுவனங்களுடன் பார்ட்னராக ஒப்பந்தம் மேற்கொள்ள இருக்கிறீர்களா?

நிச்சயமாக. இப்போதும் நிறைய வீடியோ தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். ஈராஸ் என்டர்டெயின்மெண்ட், ராஜ்ஸ்ரீ பிலிம்ஸ், சுற்றுலாத் துறை அமைச்சகம், ஐ.ஐ.டி. டில்லி, என்.டி.டி.வி., யு.டி.வி., ஸூம் டிவி, இந்தியன் டிவி, கிரிஷ் கிரிக்கெட் ஆகியவை முக்கியமான பார்டனர்களாகும்.


எந்த அளவில் இந்த தளத்திற்கு வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?

ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் நேயர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுள்ளது. தற்போது இந்தியாவில் மட்டும் 50 லட்சம் நேயர்கள் உள்ளனர்.


யு–ட்யூப் இந்திய தளத்திலிருந்து எவ்வளவு வருமானத்தினை எதிர்பார்க்கிறீர்கள்?

யு–ட்யூப் ஒரு வர்த்தக ரீதியான முயற்சி அல்ல. மிகச் சிறந்த வீடியோ காட்சியினைக் காணும் அனுபவத்தினை எல்லாரும்பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில்தான் நாங்கள் இதனை உருவாக்கி இயக்கி வருகிறோம். விளம்பரம் வழியாக வருமானம் கிடைக்கிறது.

No comments:

Post a Comment