Search This Blog

Sunday, March 20


செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி?


எப்பொழுதுமே நமது கணினியானது ஹார்டு டிஸ்க் ( வன் வட்டு ) கின் உதவியில் பூட் ஆகி இயங்க ஆரம்பிக்கும். பூட் என்பது கணினியை ஆரம்பிக்கும் செயல்.

ஏதாவது பிரச்சினைகளால் நமது கணினி பூட் ஆகாமல் தவிக்க நேரிடலாம். அப்போது ஃப்ளாப்பி,சிடி,டிவிடி வாயிலாக பூட் செய்து கணினியைத் துவக்கி பிரச்சினையை ஆராய்ந்து தீர்வைத் தேடலாம்.

ஆனால் பல நேரங்களில் நம்மிடம் பூட் ஃப்ளாப்பியோ, வேறு பூட்டிங்க் நினைவகங்களோ இல்லாமல் இருக்கும். இன்றைய தலைமுறை இணைஞர்களிடம் யுஎஸ்பி கருவிகள் கண்டிப்பாக இருக்கின்றன. ஐபாடு,யுஎஸ்பி நினைவகம், செல்போன் எனப் பலவித நவீனக் கருவிகளை இவர்கள் வைத்திருக்கிறார்கள். இவர்களுக்காகப் பிரத்தியேகமாகப் படைக்கப்பட்டிருக்கிறது ஒரு இயங்குதளம்.


இந்த இயங்குதளத்தை உங்கள் யுஎஸ்பி நினைவகத்தில் ஏற்றிவிட்டு, அதன்மூலமே கணினியை பூட் செய்வது மட்டுமின்றி, கணினியையே இயக்கலாம்.செயலிழந்து கிடந்த கணினியை இந்த யுஎஸ்பியில் இருந்தபடி பூட் செய்து இயக்கி உங்களது பழைய தகவல்களை மீட்டெடுக்கலாம்.

கோப்பு இங்கே 

வின்ரார் கொண்டு இதை விரித்தெடுத்தபிறகு கிடைக்கும் Readme.txt கோப்பைப் படித்து அதன்படி செயல்படவும்..

SATURDAY 12 JULY 2008

யு.எஸ்.பி. போர்ட்டுகளுக்கிடையே என்ன வேறுபாடு?

யுஎஸ்.பி. போர்ட்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் யு.எஸ்.பி.2 என்றும் யு.எஸ்.பி. 1 என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த இரண்டிற்கும் இடையே என்ன வேறுபாடு? சாப்ட்வேர் புரோகிராம்களைப் போல பதிப்பில் வேறுபாடா? அல்லது இவை இரண்டும் வெவ்வேறானவையா? இப்போது யு.எஸ்.பி. போர்ட் 1 என்பதே கிடையாது. பழைய கம்ப்யூட்டர்களில் தான் இது காணப்படுகிறது. இருப்பினும் வேறுபாட்டினைத் தெரிந்து கொள்ளலாம்.


அடிப்படை வேறுபாடு இவை இரண்டும் இயங்கும் வேகத்தில் தான் உள்ளது. யு.எஸ்.பி. 2 என்பது யு.எஸ்.பி.1 மற்றும் 1.1 போர்ட்களைக் காட்டிலும் வேகமானவை. யு.எஸ்.பி. 2 விநாடிக்கு 480 மெகா பிட்ஸ் வேகத்தில் டேட்டாவினைப் பரிமாறுகிறது. ஆனால் யு.எஸ்.பி. 1 மற்றும் 1.1. விநாடிக்கு 12 மெகா பிட்ஸ் வேகத்தில் தான் பரிமாறும். இரண்டிற்கும் இடையே தகவல்களைப் பரிமாறும் வேகத்தில் 400 மடங்கு வித்தியாசம் உள்ளது. 


யு.எஸ்.பி. 1 வழி full speed என அழைக்கப்படுகிறது. யு.எஸ்.பி. 2 Hispeed என குறிக்கப்படுகிறது. சரி, இவை இரண்டும் எப்படி இணைந்து செயல்படுகின்றன. இந்த இரண்டுமே தன்னைக் காட்டிலும் குறைந்தோ அல்லது கூடுதலாக வேகத்தில் இயங்கும் டிரைவ்களுடன் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றை இணைத்தோ அல்லது மாற்றி மாற்றியோ பயன்படுத்துவதில் ஒன்றும் பிரச்னை வராது. உங்களுடைய கம்ப்யூட்டர் சிஸ்டம் சரியாக இயங்கும் வரை இந்த இரண்டையும் கலந்து பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment