சேப் மோட் ஏன்? எதற்கு? எப்படி?
கம்ப்யூட்டர் சில வேளைகளில் நமக்கு போக்கு காட்டி நம்
இஷ்டத்திற்கு செயல்படாமல் இருக்கையில் சேப் மோடில்
கம்ப்யூட்டரை இயக்கி பிரச்னையை அலசி தீர்வு காண்பது எளிது.
இது குறித்து பல முறை இம்மலரில் எழுதப்பட்டுள்ளது. பல
வாசகர்கள் சேப் மோடில் கம்ப்யூட்டரை இயக்கச் சொல்லி
எழுதுகிறீர்கள். இதில் என்ன செயல்பாடுகளை எல்லாம்
மேற்கொண்டு செய்யலாம்? எந்த எந்த வழிகளில் இந்த மோட்
பயன்படுகிறது? என்று கேட்டுள்ளனர்.
1. அடிப்படையில் சேப் மோடில் (Safeஇஷ்டத்திற்கு செயல்படாமல் இருக்கையில் சேப் மோடில்
கம்ப்யூட்டரை இயக்கி பிரச்னையை அலசி தீர்வு காண்பது எளிது.
இது குறித்து பல முறை இம்மலரில் எழுதப்பட்டுள்ளது. பல
வாசகர்கள் சேப் மோடில் கம்ப்யூட்டரை இயக்கச் சொல்லி
எழுதுகிறீர்கள். இதில் என்ன செயல்பாடுகளை எல்லாம்
மேற்கொண்டு செய்யலாம்? எந்த எந்த வழிகளில் இந்த மோட்
பயன்படுகிறது? என்று கேட்டுள்ளனர்.
Mode) செயல்படுவது கம்ப்யூட்டரில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளைக்
கண்டறியத்தான். நாம் எதிர்கொள்ளும் பிரச்னையின்
அடிப்படையில், சில சோதனை முயற்சிகளை மேற்கொண்டு எந்த
இயக்கத்தினால் இந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று
கண்டறிந்து அதனைக் களைவது தான் இதன் நோக்கம்.
கம்ப்யூட்டருக்கான பராமரிப்பு சேவையினை மேற்கொள்ள விண்டோஸ்
இயக்கம் தரும் ஒரு வாசல் தான் சேப் மோட். சேப் மோடில்
கம்ப்யூட்டரை இயக்குகையில், விண்டோஸ் தான் குறிப்பிட்ட
வரையறையில் செயல்படும்படி, சில அடிப்படை பைல்கள் மற்றும்
டிரைவர் பைல்களை மட்டும் இயக் குகிறது. புதிதாக இன்ஸ்டால்
செய்யப்பட்ட ஏதேனும் ஒரு புரோகிராமில் சிக்கல் இருந்தால்
அல்லது அது போல பிரச்னை ஒன்று எதிர்கொண்டால், சேப் மோடில்
கம்ப்யூட்டரை இயக்குகையில் அந்த பிரச்னையை இன்னும்
தெளிவாகத் தெரிந்து அணுக முடிகிறது. எடுத்துக் காட்டாக
இன்ஸ்டால் செய்த புரோகிராமினை இயக்குகையில்
“Illegal Operation” என ஒரு பிழைச் செய்தி வருகையில், அந்த
புரோகிராமினை சேப் மோடில் இயக்கி பிரச்னையை அறியலாம்.
புதிய புரோகிராமுடன் ஏற்கனவே உள்ள புரோகிராமின் டிரைவர்
பைல் குறுக்கிட்டு பிரச்னை தருவதை அறியலாம். அல்லது ஏற்கனவே
இயங்கும் புரோகிராம்கள் புதிய புரோகிராமின் செட் அப்பினை
தடுப்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதற்கேற்ப நாம் மீட்பு
பணிகளை கம்ப்யூட்டரில் மேற்கொள்ளலாம். இது போல் எந்த வகை
சிக்கல்களுக்கெல்லாம் சேப் மோடில் தீர்வு காணலாம் என்று
இங்கு பார்ப்போம்.
1. இன்ஸ்டால் செய்தவுடன் விண்டோஸ் முடங்குகிறது:
ஏதேனும் ஒரு புதிய புரோகிராமினை இன்ஸ்டால் செய்து உடனே
கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்கையில் விண்டோஸ் முழி முழி
என்று விழித்துக் கொண்டு அப்படியே வெல்கம் செய்தியுடன்
உறைந்து போகிறதா? அப்படியானல் புது புரோகிராமில் தான்
பிரச்னையே உள்ளது. சேப் மோடில் சென்று அந்த புரோகிராமினை
அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இயக்குகையில் விண்டோஸ்
செயல்படும். நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் பதிப்பு,
அல்லது உங்கள் கம்ப்யூட்டர் கட்டமைப்பு புதிய புரோகிராமினை
இயக்கும் அளவிற்கு திறன் கொண்டது இல்லை என்பது தெளிவாகும்.
ஒரு வேளை விண்டோஸ் பதிப்பும் கம்ப்யூட்டர் கட்டமைப்பும்
தேவையான அளவிலேயே உள்ளன என்று அறிந்தால் சேப் மோடை விட்டு
விலகி வழக்கம்போல கம்ப்யூட்டரை ரீ பூட் செய்தால் நிச்சயம்
சிக்கல் தீர வாய்ப்புண்டு.
2. புதிய ஹார்ட்வேர் அமைப்பு: புதிய சாதனம் ஒன்றை
கம்ப்யூட்டரில் இயக்குகிறீர்கள். அது வீடியோ கார்டாகவோ,
கேம்ஸ் விளையாடும் கன்ஸோல் ஆகவோ, புளுரே டிஸ்க் டிரைவாகவோ,
வெப் கேமரா போன்ற எளிய சாதனமாகவோ இருக்கலாம். இதனை
இணைத்தவுடன் விண்டோஸ் முறைக்கிறது என்றால் புதிய சாதனத்தின்
டிரைவர் அல்லது டிவைஸ் கார்ட் கம்ப்யூட்டருடன் இணைந்து
செல்ல மறுக்கிறது என்பது தெளிவாகிறது. சேப் மோடில் சென்று
புதிய ஹார்ட்வேர் சாதனத்தின் பைல்களை நீக்குங்கள். அதுவும்
சரிப்படவில்லை என்றால் அந்த சாதனத்தையே நீக்குங்கள்.
அதன்பின் மீண்டும் ரீஸ் டார்ட் செய்திடவும். இதற்கும்
சரியாகவில்லை என்றால் சிஸ்டம் ரெஸ்டோர் பயன்படுத்தி அந்த
சாதனம் இணைக்கும் முன் இருந்த தேதிக்குச் சென்று சிஸ்டத்தை
ரெஸ்டோர் செய்திடவும். நிச்சயமாக இப்போது கம்ப்யூட்டர்
இயங்கும். பின் பொறுமையாக புதிய ஹார்ட்வேர் சாதனம் குறித்து
நன்றாக அறிந்து கொண்டு அதன் தேவைகளைப் புரிந்து கொண்டு
இன்ஸ்டால் செய்திடவும்.
3. இன்டர்நெட் இணைப்பு கிடைக்கவில்லை: இன்டர்நெட்
இணைப்பு கம்ப்யூட்டரில் உள்ள பிரச்னையால் கிடைக்கவில்லையா?
சேப் மோடில் நெட்வொர்க்கிங் ஆப்ஷனுடன் கம்ப்யூட்டரை
ரீஸ்டார்ட் செய்திடவும். நெட்வொர்க்கிங் ஆப்ஷன் இருந்தால்
தான் இன்டர்நெட் இயக்க முடியும். சேப்மோடில் இன்டர்நெட்
இணைப்பைப் பெற முயற்சிக்கவும். அப் போதும் கிடைக்கவில்லை
என்றால், கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடுங்கள். பிற நெட்
வொர்க்கிங் ஹார்ட்வேர் சாதனங்களையும் (மோடம் மற்றும்
ரௌட்டர் போன்றவை) அதே வகையில் இயக்கிடுங்கள். இவ்வகையில்
செயல் படுகையில் ஹார்ட்வேர் பிரச்னைகள் அனைத்தும்
தெளிவாகும். இதன்பின்னும் இன்டர்நெட் தொடர்பு கிடைக்கவில்லை
என்றால் உங்கள் இன்டர்நெட் சேவை வழங்கும் அலுவலகத்தைக்
கூடுதல் உதவிக்கு தொடர்பு கொள்ளவும்.
4. கம்ப்யூட்டர் தானாக சேப் மோடில் தொடங்குகிறது. ஏன்?
கம்ப்யூட்டரை இயக்கும் போதெல்லாம் தானாக சேப் மோடில்
செல்கிறதா? கம்ப்யூட்டரில் ஏற்கனவே இருப்பவற்றை ஒவ்வொன்றாக
நீக்கிப் பார்த்தால் பிரச்னை எங்கிருக்கிறது என்பது
தெளிவாகும். இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் என்றால்
புதிதாய் எந்த புரோகிராமினையும் அல்லது ஹார்ட்வேர்
சாதனத்தினையும் நீங்கள் இன்ஸ்டால் செய்திருக்கக் கூடாது.
முதலில் நீங்கள் பயன்படுத்தும் வழக்கமான புரோகிராம்களை
ஒவ்வொன்றாகப் பயன்படுத்தத் தொடங்குங்கள். உங்களுடைய
ஸ்டார்ட் அப் போல்டரில் உள்ளவற்றையும் இதே போல்
தொடங்குங்கள். சேப் மோடில் இவை ஒவ்வொன்றாக இயங்கத்
தொடங்குகையில் நிச்சயம் எந்த புரோகிராம் சிக்கல் தருகிறது
என்பது தெளிவாகும். அதனை மட்டும் நீக்கி மீண்டும் இன்ஸ்டால்
செய்தால் சரியாகிவிடும்.
5. எதுவுமே சரியாகவில்லை? என்ன செய்யலாம்? மேலே
சொன்ன எதுவும் உங்கள் பிரச்னையைத் தீர்க்கவில்லையா?
தொடர்ந்து விண்டோஸ் இயங்காமல் நிற்கிறதா? வேறு வழியே இல்லை.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சிஸ்டம் ரெஸ்டோர் செய்து மிகப்
பழைய முந்தைய நாள் ஒன்றுக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு
செல்லுங்கள். நீங்கள் பின் நாளில் இன்ஸ்டால் செய்த
புரோகிராம்கள் அனைத்தும் இல்லா நிலை ஏற்படும்.
நீங்கள் பிரச்னைகளே இல்லாமல் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிய
காலத்திற்குக் கொண்டு செல்லப்படுவீர்கள். இனி உங்களுக்குப்
பிடித்த மற்றும் தேவையான புரோகிராம்களை ஒவ்வொன்றாக
இன்ஸ்டால் செய்திடுங்கள். சிக்கல் எங்கே இருந்து வந்தது
என்று நிச்சயம் தெரிந்துவிடும். இதற்கு சரிப்பட்டு வரவில்லை
என்றால் உங்கள் சிஸ்டம் ரிப்பேர் சிடியைப் போட்டு சிஸ்டம்
பைல்களை சரி செய்து, அநேகமாக விண்டோஸ் இயக்கத்தை புதிதாய்
இயக்க வேண்டி வரலாம். அப்போது அனைத்து புரோகிராம்களையும்
புதிதாய் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இதில் ஒன்றை
நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் நீக்கும் புரோகிராம்கள்
மூலம் ஏற்கனவே உருவாக்கிய பைல்கள் எல்லாம் பத்திரமாக
மாறாமல் இருக்கும். எனவே எந்தகவலையும் இன்றி எம்.எஸ். ஆபீஸ்
அல்லது அடோப் போட்டோஷாப் போன்ற புரோகிராம்களை மட்டும் ரீ
இன்ஸ்டால் செய்து பிரச்னை எதுவுமின்றி மீண்டும் இனிய
கம்ப்யூட்டர் பயணத்தைத் தொடங்குங்கள்.
மிஸ்ஸிங் மெனு
ஒருவர் தன்னுடைய எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் மெனு ஒன்று
எப்போதும் மிஸ்ஸிங் ஆக உள்ளது. இதனை எப்படித் தேடிப்
பெறுவது? என்று கேட்டுள்ளார். இதனால் தான் ஆபீஸ் தொகுப்பில்
வேலை பார்க்கையில் எப்படி எல்லாம் செயல்பட முடியாமல்
இருக்கிறேன் என்பதை தெளிவாக எழுதியுள்ளார். இது போல
உங்களுக்கு அனுபவம் உள்ளதா? ஓகே, அதுவா முக்கியம்.
தீர்வுக்கு வருவோம்
முதலில் எப்படி இது நடந்திருக்கும்? மிஸ்ஸானதற்கு
நிறைய வழிகள் உள்ளன. எது எப்படி இருந்தாலும் இப்போது மெனு
மிஸ்ஸிங். வழக்கமான பட்டியலில் அது இல்லை. ஆனால் பிரச்னை
அது எங்கே போனது என்பதில் இல்லை. அதனை எப்படி மீண்டும்
கொண்டு வருவது என்பதுதான். கொண்டு வர முதலில் எம்.எஸ்.
ஆபீஸ் தொகுப்பில் எந்த புரோகிராமில் அது இல்லையோ அதனைக்
இயக்குங்கள். இனி கஸ்டமைஸ்
(Customize) விண்டோவினைக்
கொண்டு வர வேண்டும். இதற்கு Toolsமெனு சென்று
Customize என்ற பிரிவில் கிளிக் செய்திட வேண்டும்.
அல்லது ஏதேனும் டூல் பாரில் ரைட் கிளிக் செய்து விரியும்
மெனுவில் கீழாக இருக்கும் Customize என்பதைக் கிளிக்
செய்திடலாம். விண்டோ கிடைத்தவுடன் அதில் உள்ள டேப்களில்
Commands டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இந்த
விண்டோவில் இடது பக்கம் Categories என்னும் பகுதி
கிடைக்கும். இதில் Builtin Menus என்று ஒரு பிரிவு கிடைக்கும். அவுட்லுக் தொகுப்பில் இது
Menu Bar என
இருக்கும். Builtin Menus தேர்ந்தெடுக்கப்பட்டதனால்
வலது பக்கம் வழக்கமான மெனுவிற்கான கட்டளைகள் கிடைக்கும்.
இங்கு உங்களுக்குத் தேவயான ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். பின்
அதனை மவுஸால் அழுத்தி இழுத்துச் சென்று உங்களுக்குப்
பிடித்த இடத்தில் விட்டு விடுங்கள். இதன் பின் கஸ்டமைஸ்
விண்டோவை மூடி விடுங்கள். இனி நீங்கள் மிஸ்ஸிங் என்று
கருதிய மெனு காணாமல் போய் வீடு திரும்பிய குழந்தையாக
நீங்கள் கையில் எடுக்கக் காத்திருக்கும்.
No comments:
Post a Comment