Search This Blog

Saturday, March 19


வேகமாக முன்னேறும் சர்ச் என்ஜின் பிங்

மைக்ரோசொப்ட் நிறுவனம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கூகுள் நிறுவனத்தின் சர்ச் எஞ்சினுக்கு எதிராக தயாரித்து அண்மையில் வெளியிட்ட தன்னுடைய பிங் (Bing) சர்ச் இஞ்சின் (www.bing.com) உலகில் அதிக எண்ணிக்கையில் ஆட்கள் வரும் முதல் 20 இணையதளங்களில் ஒன்றாகி விட்டதுதான் இதற்குக் காரணம்.
அறிமுகமாகி இரண்டு மாதங்களில் இந்த இமாலய வளர்ச்சியை இந்த சர்ச் இஞ்சின் பிடித்து அனைவரையும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தை புதுக் கண்ணோட்டத்துடன் பார்க்க வைத்துள்ளது. இணையதளங்களையும், அவற்றை வந்து பார்த்துச் செல்லும் மக்களின் எண்ணிக்கையையும் கண்காணித்து வரும் புகழ்பெற்ற அலெக்ஸா அமைப்பு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. பிங் சர்ச் இஞ்சினுடைய முன்னோடியான விண்டோஸ் லைவ் சர்ச் இன்னும் ஐந்தாவது இடத்தைக் கொண்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த தளத்திற்கு வரும் தேடல்களுக்கெல்லாம் முழுமையாக பிங் தளத் திற்குத் திருப்பி விடப்படுகின்றன.

முதல் 20 இடத்திற்குள் பிங் வந்து விட்டதனாலேயே கூகுள் கலக்கமடையுமா? கூகுள் சர்ச் இஞ்சின் இன்னும் முதல் இடத்திலேயே அதிக பலத்துடன் அமர்ந்துள்ளது. இரண்டாவது இடத்தில் யாஹூவும், அதனை அடுத்து கூகுளின் இன்னொரு சொத்தான யுட்யூப்பும் அமர்ந்துள்ளன.

இருப்பினும், இரண்டு மாதத்தில் பிங்க் பெற்றுள்ள வளர்ச்சி குறிப்பிடத்தக்கதுதான். ஆனால், கூகுளை அசைக்க இன்னும் அது அசாத்திய வளர்ச்சியைப் பெற வேண்டும். தான் தரும் வசதிக ளையும் பெருக்கிக்கொள்ள வேண்டும்.
மொத்தப் பயன்பாட்டில் கூகுள் இன்னும் பலரும் தொட முடியாத உயரத்தில் உள்ளது.

தமிழ் தேடுபொறி

இணையத்தில் தமிழில் தேடுவதற்கு உதவும் தளமே தமிழ்மொழி.காம். இங்கு உங்களுக்கு வேண்டிய தமிழ் சொல்லை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தேட வேண்டும்.அதாவது அம்மா என்னும் சொல்லைத் தேட நீங்கள் ammaa என தமிங்லிஷில் சொல்லை உள்ளீடு செய்ய வேண்டும். http://www.search.tamilmozhi.com/

புதிய தேடுபொறி cuil


"மற்ற சர்ச் இஞ்சின்களைக் காட்டிலும் மூன்று பங்கு அதிகமான எண்ணிக்கையில் இணைய தளங்களைத் தேடி தகவல்களைத் தருகிறோம்' என்ற அறிவிப்புடன் கூல் ( Cuil.com ) என்ற பெயரில் சர்ச் இஞ்சின் தளம் ஒன்று கடந்த ஜூலை 28 முதல் அறிமுகமாகி பிரபலமாகி வருகிறது. இதனை உருவாக்கி வழங்கி வருபவர்கள் ஐரிஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள்.


ஐரிஷ் மொழியில் Cuil என்ற சொல்லுக்கு அறிவு என்று பெயர். அறிவு வளர்ச்சியின் அடிப்படையே தேடல் தான். எனவே தேடலுக்குத் துணை புரியும் இந்த தளத்திற்கு இது சரியான பெயராகவே தோன்றுகிறது. நாம் தேடும் சொல்லுக்குத் தளங்களைத் தேடாமல், இருக்கின்ற கோடிக்கணக்கான தளங்களைத் தேடி வகைப்படுத்திக் கொண்டு அந்த தகவல் கட்டமைப்பிலிருந்து தளப்பட்டியலைத் தருகிறது கூல் தளம். கூகுள் தளத்தைக் காட்டிலும் மூன்று பங்கும், மைக்ரோசாப்ட் தளத்தைக் காட்டிலும் பத்து பங்கும் கூடுதலாக தளங்களைத் தேடி தகவல்களை எளிதான முறையில் புதிய பார்மட்களில் தருகிறோம் என இந்த தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.. 


இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் (கணவன் மனைவியான) டாம் மற்றும் அன்னா . அலுவலகத் தலைமையிடம் கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. டாம் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் இன்டர்நெட் ஆராய்ச்சி யாளராகப் பணியாற்றியவர்.




அன்னா பேட்டர்சன் கூகுள் அலுவலகத்தில் முதன்மை கட்டமைப்பாளராக பணியாற்றியவர். கூல் நிறுவனத்தில் அலுவலர்கள் 30 பேர். கூகுள் தளத்துடன் போட்டியிடும் அளவிற்கு சிறப்பாகத் தளத்தை வடிவமைத்துள்ளனர். 
கடந்த 15 ஆண்டுகளில் இன்டர்நெட் வளர்ச்சி பெற்ற அளவிற்கு அதில் பயன்படுத்தப்படும் சர்ச் இஞ்சின் என்னும் தேடல் தளங்கள் வளர்ச்சி அடையவில்லை. கூகுள் தளம் ஒன்றுதான் புதிய தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்திப் பல்வேறு வசதிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தித் தந்து வருகிறது. தற்போது அதனை முந்தும் வகையில் கூல் தளம் வந்துள்ளது. 

18 ஆயிரத்து 600 கோடி தளங்களை ஆய்வு செய்து அவற்றில் மோசமானவற்றையும் டூப்ளிகேட் தளங்களையும் விலக்கிவிட்டு 12 ஆயிரம் கோடி இணைய தளங்களை வகைப்படுத்தி பட்டியலிட்டு வைத்து தேடல் சொற்களுக்கேற்ப அவற்றைத் தருகிறது. தேடுதல் சொற்களுக்கான இத் தளம் தரும் பட்டியல் அடுக்கே மிக நன்றாக வேறுபாட்டுடன் இருக்கிறது. தளத்திலிருந்து சில வாக்கியங்கள், தளம் சார்ந்த போட் டோ என தளம் குறித்த அடிப்படைத் தகவல்கள் தரப்படுவதால் அதனைக் கிளிக் செய்து பின் அடடா இது தேவையில்லையே என்று ஏமாற வேண்டியதில்லை. 

தளங்கள் அதில் தரப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஒரு பத்திரிக்கையில் லே அவுட் போல காட்டப்படுகின்றன. அடையாளம் கண்டுகொள்ள முக்கிய வாக்கியங்கள் மற்றும் போட்டோக்கள் பட்டியலில் இடம் பெறுகின்றன. மற்ற தேடல் தளங்கள் அந்த தளங்களை எத்தனை பேர் பார்த்திருக்கின்றனர் என்ற ஹிட் ரேட் படி வரிசைப்படுத்தி பட்டியலிடுகின்றன. ஆனால் கூல் அவற்றில் தரப்பட்டுள்ள தகவல் அடிப்படையில் பட்டியலிட்டுக் காட்டுகிறது. கூல் தளத்தினைப் பயன்படுத்துபவர் குறித்த எந்த பெர்சனல் தகவல்களையும் இத்தளம் கேட்டுப் பெறுவதில்லை. பயன்படுத்துபவர் பிரைவசியில் தலையிடுவதே இல்லை.

தேடலுக்கான சொல்லை டைப் செய்கையில் பிற தளங்களில், நாம் ஏற்கனவே டைப் செய்த சொற்களை மட்டும் நினைவில் வைத்து பட்டியல் காட்டப்படும். ஆனால் கூல் தளத்தில், ஆன் லைன் டிக்ஷனரியில் கிடைப்பது போல, ஏற்கனவே கோடிக்கணக்கான தளங்களை ஆய்வு செய்து அமைக்கபட்ட பட்டியலிலிருந்து சார்ந்த சொற்கள் காட்டப்படுகின்றன. இதனால் முழுமையான சொல்லை நாம் டைப் செய்திட வேண்டிய தில்லை. 

காட்டப்படும் பட்டியலில் அந்த தளத்தில் அதற்கான ஐகான் இருந்தால் அந்த ஐகான் காட்டப்படுகிறது. இதனால் நமக்கு வேண்டிய தளங்களை எளிதாக அடையாளம் காண முடிந்தது. தேடலைக் கூர்மைப்படுத்தி நமக்கு வேண்டியதை நோக்கி நம்மைச் செலுத்தும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு தேடலை மேற்கொண்டபின் வலது பக்கம் ஒரு பேனல் தரப்படுகிறது. அதில் ‘Explore By Category’ என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. 

நம் தேடலுடன் தொடர்புள்ள மற்ற பொருள் குறித்த பட்டியல் தரப்படுகிறது. இதில் கிளிக் செய்து முன்னேறுவதன் மூலம் தேடல் பொருளின் சரியான தகவல் தரும் தளத்திற்கு நாம் எடுத்துச் செல்லப்படுவோம். மேலும் இந்த வகையில் கர்சரைக் கொண்டு சென்றவுடன் சார்ந்த சொற்களுக்கான சரியான பொருள் பாப் அப் விண்டோவில் தரப்படுகிறது. இதைக் கொண்டு நாம் அந்த தளம் வேண்டுமா? அது நம் தேடலுடன் தொடர்புடையதா என்று முடிவெடுக்கலாம். 

கூல் தளத்தில் தேடல் மேற்கொள்கையில் தேடல் சொல்லுடன் தொடர்புடைய வெவ்வேறு பொருள்களுக்கு தனித்தனி டேப்கள் தரப்படுகின்றன. இவற்றின் மூலம் நமக்குத் தேவையான தளத்தினைத் தேர்ந்தெடுத்துச் செல்லலாம். சேப் சர்ச் (Safe search) என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. இது தொடக்கத்திலேயே இயங்குகிறது. இதனால் பாலியியல் மற்றும் சிறுவர்கள் காணக் கூடாத தளங்கள் வடிகட்டப்பட்டு பட்டியலிடப்படுகின்றன. அனைத்து தளங்களும் வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த வசதியை ஆப் செய்துவிட்டு தேடலாம்.

புதிய தேடுதல் தளம் – கூல்: ஐரிஷ் மொழியில் கூல் என்றால் அறிவு மற்றும் சால்மன் (வஞ்சிர மீன்) என்ற மீனையும் குறிக்கும். பழங்கால கதை ஒன்று அயர்லாந்து நாட்டில் இன்றும் வழங்குகிறது. சால்மன் மீன் ஒன்று ஒன்பது ஹேஸல்களை (பாதாம் பருப்பு கொட்டை போன்றது) மொத்தமாகத் தின்று விட்டு அறிவுக் குளத்தில் வீழ்ந்து விட்டது. அதன் மூலம் உலகின் அறிவு அனைத்தும் அந்த மீனுக்கு வந்துவிட்டது. இந்த மீனை பிடித்து முதலில் சாப்பிடுபவருக்கு மட்டும் உலக அறிவு வந்துவிடும் என்பது ஐதீகம். 

ஐரிஷ் நாட்டின் பிரபல கவிஞர் ஒருவர் இந்த மீனை எப்படியும் பிடித்துச் சாப்பிட்டுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பாய்ன் என்ற ஆற்றில் பல ஆண்டுகள் மீன் பிடித்தாராம். இறுதியில் தன் முயற்சியில் வெற்றி பெற்று அந்த அறிவு மீனைப் பிடித்தார். அதைத் தன் சிஷ்யனான "பின்கூல்' என்பவனிடம் கொடுத்து மீனை வறுத்துக் கொடு; ஆனால் ஒரு பிட் கூடச் சாப்பிடக் கூடாது என்று மிரட்டிவிட்டு குளிக்கச் சென்றார். 

பின்கூல் தன் தலைவரின் ஆணைக்கேற்ப பொறுமையாக மீனை பொன் நிறத்திற்கு வறுக்கத் தொடங்கினான். சாப்பிட ஆசை இருந்தாலும் தலைவரின் எச்சரிக்கையால் அடக்கிக் கொண்டான். வறுவல் முடியும் தறுவாயில் வறுத்த மீனை கைகளில் எடுக்கும் போது கட்டைவிரலில் சூடு பட்டு பொறுக்க முடியாமல் உடனே சூடு தணிக்க விரலை வாயில் வைத்து சூப்பினான். விரலை அழுத்தி எடுத்ததால் விரலோடு வந்த மீனின் இறைச்சி வாயினுள் சென்றது. அதனால் அவனுக்கு உலக அறிவு வந்ததாக இன்றும் அயர்லாந்தில் கதை உண்டு. 

(நம் நாட்டிலும் விரல் சூப்பும் பிள்ளைகளை அறிவு அதிகம் என்று சொல்வது இதனால்தானோ) ஐரிஷ் நாட்டு கதைகளில் எல்லாம் இந்த பின்கூல் ஒரு ஹீரோவாக இன்றும் வர்ணிக்கப்படுகிறார். அவரிடம் ஒரு கேள்வி கேட்டால் உடனே விரலை வாயில் வைத்து அதற்கான விடையைத் தந்துவிடுவதாக அனைத்து கதைகளும் சொல்கின்றன. கூல் தள நிறுவனர் இந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது மட்டுமின்றி அதே பாய்ன் என்ற ஆற்றில் அடிக்கடி மீன் பிடிப்பாராம். அதனாலேயே இந்த பெயரைத் தான் உருவாக்கிய தளத்திற்கு டாம் வழங்கியுள்ளார்.cuil முகவரி:- http://www.cuil.com/

சர்ச் இஞ்சின்களும் படம் தேடலும்

சர்ச் இஞ்சின்களில் சொற்களைக் கொண்டு அந்த சொல்
வரும் டெக்ஸ்ட் உள்ள தளங்களைத் தேடுவதோடு அந்த
சொற்களுக்கான படங்களையும் தேடிப் பெறலாம். அனைத்து
சர்ச் இஞ்சின்களும் இந்த வசதியைக் கொண்டுள்ளன.
எடுத்துக் காட்டாக தேசப்பிதா மஹாத்மா காந்தியின்
படங்கள் உள்ள தளங்களைத் தேடிப் பெற எச்ணஞீடடி என்று
டைப் செய்து சர்ச் இஞ்சின்களில் உள்ள படங்களைத்
தேடுவதற்கான லிங்க்குகளில் கிளிக் செய்தால் படங்கள்
சிறிய அளவில் வரிசைப்படுத்தப்பட்டு கிடைக்கும். இந்த
படங்களுக்கான தேடல்களை சர்ச் இஞ்சின்கள் எப்படி தேடிக்
காட்டுகின்றன என்று பார்க்கலாம். 


கூகுள், யாஹூ மற்றும் மைக்ரோசாப்டின் தளங்களைப் பார்த்து
அவற்றின் கட்டமைப்புகளின் தன்மை குறித்து இங்கு காணலாம்.
ஒரு சர்ச் இஞ்சின் அதன் தேடலுக்கு வைத்துள்ள தளங்களின்
எண்ணிக்கையே அதன் திறனைக் காட்டுகிறது. ”குஞுச்ணூஞிட 121,
617, 892, 992 தீஞுஞ ணீச்ஞ்ஞுண்” தளங்களை நான் தேடிக்
காட்டுகிறேன் என்று ஒரு தளம் சொல்கையில் அது அதன் திறனைக்
காட்டுகிறது. எத்தனை அளவில் அதிகமான எண்ணிக்கையில்
தளங்களின் தலைப்பு பட்டியலைக் கொண்டிருக்கிறதோ அந்த அளவில்
அதன் திறன் உயர்ந்ததாக உள்ளது. இந்த தலைப்பு பட்டியல்
எப்போதும் பல்லாயிரக் கணக்கான கோடி என்ற அளவில் உள்ளது.
இதனால் தான் ஒவ்வொரு தளமும் தான் எத்தனை தளங்களின்
இன்டெக்ஸ் வைத்திருக்கிறேன் என்பதை பறை சாற்றிக் கொள்கிறது.
அண்மையில் வெளிவந்த கூல் சர்ச் இஞ்சின் இந்த வகையில் மிக
அதிகமான எண்ணிக்கையில் தளங்களின் பட்டியலைக் கொண்டு தேடி
தகவல்களைத் தருவதாக அறிவித்துள்ளது. நம்மைப் பொறுத்தவரை
சர்ச் இஞ்சின்கள் எத்தனை தளங்களின் பட்டியலைக் கொண்டுள்ளது
என்பது முக்கியமல்ல; நாம் தேடும் தகவல்களைச் சரியாகத்
தேடித் துல்லிதமாகத்தருகிறதா என்பதையே நாம் பார்க்கிறோம்.
சாதாரண டெக்ஸ்ட் தேடுதலில் உள்ள சிரமங்கள் படங்களைத்
தேடுகையில் இன்னும் அதிகமாகின்றன. எனவே படங்களைத் தேடித்
தருவதில் எந்த சர்ச் இஞ்சின் தன் சாமர்த்தியத்தைக்
காட்டுகிறது என்பதைக் காண்கையில் அந்த தேடுதல் தளத்தின்
உண்மையான திறன் நமக்குத் தெரிய வரும். அந்த வகையில் இங்கு
கூகுள், யாஹூ மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் தேடுதல்
சாதனங்களை இங்கு காணலாம். 


சொற்கள் அடங்கிய தளங்களைத் தேடுகையில் சொற்களைத் தருகிறோம்.
சொற்களின் அடிப்படையில் டெக்ஸ்ட் அமைந்துள்ள தளங்களின்
பட்டியல் நமக்குக் கிடைக்கிறது. ஆனால் படங்களைத் தேடுகையில்
நாம் படங்களைக் கொடுப்பதில்லை. படங்களுடன் பொதுவாக
சார்ந்துள்ள சொற்களையே தருகிறோம். அவற்றின் அடிப்படையில்
தான் இந்த தேடுதல் சாதனங்கள் தேட முடிகிறது. படங்களைக்
கண்டறிந்து அவை அமைந்துள்ள தளங்களின் பெயர்களைப்
பட்டியலாய்த் தர முடிகிறது.



தேடுதல் சாதனத்தைத் தருவதில் மைக்ரோசாப்ட் தாமதமாகத்தான்
இந்த துறையில் நுழைந்தது. கூகுள் இந்த பிரிவில் சிறந்த
பெயர் எடுத்த பின்பே ஆஹா! நாம் விட்டுவிட்டோமே எனத் தன்
வல்லுநர் படையுடன் நுழைந்தது.


http://www.live.com/?scope=images
 

என்ற முகவரியில் உள்ள தளம் அதன் தேடல் சாதனத்தின் மூலம்
படங்கள் உள்ள தளங்களைப் பெற்றுத் தருவதாக உள்ளது. இதன்
முதன்மையான தளம் 

http://www.live.com/
 

என்ற முகவரியில் கிடைக்கிறது. எது எப்படி இருந்தாலும் இந்த
தேடல் சாதனம் இன்று நல்ல அடிப்படைக் கட்டமைப்பில்
வடிவமக்கப்பட்டு இயங்குகிறது. இந்த தளத்தில் நுழைந்து என
டைப் செய்து தேடச் சொன்னபோது தம்ப்நெயில் படங்களுடன்
பட்டியல் நீண்டது. கூடுதல் வசதிக்கு “கீஞுஞூடிணஞு ஞதூ”
என்ற வசதியும் தரப்பட்டுள்ளது. இந்த பிரிவு மற்ற சர்ச்
இஞ்சின்களைப் பின்னுக்குத் தள்ளுகிறது. இதன் மூலம் நாம்
தேடிப் பெறும் படங்கள் நல்ல ஆஸ்பெக்ட் ரேஷியோவில்
கிடைக்கிறது. இது கூகுள் உட்பட மற்ற சர்ச் இஞ்சின்களில்
இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் மைக்ரோசாப்ட்
என்னும் வசதி கொடுத்து படங்களை சேமித்து வைக்கும் வசதியைத்
தருகிறது. இது மொத்தத்தில் மற்ற தளங்களைக் காட்டிலும் ஒரு
சிறப்பான இடத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குத் தருகிறது.
ஆனால் தேடி எடுத்து வைத்துள்ள தளங்களின் பட்டியல்
எண்ணிக்கையில் கூகுள் தான் முதல் இடத்தில் உள்ளது. 



கூகுள்: தேடுதல் சாதனம் என்று சொன்னவுடன்
எந்தவிதமான அறிமுகம் இன்றி நாம் உயர்வாகக் கருதும் ஒரே தளம்
கூகுள் ஆகும். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தன்னை
மேம்படுத்திக் கொண்டு இயங்குகிறது இந்த தளம். இணையத்தில்
தகவல் தேடுபவர்களில் பெரும்பான்மையான எண்ணிக்கையில்
பயன்படுத்தும் ஒரே தளம் இதுவே. ஆனால் படங்களைத்
தேடித்தருவதில் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது.
தேர்ந்தெடுப்பதில் மைக்ரோசாப்ட் தரும் பல ஆப்ஷன்கள் இதில்
இல்லை. இதனுடைய முதன்மைத் தேடல் பட்டன்களுக்கு அருகே உள்ள
“அஞீதிச்ணஞிஞுஞீ ஐட்ச்ஞ்ஞு குஞுச்ணூஞிட” மைக்ரோசாப்ட் போல
சில வசதிகளை உள்ளடக்கியதாக உள்ளது. ஆனால் உடனடியாக
முடிவுகளைத் தருவதில் கூகுள் சற்று தாமதப்படுத்துகிறது.



யாஹூ சர்ச்: மற்ற தளங்களுடன் ஒப்பிடுகையில் தேடுதல்
நடத்த இது கொண்டிருக்கும் தளப் பட்டியல் எண்ணிக்கையில் இது
இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. நாம் எடுத்டுக் கொண்டுள்ள
மூன்று தளங்களில் முதலாவது இடத்தை கூகுள் மற்றும் மூன்றாவது
இடத்தை மைக்ரோசாப்ட் கொண்டுள்ளது. லைவ் சர்ச் போல யாஹூ
இமேஜ் தேடலில் சைஸ், கலர் போன்றவற்றைக் கொடுத்து தேடலின்
நோக்கத்தை வரையறை செய்து தேடிக் கொடுக்கிறது. இருந்தாலும்
தொடர்ந்து இந்த தேடலின் தன்மைகளை மேம்படுத்தி வருகிறது.
இதன் தன்மைகளை அறிய http://in.gallery.yahoo.
com/apps/15750
 
என்ற முகவரியில் உள்ள
தளத்தில் தெரிந்து கொள்ளலாம். அத்துடன் ஏதாவது ஒரு சொல்
கொடுத்துத் தேடினால் அந்த சொல் கொடுத்து ஏற்கனவே
தேடியவர்களுக்குப் பட்டியலிட்ட தளங்களையும் தேடித் தருவதாக
நமக்குசெய்தி தரப்படுகிறது. இது கூகுள் தளத்தில் இல்லை;
மைக்ரோசாப்ட் வேறு பெயர்களில் தருகிறது.



மேலே சொல்லப்பட்ட மூன்று தளங்களுடன் வேறு இரண்டு தளங்களும்
இங்கு சொல்லப்படத் தக்கதாக உள்ளன. அவற்றில் முதல் இடம்
பெறுவது 

www.facesaerch.com 
என்ற (ஸ்பெல்லிங்
சரியா? என்று உடனே கடிதம் எழுத வேண்டாம். இந்த தவறான சொல்
உள்ளதுதான் அந்த தளம். ஒரு நோக்கத்துடன் தான் இது
தரப்பட்டுள்ளது) முகவரியில் உள்ள தேடல் சாதனமாகும். இது
ஒன்றுதான் குறிப்பிட்ட வகையில் தேடும் சாதனமாகும்.
முகங்களைத் தேடும் சாதனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Google Face Search technology 
என்ற
தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இது இயங்குகிறது. இதன்
பின்னணியில் he Google API
utilizing Google’s image index
 
தொழில்
நுட்பம் செயல்படுகிறது. இதன் சிறப்பு என்னவென்றால் அதன்
துல்லியதன்மை தான். ஐபாட் திரையில் நாம் காண்பது போல இது
முடிவுகளைத் தருகிறது. இன்னொரு குறிப்பிடத்தக்க தேடல்
சாதனம் எக்ஸாலெட் (http://www.exalead.com/image/
homepage)
 
ஆகும். இதன் பெயரையும் தவறு
என்று திருத்த முயற்சிக்க வேண்டாம். நாம் கொடுக்கும்
சொல்லுக்கு மிக அருமையான தேடலை மேற்கொண்டு முடிவுகளைத்
தருகிறது. இது தேடும் தளங்களின் எண்ணிக்கை குறைவாக
இருந்தாலும் சிறப்பாக முடிவுகளைத் தருகிறது. தேடலை வரையறை
செய்வதில் மற்ற அனைத்து தளங்களைக் காட்டிலும் அதிகமான
எண்ணிக்கையில் ஆப்ஷன்களைத் தருவது இதுதான். இந்த ஆப்ஷன்களை
கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் தந்தால் அந்த தளங்களும்
சிறப்பினைப் பெறும். 



இணைய உலகில் அண்மைக் காலத்தில் தேடல் சாதனங்கள் வளம் பெற்று
வருவது கூடுதல் வசதிகளை நமக்குத் தருவதில் உள்ள போட்டியைக்
காட்டுகிறது. இது ஒரு நல்ல முன்னேற்றமாகும். சர்ச்
இஞ்சின்களைப் பொறுத்தவரை அனைத்துமே முக்கியமாகும். டெக்ஸ்ட்
கொண்டு தேடுவது முதல் இமேஜ் தேடுகையில் வரையறைகளை வழங்கி
துல்லியமாக இமேஜ்களைத் தருவது வரை அனைத்துமே தேவைதான்.
இவற்றில் தேடப்படும் தளங்களின் முகப்பு பட்டியலின்
எண்ணிக்கையைப் பொறுத்தவரை கூகுள் இஞ்சினை எதுவும் முந்த
முடியாது. இன்டியூடிவ் தேடல் என்ற முறையில் நம் தேடலை தானே
உணர்ந்து கொண்டு தேடித் தரும் மைக்ரோசாப்ட் முதல் இடம்
பெறுகிறது. சிறந்த வகையில் தேடலுக்கான வரையறைகளைத் தருவதில்
உதுச்டூஞுச்ஞீ முதல் இடம் பெறுகிறது. முகங்களை வரையறை
செய்து அடையாளங்களைப் பெற்று தருவதில்
Exalead 
முதல் இடம் பெறுகிறது.

No comments:

Post a Comment