Search This Blog

Friday, March 18


இலவச எழுத்துருக்கள்

dafont_xmas2007
7000 ற்கு மேற்பட்ட எழுத்துருக்களை இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம். 
How to install a font (details in the Help section) 
Unzip the files you have downloaded, then :
  • Windows Vista : Right-click on the font files > "Install"

  • Windows XP : Put the font files into C:\Windows\Fonts

  • Mac OS X : Double-click the font file > "Install font" button. Other OS...

  • 500 எழுத்துருக்கள் இலவசம்


    500 வகையான எழுத்துருக்கள் (ஃபாண்ட்ஸ்) இந்தத்தளத்தில் இலவசமாகக் கொடுக்கப்படுகின்றன.


    எந்த எழுத்துரு உங்களுக்குப் பிடித்துள்ளதோ அதில் சொடுக்கினால் சுருக்கப்பட்ட ஒரு கோப்பு இணையத்திலிருந்து உங்கள் கணினிக்கு தரவிறக்கம் ஆகும். அதை வின்ரார், வின்சிப் போன்ற சுருக்கி-விரிப்பான் மென்பொருள் பயன்படுத்திப் பிரித்தெடுக்கவும்.

    பின் அந்த .டிடிஎஃப் கோப்பை உங்கள் ஃபாண்ட்ஸ் ஃபோல்டரில் அமர்த்தவும். அவ்வளவுதான்.

    500 ஃபாண்ட்களையும், ஒரே நேரத்தில் இணையிறக்க - ஒரே சொடுக்கில் இணையிறக்க இவர்கள் நம்மிடம் பணம் கேட்கிறார்கள். ஆனால் தனித்தனியாக ஒவ்வொரு விருப்ப எழுத்துருவை தரவிறக்கம் செய்யப் பணம் கேட்கவில்லை. இலவசம்தான்.

    http://www.fonts500.com/

    இந்த எழுத்து எங்கு இருக்கும்?

    எப்போதாவது நமக்கு கிடைக்கும் ஒரு சில படங்களில் காணப்படும் எழுத்து வகைகள் நம்மை ரசிக்க வைக்கும் அளவில் காட்சி தரும். இந்த பாண்ட் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுவோம். ஆனால் அந்த பாண்ட் பெயர் என்னவென்று தெரியாமல் எப்படி தேடுவது? இதற்கு வழி காட்டுகிறது ஓர் இணைய தளம். அதன் முகவரி: http://www. myfonts.com/WhatTheFont/ 
    இந்த தளம் எப்படி செயல்படுகிறது? வெகு எளிது. 


    முதலில் எந்த டெக்ஸ்ட்டில் உள்ள எழுத்து அல்லது படத்தில் இணைந்த எழுத்து குறித்து சந்தேகம் உள்ளதோ அதன் ஸ்கேன் செய்யப்பட்ட படத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஸ்கேன் செய்திடாமல் பட பைலாக இருந்தால் இன்னும் வசதி. இந்த தளத்தைத் திறந்து உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஸ்கேன் செய்யப்பட்ட பைல் அல்லது இமேஜ் பைலை அப்லோட் செய்திடுங்கள். அதற்கு இந்த தளத்திலேயே வசதி உள்ளது. உடன் இந்த தளம் அந்த எழுத்து என்ன என்று கண்டுபிடித்துச் சொல்லும்.
    இமேஜைக் கொண்டு ஒவ்வொரு எழுத்தாக அது சரிதானா என்று உங்களிடம் கேட்கும். நீங்கள் சரியென்று தோன்றினால் உடனே அந்த எழுத்து பைல் உங்களுக்குக் கிடைக்கும். இந்த தளத்தினால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் அதனை What The Font Forum என்ற அமைப் பிற்கு அனுப்பலாம். இதன் உறுப்பினர்கள் எவரேனும் எழுத்து என்ன வகை என்று கண்டறிந்து சொல்வார்கள். எழுத்துக்கள் குறித்து தீவிரமாக செயல்படுபவர்களுக்கு இந்த தளம் ஒரு உதவிடும் தளமாகும்.

    எழுத்துக்களை இன்ஸ்டால் செய்திட...

    எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் எழுத்து வகைகளை எப்படி இன்ஸ்டால் செய்வது என்றும் நீக்குவது என்றும் பார்க்கலாம். எழுத்து என்பது டாகுமென்ட் ஒன்றில் நாம் உருவாக்கும் வடிவங்களின் அமைப்பு என்று அடிப்படையில் கொள்ளலாம். மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்படுகையில் சில வகை எழுத்துக்கள் தாமாக பதியப்பட்டே கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறேன்:


    Verdana, MS Serif, MS Sans Serif, Arial, Times New Roman, Symbl, Wingdings இவை எல்லாம் ட்ரூ டைப் (True Type) என்ற வகை எழுத்து வடிவங்களாகும். நீங்கள் புதியதாக ஒரு எழுத்து வகையினை கம்ப்யூட்டரில் பதிக்க விரும்பினால் அது இந்த வகையில் அமைந்திருக்க வேண்டும். குறிப்பாக விண்டோஸ் இயக்கத்தில் இயங்குவதாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த எழுத்துவகை பைலை அப்படியே முதலில் ஜஸ்ட் காப்பிசெய்து கொள்ளுங்கள். பின் விண்டோஸ் டைரக்டரியைத் திறக்க வேண்டும். சில வேளைகளில் மறைக்கப்பட்ட டைரக்டரிகளைத் திறக்கவா என்று கேள்வி கேட்கப்படும்; அதற்கு ஓகே கிளிக் செய்தால் பாண்ட்ஸ் என்னும் போல்டர் காட்டப்படும். இதனைக் கிளிக் செய்து திறக்க வேண்டும். பின் வழக்கமாக பைலை பேஸ்ட் செய்வது போல பேஸ்ட் கட்டளை கொடுத்தால் அந்த எழுத்து வகை இன்ஸ்டால் செய்யப்படும். போல்டரை ரெப்ரெஷ் செய்தால் நீங்கள் இன்ஸ்டால் செய்த எழுத்து வகை அகர வரிசையில் பட்டியலில் இடம் பெற்றிருப்பதனைக் காணலாம். எந்த எழுத்து வகையினையேனும் நீக்க எண்ணினால் இதே பாண்ட்ஸ் போல்டரைத் திறந்து குறிப்பிட்ட பைலைத் தேர்ந்தெடுத்து டெலீட் கட்டளை கொடுத்தால் போதும். எழுத்துவகைகளுடன் செயல்படுகையில் ஒன்றை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். எந்த எழுத்துவகையையும் பாண்ட்ஸ் போல்டரிலிருந்து நேரடியாக இமெயில் அட்டாச்டு பைலாக அனுப்ப முடியாது. எனவே அதனை வேறு ஒரு டிரைவ் அல்லது போல்டருக்குக் காப்பி செய்து பின்னரே அட்டாச் செய்து அனுப்ப முடியும்.

    Blambot Comics Fonts

    காமிக் எழுத்துகள் Comics Fonts டவுன்லோட் பண்ணிக்க............

    http://rapidshare.com/files/66527755/Blambot_Comics_Fonts.rar

    No comments:

    Post a Comment