Search This Blog

Sunday, March 20


பயன்தரும் 10 தளங்கள்

கொம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கான அளப்பரிய குறிப்புகளை நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை.
அதனால், எளிய முறையில் குறிப்பு களைத் தரும் தளங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பக் கருவிகள் குறித்த சில தளங்களைத் தற்போது பார்க்கலாம்.

www.quotedb.com: நீங்கள் சிறந்த பேச்சாளராக வேண்டுமா? உங்கள் உரை வீச்சுகளில் அடிக்கடி பல பெரிய அறிஞர்கள் மற்றும் பெய தலைவர்களின் கூற்றுக்களைக் கோடிட்டுக் காட்ட வேண்டுமா? அப்படியானால் அவற்றுக் கான சிறந்த தளம் இதுதான். 60 வகை பொருள்களில், ஏறத்தாழ 4,000 புகழ் பெற்ற மேற்கோள் உரைகள் உள்ளன.
சிறந்த பேராசியராக, மாணவர்களிடம் நற்பெயர் பெற விரும்பும் ஆசியர்களுக்கும் இது உகந்த தளம்.

www.photonhead.com: டிஜிட்டல் கெமரா வாங்கிப் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். எளிதாக, சிறுவர்கள்கூட இவற்றைக் கையாளத் தொடங்கிவிட்டனர். ஆனால், முழு மையாக அதன் வசதிகளைப் பயன்படுத்துகின்றனரா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். டிஜிட்டல் கெமராவின் வசதிகள் என்ன? எதனைப் பயன்படுத்தினால் என்ன கிடைக்கும் என்று விலாவாயாகத் தரும் தளம் இது. அபெர்ச்சர், ஸ்பீட், ரெட் ஐ எனப் பல விஷயங்கள் குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன. குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பது போன்ற பல டுடோரியல்கள் உள் ளன. சிலேட்டர் றையில் ஒரு கெமரா ஆன்லைனிலேயே தரப்பட்டு எப்படி இயக்குவது என்பது சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆனால், கொஞ்சம் பழைமையானது போல சில விஷயங்கள் இருக்கின்றன. நவீன தொழில் நுட்பம் தான் வேண்டும் என எண்ணுபவர்கள்www.slrgear.com என்ற தளத்திற்குச் செல்லலாம்.

www.downloadsquad.com: சொப்ட் வேர் மற்றும் வெப் புரோகிராம்களில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்தத் தளத்தில் தகவல்கள் அப்டேட் செய்யப்படும். மிகவும் பயனுள்ள தகவல்களைத் தருவதுடன், வேடிக்கையாகவும் சில சமயம் செய்தி களைத் தரும்.

www.stopbadware.org: இது பக்கத்து வீட்டுக் காவல்காரன்போல் செயற்படுகிறது. ஏதேனும் மோசமான விளைவு களைத் தருவதற்கென்றே உருவாக்கப்படும் தளங்கள் குறித்த தகவல்களைத் தருகிறது. இதுபோன்ற தளங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் தகவல்களைத் திரட்டி அவற்றின் அடிப் படையில் மோசமான தளங்கள் மற்றும் புரோகிராம்களின் பட்டியலை அளிக் கிறது.

www.techcrunch.com: இணையதள வெப்சைட் குறித்த செய்திகள் மற்றும் ஆய்வுகள் குறித்த தகவல்களைத் தருகி றது. குறிப்பாக, வெப் 2.0 குறித்த அண் மைக்காலத்திய செய்திகள் அதிகம்.

www.gmailtips.com : கூகுள் மெயில் பயன்படுத்துபவர்களுக்கான தகவல் களஞ்சியம். அதிகமான எண்ணிக்கை யில் குறிப்புகள், டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் தரப்பட்டுள்ளன.

www.thegreenbutton.com: இதுவும் கூகுள் மெயில் பயன்படுத்துபவர்களுக் கான தகவல் களஞ்சியம். இதிலும் பல் வேறு விதமான, அதிகளவு எண்ணிக்கை யிலான குறிப்புகள், மற்றும் ட்ரிக்ஸ் தரப் பட்டுள்ளன.

www.tweakguides.com: உங்கள் சிஸ்டத்தை ட்யூன் செய்து அதன் திறனை அதிகப்படுத்த வேண்டுமா? அதற்கு இதுதான் நீங்கள் செல்ல வேண்டிய தளம். விளையாட்டுகள், பிரவுசர்கள், டிரைவர்கள் என அனைத்தையும் இந்ததளம் மூலம் மேம்படுத்தி உங்கள் கொம்பியூட்டர் இயக்கத்தை புதுப்பிக்கலாம்.

www.ilounge.com: இதனுடைய பெயர் தெரிவிப்பது போல் இது ஐபாட் மற்றும் ஐட்யூன் ஆகியன குறித்த தக வல்களை தரும் தளம். இந்த இரண்டு விடயங்கள் குறித்தும் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் இங்கு கிடைக்கும். எப்படிப் பயன்படுத்துவது என்ற டுடோரியல் தகவல்கள் மிகவும் பயனுள்ளன. இந்த இரண்டைப் பொறுத்தவரை இந்தத் தளத்தை ஒரு கடல் எனலாம். இதில், ஐபாட் 2.2 வழி காட்டி இபுக்காக உள்ளது. இதில், 202 பக்க தகவல்கள் ஐபாட் குறித்து உள் ளன.

www.goaskalice.com: அமெரிக்க கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்தும் மெடிக்கல் இணையதளம். சிலர் கேட்கக் கூச்சப்படும் கேள்விகளை, யாரென்று காட்டிக்கொள்ளாமல் இங்கு இடலாம். சரியான முறையான பதில் கிடைக்கும்.

நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை

நம் வீட்டில் குழந்தைகள் நம்மிடம் கேட்கும் முறையான கேள்விகளுக்கு முறையான பதிலைத் தர வேண்டும் என்றால் நாம் பல புத்தகங்களைப் புரட்ட வேண்டியுள்ளது. சில கேள்விகள் நியா யமானவையாக இருந்தாலும் அதற்கு பதிலே கூற முடியாது.
குழந்தைகள் மட்டுமல்லாது சிறுவர்களும், இளைஞர்களும் ஏன் சில சமயங்களில் பெரியவர்களும் இது போன்ற கேள்விகளைக் கேட்டு பதில் தேடுகின்றனர்.
இந்த உலகில் நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களில் நமக்கு ஆர்வம் இருக்கும் வரை கேள்விகள் எழுந்துகொண்டுதான் இருக்கும். ஏன்? எப்படி? என்ன? என்ற ன்று கேள்விகளைக் கொண்டுதான் நாம் நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களை அறிந்து கொள்கிறோம்.

இதுபோன்ற கேள்விகளைத் தொகுத்து அவற்றிற்கான பதில்களையும் சுருக்கமாகக் கொண்டு ஒர் இணையதளம் இயங்குகிறது. இந்த தளத்தின் முகவரி http://www.whyzz.com.

இதனைப் பயன்படுத்த எளிதான முதல் வழி, இதன் முகப்புத் தளத்தில் உள்ள தேடுதல் கட்டத்தில் நம் கேள்வியை சுருக்கமாக டைப் செய்து அருகில் உள்ள கேள்விக்குறி யின் மீது கிளிக் செய்வதுதான். உடன் பல பதில்கள் கொண்ட லிங்குகள் கிடைக்கும்.
இதில், உங்களுக்குத் தேவையான பதிலுக்கான லிங்கினைக் கிளிக் செய்தால் சற்று விரிவான தகவல்கள் கிடைக்கும். பதில் இல்லை என்றால் உங்கள் கேள்வி எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளது. விரைவில் அதற்கான பதில் தரப்படும் என்ற குறிப்புக் கிடைக்கும்.

இன்னொரு வழியிலும் தேவையான தகவலைத் தேடலாம். இந்த கேள்விக்கான கட்டத்தின் கீழாக Featured Answer, Most Recently Answered மற்றும் Category . இதில், மேலும் பிவுகளாக Nature, Animals, World, Science, Human Body, Serious Issues, Creativity & Imagination, Fun Stuff, Current Events எனப் பல பிவுகளை காணலாம்.

இவற்றில் உங்களுக்கு தேவையான பொருள் உள்ள பிரிவில் கிளிக் செய்து விடையைப் பெறலாம். இதில் விடை தரப்படாத கேள்விகளையும் காணலாம். உங்களுக்குத் தெரிந்தால் அதற்கான பதிலையும் அனுப்பலாம். சிறுவர் களுக்கு இந்தத் தளத்தை அறிகப்படுத்தினால், அவர்களே அவர்களின் சந்தேகங்களுக்குப் பதில் பெறுவார்கள்.

Free Online Screen Recorder


அருமையான இணையத்தளம் , மென்பொருள் தரவிறக்கம் செய்ய தேவையில்லை இணைய உலாவியின் உதவியுடன் ஸ்கீரின் ரெகோட் செய்யமுடியும், கணனி விளக்கங்களை விடியோக்களாக பதிவு செய்து மற்றவர்களுக்கு உதவ நல்ல பயனுள்ள இணையத்தளம்

* Register & use it anywhere, anytime
No download. Compatible with Windows, Mac OS X, Linux.

* Capture videos of onscreen action in one click
Record screencasts, tutorials, demos, training, lectures and more.

* Share and stream videos online in Flash
Embed them on blogs and webpages or send them by email.

http://www.screentoaster.com/

இணைய வடிவமைப்புக்கு இலவச ஐகான்கள்

இணைய வடிவமைப்பாளர்களுக்கு (Web Designers) உயர்தர ஐகான்களை தேடி கண்டுபிடிப்பது சற்றே கடினமான வேலைதான். பெரும்பாலும் கூகிள் இமேஜசில் தேடி கொண்டு இருப்பார்கள். திருப்திகரமான ஐகான் கிடைப்பது குதிரை கொம்பான விசயமாக இருக்கும்.

அவர்களுக்கான வேலையை எளிதாக்குகிறது iconfinder.net . இந்த தளத்திற்கு சென்று உங்களுக்குதேவையான உயர்தர ஐகான்களை இலவசமாக பெற்று கொள்ளலாம். உங்கள் தேடலுக்கு ஏற்ற ஐகான்களை இந்த தளம் தரும்.

http://www.iconfinder.net/

மொபைல் போனில் படிக்கக் கூடிய....

மொபைல் போனில் படிக்கக் கூடிய நூலாக பழந்தமிழ் இலக்கியமான சங்க இலக்கியம் உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டின் வேலூரைச் சேர்ந்த தகவல் தொடர்பு துறையில் பயிற்சி பெற்ற சில இளைஞர்கள் "மொபைல் வேதா' என்ற பெயரில் குழு அமைத்து ஆரவாரமின்றி, கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் நூல்களை மொபைல் போனில் பதிந்து படிக்கும் வகையில் தந்து வருகின்றனர். 

இந்த இளைஞர்கள் அனைவரும் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள். திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம் போன்ற பழந்தமிழ் இலக்கியங்கள் பல இவர்களால் இணையதளத்தில் ஏற்றப்பட்டுள்ளன. 

முதலில் www.thinnai.inffo என்ற முகவரியில் இயங்கிய தளம் தற்போது www.fublish.com என்ற பெயரில் இயங்குகிறது. 

இந்த தளத்திலிருந்து நூல்களை இறக்கிட முதலில் இங்கு உங்கள் பெயர் மற்றும் இமெயில் முகவரி கொடுத்து பதிந்து கொள்ள வேண்டும். பின் உங்களுக்கு தேவையான நூல்களை கொம்ப்யூட்டருக்கு இறக்கி, பின் மொபைல் போனுக்கு மாற்றிக்கொள்ளலாம். உங்கள் மொபைல் போனில் இணைய வசதி இருந்தால் நேரடியாக இந்த தளத்திலிருந்து நூல்களை இறக்கி பதிந்து படிக்கலாம். இவை அனைத்தும் இலவசமாகவே கிடைக்கின்றன.

வைரஸை அழிக்க NOKIA தரும் பாதுகாப்பு

அண்மையில் "நொக்கியா' போன்களில் மெசேஜ் அனுப்புவதை முடக்கும் வைரஸ் ஒன்று வேகமாக பரவி பலரின் மொபைல் போன்களில் நாச வேலை செய்து வந்தது. எஸ் 60 ஒப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் மொபைல் போன்களில் மட்டுமே இந்த வைரஸ் தாக்கம் தெரியவந்தது. போனை புதிய சாப்ட்வேர் கொண்டு ரீ செட் செய்தால் இந்த வைரஸ் நீங்கி விடுகிறது. 
ஆனால், அனைத்து டேட்டாக்களும் அழிந்து விடுகின்றன. இந்த குறையை போக்க நோக்கியா நிறுவனம் வைரஸை செயல் இழக்கச் செய்திடும் புரோகிராமினை வழங்கியுள்ளது. இதனை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்தால் போதும். இந்த தொகுப்பினை டttணீ://ஞுதணூணிணீஞு.ணணிடுடிச்.ஞிணிட்/ண்ட்ண்ஞிடூஞுச்ணஞுணூ என்ற ?கவ?யில் பெறலாம்.

அண்மையில் "நொக்கியா' போன்களில் மெசேஜ் அனுப்புவதை ?டக்கும் வைரஸ் ஒன்று வேகமாக பரவி பல?ன் மொபைல் போன்களில் நாச வேலை செய்து வந்தது. எஸ் 60 ஒப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் மொபைல் போன்களில் மட்டுமே இந்த வைரஸ் தாக்கம் தெ?யவந்தது. போனை புதிய சாப்ட்வேர் கொண்டு ? செட் செய்தால் இந்த வைரஸ் நீங்கி விடுகிறது. ஆனால், அனைத்து டேட்டாக்களும் அழிந்து விடுகின்றன. இந்த குறையை போக்க நோக்கியா நிறுவனம் வைரஸை செயல் இழக்கச் செய்திடும் புரோகிராமினை வழங்கியுள்ளது. இதனை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்தால் போதும். 

இந்த தொகுப்பினை http://europe.nokia.com/smscleaner என்ற முகவரியில் பெறலாம்.

விக்கிபீடியாவிற்கு போட்டியாக கூகுள் தளம்

விக்கிபீடியாவிற்கு போட்டியாக கூகுள் தளம், http://knol.google.com என்ற முகவரியில் ஓர் இணையத்தளப் பிரிவினை தொடங்கியுள்ளது. 
இதில் பல பொருள் குறித்த கட்டுரைகள் போடப்பட்டுள்ளது. இந்த தளத்தில் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த கட்டுரைகளை படிப்பது வெகு எளிது. http://knol.google.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்கு முதலில் செல்லுங்கள். தேடுதல் வசதிகளைத் தருவதில் கூகுளின் திறன் அனைவரும் அறிந்த ஒன்று. 

எனவே, நீங்கள் தேடி எடுத்துப் படிக்க வேண்டிய கட்டுரைகள் அனைத்தும் பட்டியலிடப்படும். 

இவற்றிலிருந்து நீங்கள் படிக்க விரும்பும் கட்டுரையை தேடிப் பெற்று படிக்கலாம். 

விக்கி பீடியாவினைப் போல் இங்கு நாம் எழுதும் கட்டுரையினை பதிக்கும் வசதியும் இந்த தளத்தில் உள்ளது. உங்கள் கட்டுரையைப் பதிக்க வேண்டும் என்றால் http://knol.google.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்கு முதலில் செல்லவும். 

அதன்பின் Write a Knol என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் உங்கள் கூகுள் அக்கவுண்ட் மூலம் முதலில் பதிவு செய்யச் சொல்லி கேட்கப்படும். 

உங்கள் கூகுள் அக்கவுண்ட், யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து செல்ல வேண்டும். 

இப்போது Write a Knol என்ற பட்டனை அழுத்தியவுடன் கட்டுரையினை அமைக்க ஓர் அடிப்படை கட்டமைப்பு உங்களுக்கு தரப்படும். 

இங்கு உங்களுக்கான லைசன்ஸையும் பெற்றுக்கொள்ளலாம். இந்த லைசன்ஸ் பெற்றுக்கொள்வது உங்களுக்கு நல்லது தான். ஒரு ஸ்டேட்டஸூம் கிடைக்கும். மூன்று வகையான லைசன்ஸ் இருக்கும். 

உங்கள் கட்டுரையை மற்றவர்கள் எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கான வரையறையை இது வகுத்துத் தரும். இதனைப் பெற்றுக்கொண்டு உங்கள் கட்டுரையை இதில் பதிக்கவும். 

உலகத்தரத்திலான தகவல் களஞ்சியத்தில் உங்கள் கட்டுரை இடம்பெற வழிகிடைத்துவிடும். 

உங்களுக்கு தெரிந்த பொருள் குறித்த கட்டுரை ஒன்றை எழுதி உடனே இதில் பதிக்க தொடங்கலாம்.

அழித்த பைல்களை மீட்க..........

re
கொம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு அடிக்கடி ஒரு சிக்கல் வரும். தேவையான ஃபைல்களை சில நேரங்களில் நாம் அறியாமலேயே அழித்துவிட்டு திண்டாடுவோம். 
அவை ரிசைக்கிள் பின்னில் இருந்தால் பரவாயில்லை. வேண்டுமென்றே ஷிப்ட் அழுத்தி டெலீட் கீயை பயன்படுத்தி றீ சைக்கிள் பின்னுக்கு செல்லாமல் சில பைல்களை அழித்துவிடுவோம். பின்னர் அதற்காக வருத்தப்படுவோம். இவ்வாறு அழிக்கப்பட்ட ஃபைல்களை எடுத்து தருவதற்கு என்று பல புரோகிராம்கள் உள்ளன. அவற்றில் பல சாதாரணமாக கொம்ப்யூட்டரை பயன்படுத்துபவர்கள் கையாளும் வகையில் இருக்காது. 
அனைவரும் கட்டாயம் கொண்டிருக்க வேண்டிய ஒரு புரோகிராம் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது. இந்த புரோகிராமின் பெயர் Recover files இது கிடைக்கும் தளத்தின் முகவரி
றீ சைக்கிள் பின்னிலிருந்து நீக்கப்பட்ட பைல்கள், நெட்வொர்க் கட்டமைப்பில் அழிக்கப்பட்ட பைல்கள், கையடக்க பிளாஷ் கார்டிலிருந்து ஒரேடியாக நீக்கப்பட்ட பைல்கள், டாஸ் இயக்கம் மூலம் டெலீட் செய்த பைல்கள், விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று ஷிப்ட் கீயை அழுத்திக்கொண்டு கட்டாயமாக நீக்கிய பைல்கள் என அத்தனை வகையிலும் அழித்த பைல்களை இந்த புரோகிராம் மூலம் மீட்டு விடலாம்.
மிகச்சிறிய, ஆனால் வேகமாக இயங்கும் புரோகிராமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 
விண்டோஸ் 95 தொடங்கி விஸ்டா வரையில் இது இணைந்து செயல்படுகிறது.

பாடல்களை இணையதளத்தில் சேமித்து வைக்க

mp3tunes_logo
உங்களுக்கு பிடித்தமான பாடல்களை இணையதளத்தில் சேமித்து வைக்க ஒரு தளம் உள்ளது. இந்த தளத்தில் உங்களை பதிந்து கொண்டால், மியூசிக் ஃபைல்களை 2 GB வரை சேமித்து வைக்கலாம். 
அதுவும் கட்டணம் எதுவும் செலுத்தா மலேயே இதை மேற்கொள்ளலாம். எனவே, சி.டி.,க்களை தூக்கி கொண்டு அலையாமல் எப்போது பாடல் வேண்டுமோ, அப்போது இந்த தளத்திற்கு சென்று பாடலை இறக்கி கேட்டு மகிழலாம். இந்த தளத்தின் முகவரி
இந்த தளத்திற்கு சென்று உங்களுக்கு என ஒரு அக்கவுண்டை உருவாக்கி பின் நீங்கள் சேர்த்து வைத்த பாடல்கள் அனைத்தையும் அப்லோட் செய்யலாம். 
அதன் பின், எந்த இடத்திலிருந்தும் இந்த தளத்திற்கு சென்று அங்கே உங்கள் யூசர் அக்கவுண்ட் மூலம் உங்கள் பாடல் களை பெறலாம். 
அனைத்து வகையான பார் மட்டுகளையும் இது ஏற்றுக்கொள்கிறது.

அறிவியல் வீடியோக்களை காண ஒரு தளம்

science
அறிவியல் விஷயங்களைக் தெரிந்து கொள்வது அனைவருக்கும் பிடித்தமான விஷயமாகும். அறிவியலில் எந்த வகை பிரிவாக இருந்தாலும், அதனை நாம் முழுமையாகத் தெரிந்துகொள்ள ஆசைப்படுவதும் இயற்கையே. ஆனால், இந்த தகவல்கள் வெறும் வரிகளாக, விரிவுரைகளாக இருந்தால் நமக்கெல்லாம் சற்று சலிப்பாக இருக்கும். இதனை நீக்கி பல வகைகளில் அறிவியலின் அனைத்து பிரிவுகள் குறித்தும் கூறும் இணையதளம் ஒன்று என்ற http://sciencehack.com  முகவரியில் உள்ளது. 
இதன் சிறப்பம்சம் என்னவெனில், அனைத்து விஷயங்களும் வீடியோக் காட்சிகளாக விளக்கப்படுவது தான். இதன் பிரிவுகளை பட்டியலிட்டால் உங்களுக்கு நிச்சயம் ஆர்வம் ஏற்படும். 
அண்மைக்காலத்திய வீடியோக்கள், இயற்பியல், இரசாயனம், மனோதத்துவ வியல், உயிரியல், றோபோட்டிக்ஸ், கணிதம், கணிணி அறிவியல், இயற்கையின் சக்தி போன்றவை இதில் அடங்கும். 
உங்களுக்குப் பிடித்த அல்லது நீங்கள் தேடும் பிரிவைற் தேர்ந்தெடுத்து வீடியோக்களை ரசிக்கலாம். நீங்கள் தேடும் விஷயம் எந்த பிரிவில் இருக்கிறது? என்று தெரியவில்லையெனில், கவலைப்பட வேண்டாம்.
உதாரணமாக மேகம் குறித்து அறிய விரும்புகிறீர்களா?. அதற்கு வாய்ப்பு உள்ளது. 
இதில் ஒரு சர்ச் எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் cloud என டைப் செய்து என்டர் தட்டினால், உடனே அது எந்த பிரிவில் எங்கு இருக்கிறது என்று காட்டப்படும். 
இதில் காணப்படும் வீடியோக்கள், சாதாரணமாக தயாரிக்கப் பட்டவை அல்ல. ஒவ்வொன்றும் ஒரு விஞ்ஞானியால் சரி பார்க்கப்பட்டு தகவல் துல்லியமாக இருக்கின்றனவா? எனச் சோதனை செய்யப்பட்டு தரப்படுகின்றன.

Open ID

open ID 

குழந்தைகளுக்கு ஒரு தளம்


 
kids_logo
குழந்தைகளின் மகிழ்ச்சியான பொழுது போக்கிற்கு ஏற்ற தளம் http://kids.yahoo.com/
 
இவ் இணையதளத்தில் குழந்தைகளுக்கு பயனுள்ள பல பொழுதுபோக்கு அம்சங்களும் , பொது அறிவு விஷயங்களும் இருக்கிறது. பல்வேறு இணையதள விளையாட்டுகள் பல தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன.  குழந்தைகளுக்கான பாட்டு, கிராபிக்ஸ் படங்கள், கார்ட்டூன் சினிமா என்று பல சிறப்புகளும் உள்ளது. 
பொது அறிவை வளர்க்கும் விதத்தில் கேள்வி-பதில்களையும் அளித்திருக்கிறார்கள். பள்ளிகள், விலங்குகள், விடுமுறை தினங்கள், விளையாட்டுகள் என்று பல்வேறு தலைப்பில் ஜோக்குகளையும் இடம்பெறச் செய்துள்ளனர். 
கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களுக்கு குழந்தைகள் இணையதள வாழ்த்து அட்டைகளை அனுப்புவதற்கான வசதிகளையும் இந்த இணையதளத்தில் வழங்கி இருக்கிறார்கள். 
http://kids.yahoo.com/

Google Offering Translated Search Results

The Google Translate service was known for a long time to translate text and websites from one language to the other. The current version features 34 languages from English over German to Vietnamese. Chances are good that Google Translate can translate the text or website into a language that the visitor can understand. 
What most users do not know is that Google expanded the service recently offering not only on the fly translations but also translated search results. The new

feature

is called Translated Search and it works the following way. 
The user enters a search term in a language of his choosing, picks his language and the language of the websites that he wants to search. Google will automatically translate the words that the user entered and perform a search on the search inventory that meet the locale requirement.
google_translated_search-500x130 
The search results will be processed and translated before they are displayed on the user’s computer screen. The results are divided into two columns. The left column contains the translated preview of the website and the right the original text. 
A click on a result in the left column will load the translated version of the website while a click on the right will load the original version. This feature is excellent for users who want to search in a language that they do not speak.

மழை பெய்யுமா? பெய்யாதா?

இந்த இணையதளத்திற்கு சென்றாலே போதும், இணையதள இணைப்பு மூலம் நாம் இருக்கும் பகுதியை அறிந்து கொண்டு, மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதா? இல்லையா? என்பதை தெரிவித்துவிடும். நமது பகுதியின் வெப்பநிலை, ஈரப்பதம் போன்ற தகவலையும் இதில் பெறலாம். 
ஒரு சுவாரஸ்யமான இணையதளம்
 

 

InternetShout

internetshout-logo 
No longer will Internet users need to communicate in text without expression and feeling. With InternetShout everyone can have an online discussion with others all over the world without having to be there at the start. InternetShout allows discussions between an unlimited number of people, all around the world on any subject, all with complete voice-based communication!
 
Just like a standard forum, you can create new threads (conversations) and post to exiting conversations (Shouts!) but you can record your post directly on the website and listen to other's Shouts / Posts instantly with CD-quality streaming audio.
 
Give your fingers a rest, come and join our fun community today. Best of all, its totally FREE!
 
A full run-down of InternetShout's features...
  • Listen and participate in any conversation in high quality audio
  • High quality streaming audio and purpose built conversation player.
  • Record replies online on InternetShout and reply in seconds.
  • Have private voice conversations with your friends and groups
  • Get notified by email or private message when someone replies to a conversation you are involved in.
  • Listen to free music in our Music Arena.
  • Upload MP3 tracks to our Music Arena and create online albums for others to listen to - Perfect if you have your own band and want to get out there!
  • Meet new friends and browse member profiles.
  • Create and update your own profile with details about yourself, upload photos and record special Profile Shout's for members to listen to on your page.
  • Content Filtering and Censoring for young members.
  • Competly FREE to become a member and use the site!
  • Signup in seconds with our Express Signup.

பொன் தமிழ் இணையம்


தமிழுக்கென தனியான, சிறப்பான மென்பொருள்களை உலகெங்கும் பரந்துவாழும் தமிழ்மக்களிடம் கொண்டுசேர்ப்பதற்கான தளமே இந்த பொன் தமிழ் இணையம். 
ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக அதிக இணையத்தளங்களைக் கொண்டதும் செம்மொழியென போற்றப்படுவதுமான தமிழ், கணினி உலகில் பின்தங்கி நிற்பதை ஒருகாலும் ஏற்கமுடியாது. 
இந்த நிலையை உடைத்தெறிய பொன்பேனா, பொன்மொழி, பொன்விழி என்கின்ற முதன்மையான - தனித்துவம் வாய்ந்த - அத்தீயாவசியமான இந்த மென்பொருள்களை உங்களுக்கு தருகின்றோம். 
இவற்றினை ஆயுதமாக கொண்டு "தமிழால் கணினி உலகை வெல்வோம்".

வார்த்தைகளை ஆடியோவாக மாற்ற

logo
இந்த தளத்திற்கு சென்று நாம் ஆடியோ வடிவில் மாற்ற வேண்டிய வலைப்பதிவு முகவரி, இணையதள முகவரி, டாகுமெண்டுகள் போன்றவற்றை அளிக்க வேண்டும். உடனே அவற்றை எம்.பி-3 வடிவில் மாற்றி அளிப்பார்கள். அதை நாம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நமது சொந்த இணையதளத்திலும் இடம்பெறச் செய்யலாம்.

வித்தியாசமான விளையாட்டு

jigsawlogo
புகைப்படங்களை உடைத்து கலைத்து போட்டு விட்டு, பிறகு அதனை ஒன்று சேர்க்கும் விளையாட்டு 
இந்த தளத்திற்கு சென்று கூகுள் மற்றும் `பிளிக் ஆர்' ஆகிய புகைப்படங்களை சேமிக்கும் இணையதளங்களில் இருக்கும் படங்களை தேடி, அதிலிருந்து ஒரு படத்தை தேர்ந்தெடுக்கலாம். உடனே நாம் தேர்ந்தெடுத்த படத்தை, பிரித்து விளையாடுவதற்கு ஏதுவாக அளிப்பார்கள். நாம் அந்த படத்தை பழையபடி ஒன்று சேர்க்க வேண்டும். 
ஒரு குறிப்பிட்ட அளவு நகர்த்துதலுக்குள் முழுப்படத்தையும் முழுமையாக சேர்க்க வேண்டியது அவசியம். இணையதளத்தில் உள்ள மற்ற வாசகர்களும் உருவாக்கிய புகைப்பட புதிர்களையும் நாம் தீர்க்கலாம் என்பது கூடுதல் வசதி. மூளையை சுறுசுறுப்பாக வைக்கவும், பொழுதை போக்கவும் ஏற்ற இணையதளம்.
 

குழந்தைகளின் குதூகலத்தை பதிவு செய்ய...

kee
ஒரு குழந்தை பிறந்து, தத்தித் தவழ்ந்து, நடக்கத் தொடங்கி, பள்ளிக்கு சென்று படித்து, வேலைக்கு செல்லும் வரை என அனைத்து பருவங்களையும் பதிவு செய்ய உதவும் இணையதளம் இது. 
இந்த இணையதளத்தில் இலவச உறுப்பினர் ஆவதன் மூலம் பல வசதிகளை பெறலாம். குழந்தைகளுக்கென தனிப்பட்ட டைரி ஒன்றை ஆன்லைனில் உருவாக்கலாம். அதில் பெற்றோர்கள் தங்களது குழந்தை பிறந்தது முதல் செய்த குறும்புகள், சேட்டைகள் பற்றி எழுதி வைக்கலாம். குழந்தைகளின் புகைப்படங்களை சேமித்து வைக்கும் `ஆன்லைன் ஆல்பம்' வசதியையும் பெறலாம். அதில் குழந்தைகளின் புகைப்படத்துடன் பெற்றோர்கள் தங்களது கருத்துகளையும் பதிவு செய்யலாம். அதுமட்டுமின்றி தங்களது குழந்தையின் அருமை பெருமைகளை, நண்பர்கள் மற்றும் உறவினர்களும் அறிந்து கொள்ளும் வகையில் அவர்களுடன் ஆன்லைன் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். 

பல விதமான சுவையான உணவுகளுக்கு ஒரு தளம்

food
வித விதமான, ரக ரகமான உணவு வகைகளை தயாரிக்கும் செய்முறைகளை அளித்து, அவற்றின் புகைப்படங்களையும் அளித்துள்ள இணையதளம் இது.
நமக்கு தேவையான உணவு வகையின் செய்முறையை அது தொடர்பான புகைப்படத்தை கிளிக் செய்து பெறலாம். விருப்பப்பட்டால் நாம் தயாரிக்கும் வித்தியாசமான உணவுகளையும், இந்த தளத்தில் இடம் பெறச் செய்யலாம். உணவு பிரியர்களுக்கு ஏற்ற தளம்.

No comments:

Post a Comment