Search This Blog

Sunday, March 20


Mozilla Firefox Portable Edition v2.0.0.18

firefox-portable
Mozilla Firefox®, Portable Edition is the popular Mozilla Firefox web browser bundled with a PortableApps.com Launcher as a portable app, so you can take your bookmarks, extensions and saved passwords with you.
 

 
Download:-
 
Homepage and more info here:
http://portableapps.com/apps/internet/firefox_portable
 
Download it from here:
http://downloads.sourceforge.net/portableapps/Firefox_Portable_2.0.0.18_en-us.paf.exe 
or 
http://kent.dl.sourceforge.net/sourceforge/portableapps/Firefox_Portable_2.0.0.18_en-us.paf.exe 
or 
http://belnet.dl.sourceforge.net/sourceforge/portableapps/Firefox_Portable_2.0.0.18_en-us.paf.exe 
or 
http://internap.dl.sourceforge.net/sourceforge/portableapps/Firefox_Portable_2.0.0.18_en-us.paf.exe 
or 
http://superb-east.dl.sourceforge.net/sourceforge/portableapps/Firefox_Portable_2.0.0.18_en-us.paf.exe 
or 
http://superb-west.dl.sourceforge.net/sourceforge/portableapps/Firefox_Portable_2.0.0.18_en-us.paf.exe

Firefox மொஸில்லா டிப்ஸ்

பயர்பாக்ஸ் 3 பதிப்பு பெற்ற சாதனை விளம்பரத்திற்குப் பின் பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்த பிரவுசரைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்


நமக்கு வரும் கடிதங்கள் இதனை உறுதிப் படுத்துகின்றன. பல வாசகர்கள் இந்த பிரவுசருக்கான டிப்ஸ் மற்றும் ஷார்ட் கட் கீ தொகுப்புகளைக் கேட்டு எழுதி உள்ளனர். ஏற்கனவே பல ஷார்ட் கட் கீகளுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இருப்பினும் தொடர்ந்து இவை தரப்படும். இதோ இங்கே கொஞ்சம் பார்க்கலாம்.

1. தளங்களுக்கான தேடுதல் கீ வேர்ட் அமைத்தல்: பயர்பாக்ஸ் தொகுப்பில் புக் மார்க் செய்யப்பட்ட தளங்களில் தேடல் செயல்களை அந்த தளங்கள் சென்று தேடவேண்டியதில்லை.நீங்களே செட் செய்திடும் சில எழுத்துக்களை பயர்பாக்ஸ் லொகேஷன் பாரில் தந்து தேட வேண்டிய சொல்லையும் தந்தால் அந்த தளத்தின் தேடல் கட்டத்திற்கு எடுத்துச்செல்லப்படுவீர்கள். இதற்கு முதலில் அந்த இணைய தளத்திற்கு வழக்கமான முகவரி அமைத்துச் செல்லுங்கள். பின்னர் இந்த தளத்தில் வழக்கமாக நீங்கள் தேடும் சர்ச் பீல்டிற்குச் செல்லுங்கள். எடுத்துக்காட்டாக நான் http://www.tech2.com/ என்ற தளத்திற்குச் செல்வேன். இங்கே இந்த தளத்தைத் திறந்து அதில் உள்ள சர்ச் பாக்ஸில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Add a keyword for this search என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் Add bookmark விண்டோவில் இந்த தளத்தை எளிதில் நினைவில் கொள்ளும் வகையிலான எழுத்துக்களைத் தரவும். எடுத்துக் காட்டாக இந்த தளத்திற்கு t2 என வழங்கலாம். இனி அட்ரஸ் பாரில் இந்த எழுத்துக்களை அமைத்து எதனைத் தேட வேண்டுமோ அதனை அமைத்தால் நேரடியாக அந்த தளத்தின் பக்கங்கள் தேடப்பட்டு அந்த சொற்களுக்கான தகவல் கிடைக்கும். எடுத்துக்காட்டாக t2 sony என பயர்பாக்ஸ் லொகேஷன் பாரில் அமைத்தால் அந்த தளம் திறக்கப்பட்டு அதற்கான தேடல் தகவல்கள் கிடைக்கும். 


2. தவறுதலாய் மூடிவிட்டீர்களா? ஏதேனும் தளம் பார்த்துக் கொண்டிருக்கையில் தவறுதலாய் அதனை மூடிவிட்டீர்களா? அந்த தளம் உடனே மீண்டும் வேண்டுமா? முகவரி மறந்து போச்சா? கவலையே வேண்டாம். CTRL + Shift + T என்ற கீகளை அழுத்துங்கள். உடனே மூடிய தளம் திறக்கப்படும். 


3. இணைய தளம் ஒன்றை உடனடியாக புக்மார்க் செய்திட வேண்டுமா? உடனே கண்ட்ரோல் + டி கீகளை CTRL + ஈ அழுத்துங்கள்.


4.புக் மார்க் செய்த பெயர்களை வரிசைப்படுத்த வேண்டுமா! புக்மார்க்ஸ் என்பதில் கிளிக் செய்திடுங்கள். இப்போது புக்மார்க்ஸ் பட்டியல் கிடைக்கும். இதற்குள்ளாக ஏதேனும் ஒரு இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் மெனுவில் Sort by Name என்பதில் கிளிக் செய்தால் அனைத்து புக்மார்க்குகளும் ஆங்கில அகர வரிசைப்படி அமைக்கப்பட்டிருக்கும். 


5. அட்ரஸ் பார் உடனே செல்ல: இணைய தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். வேறு ஒரு தளம் பார்க்க வேண்டி அட்ரஸ் பாருக்குக் கர்சரைக் கொண்டு செல்ல எண்ணுகிறீர்கள். உடனே மவுஸை எல்லாம் பிடிக்க வேண்டாம். எப் 6 கீயை அழுத்துங்கள். கர்சர் அட்ரஸ் பாரில் ரெடியாக இருக்கும்.


6. புதிய டேப் ஒன்றை விரைவாகத் திறக்க வேண்டுமா? CTRL + T அழுத்துங்கள்; புதிய டேப் திறக்கப்பட்டு ரெடியாக இருக்கும். பல தளங்கள் திறக்கப்பட்டுள்ளன. முதலில் திறக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட தளத்திற்குச் செல்ல வேண்டுமானால் கண்ட்ரோல் அழுத்தி அந்த தளம் எத்தனாவது டேப்பாக உள்ளதோ அந்த எண்ணை அழுத்துங்கள். உடனே அந்த தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இதே போல தளம் ஒன்றில் இன்னொரு தளத்திற்கான லிங்க் உள்ளதா? அதற்குச் செல்ல வேண்டுமா? அந்த லிங்க்கில் கிளிக் செய்தால் அதனைத் தந்த தளம் காணாமல் போய் லிங்க்கிற்கான தளம் கிடைக்கும். அதற்குப் பதிலாக கண்ட்ரோல் அழுத்தியவாறே அந்த லிங்க்கில் கிளிக் செய் திடுங்கள். லிங்க் தொடர் பான தளம் புதிய டேபில் திறக்கப்படும். இந்த லிங்க் தந்த தளமும் அப்படியே பயன்பாட்டிற்கு இருக்கும். (இதற்கு இன்னொரு வழி உங்களுடைய மவுஸில் ஸ்குரோலிங் வீல் இருந்தால் அதனை அழுத்துவது) லிங்க் தரும் தளத்தினை புதிய விண்டோவில் திறக்க விரும்பினால் லிங்க்கில் கிளிக் செய்திடுகையில் ஷிப்ட் கீயையும் அழுத்தவும். 


7. வேகமாக தளங்களைப் பார்வையிட: வெப் சைட் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நீளமான அதில் அடுத்தடுத்த பக்கத்திற்குச் செல்ல விரும்புகிறீர்கள். இதற்காக கைகளை எடுத்து பேஜ் அப் அல்லது டவுண் அழுத்த தேவையில்லை. ஸ்பேஸ் பார் அழுத்தினாலே போதும். தளமானது கீழ் நோக்கிய பக்கங்களுக்குச் செல்லும். வேகமாகச் சென்று விட்டீர் கள். இப்போது மேல் நோக்கி வர வேண்டும். உடனே ஸ்பேஸ் பாரினை ஷிப்ட் கீயுடன் சேர்த்து அழுத்தவும். 


8. முழுத்திரையில் வெப்சைட்: மானிட்டரின் முழுத் திரையிலும் பார்த்துக் கொண்டிருக்கும் வெப்சைட் காணப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். எப் 11 கீயை அழுத்துங்கள். திரை முழுவதும் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் தளம் காட்டப்படும். பிரவுசரின் கண்ட்ரோல் பிரிவுகள் எதுவும் இருக்காது. மீண்டும் பிரவுசரின் கண்ட்ரோல்கள் வேண்டுமா? மீண்டும் எப்11 அழுத்துங்கள்.


9. பிரியமான தளங்களை மொத்தமாகத் திறக்க: தினந்தோறும் சில குறிப்பிட்டதளங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் திறந்து வைத்துப் பணியாற்ற விரும்புகிறீர்களா? புக் மார்க் சென்று அல்லது லொகேஷன் பார் கிளிக் செய்து ஒவ்வொன்றாகத் திறக்கத் தேவையில்லை. முதலில் உங்கள் புக் மார்க் பிரிவில் ஒரு போல்டரை உருவாக்குங்கள். இதில் நீங்கள் ஒரே நேரத்தில் திறக்க விரும்பும் அனைத்து தள முகவரிகளும் புக் மார்க்காக இருக்க வேண்டும். இவ்வாறு உருவாக்கிய பின் அந்த போல்டரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Open in Tabs” என்பதை அழுத்தவும். உங்கள் பிரியமான தளங்கள் அனைத்தும் டேப்களில் திறக்கப்பட்டு தயாராக உங்கள் பயன்பாட்டிற்குக் காத்திருக்கும்.

3.A . பயர்பாக்ஸ் 2.0.0.15


இரு வாரங்களுக்கு முன் ஜூலை 1ல் பயர்பாக்ஸ் 2.0.0.15 பதிப்பு வெளியிடப் பட்டது. என்ன விழிக்கிறீர்கள்? பயர்பாக்ஸ் பதிப்பு 3 தான் வெளியிடப்பட்டு உலக சாதனை புரிந்து பலரால் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கையில் எதற்காக இந்த பதிப்பு என்று தானே? மேற்கொண்டு படியுங்கள். பயர்பாக்ஸ் பதிப்பு 2க்கான அப்டேட்டட் பதிப்பு இது. இன்னும் பதிப்பு 2னைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு அதனை இன்னும் பாதுகாப்பாகவும் ஸ்திரமாகவும் ஆக்கிட மொஸில்லா எடுக்கும் நடவடிக்கையே இந்த பதிப்பின் வெளியீடு ஆகும்

எனவே நீங்கள் இன்னும் பதிப்பு 2னை பயன்படுத்திக் கொண்டிருந்தால் இந்த புதிய பதிப்பினை http://www.mozilla.com/enUS/firefox /allolder.html என்ற முகவரியில் இருந்து இறக்கிப் பயன்படுத்தவும். இந்த முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்றவுடன் உங்களுக்கான மொழி மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தேர்ந்தெடுத்து பின் டவுண்லோட் லிங்க்கில் கிளிக் செய்திடவும். அல்லது பயர்பாக்ஸ் தளத்திற்குச் சென்று அங்கு ஹெல்ப் மெனுவிற்குச் செல்லவும். அதில் செக் பார் அப்டேட்ஸ் என்பதில் கிளிக் செய்தால் தானாக உங்கள் பயர்பாக்ஸ் பதிப்பு 2 மேம்படுத்தப்படும். பயர்பாக்ஸ் பதிப்பு 3 இருந்தாலும் பயர்பாக்ஸ் 2க்கான இது போன்ற அப்டேட்டட் பதிப்புகள் வரும் டிசம்பர் வரை கிடைக்கும் என மொஸில்லா அறிவித்துள்ளது. 


3.B . பயர்பாக்ஸ் செஷன் ரெஸ்டோர்ம்.

பலரும் பயன்படுத்தும் பயர்பாக்ஸ் பிரவுசரில் தற்போது பல புதுமையான வசதிகள் தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று செஷன் ரெஸ்டோர். அடிக்கடி கம்ப்யூட்டர் மற்றும் அதற்குச் செல்லும் மின்சாரம் காலை வாரிவிடும் நிலையில் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாகும். பயர்பாக்ஸ் மூலம் நீங்கள் இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து கொண்டிருக்கையில் ஏதேனும் நடந்து சிஸ்டம் கிராஷ் ஆனாலோ அல்லது பிரவுசருக்குப் பிரச்னை ஏற்பட்டு உங்கள் இணைய உலா இடையே அறுந்து போனாலோ மீண்டும் அவற்றைப் பெற என்ன செய்வீர்கள்? லொகேஷன் பார் அழுத்தி அட்ரஸ் பெற முயற்சி செய்வீர்கள். ஆனால் இந்த வழி பலனளிக்காது. 


இதற்கெனவே பயர்பாக்ஸ் ரெஸ்டோர் செஷன் வசதியைத் தந்துள்ளது. எடுத்துக் காட்டாக நீங்கள் பத்து தளங்களை பயர்பாக்ஸில் திறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கையில் கிராஷ் ஏற்பட்டு பயர்பாக்ஸ் மூடப்படுகிறது. மீண்டும் திறக்கையில்ஜ் பயர்பாக்ஸ் முன்பு நீங்கள் பார்த்துக் கொண்டிருந்த தளங்களைக் காட்டவா என்று கேள்வி கேட்டு அந்த பத்து தளங்களும் மீண்டும் காட்டப்பட்டால் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அதைத் தான் இந்த வசதி தருகிறது. இந்த செஷன் ரெஸ்டோர் வசதியினை செட் அப் செய்திட முதலில் Tools, Options செல்லவும். அங்கு Main டேபில் முதல் பிரிவைப் பார்க்கவும். அதில் “When Firefox starts என்று இருக்கும். இதில் கிடைக்கும் கீழ் விரி மெனுவைப் பயன்படுத்தி கிடைக்கும் பிரிவுகளில் “Show my windows and tabs from last time” என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இதன் பின் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் எந்த தளமும் பிரச்னையினால் மீண்டும் கிடைக்காமல் இருக்காது. இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இந்த வசதியினை மேற்கொள்ள பயர்பாக்ஸ் தொகுப்பை நாம் தயார் படுத்தியிருக்க வேண்டும் இல்லையா? அதாவது பயர்பாக்ஸ் தான் மேற்கொண்டிருந்த தளங்களை நினைவில் வைத்திருந்தால் தானே மீண்டும் அவற்றைக் கொண்டு வர முடியும். அப்படியானால் எத்தனை நிமிடங்களுக்கான இடைவெளியில் இந்த பிரவுசர் பணியினை சேவ் செய்திட வேண்டும் என்று நாம் கம்ப்யூட்டருக்குச் சொல்ல வேண்டும் அல்லவா? இதனை எப்படி செட் செய்வது?


இதற்கு பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறந்து அட்ரஸ் பாரில் “about:config” என்று டைப் செய்து என்டர் தட்டவும். அடுத்து வரும் திரையில் Filter பாக்ஸ் எங்கிருக்கிறது என்று பார்த்து அதில் “browser.sessionstore.interval” என டைப் செய்திடவும். இப்போது ஒரு என்ட்ரி கிடைக்கப்பெறும். அதில் இருமுறை கிளிக் செய்திடவும். அதில் கிளிக் செய்து எத்தனை நிமிடங்களுக்கு ஒருமுறை பயர்பாக்ஸ் உங்கள் பிரவுசிங் தகவல்களை சேவ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதனை நிர்ணயம் செய்திடலாம். 10 விநாடிகள் என்றால் 10000 என டைப் செய்திடவும். ஐந்து விநாடிகள் என்றால் 5000 என டைப் செய்திடவும். ஒரு நிமிடத்திற்கு 60000 எனவும் டைப் செய்திடவும். இனி நீங்கள் பிரவுஸ் செய்திடுகையில் செட் செய்த கால அவகாசத்திற்கு ஏற்ப பிரவுஸ் செய்திடும் தகவல்கள் சேவ் செய்யப்படும். அதன் மூலம் பயர்பாக்ஸ் கிராஷ் ஆனாலும் தளங்கள் நமக்குக் கிடைக்கும்.

பயர்பாக்ஸ் சில தகவல்கள்:

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் நம்பகத்தன்மை குறைய குறைய பயர்பாக்ஸ் இன்டர்நெட் பயன்பாட்டிற்கு மக்கள் புதியதொரு பிரவுசரை விரும்பினார்கள். அவர்களுக்கு வேகமாகவும் பாதுகாப்பாகவும் அதே சமயத்தில் பல புதிய நவீன வசதிகளைத் தருவதாகவும் பயர்பாக்ஸ் பிரவுசர் வடிவமைக்கப்பட்டு தரப்பட்டது. வெகு காலமாக பயர்பாக்ஸ் தொகுப்பு 2 பயன்படுத்தப்பட்டு வந்தது. புதிய பதிப்பு 3 பல கூடுதல் வசதிகளைக் கொண்டுள்ளது. 


இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு இணையாகவும் போட்டியாகவும் பல புதுமைகளைக் கொண்டதாகவும் பயர்பாக்ஸ் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்களை வழங்குவதில் புகழ் பெற்ற மொஸில்லா நிறுவனம் தரும் புரோகிராம் இது. ஓப்பன் சோர்ஸ் என்பதால் இதன் புரோகிராம் வரிகளைப் பெற்று யாரும் இதற்கான கூடுதல் வசதிகளைத் தரும் பிளக் இன் புரோகிராம்களை எழுதி வழங்கலாம். தொடர்ந்து இவ்வாறு பலர் வழங்கி வருகின்றனர்.


விண்டோஸ், லினக்ஸ், மேக் என பலவகை ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கும் தனித்தனியே இவை உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. இலவசமாக இதனை டவுண்லோட் செய்திட http://www.getfirefox.com என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகலாம். விண்டோஸ் சிஸ்டத்திற்கான இன்ஸ்டலேஷன் பைல் (ஆங்கிலம்) 7.1 எம்பி அளவில் கிடைக்கிறது. வெகு எளிதாக இன்ஸ்டலேஷன் நடைபெறுகிறது. ஒரு புதிய எக்ஸ்பி சிஸ்டத்தில் இது 20 நொடிகளே எடுத்துக் கொள்கிறது. 



நூற்றுக்கணக்கில் பொறியியல் வல்லுநர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட தடைகளையும் பிழைகளையும் சரி செய்து பயர்பாக்ஸ் பதிப்பு 3 ஐக் கொண்டு வந்துள்ளனர்.
புதிய ஜெக்கோ பிரவுசர் இன்ஜின், பல்வேறு கூடுதல் திறன் கொண்ட புதிய வசதிகள், அதிவேகத்தில் தளங்களைப் பெற்று தருதல், கம்ப்யூட்டரின் மெமரியைக் குறைந்த அளவில் பயன்படுத்துதல், வியக்க வைக்கும் அட்ரஸ் பார் எனப் பல வசதிகள் தரப்பட்டுள்ளன. பயர்பாக்ஸ் இந்த அட்ரஸ் பாரினை ஆங்கிலத்தில் Awesome Ba என அழைக்கிறது. 
நீங்கள் தேடும் வெப்சைட் முகவரி இதுவாகத்தான் இருக்கும் என சட சட வென பல தளங்களைப் பட்டியலிடும் புதிய வகை அட்ரஸ் பார் இணைய தேடலில் நமக்குக் கிடைத்திருக்கும் புதிய வசதியாகும். அட்ரஸ் பாரில் நீங்கள் முகவரியினை டைப் செய்திடும்போது ஏற்கனவே டைப் செய்த முகவரிகளை மட்டும் தான் தற்போதுள்ள பிரவுசர்கள் தருகின்றன. ஆனால் பயர்பாக்ஸ் தொகுப்பின் அட்ரஸ் பாரில் முகவரிகளை டைப் செய்திடத் தொடங்கியவுடன் பிரவுசரில் உள்ள புக்மார்க், ஹிஸ்டரியில் உள்ள தள முகவரிகள் ஆகியவற்றை அலசிப் பார்த்து இந்த சொல் உள்ள அனைத்து தளங்களின் முகவரிகளை வரிசையாகத் தருகிறது. குறிப்பிட்ட சொல் ஒரு தள முகவரியில் நடுவில் இருந்தாலும் அந்த தளம் தரப்படுகிறது. நமக்கு இதுதான் முகவரி என்று தெரிந்த நிலையில் இதுபோல் லிஸ்ட் தரப்படுவது எரிச்சலாக இருக்கும். எனவே எந்த அடிப்படையில் இந்த பட்டியல் தரப்பட வேண்டும் என்பதனையும் செட் செய்திடலாம். 


இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போல பயர்பாக்ஸ் தொகுப்பிற்கு சிஸ்டம் ரீ பூட் செய்திட வேண்டியதில்லை. 
உங்களுடைய நிறுவன இணைய தளங்களில் நிறுவனத்தின் இலச்சினையைப் பதித்துவிட்டல் அவை அழகாக இணைய தளத்தின் முகவரிக்கு முன்னால் தோற்றமளிக்கின்றன. இத்துடன் வழக்கம்போல பாஸ்வேர்ட் மேனேஜர், டவுண்லோட் மேனேஜர் மற்றும் ஆட் – ஆன்ஸ் மேனேஜர் தரப்பட்டுள்ளன. வெப் ஸ்டாண்டர்ட்ஸ் ப்ராஜக்ட் என்னும் அமைப்பு இணையதளத்திற்கான தொழில் நுட்ப கட்டமைப்புகளை ஆய்வு செய்து சோதனைகளை மேற்கொண்டு சரியாக அமைக்கப்பட்டுள்ள பிரவுசர்களுக்கு சான்றளிக்கிறது. அந்த அமைப்பின் சோதனைகளில் இன்னும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தேறவில்லை; ஆனால் பயர்பாக்ஸ் தேர்ச்சி பெற்று சான்று பெற்றுள்ளது. இந்த தொழில் நுட்ப சங்கதிகளை மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8ல் நிறைவேற்றப்போவதாக அறிவித்துள்ளது. 


பார்த்துக் கொண்டிருந்த தளத்தின் அந்நேர பக்கத்தை மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கும் போது அளித்தல், உள்ளாக ஸ்பெல்லிங் சோதனை மேற்கொள்ளும் வசதி, ஒருங்கிணைந்த தேடுதல் வசதி, பாப் அப் விண்டோக்களைத் தடை செய்தல், தனிநபர் தகவல்களை கிளியர் செய்தல், இணைய பயன்பாட்டின் பின்னணியில் தளங்களை இறக்கம் செய்தல் எனப் பல கூடுதல் வசதிகளைக் கொண்டு வந்துள்ளது பயர்பாக்ஸ் 3. அட்ரஸ் பாரில் அட்ரஸ் முடிந்த இடத்தில் ஆர்.எஸ்.எஸ். ஐகானுக்கு முன்னால் புதிய ஸ்டார் ஐகான் ஒன்று தரப்படுகிறது. இதனை ஒரு முறை கிளிக் செய்தால் யு.ஆர்.எல். புக்மார்க்காகப் பதியப்படுகிறது. இரு முறை கிளிக் செய்தால் புக்மார்க் அப்போது உள்ள போல்டர் அல்லது புதிய போல்டரில் பதியப்படுகிறது. இதற்கு டேக் அமைக்கலாம். கீ வேர்டாக ஒரு சொல்லைத் தரலாம். இந்த சொல் நாம் தளங்களைத் தேடுகையில் நமக்கு உதவும். இதில் தரப்பட்டிருக்கும் லைப்ரேரி வசதியின் மூலம் தேடுதலை உருவாக்கவும் சேவ் செய்திடவும் செய்யலாம். 


அடுத்ததாக ஸூம் வசதி. மற்ற பிரவுசர்களைப் போல் அல்லாமல் வியூ மெனு பாரில் ஸூம் வசதி அமைக்கப்பட்டுள்ளது. எப்11 கீயிலும் இந்த வசதி கிடைக்கிறது. முழுப் பக்க ஸூம் வசதி அல்லது சிறிய பக்கம் என இரண்டு வகைகள் கிடைக்கின்றன. சிறிது சிறிதாகப் பெரியதாக்கும் வசதியெல்லாம் இல்லை. இது அநேகமாக அடுத்த பதிப்பில் மாற்றப்படும் என எதிர்பார்க்கலாம். 
பயர்பாக்ஸ் தொகுப்பு 3 ஐ இன்ஸ்டால் செய்தால் தொகுப்பு 2ல் உள்ள புக்மார்க், ஹிஸ்டரி, ஹோம் பேஜ் செட் அப் எல்லாம் போய்விடுமே என்ற கவலை எல்லாம் வேண்டாம். தொகுப்பு 3 முந்தைய தொகுப்பிலிருந்து அனைத்தையும் எடுத்துக் கொள்கிறது. தொகுப்பு 2ன் மூலம் ஏதேனும் இணைய தளத்தை டவுண்லோட் செய்து பாதியில் விட்டு விட்ட நிலையில் அதன் தொடர்ச்சியை பதிப்பு 3 தொடர்ந்து தானாக மேற்கொள்கிறது. இவை அனைத்தும் உங்களின் பழைய நண்பர்களாக உங்களை தொகுப்பு 3ல் வரவேற்கும். அத்துடன் பயர்பாக்ஸ் தொகுப்பு 2ஐக் காட்டிலும் இத்தொகுப்பு நான்கு மடங்கு வேகமாக இயங்குகிறது. 
தொகுப்பு 3 உலகின் 46 மொழிகளில் கிடைக்கிறது. ஆப்ரிக்கான் மொழியிலிருந்து உக்ரேனியன் மொழி வரை இது மொழி பெயர்க்கப்பட்டு அந்த அந்த மொழிகளில் செயல்படுகிறது. தமிழ், இந்தி உட்பட எந்த இந்திய மொழியிலும் இது இல்லை. விரும்புபவர்கள் மொஸில்லா நிறுவனத்திற்கு எழுதலாம். இந்த தொகுப்பின் குறை என்று ஒன்றைச் சுட்டிக் காட்ட வேண்டும் என்றால் ஒன்றைக் கூறலாம். புதிய ஜெக்கோ இஞ்சின் இதில் பயன்படுத்தப்படுவதால் இதனை விண்டோஸ் 95,98, எம்.இ., மேக் ஓ.எஸ். எக்ஸ் பதிப்பு 10, 12 மற்றும் முந்தைய பதிப்புகளில் இயக்க முடியாது.


முன்தளம் பின்தளம் செல்லும் அம்புக் குறி சாவித் துவாரம் போல் தோற்றமளிக்கிறது. பிரவுசரின் பிரேம் நாம் இயக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கேற்ற வகையில் (விண்டோஸ், லினக்ஸ், மேக்) வடிவமைக்கப்பட்டுள்ளது. 


ஆட்–ஆன் வசதி: 


கூடுதல் உபரி வசதிகளைத் தரும் புரோகிராம்களே ஆட்–ஆன் என அழைக்கப்படுகின்றன. இவை பல இணையதளங்களில் கிடைக்கின்றன. ஆனால் பயர்பாக்ஸ் பதிப்பு 3ல் இவை இணைந்தே தரப்படுகின்றன. ஒரு கீ கிளிக்கில் இவற்றை வேறு இணையதளங்களுக்குச் செல்லாமலே பெறலாம். அத்துடன் மொஸில்லா இணைய தளம் சென்றால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்–ஆன் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவை அல்லாது இணைய தளங்களை உருவாக்குபவர்களுக்கும் அதிகமான எண்ணிக்கையில் உதவிடும் வசதிகள் தரப்பட்டுள்ளன. புதிய டவுண் லோட் மேனேஜர் ஒரு புரோகிராமினை எத்தனை முறை வேன்டுமானாலும் நிறுத்தி டவுண்லோ ட் செய்திட வழி தருகிறது. கீழே காட்டப்படும் நீள் கட்டம் எத்தனை முறை நீங்கள் ஒரு புரோகிராமினை நிறுத்தி நிறுத்தி டவுண்லோட் செய்துள்ளீர்கள் என்று காட்டுகிறது. டவுண்லோட் செய்திடத் தொடங்கி பாதியிலே நிறுத்தியதை கம்ப்யூட்டரை நிறுத்தி விட்டுப் பின் தொடங்கும்போதும் தொடரலாம். புரோகிராம்கள் டவுண்லோட் செய்து முடித்த பின்னர் முழுவதுமாக வைரஸ் எதுவும் தொற்றிக் கொண்டிருக்கிறதா எனச் சோதிக்கப்படுகிறது. 


இதில் தரப்பட்டுள்ள பாஸ்வேர்ட் மேனேஜர் புதிய முறையில் செயல்படுகிறது. மற்ற பிரவுசர்கள் போல் ஒரு தளத்தினுள் நுழைகையில் டயலாக் பாக்ஸைக் கொடுத்து உங்கள் செயல்பாட்டின் குறுக்கே வருவது போல் இல்லாமல், நீங்கள் பாஸ்வேர்டினை அமைக்கும்போது “Remember,” “Never for this site,” மற்றும் “Not now” என உங்களுக்குப் பல தகவல்களைத் தருகிறது.


புக் மார்க்குகளை நிர்வகிப்பதிலும் பயர்பாக்ஸ் புதுமையைக் கையாள்கிறது. இவற்றைத் தேடுகையில் Most Visited, Smart Bookmarks, மற்றும் Places என மூன்று விதமான பிரிவுகளையும் அவற்றில் சிலவற்றிலும் உட்பிரிவுகளையும் கொடுத்து புக் மார்க் தேடலையும் இயக்கத்தினையும் எளிதாக்குகிறது. இன்னொரு புதிய வசதி வெப் மெயில் அக்கவுண்ட் வசதி. பி.ஓ.பி. வகை இல்லாத (யாஹூ போன்ற) இமெயில் தளங்களுக்கும் இதில் லிங்க் ஏற்படுத்தலாம். இதனை இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் மேற்கொண்டால் வேறுபாடு தெரியும். ஏற்கனவே பயர்பாக்ஸ் தொகுப்பு 2 வைத்திருப்பவர்கள் http://www.getfirefox. com என்ற முகவரியில் உள்ள தளம் சென்று தங்கள் தொகுப்பினை 3க்கு மேம்படுத்திக் கொள்ளலாம். இது 45 மொழிகளில் கிடைக்கிறது. 


என்ன என்ன மொழிகள் என்று அறிய http://www.mozilla.com/ firefox/all.html என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். இத்தொகுப்பின் புதிய அம்சங்கள் என்னவென்று விபரமாக அறிய http://www.mozilla.com/ firefox /features/ என்னும் முகவரிக்குச் செல்லவும். படித்தறிய பொறு மை இல்லாதவர்கள் என்னும் முகவரிக்குச் சென் றால் இத்தொகுப்பு குறித்த வீடியோ படக் காட்சியைக் காணலாம். அத்துடன் பயர்பாக்ஸ் தொகுப்பை பயன்படுத்தும் புதியவர், ஏற்கனவே சில காலம் பயன்படுத்துபவர் மற்றும் இதில் உள்ள நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தக் கூடியவர் என மூன்று பிரிவுகளாக உதவிக் குறிப்புகள் வழங்கிடும் தளம் http://www.mozilla.com/ firefox/tips/ என்ற முகவரியில் உள்ளது. இந்த தொகுப்பு வெளியிடுவதன் நோக்கம் குறித்த தகவல்கள் http://www. mozilla.com/firefox/3.0/releasenotes/ என்ற முகவரியில் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.


இந்த தொகுப்பில் இணைத் துப் பயன்படுத்தக் கூடிய ஆட்–ஆன் என்னும் கூடுதல் வசதிகளுக்கான புரோகிராம்கள் 5 ஆயிரத்திற்கும் மேலாக உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி பயர் பாக்ஸ் தொகுப்பு இயங்குவதனை, அதன் தோற்றத்தினை, ஐகான்கள் மற்றும் பட்டன்க ளை உங்கள் விருப்பப்படி அமைக்கலாம். இவற்றைப் பெற தனியே தளங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. தொகுப்பிலேயே Tools>Addons என்ற பிரிவுகளுக்குச் சென்று பெறலாம். எப்படியெல்லாம் மாற்றலாம் என்பதற்கான் உதவிக் குறிப்புகள் www.mozilla.com/ enUS/ firefox/customize/ என்ற தளத்தில் உள்ளன. 


ஏற்கனவே உள்ள இத்தகைய கூடுதல் வசதி தரும் புரோகிராம்கள் இந்த புதிய பதிப்பிற்குச் சரிப்பட்டு வருமா என்ற சந்தேகமே உங்களுக்கு வேண்டாம். பயர்பாக்ஸ் 3 அவற்றைச் சோதித்துப் பார்த்துவிட்டுத்தான் ஏற்றுக் கொள்ளும். 
புதிய பதிப்பில் பாதுகாப்பு வசதிகள் மேலும் பலப்படுத்தப் பட்டுள்ளன. நம்மை அறியாமல் வந்தமரும் புரோகிராம்களைத் தடுப்பதற்கும் வைரஸ்க ளை அண்டவிடாமல் தடுத்து நமக்கு எச்சரிக்கை தருவதற்குமாய் பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த தொகுப்பு ஓப்பன் சோர்ஸ் எனப்படும் திறந்த நிலை புரோகிராம் என்பதால் பயர்பாக்ஸ் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வைரஸ் மற்றும் திருட்டு செயல்பாடுகளுக்கான புரோகிராம்களுக்கு எதிராகப் பல ஆட் ஆன் புரோகிராம்களைத் தந்து வருகின்றனர். லேரி என்ற பெயரில் ஒரு கற்பனைப் பாத்திரம் உருவாக்கப் பட்டுள்ளது. இவர் ஒரு பாஸ்போர்ட் ஆபீசராகப் பணியாற்றுகிறார். நீங்கள் தேடிப் புக இருக்கும் தளங்கள் நீங்கள் அமைத்துள்ள முகவரிக்குள்ளதுதானா அல்லது அந்த பெயரில் இயங்கும் போலியான, தீங்கு விளைவிக்கும் தளமா என்று சோதித்து அனுமதிக்கிறார். 


இந்த கற்பனைப் பாத்திரம் மற்றும் அவரின் செயல்பாடுகள் குறித்து அறிய http:// www.mozilla.com/ enUS/firefox/security/ identity/ என்னும் முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இந்த தொகுப் பிற்கு ஆட்டோமேடிக் அப்டேட் வசதி உள்ளது. மொஸில்லா ஆறு அல்லது எட்டு வாரத்திற்கு ஒரு முறை இத்தொகுப்பினை அப்டேட் செய்வதற்கான பைல்களைத் தருகிறது. அத்துடன் இத்தொகுப்பின் பலவீனங்கள் தெரியும் போ தெல்லாம் அவற்றைச் சரி செய்து நிலைப்படுத்தும் புரோகிராம்கள் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிப்பு 2 பயன்படுத்தியவர்கள் இதனை டவுண்லோட் செய்து பயன்படுத்துங்கள். புதியதாக ஒரு பிரவுசரை இயக்கிப் பார்க்க விருப்பப் படுபவர்கள் இதனைப் பெற்று இயக்கலாம். இதன் வேகத்திலும் வசதியிலும் இழுக்கப் பட்டு வேறு தொகுப்புகளுக்குச் செல்ல மாட்டீர்கள் என்று பலர் இதற்கு வாக்களித்துள்ளனர். நீங்களும் சோதனை செய்து பாருங்களேன்.

பயர் பாக்ஸ் குறிப்புகளும் விளக்கங்களும்

மொஸில்லா பயர்பாக்ஸ் (Mozilla Firefox) என்பது இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு இணையாக அல்லது அதற்குப் பதிலாகப் பயன்படுத்தும் வகையில் வந்த ஒரு பிரவுசர் தொகுப்பாகும். 

மொஸில்லா பயர்பாக்ஸ் (Mozilla Firefox) என்னும் பிரவுசரைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வருகிறது.

கம்ப்யூட்டருக்கும் இன்டர்நெட்டுக்கும் புதியதாக அறிமுகமான பல வாசகர்கள் பயர்பாக்ஸ் குறித்தும் அதன் தன்மை, விண்டோஸில் அதனை இயக்கம், வசதிகளைப் பொறுத்தவரை இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் ஒப்பீடு என்பது போன்ற பல கேள்விகளை எழுப்பி கடிதங்கள் எழுதி உள்ளனர். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வழி பிரவுசிங் செய்து மற்ற பிரவுசர்களுக்குப் போகலாமா என்று எண்ணும் வாசகர்களுக்காக பயர்பாக்ஸ் பிரவுசர் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

மொஸில்லா பயர்பாக்ஸ் என்பது இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு இணையாக அல்லது அதற்குப் பதிலாகப் பயன்படுத்தும் வகையில் வந்த ஒரு பிரவுசர் தொகுப்பாகும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரைக் காட்டிலும் வளைந்து கொடுப்பதாகவும் நெட் பிரவுசிங்கின் போது கூடுதல் பாதுகாப்பு தருவதாகவும் இது வடிவமைக்கப் பட்டுள் ளதாக இதனை தயாரித்த வல்லுநர்கள் முதலில் அறிவித்தனர். அது உண்மை எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து நம் கம்ப்யூட்டரில் நிறுவப்படுகிறது. பயர்பாக்ஸ் தொகுப்பினை இலவசமாக இணையத்திலிருந்து டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இந்த தொகுப்பிற்கான கூடுதல் வசதிகளைத் தருவதற்கு பல சிறிய புரோகிராம்களைப் பலர் தயாரித்து வழங்கு கின்றனர். மொஸில்லாவும் வழங்குகிறது. அந்த அந்த வசதிகளை வேண்டும் என விரும்புபவர்கள் அதன் இணைய தளத்திற்குச் சென்று தேவையான புரோகிராம் களை இறக்கிப் பதிந்து கொண்டு பயன்படுத்தலாம். எல்லாமே எளிதுதான். 

பயர்பாக்ஸ் தொகுப்பை நிறுவிப் பயன்படுத்த இன்டர்நெட் எக்ஸ்புளோரரை கம்ப்யூட்டரி லிருந்து நீக்க வேண்டுமா? என்பது பலரின் கேள்வி. இல்லவே இல்லை. இரண்டையும் கம்ப்யூட்டரில் வைத்துக் கொண்டு இரண்டையும் பயன்படுத்தலாம். ஒரே நேரத்தில் கூட ஒரே இணைய தளத்தைக் காண்பதற்கும் இரண்டையும் பயன்படுத்தலாம். விண்டோஸ் அப்டேட் போன்ற தளங்களை அணுக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு கட்டாயம் தேவை. 

எனவே இரண்டையும் வைத்துக் கொண்டு பயன்படுத்துவது நல்லது. பயர்பாக்ஸ் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள பேவரிட்ஸ் புக் மார்க்குகளைப் பயன்படுத்திக் கொள்ளும். தற்போது பயர்பாக்ஸ் தொகுப்பு 3ன் சோதனைத் தொகுப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இன்றைக்கு இயங்கும் பயர்பாக்ஸ் தொகுப்பு 2 கடந்த 2006 அக்டோபரில் வெளியிடப்பட்டது. அப்போதைய புதிய வசதியாக நம் கம்ப்யூட்டரைத் தங்களது தூண்டிலில் சிக்க வைக்கும் (Phishing) வைரஸ் புரோகிராம்களுக்கு எதிரான பாதுகாப்பினைத் தருவதாக பயர்பாக்ஸ் பதிப்பு 2 வெளியீட்டின் போது அறிவிக்கப்பட்டது. அதே போல அறிவிக்கப்பட்ட இன்னொரு வசதி டேப் ஹிஸ்டரி (Tab History).


பொதுவாக பயர்பாக்ஸ் கொண்டுள்ள வசதிகள்

டேப்பிரவுசிங்: தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7ல் தரப்பட்ட டேப் பிரவுசிங் வசதியை பயர்பாக்ஸ் தன் பதிப்பு 2ல் கொண்டு வந்தது. முன்பு ஒவ்வொரு வெப் சைட்டைப் பார்க்கவும் புதிய விண்டோ ஒன்று திறக்கப்படும். பின்னர் ஒரே விண்டோவில் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைத் திறந்து பார்க்கும் வசதியினை டேப்டு பிரவுசிங் தந்தது. ஒரே விண்டோவில் அனைத்து தளங்களும் சிறிய சிறிய டேப்களாகக் காட்சி அளிக்கும். தளங்களுக்கு இடையே செல்ல இந்த டேப்களைப் பயன்படுத் தலாம். 

ஓர் இணைய தளத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அதில் வேறு இணைய தளங்களுக்கு லிங்க் இருந்தால் அதில் கிளிக் செய்தால் இன்னொரு டேபில் அது திறக்கப்படும். இதற்கு மவுஸின் ஸ்குரோல் வீலை அழுத்தினால் அது புதிய டேபில் திறக்கும் வசதியை அளிக்கும். அந்த லிங்க்கில் மவுஸின் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்தால் பல ஆப்ஷன்ஸ் கொண்ட மெனு கிடைக்கும். அதில் Open Link In New Tab என்பதில் கிளிக் செய்திடலாம்.

ஆட்–ஆன் புரோகிராம்கள்: பிரவுசிங் மேற்கொள்வதை எளிதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்கவும் செக்யூரிட்டியைப் பலப்படுத்தவும் பல ஆட்–ஆன் என்னும் பிளக் –இன் புரோகிராம் களைப் பலர் எழுதி இணையத்தில் வெளியிடு கின்றனர். பயர்பாக்ஸ் இவற்றை ஏற்று அந்த வசதிகளையும் பாதுகாப்பையும் தருகிறது.
டவுண்லோட் மேனேஜர்: நீங்கள் டவுண்லோட் செய்வதனை எல்லாம் ஒழுங்கு படுத்தி ஒரே விண்டோவில் காட்டுதல்
பாப் அப் விண்டோ கட்டுப்படுத்துதல்: இன்டர்நெட் தளங்களைக் காண்கையில் விளம்பரங்கள் மற்றும் பிற செய்திகள் சிறிய சிறிய விண்டோக்களாக வருவதனை பாப் அப் விண்டோக்கள் என அழைக்கின்றனர். இவை முதலில் எந்தக் கட்டுப்பாடும் இன்றி தோன்றி பிரவுசிங் அனுபவத்திற்கு இடையூறாக இருந்தன. சில விண்டோக்களில் வைரஸ் புரோகிராம்கள் இருந்தன. பயர்பாக்ஸ் இவற்றைக் கட்டுப் படுத்தும் வசதியைத் தந்தது. நாம் விரும்பினால் மட்டுமே, பாதுகாப்பானது என்று எண்ணினால் மட்டுமே இந்த பாப் அப் விண்டோக்களை அனுமதிக்கும் வழி தரப்பட்டது.

தனித் தகவலுக்கான தூண்டில் பாதுகாப்பு: பிரவுசிங் செய்திடு கையில் ஏதேனும் கவர்ச்சி கரமான தகவல் அல்லது பொய்யான பயத்தை உருவாக்கும் தகவல் தந்து ஏமாற்றுதல் எனப் பல வகைகளில் சிலர் புரோகிராம் களை எழுதி நாம் ஏமாறும் போது அவற்றைக் கம்ப்யூட்ட ரில் பதித்து பின் இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில் நம்மைப் பற்றிய தகவல் களை, பாஸ்வேர்ட் மற்றும் பேங்க் அக்கவுண்ட் உட்பட எடுத்து நாச வேலைகளைச் செய்து வருகின்றனர். பயர் பாக்ஸ் இதற்கு எதிரான பாதுகாப்பினை வழங்கு கிறது. அப்படிப்பட்ட தளங்களுக்குச் செல்கையில் எச்சரிக் கை தரும் வசதியை பயர்பாக்ஸ் தருகிறது.

முறிந்து போன தொடர்பு பெறல்: பிரவுசிங் செய்திடுகையில் பிரவுசர் அல்லது கம்ப்யூட்டர் கிராஷ் ஆனால் இறுதியாகப் பார்த்துக் கொண்டிருந்த தளத்தினை மீண்டும் இயக்கித் தரும் வசதியை பயர்பாக்ஸ் தருகிறது. 

டேப் ஹிஸ்டரி: அவசரத்தில் டேப்களை மூடுவதன் மூலம் இணைய தளங்களை மூடிவிட்டால் அவற்றை மீண்டும் பெற்றுத் தரும் வசதி பயர்பாக்ஸில் தரப்படுகிறது. அவசரத்தில் மூடியவுடன் History என்பதில் கிளிக் செய்தால் Recently Closed Tabs என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைக் கிளிக் செய்தால் நீங்கள் அறியாமல் குளோஸ் செய்த டேப் அதன் தள முகவரியுடன் இருக்கும். அதனைக் கிளிக் செய்து தளத்தைப் பெற்றுக் கொள்ளலாம். மீண்டும் அதன் டேப் பிரவுசரின் பக்கத்தில் தெரியும். 

சர்ச்பாக்ஸ்: பிரவுசருக்குள்ளாகவே உங்களுக்குப் பிரியமான சர்ச் இஞ்சின் மூலம் தகவல் களைத் தேடிப் பெறும் வசதி

இன் – லைன் ஸ்பெல்லிங் செக்: இன்டர்நெட் தளங்களில் தரப்படும் படிவங்களில் நீங்கள் தகவல்களை நிரப்புகையில் அந்த டெக்ஸ்ட்டில் ஏற்படும் பிழைகளை அவை ஏற்படும் போதே திருத்தும் வசதி பயர்பாக்ஸில் கிடைக்கிறது.

பயர்பாக்ஸ் இன்ஸ்டாலேஷன்: மொஸில்லா பயர்பாக்ஸ் தொகுப்பினை www.mozilla.com என்ற தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம். இந்த இணைய தளத்தில் Download Firefox Free என்ற இடத்தில் கிளிக் செய்தால் பயர்பாக்ஸ் பதிவதற்கான அப்ளிகேஷன் பைல் டவுண்லோட் செய்திடலாமா? என்ற செய்தியுடன் சிறிய விண்டோ கிடைக்கும். பைலை ஒரு டிரைவ் அல்லது டெஸ்க் டாப்பில் இறக்கிப் பதிந்து கொள்ள வேண்டும். பின் இந்த Firefox Setup அப்ளிகேஷன் பைலை இயக் கினால் பயர்பாக்ஸ் உங்கள் கம்ப்யூட்டரில் பதியத் தொட ங்கும். ஒவ்வொரு விண்டோ கேட்கும் கேள்விகளைப் படித்து ஆப்ஷன் களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.செட் அப் டைப் எது எனக் கேட்கையில் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

தேர்ந்தெடுத்து Next பட்டனை அழுத்திக் கொண்டு சென்றால் எளிதாக சில நிமிடங்களில் பதியப் பட்டுவிடும். பதியப்படும் வரை பொறுத்திருக்க வேண்டும். பின் இறுதியாக Finish என்பதில் கிளிக் செய்து முடிக்க வேண்டும். ZoneAlarm போன்ற பயர்வால் புரோகிராம்களை ஏற்கனவே செட் செய்திருந்தால் பயர்பாக்ஸ் பிரவுசர் இன்டர்நெட்டினை அணுக அனுமதிக்க வேண்டுமாய் அதில் செட் செய்திட வேண்டும். பயர்பாக்ஸ் பதியப்பட்டவுடனேயே தானாக இயங்கத் தொடங்கிவிடும். அடுத்த முறைகளில் இதன் ஐகான் அல்லது புரோகிராம் பட்டியலில் இதன் இடத்தில் கிளிக் செய்வதன் மூலம் இதனை இயக்கலாம். இதனை டிபால்ட் பிரவுசராக நீங்கள் வைத்துக் கொள்ள விரும்பினால் பயர்பாக்ஸ் இதற்கான டயலாக் பாக்ஸைக் காட்டுகையில் YES கிளிக் செய்திட வேண்டும். 

இன்டர்நெட் எக்ஸ்புளோரரே இருக்கட்டும்; தேவைப்படுகையில் அல்லது விருப்பப் படுகையில் பயர்பாக்ஸைப் பயன்படுத்தலாம் என்று எண்ணினால் அப்படியே விட்டுவிடலாம். ஏற்கனவே நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் ஏற்படுத்தி வைத்த செட்டிங்குகளை பயர்பாக்ஸ் அப்படியே எடுத்துக் கொண்டு செயல்படும். அங்கு ஏற்படுத்திய அனைத்து பேவரிட் தளங்களின் பட்டியலை இங்கும் பெறலாம். பயர்பாக்ஸ் மெனு பட்டியலில் File அதன்பின் Import எனத் தேர்ந்தெடுத்து எங்கிருந்து என்பதற்கு என்பதனைத் Microsoft Internet Explorer தேர்ந்தெடுக்க வேண்டும். பயர்பாக்ஸ் உங்களுடைய பேவரிட் தளப்பட்டியல், குக்கீஸ், பாதுகாப்பாக பதிந்து வைத்த பாஸ்வேர்ட் மற்றும் பிற டேட்டாக்கள் அனைத்தையும் எக்ஸ்புளோரர் செட்டிங்ஸிலிருந்து எடுத்துத் தனக்குப்பயன்படுத்த வைத் துக் கொள்ளும். 

விருப்பங்களை மாற்றுதல்: ஏற்கனவே ஒரு முறை செட் செய்த விருப்பங்களை எப்போது வேண்டுமானாலும் நாம் மாற்றிக் கொள்ளலாம். Tools மெனு சென்று அதில் Options என்னும் பிரிவில் கிளிக் செய்திடவும். இங்கு பிரவுசிங், செக்யூரிட்டி, பைல் களை டவுண்லோடிங் செய் தல் ஆகியன குறித்த செட்டிங்குகளை மாற்றிக் கொள்ள லாம். அங்கு கிடைக் கும் தலைப்புகளையும் அதில் எவற்றை மாற்றலாம் என்பது குறித்து சுருக்கமாக இங்கு காணலாம்.


Main: இங்கு ஹோம்பேஜ் மற்றும் டவுண் லோட் ஆகும் பைல்கள் எந்த டைரக்டரியில் பதியப்பட வேண்டும் என்பதனை மாற்ற லாம். 

Tabs: டேப்டு விண்டோஸ் எப்படி கையாளப் பட வேண்டும் என்பதனை இங்கு மாற்றிக் கொள்ளலாம்.
Content: பாப் அப் விண்டோஸ் எப்படிதடுக்க ப்பட வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். 
Content: ஆர்.எஸ்.எஸ். செய்தி தொகுப்புகள் குறித்து அமைக்கப்படும் செட்டிங்ஸ்
Privacy: நம்மைப் பற்றிய தனிப்பட்ட தகவல் கள் மற்றும் ஹிஸ்டரியை நீக்குவது சம்பந்தமான செட்டிங்ஸ்
Security: பாதுகாப்பான பிரவுசிங் மேற்கொள் வது மற்றும் பாஸ்வேர்ட் குறித்த செட்டிங்ஸ்.
Advanced: இணைய தளம் மற்றும் பிரவுசர் அணுகுதல், அப்டேட், இணைய இணைப்பு போன் றவை குறித்து அமைத்தல் இணைய தளத் தோற்றம்: ஒருவெப் பேஜில் டெக்ஸ் ட்டின் எழுத்து அளவு எந்த அள வில் இருக்க வேண்டும் என்ப தனை செட் செய்தி டலாம். 

View இல் கிளிக் செய்து பின் Text Size என்ப தனைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு எழுத்தின் அளவை அதிகப் படுத்தலாம் அல்லது குறைக்கலாம். இதற்குப் பதிலாக கண்ட் ரோல் கீயினை அழுத்திக் கொண்டு மவுஸின் ஸ்குரோல் வீலை முன்னும் பின்னும் நகர்த்தினால் அதற்கேற்ப எழுத்தின் அளவு மாற்றப்படும். 

பொதுவாக பெரும் பாலான இணையப் பக்கங்கள் இந்த செயல்பாட்டிற்கு ஏற்ப தங்கள் எழுத்தின் அளவை மாற்றிக் கொண்டு காட்டும். ஒரு சில பக்கங்கள் இதற்கு மசியவில்லை என்றால் ஊரோடு ஒத்துப் போகாதவன் போலும் என்று சொல்லி விட்டுவிடுங்கள். 

பயர்பாக்ஸ் பயன்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து இன்னும் உதவி வேண்டும் என்றால் Help மெனு சென்று காணலாம். அங்கு Check For Updates என்று இருப்பதில் கிளிக் செய்தால் அப்டேட் தொகுப்புகள் இறக்கப்பட்டு தானாகவே பிரவுசர் மேம்படுத்தப்படும்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு அடுத்தப டியாக தற்போது பயர்பாக்ஸ் பயன்பாடு வேகமாகப் பரவி வருகிறது. வர இருக்கும் தொகுப்பு 3 இதனை கூடுதல் சிறப்புகளுடன் ஆக்க இருக்கிறது என்பதனைச் சென்ற இதழில் தெரிவித்திருந்தேன். எனவே பயர்பாக்ஸ் தொகுப் பை கம்ப்யூட்டரில் பதிந்து அவ்வ ப்போது இய க்கிப்பாருங்கள். உங்களுக்கு அனைத்து வகை யிலும் பயனு ள்ள தாகத் தெரிந்தால் இதனையே டிபால்ட் பிரவு சராக வைத்துக் கொள்ளுங்கள்.

Internet Explorer and Firefox shortcuts

1.Ctrl+D adds the current page to your Favorites/Bookmarks file.

2.Alt+Home takes you directly to your home page. (IE and Firefox)

3.Use the Tab key to jump your cursor to the next entry in a form or the next section of a Web page. (IE and Firefox)

4.Ctrl+F launches Find for the page you're on. (IE and Firefox; Firefox's implementation is particularly cool, as it scans the page for the term you want as you type)

5.F11 shifts between regular and full-screen views of your browser window. (IE and Firefox)

6.F5 or Ctrl+R refreshes the page you're on. (IE and Firefox)

7.ESC stops downloading a page. (IE and Firefox)

8.Ctrl+T opens up a new tab and puts your cursor in the URL field, in Firefox. Ctrl+L puts your cursor in the URL field and highlights the current text, while Ctrl+Tab does the same for IE.

9.Ctrl+W closes a tab in Firefox or the current window in IE.

10.Ctrl++ or Ctrl+- increases or decreases the text size in Firefox.

என்கிரிப்டட் டெக்ஸ்ட் – பயர்பாக்ஸ் எச்சரிக்கை

பல வேளைகளில் பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்பாடு குறித்த பல டிப்ஸ்களை வெளியிட்டிருக்கிறோம். அண்மையில் அதன் பாதுகாப்பு குறித்த செட்டிங்ஸ் அமைப்பு ஒன்று குறித்துத் தெரியநேர்ந்தது. இவை நமக்கு கிடைக்கும் எச்சரிக்கை செய்திகள் தான். எந்த எந்த எச்சரிக்கைச் செய்திகளைத் தரும்படி நாம் பயர்பாக்ஸ் பிரவுசரை செட் செய்திடலாம் என்று பார்க்கலாம். இவை அனைத்துமே இன்டர்நெட்டில் நாம் சந்திக்கும் என்கிரிப்டட் செய்திகள் குறித்துத்தான். என்கிரிப்ஷன் என்பது தகவல்கள் மற்றும் செய்திகளின் படிவம் மாற்றப்படுவதனைக் குறிக்கிறது. இதனை cipher text என்று குறிப்பிடுவார்கள். இன்டர்நெட்டில் பதியப்படும் தளங்களில் செய்திகள் மற்றவர்கள் அறியாமல் சுருக்கப்பட்டிருக்கும்.

இதனை படிக்க நாம் முயற்சிக்கையில் அந்த தளத்தில் அதற்கான கீ பயன்படுத்தப்பட்டு நமக்கு தகவல் கிடைக்கும். வேறு யாரும் அதனைத் திறந்து பார்த்திட முடியாது. இத்தகைய தளங்களை பிரவுசர் சந்திக்கும் போது அதன் சுருக்கப்பட்ட தன்மையை அறிந்து நம்மை எச்சரிக்கிறது. ஏனென்றால் உள்ளே உள்ள தகவல்கள் எப்படிப்பட்டவை என்று தெரியாது. அதனால் "எச்சரிக்கிறேன் ' என்று செய்தி கிடைக்கும். அல்லது சுருக்கப்பட்ட தகவல் உள்ளே சில "சுருக்கப்படாத தகவல்களும் ஒளிந்துள்ளன. பார்க்கிறீர்களா?' என்று கேட்கும். உள்ளே வைரஸ் புரோகிராம் ஒளித்து வைக்கப்பட்டிருந்தால் பிரவுசரால் ஒன்றும் செய்ய முடியாது; இப்படி எச்சரிக்கத் தான் முடியும். 

எனவே இதில் எந்த வகையான செய்தி உங்களுக்கு வேண்டும் என நீங்கள் முடிவு செய்து அதற்கான செட்டிங்ஸ் அமைத்துவிட்டால் அந்த வகையான செய்தி மட்டுமே கிடைக்கும். இதற்கு முதலில் Tools சென்று அதில் Options கிளிக் செய்து பின் Security ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பெட்டியின் அடிப்பாகத்தில் Warning Messages என்று ஒரு பிரிவு இருக்கும். இந்த பிரிவில் உள்ளவற்றில் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் இன்டர்நெட்டில் உலா வருகையில் எந்த வகை எச்சரிக்கை செய்தி உங்களுக்கு வர வேண்டும் என்பதனை முடிவு செய்யலாம். 

இதில் உள்ள ஐந்து வகையான எச்சரிக்கை செய்திகள் என்னவென்று பார்க்கலாம்.

1. “I am about to view an encrypted page,” இதனைத் தேர்ந்தெடுத்தால் பயர்பாக்ஸ் என்கிரிப்டட் டெக்ஸ்ட் வரும்போதெல்லாம் உங்களை எச்சரிக்கும். 

2. “I am about to view a page that uses lowgrade encryption,” இது கொஞ்சம் ஆபத்து குறைவானது.

3. “I leave an encrypted page for one that isn’t encrypted,” என்கிர்ப்டட் பேஜ் பார்த்து மீண்டும் அத்தகைய வகை இல்லாத சாதாரண பேஜ் பக்கம் செல்கையில் இந்த செய்தி கிடைக்கும். 

4. “I submit information that’s not encrypted” இந்த செய்தி கிடைக்கையில் நீங்கள் என்கிரிப்ட் செய்யப்படாத படிவம் வழியாகத் தகவல்களை இன்டர்நெட்டிற்கு அனுப்புகிறீர்கள் என்று பொருள்; மற்றும்

5. “I’m about to view an encrypted page that contains some unencrypted information.” இந்த செய்தி என்கிரிப்டட் பக்கத்தில் அவ்வாறு சுருக்கப்படாத தகவல் இருந்தால் கிடைக்கும். நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் மெசேஜ் முன் உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தினால் அந்த செய்திக்கேற்ற தளங்கள் வருகையில் அதற்கான எச்சரிக்கை செய்தி தரப்படும். இது உங்களை எச்சரித்து உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கத் தரப்படுகிறது.

No comments:

Post a Comment