Disk Defragmenter என்றால் என்ன?
டிஸ்க் டிப்ரேக்மெண்டர் என்பது விண்டோஸ் இயங்கு தளத்துடன் இணைந்து வரும் ஒரு சிறிய யூட்டிலிட்டி இதன் மூலம் ஹாட் டிஸ்கில் பைல்களை திறன்பட ஒழுங்குபடுத்தலாம்.
ஹாட் டிஸ்கில் பைல் ஒன்றைச் சேமிக்கும் போது இயங்கு தளமானது அந்த பைலை சிறுசிறு பகுதிகளாக உடைக்கின்றன. பின்னர் அந்த பைலின் பகுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக அல்லாமல் ஹாட் டிஸ்கில் வெவ்வேறு பகுதிகளில அங்கொன்று இங்கொன்றாக சேமிக்கின்றன. இவ்வாறு சேமிக்கப்பட்ட பைல்களின் சிதரள்களை ப்ரேக்மன்ட்ஸ் (Fragments) எனப்படுகிறது.
ஒரு பைலை சேமிக்கும் போதே அந்த பைலுக்குரிய பகுதிகள் ஹாட் டிஸ்கில் எந்தெந்த இடங்களில் சேமிக்கப்பட்டுள்ளன என்பது போன்ற விபரங்களையும் இயங்கு தளம் பதிந்து கொளும் FAT (Fille Allocotion Table) எனப்படும் பைல் பகிர்வு அட்டவணை மூலம் இந்த விபரங்களைப் பதிந்து கொள்கின்றன. FAT 16, FAT 32 மற்றும் NTFS என்பன விண்டோஸில் பயன்படுத்தப்படும் பைல் சேமிப்பு முறைகளாகும். இயங்கு தளம் சேமித்த ஒரு பைலை மீண்டும் அணுக முற்படும் போது உரிய பைல் சிஸ்டம் மூலம் அந்த பைலுக்குரிய பகுதிகள் ஹாட் டிஸ்கில் அல்லது பாட்டிசனில் எந்த க்ளஸ்டரில் (Cluster) எந்த செக்டரில் (Sector) உள்ளன என கண்டறிந்து கொள்ளும்.
பைல்களை அவ்வப்போது சேமிக்கப்படும் போதும் மென்பொருள்களை நிறுவும் போதும் நீக்கப்படும்போதும் ஹாட் டிஸ்கில் டேட்டா சேமிக்கப்படும் இடங்களில் ஏராளமான இடைவெளிகள் உருவாகின்றன. ஹாட் டிஸ்கில் வெவ்வேறு பகுதிகளில் டேட்டா சிறு சிறு பகுதிகளாக சேமிக்கப்படும் போது ஒரு பைலைத் திறப்பதற்கு கணனி இன்னும் கடினமாக செயற்பட வேண்டியுள்ளது. இதன் காரணமாக கணனியின் வேகத்தில் மந்த நிலை உருவாகும்.
ஹாட் டிஸ்கை டிப்ரேக்மன்ட் செய்வதன் மூலம் சேமிக்கப்பட்ட டேட்டாவை ஹாட் டிஸ்கில் மீள ஒழுங்கு செய்யப்பட்டு பைகளுக்கிடையிலான இடைவெளிகள் குறைக்கப்படுகிறது. இதன் மூலம் இயங்கு தளம் ஒரு பைலை மிகக் குறுகிய நேரத்தில் அணுக முடிகிறது.
உதாரணமாக ஹாட் டிஸ்கில் உள்ள பைல்களை புத்தகங்களாகவும் ஹாட் டிஸ்கை புத்தகங்களை அடுக்கி வைக்கும் ஒரு புத்தக அல்மாரியாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். அல்மாரியில் ஒரு தட்டில் புத்கங்கள் நிரம்பியிருக்கின்றன.
அந்தத் தட்டிலிருந்து மூன்று சிறிய புத்தகங்கள் அகற்றப்படுகின்றன. (மூன்று சிறிய பைல்கள் ஹாட் டிஸ்கிலிருநது அழிக்கப்படுகின்றன) அப்போது அங்கு சிறிய மூன்று இடைவெளிகள் உருவாகும். பிறகு அவ்விடயத்தில் அளவில்பெரிய ஒரு புத்தகத்தை வைக்க நினைக்கிaர்கள்.
எனினும் உங்களால் முன்னர் எடுக்கப்பட்ட ஒரு புத்தகம் இருந்த இடத்தில் அதனை வைக்க முடியாதிருக்கும். பதிலாக அதனை வேறொரு தட்டிலேயே வைக்க வேண்டும். (ஹாட் டிஸ்கில் வேறொரு இடத்தில் பதியப்பட வேண்டும்) அல்லது புத்தகங்களை நகர்த்தி மூன்று சிறிய இடைவெளிகளை ஒன்றாக்கி ஒரு பெரிய இடைவெளியை உருவாக்குவதன் மூலம் அந்த பெரிய புத்தகத்தை வைக்கலாம் (பெரிய பைலை ஹாட் டிஸ்கில் பதியலாம்) இங்கு புத்தகங்களுக்கிடையில் இடைவெளியைக் குறைப்பது போன்றே ஹாட் டிஸ்கில் பைல்களுக்கிடையில் இடைவெளியைக் குறைத்து ஒரு பைலுக்குரிய பகுதிகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக தொடராக ஒழுங்குபடுத்தப்படுவதையே டிப்ரேக்மன்ட் (deragments) எனப்படுகிறது. ஹாட் டிஸ்கை குறைந்தது மாதத்தில் ஒரு முறையாவது டிப்ரேக்மண்ட் செய்தல் நல்லது.
எனினும் டிப்ரேக்மண்ட் செய்வதற்கு அதிக நேரம் எடுக்கும். ஹாட் டிஸ்கின் அளவைப் பொறுத்து அந்த நேரம் வேறுபடும்.
ஹாட் டிஸ்கை டிப்ரேக்மன்ட் செய்யும் வசதி விண்டோஸ் இயங்கு தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் முன்றாம் தரப்பு மென்பொருள்கள் எதனையும் பயன்படுத்த வேண்டிதில்லை. விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பில் டிப்ரேக்மண்ட் செய்யப் பின்வரும் வழிமுறையைக் கையாளலாம்.
Start - Programs - Accessories -Tools Systemer - Disk Defragments தெரிவு செய்யுங்கள். அப்போது Disk Defragmentser டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு உரிய ட்ரைவைத் தெரிவு செய்து Analyze பட்டனில் முதலில் க்ளிக் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் ஹாட் டிஸ்கை டிப்ரேக்மண்ட செய்ய வேண்டிய தேவையுள்ளதா எனக் கண்டறியலாம். அதன் பின்னர் டிப்ரேக்மன்ட் செய்ய வேண்டியிருப்பின் Defragments பட்டனில் க்ளிள் செய்யுங்கள்.
எனினும் விண்டோஸ் விஸ்டா பதிப்பில் டிப்ரேக்மண்ட் செய்யும் செயற்பாட்டை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இயங்கு தளம் தானாகவே செயற்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண ஒரு கணனி பயனர் ஹாட் டிஸ்கை டிப்ரேக்மன்ட் செய்வதைப் பற்றிக் கவலையே படவேண்டாம்.
அதனை விண்டோஸே கவனித்துக் கொள்ளும். அதே போல் மேல் நிலைப் பயனர்கள் கமாண்ட் ப்ரொம்ப் மூலம் டிப்ரேக்மண்ட செய்யும் வசதியும் விஸ்டாவில் உள்ளது.
டிபிராக் செய்கையில் பிரச்னையா?
பலமுறை கம்ப்யூட்டர் மலரில் டிபிராக் செய்வதன் அவசியத்தைப் பற்றியும் அதனை எப்படி எளிதாக மேற்கொள்வது என்பதைப் பற்றியும் எழுதியிருக்கிறோம். ஆனால் நம்மில் பலர் டிபிராக் செய்வதே இல்லை. வைரஸ் அப்டேட், தேவையற்ற பைல் அழிப்பு, டிபிராக், சிபியு டவர், கீ போர்டு மற்றும் மவுஸ் சுத்தப்படுத்துதல் போன்றவை அவ்வப்போது நம்முடைய கம்ப்யூட்டரில் நாம் மேற்கொள்ள வேண்டிய சில அவசிய நடவடிக்கைகள். எப்படியாவது நேரம் ஒதுக்கி இவற்றை மேற்கொள்ள வேண்டும்.
டிபிராக் செய்திடும் பல வாசகர்கள் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து அடிக்கடி எழுதி வருகின்றனர். அவற்றில் ஒரு முக்கிய பிரச்னை குறித்து இங்கு பார்க்கலாம். டிபிராக் தொடங்கியவுடன் சீராக வேலை நடைபெறுவதாகவும் ஆனால் சில நிமிடங்களில், 10 அல்லது 20 சதவிகித டிபிராக் பணி மேற்கொண்ட நிலையில், டிபிராக் மீண்டும் தானாக முதலில் இருந்து தொடங்கப்படுவதாகவும் எழுதி இருக்கின்றனர்.
அந்த நேரத்தில் "Drive contents have changed" என்று செய்தி கிடைப்பதாகவும் எழுதி உள்ளனர். இதற்குக் காரணம் உங்கள் கம்ப்யூட்டரில் சில புரோகிராம்கள் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவை ஹார்ட் டிரைவில் தொடர்ந்து தகவல்களைப் பதிந்து கொண்டிருக்கின்றன என்பதே பொருள். இதனால் டிபிராக் செய்திடும் புரோகிராம், தகவல்கள் புதிதாகப் பல இடங்களில் விட்டு விட்டு எழுதப்படுவதால் மீண்டும் டிபிராக் செய்திடும் நிலை உருவகிறது என்று எண்ணி டிபிராக் பணியை தொடக்கத்திலிருந்து மேற்கொள்கிறது. ஆனால் மீண்டும் இதே சூழ்நிலை ஏற்படுகையில் மீண்டும் தொடங்குகிறது. இதற்கு என்ன தீர்வு?
பின்னணியில் இயங்கி டேட்டாவை ஹார்ட் டிஸ்க்கில் எழுதும் புரோகிராம்களை நிறுத்த வேண்டும். அப்போதுதான் டிபிராக் வெற்றிகரமாகத் தன் பணியை மேற்கொள்ள முடியும். இதற்கு Start சென்று Run விண்டோவினைத் திறக்கவும். அதில் "msconfig" என டைப் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் General என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Selective Startup என்று இருக்கும் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து புரோகிராம்களில் முன் உள்ள டிக் அடையாளங்களை எடுத்துவிடவும். இதில் Selective Startup என்று இருப்பதன் முன் டிக் அடையாளம் கட்டாயம் இருக்க வேண்டும்.
பின் Apply கிளிக் செய்து அதன் பின் OK யில் கிளிக் செய்து வெளியேறவும். இந்த மாற்றங்களை மேற்கொள்வதால் விண்டோஸ் அடிப்படை புரோகிராம்களை மட்டும் இயக்கும். இதனால் டிபிராக் புரோகிராமில் எந்தவித குறுக்கீடும் இருக்காது.இனி மீண்டும் விண்டோஸை இயக்கி டிபிராக் பணியை மேற்கொள்ளவும். எந்த பிரச்னையும் இன்றி டிபிராக் செயல்பாடு மேற்கொள்ளப்பட்டு உங்களுடைய ஹார்ட் டிஸ்க் சரி செய்யப்படும். ஒரு வாசகர் முன்பு எழுதி இருந்தார். இவ்வளவு சொல்கிறீர்கள். டிபிராக் செய்வதனை எங்கு எப்படி தொடங்குவது? என்று குறிப்பிடவும் என்று கேட்டிருந்தார். கீழ்க்கண்டவாறு சென்றால் டிபிராக் கட்டம் கிடைக்கும். அதில் கிளிக் செய்தால் டிபிராக் பணி தானாக மேற்கொள்ளப்படும். Start, All Programs, Accessories, System Tools, Defrag.

No comments:
Post a Comment