இதுவரை பார்க்காத இமெயில்களை மட்டும் தனிமைப்படுத்திப் பார்க்கும் வசதி இருந்தால் தேவையில்லாமல் பார்த்தவற்றை எல்லாம் பார்க்க வேண்டாமே?அல்லது குறிப்பிட்டு மார்க் செய்து சில மெயில்களை மட்டும் தனிப்படுத்தி பார்க்க முடியுமா? அல்லது குறிப்பிட்ட நபர்களிடமிருந்து மட்டும் வரும் மெயில்களைத் தனிமைப்படுத்திப் பார்க்க முடியுமா?
முடியும்; வகை வகையாய் குழுவாக்கி இவற்றைக் காணமுடியும்.
இவற்றை எப்படி வகைப்படுத்துவது என்பதை அவுட்லுக் எக்ஸ்பிரஸ்,
தண்டர்பேர்ட் மற்றும் யாஹூ துணை கொண்டு பார்க்கலாம்.
1. அவுட்லுக் எக்ஸ்பிரஸ் தொகுப்பில்
View/Current View செல்லவும். அங்கு இரண்டு ஆப்ஷன்ஸ் கிடைக்கும். அவை –
“Show all messages” மற்றும் “Hide Read messages” ஆகும். இவற்றுடன்
கூட உங்களுக்குத் தேவையான customized வகைகளும் உருவாக்கலாம். இதற்கு முதலில் “Define Views” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின்
“New” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு மொத்தமாக நிறைய செக் பாக்ஸ்கள் கிடைக்கும். சில முகவரிகளிலிருந்து கிடைக்கும் மெயில்களை மறைக்கும் வசதி இதில் தரப்பட்டிருக்கும். அல்லது அவற்றை மட்டும் காட்டும் (show or hide) வசதியும் தரப்பட்டிருக்கும். பழைய இமெயில்களை மறைக்கலாம்; குறிப்பிடும் மெயில்களை மட்டும் பார்க்கலாம்; இப்படி
இன்னும் சில வகைப்படுத்தும் வழிகள் கிடைக்கும். இதனால்
வரும் மெயில்கள் அழிக்கப்பட மாட்டாது. நாம் நம் நேரம்
மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் இவற்றை வகைப்படுத்திப்
பார்க்கிறோம். எடுத்துக் காட்டாக ஒரு “whitelist” வியூ ஒன்றை உருவாக்குவோம்.
இதில் நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றுவோர்களிடமிருந்து
வரும் மெயில்களை மட்டும் பார்க்கும் வகையில் செட்
செய்திடலாம். இந்த ஆப்ஷனில் “Where the from line contains people” என்பதைத்
தேர்ந்தெடுங்கள். அதன்பின் கீழிறங்கி “contains people” என்று ஹைலைட் செய்ததைத் தேர்ந்தெடுங்கள்.இங்கு சென்றவுடன் இந்த வியூவில் இருக்க
வேண்டிய இமெயில் முகவரிகளை உங்கள் அட்ரஸ் புக்கிலிருந்து
தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுத்தவுடன் “show/hide” என்பதில் என்ன வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கலாம். இறுதியாக இந்த வியூவிற்கு ஒரு
பெயர் கொடுக்கவும். பெயர் உங்கள் நோக்கத்தை தெரிவிப்பதாக
இருந்தால் உங்களுக்கு எளிதாக இருக்கும். இதன் பின் இமெயில்களை டவுண்லோட் செய்த பின்னர் நான் தேர்ந்தெடுத்து வகைப்படுத்தின வியூவின் படி அதில் உள்ள இமெயில்களைப் படிக்கலாம்.
2. தண்டர்பேர்ட் பயன் படுத்துவோருக்கு: இதில்
View/Messages செல்லவும். இதிலும் நிறைய தேர்வு செய்யும்படி பல ஆப்ஷன்ஸ் கிடைக்கும். All, Unread, People I know, Recent Mail, Has
Attachments எனப் பல இருக்கும். இவற்றுடன் Important, Work, Personal, To Do, and Later என்பனவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இவை அல்லாமல்
உங்கள் விருப்பப்படியும் சில வகைகளை உருவாக்க தண்டர்பேர்ட்
வழி தருகிறது. கீழாக “Customize” என்பதில் கிளிக் செய்திடுங்கள்.
இதில் “New” என்ற பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். பின் இதற்கு ஒரு பெயர்
கொடுத்து இமெயிலில் எந்த பகுதி – Subject, Sender, Body
(மெயிலில் குறிப் பிட்ட சொல், இஇ, – மூலம் வகைப்படுத்த விரும்புகிறீர்கள் என்பதனை குறிக்கவும். இதில் உள்ள “More”என்ற பட்டனை கிளிக் செய்து கூடுதலாக சில வகைகளையும் சேர்க்கலாம். அதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் நீங்கள் அமைத்துள்ள வியூக்களின்படி மெயில்களை பிரித்துப் பார்க்கலாம்.
3. யாஹூ மெயிலிலும் “View” என்ற பிரிவைப் பார்க்கவும். இது முதலில்
“All Messages” என்ற பிரிவில் தான் செட் செய்யப்பட்டிருக்கும். இதில் உள்ள அம்புக் குறியினைக் கிளிக் செய்தால் ஒரு ட்ராப் டவுண் மெனு கிடைக்கும். இதில் உள்ள பல வகைகளில்(Messages from My Contacts (Address Book), Messages from unknown senders, Unread MEssages, Flagged Messages, Messages with Attachments) எதனை வேண்டுமானாலும் புதிய வியூவிற்குத் தேர்ந்தெடுத்து செட் செய்து அமைத்திடலாம்.
இது போல பல வியூக்களை அமைத்து மெயில்களைப் பார்ப்பது நாம்
நமக்கு வந்துள்ள இமெயில்களை வகைப்படுத்தி விரைவாகவும்
முக்கியமானதையும் பார்த்துக் கொள்ள உதவிடும். அனைத்து
இமெயில் கிளையண்ட் புரோகிராம்களும் ஏறத்தாழ இதே போல வியூ
அமைப்பதற்கான வழிகளைக் கொண்டுள்ளன. நீங்கள் பயன்படுத்தும்
புரோகிராம் மேலே சொல்லப்பட்டவற்றிற்கு மாறானதாக இருப்பின்
அதிலும் இதே போன்ற வகைகளை உருவாக்கி பழகிக் கொள்ளுங்கள்.